08 December, 2014

இன்றைய கேள்விகள் - 08/12/14

1.எந்த ஆற்றின் கரையில் தாராசுரம் கோயில் உள்ளது ?
A.காவிரியாறு 
B.வைகையாறு 
C.பாவானியாறு 
D.அரசலாறு 

2.'சங்கீர்ண சாதி 'என்ற சிறப்பு பெயர் கொண்ட மன்னன் 
A. மகேந்திரவர்மன் 
B.நரசிம்மவர்மன் 
C.இராஜசிம்மன் 
D. நந்திவர்மன் 

3. எந்த அரண்மனைக்குச் சொந்தமானது ஐராவதிசுவரர் கோயில் ?
A.தஞ்சை 
B .பழையாறை 
C.கொடும்பாளூர் 
D.உறையூர் 

4.ஆனந்தரங்கருக்கு 'மன்சுபேதார் 'பட்டத்தை வழங்கியவர் ?
A.முசபர் சங்
B.முசே துய்ப்ளே 
C.கங்குசேஷால செட்டியார் 
D.எம்பார் 

5.சுந்தரர் பாடிய பதிகங்கள் எத்தனை ?
A .நூறு 
B .முன்னூறு 
C .இருநூறு 
D .ஐம்பது 

6. திருநாவுக்கரசருக்கு ஏற்ப்பட்ட சூலை நோயை நீக்கியவர்
A.திருஞான சம்பந்தர் 
B.திலகவதியார் 
C.மருத்துவர் 
D.மகேந்த்ரவர்மன் 

7. வரதனஞ்சையப்பிள்ளை  இயற்றிய குறவஞ்சி 
A.குற்றலாக் குறவஞ்சி 
B.தமிழரசி குறவஞ்சி 
C.சரபேந்திர பூபாலக் குறவஞ்சி 
D.அழகர் 

8.பெத்தலகேம் குறவஞ்சியைப் பாடியவர் 
A.திரிகூடராசப்பக்கவிராயர் 
B.தஞ்சை வேதநாயக சாஸ்திரியார்
C.எச் . ஏ .கிருட்டிணப்பிள்ளை
D.வீரமாமுனிவர்

9.பலப்பட்டடைச் சொக்கநாத பிள்ளை இயற்றிய பாடல்கள் 
எந்தத் தொகுதியில் இடம்பெற்றுள்ளன ?
A.தனிப்பாடல் திரட்டு 
B .தேவாரம் 
C.நாலாயிர திவ்ய பிரபந்தம் 
D .சிற்றிலக்கியம் 

10.நந்திக்கலம்பகம் எந்த மன்னன் மீது பாடப்பெற்றது ?
A.மகேந்த்ரவர்மன் 
B.நரசிம்மவர்மன் 
C.மூன்றாம் நந்திவர்மன் 
D.இராஜசிம்மன் 

