இன்றைய கேள்விகள்-11/12/14

1.வென்றான் என்ற சொல்லின் வினையெச்சம்
A .வென்ற
B .வென்று
C .வெற்றி
D .வெல்

2. 'வா' என்னும் வேர்ச்சொல்லின் வினைமுற்றைத்தேர்க
A .வந்து
B .வந்தவள்
C .வந்தாள் 
D .வந்த

3.'விழு ' என்னும் வேர்ச்சொல்லின் வினைமுற்று
A.விழுந்து
B.விழுந்த
C.விழுகின்ற
D .விழுந்தான் 

4.'துற ' என்பதன் வினையாலணையும் பெயரைத் தேர்ந்தெடு

A. துறத்தல்
B .துறவு
C .துறந்து
D .துறந்தவர் 

5.'கனி ' என்னும் வேர்ச்சொல்லின் தொழிற்பெயரைத் தேர்ந்தெடு

A. கனிந்தது
B .கனிவு
C .கனிகை
D .கனிதல்

6.வேர்ச்சொல்லை பெயரெச்சமாக்குக:'செய் '

A .செய்த 
B .செய்ய
C .செய்தான்
D .செய்து

7. ”தஞ்சை பெரிய கோவில் இராசராசனால் கட்டப்பட்டது” எவ்வகை வாக்கியம்?
A.செயப்பாட்டு வினை வாக்கியம்
B.தன்வினை வாக்கியம்
C.பிறவினை வாக்கியம்
D.செய்வினை வாக்கியம்

8.ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளைத் தேர்க:
      பெறுக்கல் - பெருக்கல்
A. மயானம் - அரிசி.
B. வாய்க்கால் - எலி
C. பேராற்றல் - யானை
D. பொறுக்கல் - அதிகப்படுத்துதல்


9 சொற்களை ஒழுங்குப்படுத்தி சொற்றொடராக்குக.

A. கதிர் புலர பொழுது கூவ சேவல் எழுந்தது
B. புலர பொழுது கூவ சேவல் எழுந்தது கதிர்
C. பொழுது கூவ சேவல் எழுந்தது கதிர் புலர
D. சேவல் கூவ பொழுது புலர கதிர் எழுந்தது

10.ஆங்கிலச் சொல்லுக்கு சரியான தமிழ்ச்சொல் தருக "ASSEMBLY"

A.சட்டசபை
B.பாராளுமன்றம்
C.பொதுக்குழு

D.மேல்சபை

11."இளமையில் கல்” எவ்வகை வாக்கியம்?
A.கட்டளை வாக்கியம்
B.உணர்ச்சி வாக்கியம்
C.வினா வாக்கியம்
D.செய்தி வாக்கியம்

12.வெரூஉம் - என்பதன் இலக்கணக் குறிப்பு தேர்க. 
A.ஆகு பெயர்
B.அளபெடை
C.முற்றெச்சம்
D.ஈற்றுப்போலி

13.பொருந்தாச் சொல்லைக் கண்டறிக: 
A.வெட்சித்திணை
B.வஞ்சித்திணை
C.தும்பைத்திணை
D.குறிஞ்சித்திணை

14.ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளைத் தேர்க:
    மலை -மழை 
A.மேகம் - உவமை
B.குளிர்ச்சி - ஆடுகள்
C.குன்று - மாரி
D.மிகுதி - எதிர்த்தல்

15.”நுணங்கிய கேள்விய ரல்லார் வணங்கிய” இதில் அமைந்துள்ள எதுகை
A.ஒரூஉ எதுகை
B.இணை எதுகை
C.கூழை எதுகை


D.மேற்கதுவாய் எதுகை

No comments:

Post a Comment

இன்பத்தமிழ் - Class 6 Tamil New Syllabus Term 1

தமிழ் வணக்கம்   தற்கால இலக்கிய மரபாகிவிட்டது  பாரதிதாசனின் இயற்பெயர்   சுப்புரத்தினம்.  பாரதியாரின் கவிைதகள்  மீது கொண்ட  பற்றின் காரணமா...