இன்றையக் கேள்விகள் - 11/02/15


1.பொருந்தா இணையைக் கண்டறிக :
a.தினம்       - நாள்
b.நெருநல் - நேற்று
c.சலவர் -நல்லவர் 
d.மாரன் -மன்மதன்

2.வேர்ச்சொல் தேர்க :
பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப்
பற்றுக பற்று விடற்கு.
a.பற்றுக
b.பற்றற்றான்
c.பற்றி
d.பற்று

3."நான்மணிமாலை" என்ற சொற்றொடர் குறிப்பது
a.முத்து ,வைரம் ,வைடூரியம் ,மாணிக்கம்
b.முத்து ,பவளம் ,மரகதம் ,மாணிக்கம் 
c.முத்து ,மரகதம் ,கெம்பு ,மாணிக்கம்
d.முத்து ,பவளம் ,வைரம் மாணிக்கம் .

4.சீறாப்புராணத்தில் தீர்க்கதரிசனத்தைக் கூறுவது
a.நுபுவத்துக் காண்டம் 
b.விலாதத்துக் காண்டம்
c.ஹிஜ்ரத்துக் காண்டம்
d.மேற்கூறிய அனைத்தும்

5.'வள்ளைக்கு உறங்கும் வளநாட '
வள்ளை  - என்பதன் பொருள் யாது ?
a.நெல் குத்தும்போது பெண்கள் பாடும் பாட்டு 
b.நடவு நடும் போது பெண்கள் பாடும் பாட்டு
c.கும்மியடிக்கும் போது பெண்கள் பாடும் பாட்டு
d.இவை எதுவும் இல்லை

6."மானுடப் பிறப்பினுள் மாதா உதரத்து ஈனம் இல் கிருமிச் செருவினில் பிழைத்தும்"என்ற உயிரியல் தொழில்நுட்பத்தை அறிவுறுத்தும் நூல்
a.தேவாரம்
b.திருவாசகம்
c.திருக்கோவையார்
d.திருப்பள்ளியெழுச்சி

7."ஆர்ப்பரவை அணிதிகழும் மணிமுறுவல் அரும்பரவை "
- இப்பாடலடியில் அமைந்துள்ளவாறு பின்வருவனவற்றுள் எது
தவறானது ?
a.சீர் மோனை அமைந்துள்ளது
b.சீர் முரண் அமைந்துள்ளது
c.சீர் இயைபு அமைந்துள்ளது
d. கீழ்க்கதுவாய் மோனை அமைந்துள்ளது

8.தனி வாக்கியம் குறித்து கீழ்க்கண்டவற்றுள்சரியானது எது ?
a.வினாப் பொருள்  தரும் வாக்கியம்
b.ஓர் எழுவாய் அல்லது ஒன்றுக்கும் மேற்பட்ட எழுவாய்கள் 
ஒரு பயனிலையைக் கொண்டு முடியும் 
c.தனி வாக்கியங்கள் பல தொடர்ந்து வரும்
d.ஒரு முதன்மை வாக்கியம் ஒரு துணை வாக்கியத்துடன் சேர்ந்து வரும்

9."திருவள்ளுவர்  தோன்றியிராவிட்டால்  தமிழன்  என்னும்  ஓர்  இனம்  
இருப்பதாக   உலகத்தார்க்கு தெரிந்திருக்காது.திருக்குறள் என்னும் ஓர் நூல் தோன்றியிராவிட்டால் தமிழ்மொழி உலகிற்கு தெரிந்திருக்காது. " எனக்கூறியவர்
a. கி . வா . ஜ.
b.கி . ஆ . பெ . வி .
c.திரு . வி . க .
d.உ.வே. ச

10."தெண்டன் இட்டது வள்ளுகிர் திண்டிறல் புலியே "
"திண்டிறல் "- என்பதன் பொருள் என்ன ?
a.கொடுமையான
b.கடுமையான
c.எடுப்பான
d.உறுதியான 


No comments:

Post a Comment

இன்பத்தமிழ் - Class 6 Tamil New Syllabus Term 1

தமிழ் வணக்கம்   தற்கால இலக்கிய மரபாகிவிட்டது  பாரதிதாசனின் இயற்பெயர்   சுப்புரத்தினம்.  பாரதியாரின் கவிைதகள்  மீது கொண்ட  பற்றின் காரணமா...