07 December, 2014

திட்டங்கள்


  • கிராமப் பகுதிகளில் அகன்ற அலைவரிசை (பிராட்பேண்ட்) சேவை வழங்குவதற்காக, ‘டிஜிட்டல் இந்தியா’ திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
  • கிராமப்புரங்களில் உள்ள பள்ளிகளில் பயில்பவர்களின் திறனை அதிகரிக்கும். மேலும், அரசு சேவைகளை கொண்டு சேர்க்கவும், அரசாட்சி திட்டத்தை அமலாக்கவும் "ஈ-கிராந்தி" எனும் "இணைய புரட்சி" அறிமுகப்படுத்தப்படுகிறது.
ஷியாமாபிரசாத் முகர்ஜி ஊரக நகர்ப்புற திட்டம்:
  • கிராமப்பகுதிகளில் ஒருங்கிணைக்கப்பட்ட திட்ட அடிப்படையிலான உள்கட்டமைப்பை மேம்படுத்துதல்.
  • திறன் மேம்பாடு மற்றும் பொருளாதார நடவடிக்கைகளை மேம்படுத்துதல்
  • தனியார்-பொது பங்களிப்பு திட்டத்தை ஊக்குவித்தல்
பண்டிட் மதன் மோகன் மாளவியா புதிய ஆசிரியர் பயிற்சித் திட்டம்
  • புதிய பயிற்சிக் கருவிகளை அறிமுகம் செய்தல் மற்றும் ஆசிரியர்களை ஊக்குவித்தல்
  • ரூ. 500 கோடி ஒதுக்கீடு
தீனதயாள் உபாத்யாயா கிராம ஜோதி திட்டம்
  • அனைத்து குடியிருப்புகளுக்கும் தடையற்ற மின்சாரம் வழங்குதல்
  • ஊரகப் பகுதிகளுக்கு மின் விநியோகத்தை அதிகரித்தல்
  • துணை மின்பகிர்வு மற்றும் விநியோக முறையை வலுப்படுத்துதல்
  • ரூ. 500 கோடி ஒதுக்கீடு
ஜவஹர்லால் நேரு தேசிய நகர்ப்புற புனரமைப்புத் திட்டம்
  • நகர்ப்பகுதியில் வாழ்வாதாரம் மற்றும் உள்கட்டமைப்பை மேம்படுத்துதல்
இந்திரா காந்தி தேசிய விதவை ஓய்வூதியத் திட்டம்
  • வறுமைக்கோட்டுக்குகீழ் இருப்பவர்களுக்கான இந்திரா காந்தி தேசிய மாற்றுத்திறனாளிகள் ஓய்வூதியத் திட்டம்
ராஜீவ் காந்தி ஈக்விட்டி சேமிப்புத் திட்டம்
  • நிதிமுதலீடுகளில் சேமிப்பை ஊக்குவித்தல்
ராஜீவ் காந்தி வளரிளம்பெண்கள் மேம்பாட்டுத் திட்டம்
  • வளரிளம் பெண்களுக்கான சுயமேம்பாட்டு முயற்சிகள்
அனைவருக்கும் கல்வித் திட்டம் (சர்வ சிக்ஷா அபியான் SSA.)
  • இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 86ஆவது பிரிவில் "6-14 வயது வரையிலான அனைத்துக் குழந்தைகளுக்கும்  இலவச மற்றும் கட்டாயக் கல்வி அவர்களுடைய அடிப்படை உரிமை" என்று கூறப்பட்டிருக்கிறது. 
  • இதை  நிறைவேற்றும் வகையில் குறிப்பிட்ட கால வரையரைக்குள் இந்திய அரசு தனது முதன்மையான திட்டமாகிய "சர்வ  சிக்ஷா அபியான் - எஸ்.எஸ்.ஏ.' என்கிற (எல்லோருக்கும் கல்வி') திட்டத்தின் மூலம் ஆரம்பக்கல்வியை அனைவருக்கும்  அளிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. 
  •  அனைத்து மாநில அரசுகளின் ஒத்துழைப்புடன் நாடு முழுவதும்  செயல்படுத்தப்படும் சர்வ சிக்ஷா அபியான் திட்டத்தின் மூலம் 11 லட்சம் கிராமங்களைச் சார்ந்த 192 மில்லியன்  குழந்தைகளின் கல்வித்தேவைகள் பூர்த்தியாகும்.

