16 July, 2014

கம்பராமாயணம் 10 - வகுப்பு



சொற்பொருள்:
  1. ஆயகாலை – அந்த நேரத்தில்
  2. அம்பி – படகு
  3. நாயகன் – தலைவன்
  4. நாமம் – பெயர்
  5. துறை - தோணித்துறை
  6. தொன்மை - தொன்றுதொட்டு
  7. கல் – மலை
  8. திரள் – திரட்சி
  9. காயும் வில்லினன் - பகைவர்களை அழிக்கும் வில்லாற்றல் பெற்றவன்
  10. துடி – பறை
  11. அல் – இருள்
  12. சிருங்கிபேரம் – கங்கைகரையோர நகரம்
  13. திரை – அலை
  14. உபகாரத்தன் - பயன்கருதாது உதவுபவன்
  15. கூவா முன்னர் - அழைக்கும் முன்னர்
  16. குறுகி - நெறுங்கி
  17. இறைஞ்சி - வணங்கி
  18. சேவிக்க - வணங்க
  19. மருங்கு – பக்கம்
  20. நாவாய் – படகு
  21. நெடியவன் – இராமன்
  22. குறுகினன் - வந்துள்ளான்
  23. இறை – தலைவன்
  24. பண்ணவன் – இலக்குவன்
  25. பரிவு – இரக்கம்
  26. குஞ்சி – தலைமுடி
  27. மேனி – உடல்
  28. மாதவர் – முனிவர்
  29. அருத்தியன் - அன்பு உடையவன்
  30. முறுவல் – புன்னகை
  31. விளம்பல் – கூறுதல்
  32. சீர்த்த - சிறந்த
  33. பவித்தரம் - தூய்மையானது
  34. இனிதன் - இனிமையானது
  35. உண்டனெம் - உண்டோம் என்பதற்குச் சமமானது
  36. தழீஇய - கலந்த
  37. கார்குலாம் – மேகக்கூட்டம்
  38. பார்குலாம் – உலகம் முழுவதும்
  39. இன்னல் - துன்பம்
  40. ஈர்கிலா - எடுக்க இயலாத
  41. தீர்கிலேன் - நீங்கமாட்டேன்
  42. அடிமைசெய்குவேன் - பணிசெய்வேன்
  43. குரிசில் – தலைவன்
  44. இருத்தி – இருப்பாயாக
  45. நயனம் – கண்கள்
  46. இந்து – நிலவு
  47. நுதல் – நெற்றி
  48. கடிது – விரைவாக
  49. முடுகினன் - செலுத்தினன்
  50. முரிதிரை – மடங்கிவிழும் அலை
  51. அமலன் – குற்றமற்றவன்
  52. இடர் - துன்பம்
  53. அமலன் - குற்றமற்றவன்
  54. இளவல் – தம்பி
  55. துன்பு - துன்பம்
  56. உன்னேல் - நினைக்காதே


இலக்கணக்  குறிப்பு 
  1. போர்க்குகன் – இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்கதொகை
  2. கல்திரள்தோள் – உவமைத்தொகை
  3. நீர்முகில் – இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்கதொகை
  4. இருந்தவள்ளல் – பெயரெச்சம்
  5. வந்துஎய்தினான் – வினையெச்சம்
  6. கூவா – ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
  7. குறுகி, சேவிக்க – வினையெச்சம்
  8. கழல் – தானியாகுபெயர்
  9. வந்தனென், தீர்கிலேன், செங்குவென் - தன்மை ஒருமை வினைமுற்று
  10. அழைத்தி – முன்னிலை ஒருமை வினைமுற்று
  11. வருக – வியங்கோள் வினைமுற்று
  12. பணிந்து, வளைத்து, புதைத்து – வினையெச்சம்
  13. இருத்தி – முன்னிலை ஒருமை வினைமுற்று
  14. தேனும் மீனும் – எண்ணும்மை
  15. மாதவர் – உரிச்சொற்றொடர்
  16. அமைந்த காதல் – பெயரெச்சம்
  17. சீர்த்த - ஒன்றன்பால் வனைமுற்று
  18. தழீஇய – சொல்லிசை அளபெடை
  19. கார்குலாம் – ஆறாம் வேற்றுமைத்தொகை
  20. உணர்த்துவான் – வினையாலணையும் பெயர்
  21. தீராக் காதலன் – ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
  22. மலர்ந்த கண்ணன் – பெயரெச்சம்
  23. இனிய நண்ப – குறிப்புப் பெயரெச்சம்
  24. நெடுநாவாய் – பண்புத்தொகை
  25. தாமரை நயனம் – உவமைத்தொகை
  26. நனிகடிது – உரிச்சொற்றொடர்
  27. நெடுநீர் – பண்புத்தொகை
  28. என்னுயிர் – ஆறாம் வேற்றுமைத்தொகை
  29. நன்னுதல் – பண்புத்தொகை
  30. நின்கேள் – நான்காம் வேற்றுமைத்தொகை

