நடப்புச் செய்திகள்(Current Affairs in Tamil Jan 7 - Jan 11)

இலங்கையின் 6-வது அதிபராக மைத்ரிபால சிறிசேனா

இலங்கையின் 6-வது அதிபராக மைத்ரிபால சிறிசேனா வெள்ளிக்கிழமை மாலை பதவியேற்றார்.

கொழும்புவில் உள்ள சுதந்திரச் சதுக்கத்தில், அவருக்கு இலங்கை உச்ச நீதிமன்ற நீதிபதி கே. ஸ்ரீ பவன் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

அதேவேளையில், இலங்கையின் பிரதமராக ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்கே பதவியேற்றார்.

முன்னதாக, இலங்கை அதிபர் தேர்தலில் புதிய ஜனநாயக முன்னணி வேட்பாளர் மைத்ரிபால சிறிசேனா 51.28 %(62,17,162) வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றதாக, அந்நாட்டு தேர்தல் ஆணையர் மகிந்த தேஷப்பிரிய அதிகாரபூர்வமாக அறிவித்தார்.


புதிய "ஆன்ட்டிபயாட்டிக்' மருந்து கண்டுபிடிப்பு

காச நோய், ரத்த நோய்த்தொற்று ("செப்ட்டிஸீமியா'), வயிற்றுப் போக்கை ஏற்படுத்தக்கூடிய "சி டிஃப்' நோய்த் தொற்று உள்ளிட்டவற்றைக் குணப்படுத்தக்கூடிய "டைக்ஸோபாக்டீன்' (Teixobactin)என்ற புதிய நோய் எதிர்ப்பு மருந்தை ("ஆன்டிபயாட்டிக்') இங்கிலாந்து விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.


பான்-கி-மூன் இந்தியா வந்தார்
குஜராத்தில் நடைபெறவுள்ள "7-வது எழுச்சிமிகு குஜராத்' உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக ஐ.நா. பொதுச் செயலாளர் பான்-கி-மூன் சனிக்கிழமை இந்தியா வந்தார்.அவருடன் இந்தியாவுக்கான ஐ.நா. வளர்ச்சித் திட்டப் பிரதிநிதி லிசே கிராண்டும் வந்துள்ளார்.
மூன்று நாள் சுற்றுப்பயணமாக இந்தியா வந்துள்ள பான்-கி-மூன், ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள குஜராத் மாநாட்டில் தொடக்கவுரை நிகழ்த்துகிறார்.
குஜராத்தில் அமைக்கப்பட்டுள்ள சூரிய மின் உற்பத்தி நிலையத்தை ஐ.நா. பொதுச் செயலாளர் பான்-கீ-மூன் திறந்து வைப்பார் என அந்த மாநில மின்துறை அமைச்சர் சௌரவ் படேல் தெரிவித்தார்.

மத்திய கொள்கைக் குழு சி இ ஓ சிந்துஸ்ரீ குல்லார்

திட்டக் குழுவின் முன்னாள் செயலரான சிந்துஸ்ரீ குல்லார், மத்திய கொள்கைக் குழுவின் தலைமைச் செயல் அதிகாரியாக (சிஇஓ) நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜனவரி 1-ஆம் தேதி முதல், ஓராண்டுக்கு ஒப்பந்த அடிப்படையில் சிந்துஸ்ரீ குல்லார் இந்த பொறுப்பை வகிப்பார் என்று, மத்தியப் பணியாளர் நலன், பயிற்சித் துறை தெரிவித்துள்ளது.

கடந்த 1975-ஆம் ஆண்டு, ஐஏஎஸ் அதிகாரியாக தேர்ச்சி பெற்ற இவர், 2012-ஆம் ஆண்டு, ஏப்ரலில் திட்டக் குழுவின் செயலராக நியமிக்கப்பட்டார்.

திட்டக் குழுவைக் கலைத்துவிட்டு, பிரதமர் மோடி தலைமையில், புதிதாக உருவாக்கப்பட்டுள்ள மத்திய கொள்கைக் குழுவின் துணைத் தலைவராக, பொருளாதார நிபுணர் அரவிந்த் பானாகரியா அண்மையில் நியமிக்கப்பட்டார்

No comments:

Post a Comment

இன்பத்தமிழ் - Class 6 Tamil New Syllabus Term 1

தமிழ் வணக்கம்   தற்கால இலக்கிய மரபாகிவிட்டது  பாரதிதாசனின் இயற்பெயர்   சுப்புரத்தினம்.  பாரதியாரின் கவிைதகள்  மீது கொண்ட  பற்றின் காரணமா...