Tnpsc Aptitude Video - 022 (Problems on HCF and LCM)















05 December, 2014

இன்றைய கேள்விகள் - 05/12/14

1. பின்வருவனவற்றுள் பொருந்தாதது எது ?
A. வேளாண் பயிர்கள்   --  பசுமை புரட்சி
B.முட்டை மற்றும் கோழி வளர்ப்பு  -- வெண்மை புரட்சி 
C.கடல் சார் பொருட்கள் -- நீல புரட்சி
D.தோட்டக்கலை -- தங்கப் புரட்சி

2.உச்ச நீதிமன்றத்தின் முதல் பெண் நீதிபதி யார் ?
A.அன்னா சான்டி
B.விஜயலட்சுமி பண்டிட்
C.இந்திராகாந்தி
D.பாத்திமா பீவி

3.கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி
கூற்று (A)  : நிர்வாக சீர்திருத்த ஆணையம்தான் லோக்பால் மற்றும் லோக்யக்தாயுக்  (LOKAYAKTHA) ஏற்ப்படுத்தியது.
காரணம் (R) : 1. இது சுதந்திரமாக செயல்படுகிறது
                            2.இதில் அரசியல் சாராதவர்கள் உள்ளனர் .

இவற்றுள் எது சரி எனத் தீர்மானிக்கவும்
A. (A) மற்றும் (R) இரண்டும் தவறு
B. (A) மற்றும் (R) இரண்டும் சரி 
C. (A) தவறு ஆனால்  (R) சரி
D. (A) சரி ஆனால்  (R)  தவறு

4.இந்தியாவின் குடியரசுத்தலைவர்களை அவர்களின் பதவிக்கால அடிப்படையில் வரிசைப்படுத்துக
I.ஆர் . வெங்கட்ராமன்
II.டாக்டர். சங்கர்தயாள் சர்மா
III.டாக்டர் .கே .ஆர் நாராயணன்
IV.டாக்டர். ஏ .பி .ஜே .அப்துல்கலாம்

A . I,  II  III,  IV
B.  III, IV, I,  II
C. III,  I, II,  IV
D. III,  II,  I, IV

5.போபால் துயரச் சம்பவம் நடைப்பெற்ற ஆண்டு
A.1980
B.1978
C.1975
D.1984

6.பின்வருவனவற்றுள் பொருந்தாதது எது ?

A.பசுமைப் புரட்சி  - வேளாண்  உற்பத்தி
Bவெண்மைப் புரட்சி - பால் மற்றும் பால் பொருட்கள்
C.சாம்பல் புரட்சி - எண்ணெய் வித்துக்கள் 
D.பொன் புரட்சி - பழங்கள்

7.மாநிலங்களில் ஜனாதிபதி ஆட்சியை பரிந்துரை செய்யும் விதி
A.விதி 354
B.விதி 355
C.விதி 356
D.விதி 357

8.பொருத்துக 
 a.முதலாம்  ஐந்தாண்டுத் திட்டம்              1.தன்னிறைவு பெறுதல் 
 b.2 - ஆம்       ஐந்தாண்டுத் திட்டம்              2 .வேளாண் மற்றும் தொழில்                                                                                                                                         வளர்ச்சி 
 c.3 - ஆம்       ஐந்தாண்டுத் திட்டம்              3.வேளாண்மை வளர்ச்சி 
 d.4 -ஆம்       ஐந்தாண்டுத் திட்டம்              4. கனரக தொழில் வளர்ச்சி 
         a         b        c         d
A.    2          4       1         3
B.    1          2       3         4
C.    3          4       2         1
D.    3          4       1         2

9.பொருத்துக 
 a.உலக சுகாதார நிறுவனம்                                                1.பாரிஸ் 
 b.பெண்கள் காப்பகம்                                                             2 .ரோம் 
 c.ஐக்கிய நாடுகளின் கல்வி அறிவியல் 
    மற்றும் கலாச்சார அமைப்பு                                          3.நியுயார்க் 
 d.பன்னாட்டு வேளாண்மை வளர்ச்சி நிதி                  4. ஜெனீவா 
         a         b        c         d
A.    3          4       2         1
B.    4          3       1         2
C.    2          3       4         1
D.    4          3       1         4

10.நிதிக்குழுவின் தலைவரை நியமனம் செய்வது 
A.குடியரசுத் தலைவர் 
B.பிரதம அமைச்சர் 
C.மக்களவை சபாநாயகர் 
D.நிதி அமைச்சர் 

