அண்ணல் அம்பேத்கர் - 10 ஆம் வகுப்பு சமச்சீர் பாடம்


பிறப்பு:
  • அம்பேத்கர் மராட்டிய கொங்கண் மாவட்டத்தில்   அம்பவாடே என்னும் சிற்றூரில்  பிறந்தார்.
  • பிறந்த தேதி: 14.04.1891
  • தந்தை: இராம்ஜி சக்பால்
  • தாய்: பீமாபாய்
  • இவர்களுக்கு 14வது பிள்ளையாகப் பிறந்தார்.இயற்பெயர்: பீமாராவ் ராம்ஜிமகாபாரதப் பீமனைப்போலவே தன்மகனும் எவருமே அசைக்க முடியாத வீரனாக வருங்காலத்தில் வரவேண்டும் என்ற எண்ணத்தில் பீம் எனப் பெயர் சூட்டினார் தந்தை இராம்ஜி சக்பால்.
  • ஆசிரியர் என்பவர் அறிவுக்கடலாக மட்டுமன்றி அறத்தின் ஆழியாகவும் விளங்க வேண்டும்.
கல்வி:


  • 1908 இல் எல்பின்ஸ்டன் பள்ளியில் உயர்நிலைப்படிப்பு
  • 1912 இல் பம்பாய் எல்பின்ஸ்டன் கல்லூரியில் இளங்கலை பட்டம்
  • 1915 இல் அமெரிக்காவில் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டம்
  • 1916 இல் இலண்டம் பொருளாதாரத்தில் முனைவர் பட்டம் பெற்றார்.
  •  மீண்டும் இலண்டன் சென்று அறிவியல் முதுகலைப் பட்டமும் பாரிஸ்டர் பட்டமும் பெற்றார்.
அம்பேத்கரால் முதலில் நடத்தப் பெற்ற போராட்டங்கள்:
  • தந்தை பெரியார் 1924 ஆம் ஆண்டு கேரளாவில் உள்ள வைக்கத்தில் நடத்திய ஒடுக்கப்பட்டோர் ஆலயநுழைவு முயற்சியும்,
  • 1927 ஆம் ஆண்டு மார்ச்சு திங்கள் இருபதாம் தேதி அம்பேத்கார் மராட்டியத்தில் மகாத்துக் குளத்தில் நடத்திய தண்ணீர் எடுக்கும் போரட்டமும் மனித உரிமைக்காக முதலில் நடத்தப்பட்ட போராட்டங்கள் எனலாம்.
  • இங்கிலாந்து சொல்வதற்கெல்லாம் இந்தியா தலையசைக்கும் என்பது தவறு; இந்தநிலை எப்போதோ மாறிவிட்டது; இந்திய மக்களின் எண்ணங்கலை நீங்கள் ஈடேற்ற வேண்டும்" என ஆங்கிலேயரிடம் அச்சமின்றி ஆணித்தரமாகக் கூறியவர் - அண்ணல் அம்பேத்கர்.
  • தன்னாட்சித் தகுதியை இந்தியாவிற்கு வழங்க வேண்டும் என முன்மொழிந்தவர் - அண்ணல் அம்பேத்கர்.
  • வட்டமேசை மாநாடு நடைபெற்ற ஆண்டு - 1930அந்த மாநாட்டில் அம்பேத்கர் கலந்துகொண்டார்.
  • அரைவயிற்றுக் கஞ்சிக்கு அல்லற்படும் ஊமைகளின் உறுப்பினனாக நான் பேசுகிறேன் என்று தனது கருத்தைத் தொடங்கினார் அம்பேத்கர்.
  • ஒடுக்கப்பட்டோரின் உரிமைக்குரல் வட்டமேசை மாநாட்டின் வழியே உலகஅரங்கில் எதிரொலித்தது.இந்திய அரசியல் அமைப்புச்சட்டம் வகுக்க 7 பேர்  கொண்ட குழு அமைக்கப்பட்டது.
  • இந்தியா முழுமையான குடியரசு நாடாகத் தன்னை அறிவித்துக் கொண்ட தேதி - 26.01.1950
  • செல்வமும் உழைப்பும் இல்லாத கல்வி களர்நிலம்உழைப்பும் கல்வியும் அற்ற செல்வம் மிருகத்தனம் என்றவர் அம்பேத்கர்.
