ஐ.நா மனித உரிமைகள் ஆணையர் பொறுப்பில் இருந்து நவநீதம்பிள்ளை ஓய்வு பெறுகிறார். இவர் கடந்த ஆறு ஆண்டுகளாக ஐ.நா மனித உரிமை ஆணையாளராகப் பணியாற்றி வந்தார்.
இன்றுடன் அவர் பணி ஓய்வு பெறும் நிலையில் இலங்கைக்கு எதிராக, போர் குற்ற விசாரணையை நடத்திவரும் குழு சிறப்பான முறையில் செயல்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார். ஐ.நா மனித உரிமை ஆணையாளர் பதவியில் இருந்து ஓய்வுபெறும் நவநீதம்பிள்ளை, சர்வதேச அரசசார்பற்ற நிறுவனம் ஒன்றின் பிரதானியாக நியமிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் ஐ.நா மனித உரிமைகள் ஆணையர் பொறுப்பிற்கு, ஏற்கனவே ஐ.நா சார்பில் தேர்வாகியுள்ள, ஜோர்டன் நாட்டின் இளவரசர் சையத் அல் ஹூசைன் நாளை முறைப்படி பொறுப்பேற்கிறார் என தெரிகிறது.
நன்றி-தினமணி
31-08-2014

No comments:
Post a Comment