11.கீழ்க்கண்ட பிரதம அமைச்சர்களை காலவரிசைப்படுத்துக 
I.திரு . சரண்சிங் 
II.திரு . வி . பி . சிங் 
III.திரு . லால் பகதூர் சாஸ்திரி
IV.திரு . சந்திரசேகர் 
A. III,  I, II,  IV
B. IV, II, III, I
C. II, III, IV, I
D. IV, III,  II, I

12. பின்வருவனவற்றுள் இந்திய  துணை குடியரசுத் தலைவராக  தேர்ந்தெடுக்கப்படுவதற்கு 
அவசியமான தகுதி அல்லாதது எது ?
A.  அவர் இந்திய குடிமகனாக இருக்க வேண்டும் .
B. அவருக்கு இந்தி பேசவும் , படிக்கவும் எழுதவும் தெரிந்திருக்க 
வேண்டும் .
C. அவர் 35 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும் 
D.  அவர் மாநிலங்களவையில் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட
 தகுதி பெற்றவராக இருக்க வேண்டும் .

13. கீழ்க்கண்டவற்றுள் எந்த விதியின்படி சிறுவர்கள் தொழிற்சாலை மற்றும் சுரங்க வேலைகளில்  அமர்த்துவது தடை செய்யப்பட்டுள்ளது ?
A.விதி 23
B.விதி 24
C.விதி 21 A
D.விதி 64

14. கால வரிசைப்படி எழுது 
I.பைரான் சிங் ஷெகாவத்
II.K.R. நாராயணன் 
III.முகமது ஹமீத் அன்சாரி 
IV.கிருஷ்ணகாந்த் 
A.III, IV, I,  II
B.II, IV , I , III
C.I, III, II, IV
D.IV, II, III, I

15.இந்தியாவின் துணை குடியரசு தலைவரைத் தேர்ந்தெடுப்பது 
I.  மக்களவை உறுப்பினர்கள் 
II.  மாநிலங்களவை உறுப்பினர்கள் 
A. I அல்லது  II - ம் இல்லை 
B.I மட்டும் 
C.II மட்டும் 
D.I மற்றும் II இரண்டும் 

Tnpsc Aptitude Video 021

QUESTION 21

04 December, 2014

இன்றைய கேள்விகள் - 04/12/14

1.இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் உள்ள எந்த அரசியலமைப்பு சட்டம் அடிப்படை கல்வி உரிமையை விவாதிக்கின்றது ?
A. Art. 20 (A)
B. Art. 21 (A)
C. Art. 19 (A)
D. Art. 22(A)

2. இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் எட்டாவது அட்டவணையில் எத்தனை மொழிகள் உள்ளன ?
A.   18
B.   22
C.   20
D.   24

3.நிதி மசோதாக்கள் மாநில அவையினால் எத்தனை நாட்கள் மட்டும் தாமதப்படுத்தலாம் ?
A.30 நாட்கள் 
B.15 நாட்கள் 
C.20 நாட்கள் 
D.14 நாட்கள் 

4.தேர்தல் ஆணையர்கள் இவரால் நியமிக்கப்படுகின்றனர் 
A.பிரதம அமைச்சர் 
B.ஆளுநர் 
C.இந்திய குடியரசுத் தலைவர் 
D.அமைச்சரவைக் குழு 

5.பொருத்துக 
 a.முதலாம்  ஐந்தாண்டுத் திட்டம்              1.வறுமை ஒழிப்பு 
 b.2 - ஆம்       ஐந்தாண்டுத் திட்டம்              2 .சமத்துவம் மற்றும் சமூக நீதி 
 c.5 - ஆம்       ஐந்தாண்டுத் திட்டம்              3.தொழில் துறை வளர்ச்சி
 d.10 -ஆம்      ஐந்தாண்டுத் திட்டம்              4. வேளாண்மை 
         a         b        c         d
A.    4          3       1         2
B.    2          1       3         4
C.    1          3       4         2
D.    2          4       1         3

