இன்றைய கேள்விகள் - 09/12/14

1.பிரித்து எழுதுக : வெற்றிலை
A . வெற்றி + இலை
B .வெறு + இலை
C .வெறுமை +இலை 
D. வெற்று + இலை

2.பிற மொழி சொற்களற்ற வாக்கியங்களைத்
தேர்வு செய்க :
A . அங்கத்தினர் கவனம் ஆராதனையில் இல்லை 
B . உறுப்பினர் கவனம் விளையாட்டில் இல்லை 
C .கிராமத்தில் அபூர்வமான விரதம் இருந்தான் 
D. சிற்றூரில் புதுமையான நோன்பு இருந்தான் 

3. உழப்பாதாம் என்பதன் பொருள் யாது ?
A .மீட்பது 
B .களைவது 
C .கடிந்துரைப்பது 
D .புகழ்வது 

4. கீழ்க்கண்டவற்றில் சரியான இணையைத் தேர்க .
A. எயிறு  -  நாக்கு (புல் )
B. இடபம்  - பசு ( எருது )
C .சமர் - போர் 
D . ஏமம் - கருணை ( பாதுகாப்பு )

5.கீழ்க்கண்டவற்றில் தவறான பொருள் கொண்ட 
இணையைத் தேர்க 
A. குழவி - குழந்தை 
B. கழறும் - பேசும் 
C .சலவர் - சான்றோர் ( வஞ்சகர் )
D. மயரி - மயக்கம் 

6.கீழ்க்கண்டவற்றில் பொருந்தாத இணையைத் தேர்க 
A . தாது - மகரந்தம் 
B . போது  - மலர் 
C.  பூகம் - பாகு மரம் 
D.  பௌவம் - படகு (கடல்)

7. கீழ்க்கண்டவற்றில் பொருந்தாத இணையைத் தேர்க 
A . நயனம் - மொழி (கண்கள் )
B . இந்து - நிலவு 
C.  நுதல் - நெற்றி 
D.  அமலன் - குற்றமற்றவன் 

8. 'நாளிகேரம்' என்பதன் பொருள் யாது ?
A. தென்னை 
B. பனை 
C .வாழை 
D. ஆலமரம் 

9.'வெருவிலான்' என்பதன் பொருள் யாது ?
A. அச்சமுடையான் 
B. அச்சமற்றவன் 
C .மறைந்தவன் 
D. தோன்றியவன் 

10. "பொன்னும் துகிரும் முத்தும் மன்னிய 
மாமலை பயந்த காமரு மணியும் "
'துகிரும் ' - பொருள் யாது ?
A. வைரம் 
B. வைடூரியம் 
C .கோமேதகம் 
D. பவளம் 

11."கானகம் உகந்த காளி  தாருகன் 
பேருரங் கிழித்த பெண்ணு மல்லன் "
'தாருகன் ' பொருள் யாது ?
A. வஞ்சகன் 
B. பொய்யன் 
C .கொலைகாரன் 
D. அரக்கன் 

12. திருநாவுக்கரசர் பாடிய பதிகங்கள் எத்தனையாவது 
திருமுறையாக வைக்கப்பட்டுள்ளன /
A. நான்காம் திருமுறை 
B. ஐந்தாம் திருமுறை  
C .ஆறாம் திருமுறை  
D. அனைத்தும் சரி 

13.'பண்டைத் தமிழர் நாகரிகமும் ' என்ற நூலை எழுதியவர் 
A.மறைமலையடிகள் 
B.தேவநேயப்பாவணர்
C.ரா . பி . சேதுப்பிள்ளை 
D.மு . வரதராசனார் 

14.' கவிராட்சசன் ' என்று பாராட்டப்படுபவர் 
A. ஒட்டக்கூத்தர் 
B. கம்பர் 
C . காளமேகப்புலவர் 
D . அந்தக்கவி வீரராகவர் 

15.'கவியோகி ' என்று பாராட்டப்படுபவர் 
A.சுப்ரமணிய பாரதியார் 
B.சுத்தானந்த பாரதியார் 
C.கவிமணி 
D.கண்ணதாசன் 

No comments:

Post a Comment

இன்பத்தமிழ் - Class 6 Tamil New Syllabus Term 1

தமிழ் வணக்கம்   தற்கால இலக்கிய மரபாகிவிட்டது  பாரதிதாசனின் இயற்பெயர்   சுப்புரத்தினம்.  பாரதியாரின் கவிைதகள்  மீது கொண்ட  பற்றின் காரணமா...