- ஒரு மனிதன் ஆண்டுக்கு 2000 பக்கங்களாவது படித்தால் தான் அன்றாட உலக நடப்புகளைத் அறிந்த மனிதனாகக் கருதப்படுவான் என யுனெஸ்கோ கூறியுள்ளது.
- கிரீஸ் நகர அரசுகளே முதன் முதலாக மக்களுக்கான நூல் நிலையங்களை அமைத்தன.
- இந்தியாவில் உள்ள நூலகங்களில் கல்கத்தா தேசிய நூலகம் முதன்மையானது.
- புத்தகச்சாலை, ஏடகம், சுவடியகம், சுவடிச்சாலை, வாசகசாலை, படிப்பகம், நூல்நிலையம், பண்டாரம் என நூலகம் பல்வேறு பெயர்களால் அழைக்கப்படுகிறது.
- ஆங்கிலத்தில் “லைப்ரரி” என்னும் சொல் நூலகத்தை குறிக்கின்றது.
- இலத்தின் மொழியில் “லிப்ரா” என்னும் சொல்லிற்குப் புத்தகம் என்பது பெயர்.
- இந்தியாவிலேயே முதன் முறையாகத் தமிழக அரசுத் தான் 1948ஆம் ஆண்டு சென்னை பொது நூலகச் சட்டத்தை இயற்றியது.
- தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை “புத்தகப்பூங்கொத்து” என்னும் வகுப்பறை நூலகத் திட்ட்டத்தை தொடங்கியுள்ளது.
- இந்திய நூலகத் தந்தை : சீர்காழி சீ.இரா.அரங்கநாதன்.
தமிழகத்தின் மிகப் பழைமையான நூலகங்கள்:
- சரசுவதி மகால் நூலகம், தஞ்சை. (1820)
- அரசினர் கீழ்த்திசைச் சுவடி நூலகம், சென்னை.
- கன்னிமாரா நூலகம், சென்னன. (1869),
- சென்னைப் பல்கலைக்கழக நூலகம் (1907),
- அண்ணாமலை பல்கலைக்கழக நூலகம், சிதம்பரம் (1929),
- டாக்டர் உ.வே.சா. நூலகம், சென்னை (1947),
- மறைமலை அடிகளார் நூலகம், சென்னை (1958),
- மதுரை காமராசர் பல்கலைக்கழக நூலகம் (1966),
- உலகத் தமிழ் ஆராய்;ச்சி நிறுவன நூலகம், சென்னை (1970),
- தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழக நூலகம் (1981)
No comments:
Post a Comment