6. பாராளுமன்றத் தேர்தலில் பூஜ்ய நேரம் என்பது ------------------
நாட்டின் கண்டுபிடிப்பு 
A.இங்கிலாந்து 
B.அமெரிக்க ஐக்கிய நாடுகள் 
C.இந்தியா 
D.பிரான்சு 

7.பஞ்சாயத்து அமைப்புகளுக்கான தேர்தல்களில் தாழ்த்தப்பட்டோர் மற்றும் 
பழங்குடியினருக்கான இட ஒதுக்கீட்டிற்கு வழிவகை செய்யும் அரசியலமைப்பு சட்ட ஷரத்து 
A.  Art. 243K
B.  Art. 241K
C.  Art. 243D
D.  Art. 241D

8. தலைமை தேர்தல் ஆணையர் யாருக்கு இணையாக அதிகாரம் பெற்றிருப்பவர் ?
A.உயர்நீதிமன்ற நீதிபதி 
B.மாவட்ட நீதிபதி
C.உச்ச நீதிமன்ற நீதிபதி 
D.மாஜிஸ்திரேட்

9.தமிழ்நாடு மொத்த சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 
A.233
B.234
C.235
D.236

10.பொருத்துக 
 a.சமத்துவ உரிமை                                           1.பிரிவு  23 - பிரிவு 24
 b.சுதந்திர உரிமை                                            2 .பிரிவு 19 - பிரிவு 22
 c.சுரண்டலுக்கெதிரான உரிமை                 3.பிரிவு  25 - பிரிவு 28
 d.சமய சுதந்திர உரிமை                                 4. பிரிவு 14 - பிரிவு 18
         a         b        c         d
A.    4          2      1          3
B.    4          2       3         1
C.    1          2       3         4
D.    4          3       2         1

11.எந்த அரசியல் விதி ஜம்மு - காஷ்மீருக்கு தனி அரசியலமைப்பை 
வழங்குகிறது ?
A.விதி 370
B.விதி 390
C.விதி 161
D.விதி 356

12.எந்த அரசியலமைப்பு சட்டம் குடியரசுத்தலைவருக்கு பாராளுமன்றத்தின் கீழ் அவையைக் கலைக்க அதிகாரம் அளிக்கிறது ?
A. விதி 85
B. விதி 95
C. விதி 81
D. விதி 75

13.அரசியல் நிர்ணய சபையின் முதல் கூட்டம் நடைபெற்ற ஆண்டு 
A.1950
B.1946
C.1948
D.1947

14. பாராளுமன்றத்தின் கூட்டு அமரவை (கூட்டத்தை ) நடத்துவது யார் ?
A.குடியரசுத் தலைவர் 
B.துணை குடியரசுத்தலைவர் 
C.பிரதம மந்திரி 
D.சபாநாயகர் 

15. தேசிய மேம்பாட்டுக் குழு எந்த ஆண்டு உருவாக்கப்பட்டது ?
A.1952
B.1955
C.1959
D.1962

03 December, 2014

இன்றைய கேள்விகள் - 03/12/14

1." உரைவீச்சு" என்ற புதிய இலக்கிய வடிவ ஆக்க முயற்சிக்குப்
 பெருந்தொண்டு புரிந்த தமிழறிஞர் 
A.வ . செ . குழந்தைசாமி 
B.சாலை இளந்திரையன் 
C.அப்துல் ரகுமான் 
D.ஈரோடு தமிழன்பன் 

2." மனமது செம்மையானால் மந்திரம் செபிக்க வேண்டா " என்று 
சொன்ன சித்தர் 
A.அகத்தியர் 
B.பட்டினத்தார் 
C.சிவவாக்கியர் 
D.கடுவெளிச்சித்தர் 

