இன்றைய கேள்விகள் - 13/12/14

1."ஏ" என்னும் ஓரெழுத்து ஒரு மொழிக்குரிய பொருள் யாது ?
A.அழைத்தல்
B.ஏவுதல்
C.அம்பு
D.கூவுதல்

2.எதிர்ச்சொல் தருக : அண்டி ?
A.காண்டி
B.விலகி
C.மண்டி
D.தாண்டி

3.உவமையால் விளக்கப்படும் பொருள்: "பொதிற்கொள் பூமணம் போல"
A.மணம் வீசுதல்
B.வெளிப்படுதல்
C.மறைந்திருத்தல்
D.இணைதல்

4.ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளைத் தேர்க: தண்மை -தன்மை ?
A.குளிர்ச்சி - இயல்பு
B.தன்னை - அருகில்
C.தண்ணீர் - தனிமை
D.இயல்பு - குளிர்ச்சி

5.பேரொளி - இலக்கண குறிப்பு வரைக:
A.வினைத் தொகை
B.வினையாலணையும் பெயர்
C.உவமைத் தொகை
D.பண்புத் தொகை

6.ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளைத் தேர்க: மருப்பு - மறுப்பு
A.சேவல் - குறைப்பு
B.தந்தம் - எதிர்ப்பு
C.குதிரை - நீக்கம்
D. மன்னன் - உறக்கம்

7.ஆடுகொடி - இலக்கண குறிப்பு வரைக:
A.தொழிற்பெயர்
B.உவமைத் தொகை
C.ஆகு பெயர்
D.வினைத் தொகை

8.கொழு கொம்பற்ற கோடி போல - உவமையால் விளக்கப் பெறும் பொருத்தமான பொருளைத் தேர்ந்தெடுக்க?
A. தாவுதல்
B.அசைதல்
C.ஆதரவு
D.ஆதரவின்மை

9.தன்வினை சொற்றொடரைக் கண்டறிக ?
A.கயல்விழி தேர்வுக்குப படி
B.கயல்விழி தேர்வுக்கு படித்தாள்
C.கயல்விழி தேர்வுக்குப படிப்பித்தாள்
D.கயல்விழி தேர்வுக்குப படிப்பாள்

10.பசுமை - பெயர்ச் சொல்லின் வகை அறிக ?
A.தொழிற்பெயர்
B.காலப்பெயர்
C.பண்புப்பெயர்


D.சினைப்பெயர்

No comments:

Post a Comment

இன்பத்தமிழ் - Class 6 Tamil New Syllabus Term 1

தமிழ் வணக்கம்   தற்கால இலக்கிய மரபாகிவிட்டது  பாரதிதாசனின் இயற்பெயர்   சுப்புரத்தினம்.  பாரதியாரின் கவிைதகள்  மீது கொண்ட  பற்றின் காரணமா...