நடப்புச் செய்திகள்(Current Affairs in Tamil Jan 12 - Jan 14)


பிரிட்டன் பத்திரிகையான செண்ட்ரல் பேங்கிங் தனது 2015-ஆம் ஆண்டுக்கான விருதுகளில் மத்திய ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜனை ‘சிறந்த ஆளுநர்’ விருதுக்கு தேர்வு செய்துள்ளது.





2014-ஆம் ஆண்டின் சிறந்த கால்பந்து வீரருக்கான ஃபீபா விருதை போர்ச்சுக்கல் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ வென்றார். தொடர்ச்சியாக 2-வது முறையாக அவர் இந்த விருதைப் பெறுகிறார்.








விண்வெளி ஆராய்ச்சித் துறை செயலாளராகவும், இஸ்ரோ நிறுவன புதிய தலைவராகவும் .எஸ். கிரண் குமார் திங்கள்கிழமை நியமிக்கப்பட்டார். அவரது பதவி காலம், 3 ஆண்டுகள் ஆகும்.

சென்னை ஓபன் டென்னிஸ் போட்டி ஆடவர் ஒற்றையர் இறுதிப்போட்டியில், பெடெனெயை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார் ஸ்விட்சர்லாந்தின் ஸ்டானிஸ்லஸ் வாவ்ரிங்கா. 3-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றுள்ளதன் மூலம், சென்னை ஒபனில் அதிக முறை சாம்பியன் என்ற சாதனையைச் சொந்தமாக்கிக் கொண்டார் வாவ்ரிங்கா.

 குளிர்காலம் துவங்கி 2-வது முறையாக ஆந்திர  மாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ள லம்பாசிங்கியில் வெப்பநிலை பூஜ்ய நிலைக்குச் சென்றுள்ளது. விசாகப்பட்டிணத்திலிருந்து சிந்தபள்ளிக்குச் செல்லும் வழியில் அமைந்துள்ள அடர்த்தியான காட்டுப்பகுதிக்குள் இருக்கிறது லம்பாசிங்கி.

வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு உதவும் விதமாக புதிய சர்வதேச சந்தையை அமைக்க மும்பை பங்குச் சந்தை திட்டமிட்டுள்ளது.
குஜராத் தலைநகர் காந்திநகரில் நடைபெற்று வரும் "எழுச்சிமிகு குஜராத்' மாநாட்டில் இது தொடர்பாக திங்கள்கிழமை ஒப்பந்தத்தில் கையெழுத்திடப்பட்டது என்று மும்பை பங்குச் சந்தையின் நிர்வாக இயக்குநர் ஆசிஷ் செளஹான் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்தார்





ஐரோப்பிய நாடான குரோஷியாவில் நடைபெற்ற அதிபர் தேர்தலில், கொலிந்தா கிராபா கிதாரொவிச் வெற்றி பெற்றார்.

இதன் மூலம், அந்த நாட்டின் அதிபர் பதவியை ஏற்கும் முதல் பெண் என்ற பெருமையை அவர் பெறுகிறார்.

No comments:

Post a Comment

இன்பத்தமிழ் - Class 6 Tamil New Syllabus Term 1

தமிழ் வணக்கம்   தற்கால இலக்கிய மரபாகிவிட்டது  பாரதிதாசனின் இயற்பெயர்   சுப்புரத்தினம்.  பாரதியாரின் கவிைதகள்  மீது கொண்ட  பற்றின் காரணமா...