3." நாடக மேடை நினைவுகள் " என்ற நூலின் ஆசிரியர் ?
A.கந்தசாமி 
B.சங்கரதாஸ் சுவாமிகள் 
C.டி கே சண்முகம் 
D.பம்மல் சம்பந்தனார் 

4.கம்பர் தம் இராமாயணத்தை அரங்கேற்றிய இடம் ?
A.தஞ்சாவூர் 
B.உறையூர் 
C.திருவரங்கம் 
D.நாட்டரசன் கோட்டை 

5.அகர வரிசையில் அமைந்ததைத் தேர்ந்தெடு 
A.ஒரு நாளும் ,இருக்க ,வேண்டாம் , ஓதாமல்
B.ஓதாமல், ஒரு நாளும் ,வேண்டாம் , இருக்க ,
C.ஓதாமல், ஒரு நாளும் , இருக்க , வேண்டாம் ,
D.இருக்க , வேண்டாம் ,ஒரு நாளும் , ஓதாமல்

6. தவறான ஒன்றைக் கண்டறி 
A.உமிழ்நீர் கலக்காத உணவின் சத்து உடலில் சேராது 
B.நோய்க்கு முதற்காரணம் உப்பு ஆகும் 
C.பெருங்காயம் தொண்டைக்கட்டு நீக்கும் .
D.நாளொன்றுக்குக் குறைந்தது  மூன்று லிட்டர் தண்ணீர் 
குடிக்க வேண்டும் 

7. எதிர்ச்சொல்லைக் காண் : மங்குதல் 
A.வளர்த்தல் 
B.மங்காமை
C.ஒளிர்தல் 
D.தயங்குதல் 

8. மனோன்மணியம் என்ற கவிதை நாடகத்தில் வரும் 
எதிர்த்தலைவன் 
A.குடிலன் 
B.புருசோத்தமன் 
C.கருணாகரன் 
D.நகுலன் 

9. சித்தர்களில் ஒருவரான " பட்டினத்தாரின் " இயற்பெயர் 
A.திருவெண்காடர் 
B.சிவநேச செட்டியார் 
C.பத்ரகிரியார் 
D.சுவேதாரண்யர்

10. நாட்குறிப்பு வேந்தர் எனப் போற்றப்படும் ஆனந்தரங்கம் 
பிள்ளை மீது பிள்ளைத்தமிழ் பாடியவர் 
A.தியாகராச தேசிகர் 
B.அரிமதி தென்னகன் 
C.சீனிவாசக்கவி 
D.கஸ்தூரிரங்கன் 

தமிழர் வானியல் - 8 ஆம் வகுப்பு சமச்சீர்

வானியல் அறிவு:


  •  உலகம், ஐம்பூதங்களாகிய நிலம், நீர், வெப்பம், காற்று, வானம் ஆகிய ஐந்தும் உள்ளடக்கியது எனத் தொல்காப்பியம் குறிப்பிடுகிறது.

 நிலம் நீர் தீ வளி விசும்போடு ஐந்தும்
கலந்த மயக்கம் ஆதலின்
- தொல்காப்பியம்

இதுபோன்று புறநானூற்று பாடலும் கூறுகிறது.

மண்திணிந்த நிலனும்
நிலன் ஏந்திய விசும்பும்
விசும்பு தைவரு வளியும்
வளித்தலை இய தீயும்
தீ முரணிய நீரும் என்றாங்கு
ஐம்பெரும்பூத்தது இயற்கை போல்

உலகம் தட்டையா? உருண்டையா?

  •  பதினைந்தாம் நூற்றாண்டில் போலந்து நாட்டை சேர்ந்த நிக்கோலஸ் கோபர்நிகஸ் என்பவர் உலகம் தட்டை இல்லை உருண்டையானது என்று கூறினார். ஆனைல் அதை யாரும் ஏற்றுக் கொள்ளவில்லை.



  •  பதினாறாம் நூற்றாண்டில் வாழ்ந்த கலீலியோ, உலகம் உருண்டையானது என்பதை தம் தொலைநோக்கி மூலம் கண்டுபிடித்து சொன்னார்.

