Current Affairs in Tamil December 2014 - PART 1



  • உலகின் சிறந்த 100 பசுமை சுற்றுலாத் தலங்களில் ஒன்றாக, சிக்கிம் மாநிலத்தின் கஞ்சன்ஜங்கா தேசியப் பூங்கா தேர்வு செய்யப்பட்டுள்ளது.
  • வாராணசியில் மகாகவி சுப்ரமணிய பாரதியார் வாழ்ந்த வீட்டை விரைவில் தேசிய நினைவுவிடமாக்க முயற்சி எடுத்து வருகிறோம்' - மத்திய நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் வெங்கய்ய நாயுடு. 
  •  தற்கொலை முயற்சியில் ஈடுபடுபவர்கள் மீது 309-வது சட்டப் பிரிவின் கீழ் குற்ற வழக்குப் பதிவு செய்யப்பட்டு தண்டனை வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், தற்கொலைக்கு முயற்சிப்பது குற்றமாகாது என்ற நோக்கில் அந்தச் சட்டப் பிரிவை நீக்குவதற்கு அரசு முடிவு செய்துள்ளது - மத்திய உள்துறை இணையமைச்சர் ஹரிபாய் பார்த்திபாய் செளத்ரி 
  • ‘தி டைம்ஸ் உயர் கல்வி’ பத்திரிகை வெளியிட்டுள்ள சிறந்த பல்கலைக்கழகங்கள் மற்றும் உயர் கல்வி நிறுவனங்களுக்கான பட்டியலில் இந்திய அளவில் முதலிடத்தை பெங்களூருவில் உள்ள இந்திய அறிவியல் கல்வி நிறுவனம் (ஐ.ஐ.எஸ்.சி) பெற்றுள்ளது.
  • கேரள மாநிலத்தில் பெண்களின் முன்னேற்றத்துக்காக, முழுவதுமாக பெண்களை மட்டுமே கொண்டு செயல்படும், அனைத்து மகளிர் தொலைக்காட்சி நிறுவனத்தை தொடங்குவதற்கு, அந்த மாநிலத்தின் வறுமை ஒழிப்பு அமைப்பான "குடும்பஸ்ரீ' திட்டமிட்டுள்ளது
  • குஜராத் மாநிலத்தில் நடைபெறவுள்ள மாநாட்டில் பங்கேற்பதற்காக, ஐ.நா. பொதுச் செயலாளர் பான்-கீ-மூன் வருகிற ஜனவரி 10ஆம் தேதி இந்தியா வருகிறார்.இரண்டு நாள் பயணமாக இந்தியா வரும் அவர்,  ஜனவரி 11ஆம் தேதி குஜராத் உச்சி மாநாடு-2015ஐ தொடக்கி வைக்கிறார்.
  • பயன்பாடில்லாத 90 சட்டத் திருத்தங்களை ரத்து செய்வதற்கான மசோதா மக்களவையில் திங்கள்கிழமை நிறைவேறியது.வங்கிச் சட்டங்கள், மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்களின் ஊதியத் திருத்தங்கள், உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை, வக்ஃபு வாரியம் உள்ளிட்ட சட்டங்களில் மேற்கொள்ளப்பட்ட சட்டத் திருத்தங்கள் பயனற்று இருப்பதால், அவற்றை ரத்து செய்வதற்கான மசோதாவை மக்களவையில் மத்திய அரசு தாக்கல் செய்தது.
  • பிரபல கர்நாடக இசைப் பாடகர் "சங்கீத கலாநிதி' நேதுநூரி கிருஷ்ணமூர்த்தி, நுரையீரல் பாதிப்பால் காலமானார். திருப்பதியில் 15ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த பக்திக் கவிஞர் அன்னமாச்சார்யரின் 108 கீர்த்தனைகளுக்கு இசை அமைத்ததன் மூலம் அவர் பெரும் பாராட்டும், புகழும் பெற்றார்.
  • இந்தியாவில் முதல்முறையாக கைப்பேசி-ஆளுமை திட்டத்தை பெங்களூருவில் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி திங்கள்கிழமை தொடக்கிவைத்தார்.அரசு சேவைகளை கைப்பேசி மூலம் வழங்கும் இந்தச் சேவை இந்தியாவில் முதல்முறையாக அறிமுகமாகிறது. இத்திட்டத்தின் மூலம் மின்சாரம், குடிநீர்க் கட்டணங்கள், போக்குவரத்து அபராதக் கட்டணங்களைச் செலுத்தலாம். போக்குவரத்து நெரிசல் குறித்த தகவல்களையும் பெறலாம்.
  • ""திட்டக் குழுவுக்கு மாற்றாக அமைக்கப்படும் புதிய அமைப்பானது, மாறி வரும் பொருளாதாரத் தேவைகளை எதிர்கொள்ளும் வகையில் இருக்க வேண்டும்'' என்று, திட்டக் குழுவின் செயலாளர் சிந்துஸ்ரீ குல்லார் தெரிவித்தார்.
  • பிரதமர் நரேந்திர மோடியின் ஆலோசனைப்படி, ஜூன் 21-ஆம் தேதியை சர்வதேச யோகா தினமாக ஐ.நா. அறிவிக்க உள்ளது என்று மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தெரிவித்தார்.
  • கணித மேதை ராமானுஜத்தின் பிறந்த தினத்தை முன்னிட்டு, பள்ளிகளில் கணிதத் திறனை வளர்க்கும் வாரத்தை கடைப்பிடிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது."எண்ணியல் சார்ந்த புதுமை மற்றும் பயிற்சியில் தனித்திறனை வளர்த்தல்'  எனும் தலைப்பில் இந்த விழா கொண்டாடப்படவுள்ளது.
  • இந்தியாவின் தகவல் தொடர்பு செயற்கைக்கோள் ஜிசாட்-16 வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்டது.
  • ஜிசாட்-16 செயற்கைக்கோள் இன்று பிரான்ஸ் நாட்டின் பிரெஞ்ச் கயானாவில் உள்ள கவுரு ராக்கெட் தளத்தில் இருந்து அதிகாலை 2 மணி 10 நிமிடங்களுக்கு ஏரியான் 5விஏ221 என்ற ராக்கெட் மூலம், விண்ணில் ஏவப்பட்டது.   12 ஆண்டுகள் செயல்படும் விதமாக வடிவமைக்கப்பட்ட இந்த செயற்கைகோள் 3,181 கிலோ எடை கொண்டது
  • "தேசிய லோக் அதாலத்' (மக்கள் நீதிமன்றம்) மூலம், நாடு முழுவதும் 1.25 கோடி வழக்குகளுக்கு சனிக்கிழமை தீர்வு காணப்பட்டது.தேங்கிக் கிடக்கும் வழக்குகளால், நீதிமன்றங்கள் சந்தித்து வரும் சுமையை குறைக்கும் வகையில், "தேசிய லோக் அதாலத்' நடத்தப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு நடைபெற்ற லோக் அதாலத்தில், 71.50 லட்சம் வழக்குகளுக்குத் தீர்வு காணப்பட்டது

No comments:

Post a Comment

இன்பத்தமிழ் - Class 6 Tamil New Syllabus Term 1

தமிழ் வணக்கம்   தற்கால இலக்கிய மரபாகிவிட்டது  பாரதிதாசனின் இயற்பெயர்   சுப்புரத்தினம்.  பாரதியாரின் கவிைதகள்  மீது கொண்ட  பற்றின் காரணமா...