விழுதும் வேரும் - 8 ஆம் வகுப்பு சமச்சீர்


தூலம்போல் வளர்கி ளைக்கு
விழுதுகள் தூண்கள்! தூண்கள்
ஆலினைச் சுற்றி நிற்கும்
அருந்திறல் மறவர்! வேரோ
வாலினைத் தரையில் வீழ்த்தி
மண்டிய பாம்பின் கூட்டம்!
நீலவான் மறைக்கும் ஆல்தான்
ஒற்றைக்கால் நெடிய பந்தல்!
- பாரதிதாசன்

சொற்பொருள்:
  • திறல் - வலிமை
  • மறவர் - வீரர்
ஆசிரியர் குறிப்பு:
  • பெயர் - பாரதிதாசன்
  • இயற்பெயர் - கனக சுப்புரத்தினம்
  • பெற்றோர் - கனகசபை, இலக்குமி
  • ஊர் - புதுச்சேரி
  • காலம் - 29.04.1891 - 21.04.1964
  • சிறப்புப்பெயர்கள் - பாவேந்தர், புரட்சிக்கவிஞர்
சிறப்பு:
  • பாரதியாருடன் கொண்ட நெருங்கிய  தொடர்பினால் பாரதிதாசன் எனத் தன்பெயரை அமைத்துக்கொண்டார்.
  • தந்தை பெரியாரின் பகுத்தறிவுச் சிந்தனையைக் கவிதை வடிவில் தந்தவர்.
இயற்றிய நூல்கள்:
  • பாண்டியன் பரிசு
  • குடும்ப விளக்கு
  • இருண்ட வீடு
  • அழகின் சிறப்பு
  • கண்ணகி புரட்சிக் காப்பியம்
  • குருஞ்சித்திட்டு
  • தமிழியக்கம்
  • பிசிராந்தையார்

No comments:

Post a Comment

இன்பத்தமிழ் - Class 6 Tamil New Syllabus Term 1

தமிழ் வணக்கம்   தற்கால இலக்கிய மரபாகிவிட்டது  பாரதிதாசனின் இயற்பெயர்   சுப்புரத்தினம்.  பாரதியாரின் கவிைதகள்  மீது கொண்ட  பற்றின் காரணமா...