 ஆனால் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே திருவள்ளுவர் தம்குரலில் கூறியுள்ளார்.

சுழன்றும் ஏர்ப்பின்னது உலகம் அதனால்
உழந்தும் உழவே தலை

ஞாயிற்றுக் காட்சி:

  •  வான்வெளியில் மிகப்பெரிய விண்மீன் ஞாயிறு.
  •  சிலப்பதிகாரத்தில் இளங்கோவடிகள், "ஞாயிறு போற்றுதும், ஞாயிறு போற்றும்" என்று போற்றியுள்ளார்.
  •  ஞாயிற்றைச் சுற்றிய பாதையை "ஞாயிறு வட்டம்" என்றனர் பழந்தமிழர் எனப் புறநானூறு கூறுகிறது.

 செஞ்ஞாயிற்றுச் செலவும் அஞ்ஞாயிற்றுப் பரிப்பும் பரிப்புச் சூழ்ந்த மண்டிலமும் - புறம் , 30

திங்கள் தோற்றம்:

  •  தானே ஒளிவிடக்கூடிய ஞாயிற்றை "நாள்மீன்" என்றும், ஞாயிற்றிடமிருந்து ஒளி பெற்று ஒளிவிடக்கூடியவற்றை "கோள்மீன்" என்றும் அழைப்பர்.
  •  திங்கள் தானே ஒளி வீசுவதில்லை, எனபதை திருவள்ளுவர் வெளிப்படுத்துகிறார்.

 மாதர் முகம் போல் ஒளிவிட வல்லையேல் 
காதலை வாழி மதி.

  •  திங்களை பாம்பு கொண்டற்று என்னும் குறள் "திங்கள் மறைப்பு" (சந்திரகிரகணம்) பற்றியதாகும்.

கோள்கள் பற்றிய தமிழரின் கருத்து:

  •  கோள்களின் நிறம், வடிவம் முதலியவற்றையும் அறிந்திருந்தனர்.
  •  செந்நிறமாய் இருந்த கோளைச் செவ்வாய் என்றனர்.
  •  வெண்மை நிறமுடைய கோளை வெள்ளி என்றனர்.
  •  வெள்ளிக்கோளுக்கு ஒரு சிறப்பு உண்டு. ஞாயிறு உதயத்திற்கு முன்பே வெள்ளி எழுந்து விடியலை உணர்த்துவதால் இதனை "விடிவெள்ளி" என்றனர்.
  •  புதிதாகக் கண்டறிந்த கோளை புதன் என அழைத்தனர். புதிதாக அறிந்ததால் அதற்கு "அறிவன்" என்றும் பெயருண்டு.
  •  வியா என்றால் பெரிய, நிறைந்த எனப் பொருள்படும். வானில் பெரிய கோலாக வளம் வருவதையே வியாழன் என்றனர்.
  •  சனிக்கோளைக் "காரிக்கோள்" என்றழைத்தனர். இக்கோளில் கந்தகம் இருப்பதாக ஆய்வு கூறுகிறது.

தூமகேது:


  •  தூமகேதுவை வால்நட்சத்திரம் என்றும் கூறுவர்.
  •  தமிழ் இலக்கியங்களில் தூமகேது பற்றிய குறிப்புகள் இடம்பெற்றுள்ளன.

