அயோத்திதாசப் பண்டிதர் - 10 ஆம் வகுப்பு சமச்சீர் பாடம்


தோற்றம்:
  • சென்னை ஆயிரம் விளக்கில் உள்ள, மக்கிமா நகரில், 1845ஆம் ஆண்டு மே திங்கள் இருபதாம் நாள் பிறந்தார்.
  • இவரின் தந்தையார் பெயர் கந்தசாமி.
  • இவரின் இயற்பெயர் - காத்தவராயன்.
சிறப்பு:
  • இவர் தென்னிந்திய சீர்திருத்தத்தின் தந்தை எனப் போற்றப்படுகிறார்.
  • இவர் அயோத்திதாசர் என்பவரிடம் கல்வி கற்றார்.
  • இவர் சித்த மருத்துவமும் பயின்றார்.
  • தம் ஆசிரியர் பெயரையே தம் பெயராக ஆக்கிக்கொண்டார்.
  • அவரின் ஆசிரியர் எழுதிய கவிதையை, தாம் பிற்காலத்தில் தொடங்கிய “ஒரு பைசாத் தமிழன்” எனும் இதழில் வெளியிட்டார்.
திருமணம்:
  • இவர் நீலகிரி மலைப்பகுதியில் வாழும் தோடர் இனப்பிரிவில் கலப்புத்திருமணம் செய்துக்கொண்டு பத்து ஆண்டுகள் இரங்கூன் சென்று வாழ்ந்தார்.
புத்த நெறி:
  • இவர் புத்த நெறியால் கவரப்பட்டார்.
  • புத்த மதக் கருத்துக்களை எல்லோருக்கும் எடுத்துரைத்தார்.
  • தமக்குப் பிறந்த மகன்களுக்குப் பட்டாபிராமன், மாதவராம், சானகிராமன், இராசாராம் என்று பெயர் சூட்டினார்.
  • தம் மகள்களுக்கு அம்பிகதேவி, மாயாதேவி என்று பெயரிட்டார்.
சமூகப் பணி:
  • இவர் மருத்துவர் என்றும் பண்டிதர் என்றும் அழைக்கப்பெற்றவர்.
  • எவரையும் சாதி பெயரை சொல்லி அழைப்பது தவறு என்றார்.
  • தாழ்த்தப்பட்டவர்களுக்குத் கல்வி வசதி, கல்வி உதவித்தொகை, கல்வியில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு அரசுவேலை போன்றவற்றை போராடி பெற்று தந்தார்.
  • தாழ்த்தப்பட்ட மக்களுக்காக சென்னையில் ஐந்து இடங்களில் “ஆல்காட் பஞ்சமர் பள்ளிகள்” தொடங்கினார்.
இதழ்ப்பணி:
  • அன்றைய காலணா விலையில் “ஒரு பைசாத் தமிழன்” என்ற இதழை வெளியிட்டார்.
  • அது 19.06.1907 முதல் சென்னை இராயப்பேட்டையில் இருந்து புதன் தோறும் நான்கு பக்கங்களுடன் வெளிவந்தது.
புதிய தீபாவளி:
  • எள்ளு செடியின் விதையில் இருந்து நெய் கண்டுபிடித்த திருநாளே தீபாவளி என்று புதிய விளக்கம் தந்தார்.
  • அதற்கு ஆதாரமாக ஜப்பான் நாட்டில் இன்றும் நுகர்பொருள் கண்டுபிடிப்புத் திருநாளாகத் தீபாவளி கொண்டாடப்படுகிறது என்றார்.
இயற்றிய நூல்கள்:
  • “புத்தரது ஆதிவேதம்”(28 காதைகள், பாலி, ஆங்கிலம் ஆகிய மொழி துணையுடன் எழுதினார்).
  • இந்திரதேசத்து சரித்திரம.
  • தமிழில் எழுத்து சீர்திருத்தம் செய்தார்.
  • திருவாசகத்திற்கு உரை எழுதியுள்ளார்.
மறைவு:
  • “நான் உங்களுக்குச் சொல்ல வேண்டியது ஒன்றே. அதாவது, உங்களுடைய தருமமும் கருமமுமே உங்களைக் காக்கும்” என்றார்.
  • 1914ஆம் ஆண்டு மேமாதம் ஐந்தாம் நாள் மறைந்தார்.

No comments:

Post a Comment

இன்பத்தமிழ் - Class 6 Tamil New Syllabus Term 1

தமிழ் வணக்கம்   தற்கால இலக்கிய மரபாகிவிட்டது  பாரதிதாசனின் இயற்பெயர்   சுப்புரத்தினம்.  பாரதியாரின் கவிைதகள்  மீது கொண்ட  பற்றின் காரணமா...