 பிரித்தறிதல் :

  • நெடுநாவாய் - நெடுமை + நாவாய்
  • நெடுநீர் - நெடுமை + நீர்

ஆசிரியர் குறிப்பு:

  • கம்பர் தேரழுந்தூரில் பிறந்தார்.
  • இவ்வூர், நாகை மாவட்டத்தில் மயிலாடுதுறைக்கு அருகில் உள்ளது.
  • கம்பரின் தந்தையர் ஆதித்தன்.
  • கம்பர் இரண்டாம் குலோத்துங்கன் காலத்தில் வாழ்ந்தவர்.
  • இவரைத் திருவெண்ணெய் நல்லூர்ச் சடையப்ப வள்ளல் ஆதரித்தவர்.
  • காலம் கி.பி.பன்னிரெண்டாம் நூற்றாண்டு.
  • தம்மை ஆதரித்த வள்ளல் சடயப்பரை ஆயிரம் பாடல்களுக்கு ஒரு பாடல் எனப் பாடிச் சிறப்பித்துள்ளார்.
  • கம்பராமாயணம், சடகோபர் அந்தாதி, சிலை எழுபது, சரஸ்வதி அந்தாதி, திருக்கை வழக்கம் ஆகிய கம்பர் இயற்றிய நூல்கள்.
  • சயங்கொண்டார், ஒட்டக்கூத்தர், புகழேந்திப் புலவர் ஆகியோர் இவர் காலத்துப் புலவராவர்.
  • கம்பன் வீட்டுக் கட்டுத்தறியும் கவி பாடும், விருத்தமென்னும் ஒண்பாவிற்கு உயர் கம்பன், கல்வியிற் பெரியவர் கம்பர் என்னும் தொடர்கள் கம்பரின் பெருமையை அறியலாம்.
  • “யாமறிந்த புலவரிலே கம்பனைப்போல்” என்று பாரதியார் கம்பரைப் புகழ்ந்து பாடியுள்ளார்.

நூல்குறிப்பு:

  • வான்மீகி முனிவர் வடமொழியில் எழுதிய இராமாயணத்தைத் தழுவிக் கம்பர் அதனைத் தமிழில் இயற்றினார்.
  • கம்பர் இயற்றிய இராமாயணம் கம்பராமாயணம் எனப்பட்டது.
  • கம்பர் தாம் இயற்றிய நூலுக்கு இராமாவதாரம் எனப் பெயரிட்டார்.
  • கம்பராமாயணம் பாலகாண்டம், அயோத்தியா காண்டம், ஆரண்ய காண்டம், கிட்கிந்தா காண்டம், சுந்தர காண்டம், யுத்த காண்டம் என ஆறு காண்டங்களை உடையது.
  • காண்டம் என்பது பெரும்பிரிவையும் படலம் என்பது அதன் உட்பிரிவையும் குறிக்கும்.
  • இந்நூலின் சிறப்புக் கருதியும் திருக்குறளின் பெருமை கருதியும் இவ்விரு நூல்களையும் “தமிழுக்கு கதி” என்பர்.
  • குகப்படலம் அயோத்தியா காண்டத்தில் ஏழாவது படலம் ஆகும். இதனை கங்கைப் படலம் எனவும் கூறுவர்





1 comment:

இன்பத்தமிழ் - Class 6 Tamil New Syllabus Term 1

தமிழ் வணக்கம்   தற்கால இலக்கிய மரபாகிவிட்டது  பாரதிதாசனின் இயற்பெயர்   சுப்புரத்தினம்.  பாரதியாரின் கவிைதகள்  மீது கொண்ட  பற்றின் காரணமா...