  • மக்கள் கல்விக்கழகத்தைத் தோற்றுவித்தவர் - அம்பேத்கர்1946 ஆம் ஆண்டு மக்கள் கல்விக்கழகத்தைத் தோற்றுவித்தார்.
  • மும்பையில் அவரின் அரிய முயற்சியால் உருவான சித்தார்த்தா உயர்கல்வி நிலையத்தில் இன்றைய அறிவு வளர்ச்சிக்கு வேண்டிய அனைத்துப் பாடங்களும் கற்பிக்கப்படுகின்றன.
  • இந்தியாவின் தேசியப் பங்குவீதம் என்னும் நூலைப் பொருளாதாரத் துறையின் சிறந்த நூலாகக் கருதிப் பொருளியல் வல்லுநர்களும் பேரசிரியர்களும் பெரிதும் மதித்துப் போற்றினார்கள்.
  • இந்திய நாட்டின் சாதி என்னும் இருளை அகற்ற வந்த அறிவுக்கதிர் அம்பேத்கர்.
  • சமூகத்தின் மாற்றத்திற்குச் சிந்தனை விதைகளைத் தூவுகின்ற புரட்சியாளர்களாலேயே இந்த வையகம் வாழ்கிறது என்றவர் அம்பேத்கர்.
  • சனநாயகத்தின் மறுபெயர்தான் சகோதரத்துவம்; சுதந்தரம் என்பது சுயேச்சையாக நடமாடும் உரிமை; உயிரையும் உடைமையையும் பாதுகாக்கும் உரிமை அது.எல்லாருக்கும் எல்லாம் கிடைக்கும் வகையில் எல்லா மனிதர்களையும் ஒரே மாதிரி நடத்துவதே சமத்துவமாகும் என்று சனநாயகத்திற்கு அரியதொரு விளக்கம் தந்தவர் அம்பேத்கர்.
  • சமத்துவத்தின் மறுபெயரே மனிதநேயம்; எங்கே சமத்துவம் மறுக்கப்படுகின்றதோ, அங்கே மனிதப் பண்பு மறைந்துவிடுவதை அவர் அனைவருக்கும் உணர்த்தியவர் அம்பேத்கர்.
பெரியாரின் புகழாரம்:
  • அம்பேத்கர் உலகத் தலைவர்களுள் ஒருவர்
  • பகுத்தறிவுச் செம்மல்
  • ஆராய்ச்சியின் சிகரம்
  • மக்களின் மாபெரும் வழிகாட்டி
  • அப்பெருந்தலைவரைப்போல வேறு யாரையும் நாம் காணமுடியாது என்று பெரியார் புகழாரம் சூட்டினார்.
  • அம்பேத்கரை ஆசியக் கண்டத்திலேயே மிகப்பெரிய தனியாள் நூலகத்தை அமைத்த பெருமை இவரையே சாரும் என்று புகழ்ந்தவர் - நேரு
  • தன்னலமற்றவர்; 
  • மிகவும் ஆர்வத்துடனும் விரைந்து தன்னந் தனியாகச் செயல்பட்டவர். 
  • தமக்கு கொடுக்கப்பட்ட பணியில் கருமமே கண்ணாக இருந்தவர் என்று இராசேந்திர பிரசாத் பாராட்டியுள்ளார்.
  • இறப்பு : 06.12.1956
விருதுகள்:
  • இந்திய அரசு 1990 ஆம் ஆண்டு பாரத ரத்னா (இந்திய மாமணி) என்னும் உயரிய விருதை அண்ணல் அம்பேத்கருக்கு வழங்கி பெருமைப்படுத்தியது.
  • சமுதாயமெனும் மரத்தின் வேரைச் சாதிப் புழுக்கள் அரித்துவிடாமல் தடுத்த நச்சுக்கொல்லி மருந்து அவர்.

No comments:

Post a Comment

இன்பத்தமிழ் - Class 6 Tamil New Syllabus Term 1

தமிழ் வணக்கம்   தற்கால இலக்கிய மரபாகிவிட்டது  பாரதிதாசனின் இயற்பெயர்   சுப்புரத்தினம்.  பாரதியாரின் கவிைதகள்  மீது கொண்ட  பற்றின் காரணமா...