02 December, 2014

இன்றைய கேள்விகள் - 02/12/14

1. பாரதிக்கு " மகாகவி " என்ற பட்டம் கொடுத்தவர்?
A.பரலி நெல்லையப்பர் 
B.திருவல்லிக்கேணி தமிழ்ச் சங்கத்தார் 
C.கிருஷ்ணசாமி ஐயர் 
D.வ . இராமசாமி ஐயங்கார்

2.தமிழ் பேரகராதியைப் பதிப்பித்தவர் ?
A.டாக்டர் மு . வரதராசானார் 
B.வையாபுரிப்பிள்ளை 
C.ரா . பி . சேதுப்பிள்ளை 
D.ந. மு .வேங்கடசாமி நாட்டார் 

3. இயற்றினாள் என்பதன் வேர்ச்சொல் 
A.இயல் 
B.இயற்று 
C.இயல்பு 
D.இயற்றுதல் 

4. தமிழை மறந்த தமிழர்கள் வாழும் பகுதி 
A.நியூகினியா 
B.மலேசியா 
C.இங்கிலாந்து 
D.மாலத்தீவுகள் 

5. " பரசமயக் கோளரி " என்ற சிறப்புப் பெயர் பெற்றவர் 
A.ஞானசம்பந்தர் 
B.ஒட்டக்கூத்தர் 
C.காளமேகப்புலவர் 
D.சேக்கிழார் 

6. பண்டைய எழுத்து வடிவத்தைத் திருத்திய இலக்கண நூல் 
A.நேமிநாதம் 
B.தொன்னூல் விளக்கம் 
C.புதுக்கவிதை இலக்கணம் 
D.முத்துவீரியம் 

7. தூமகேது என்பது 
A.இடைக்காலத்து நூல் 
B.தமிழர் வாழும் தீவு 
C.வால் நட்சத்திரம் 
D.நோய் வகை 

8.' ஐயை ' என்ற நூலின் ஆசிரியர் 
A.இளங்கோவடிகள் 
B.பெருஞ்சித்திரனார் 
C.ஒளவையார் 
D.தேவநேயப்பாவாணர் 

9.Platform இதற்குரிய தமிழ்ச்சொல் 
A.ஓடுதளம் 
B.ஒதுக்குப்புறம்
C.நடைபாதை 
D.நடைமேடை 

10. தாவுதல் என்ற பொருள் தரும் ஓரெழுத்து ஒரு மொழி 
A.வா 
B.வீ 
C.போ 
D.மோ 


01 December, 2014

இன்றைய கேள்விகள் - 01/12/14

1.ஒரெழுத்து ஒரு மொழியைத் தேர்க “கா”
A. சோலை
B. பாலை
C. வயல்
D. கறுப்பு


2.' துண்டு ' என்னும் அடைமொழியால் குறிக்கப்பெறும் நூல் எது ?
A.ஆசாரக்கோவை 
B.நான்மணிக்கடிகை 
C.இனியவைநாற்பது 
D.சீவகசிந்தாமணி 
(நான்மணிக்கடிகை என்பது நான்கு இரத்தினத் துண்டங்கள் என்னும் பொருளைத் தரும். ஒவ்வொரு பாடலிலும் நான்கு சிறந்த கருத்துக்களைக் கூறுவதால் நான்மணிக்கடிகை எனப் பெயர் பெற்றது. இதனை இயற்றியவர் விளம்பி நாகனார். கடிகை என்றால் பகுதி (துண்டு) என்று பொருள்)

3. ' தமிழ் வியாசர் 'என வழங்கப்படும் சான்றோர் யார் ?
A.சேரமான் பெருமாள் நாயனார் 
B.நாற்கவிராச நம்பி 
C.சேந்தனார் 
D.நம்பியாண்டார் நம்பி 

4." பழி நாணுவானை " - பெயர்ச் சொல்லின் வகையறிக 
A.தொழிற்பெயர் 
B.பண்புப்பெயர் 
C.பொருட்பெயர் 
D.வினையாலணையும் பெயர் 

5. கடலைக் குறிக்காத சொல்லைக் கண்டறிக 
A.ஆர்கலி 
B.வாரணம் 
C.பரவை 
D.ஊழி 

6.ஆனந்தரங்கம் பிள்ளையின் நாட்குறிப்பு 
A.மதராஸ் பட்டணத்தின் ஆவணம் 
B.புதுச்சேரியின் ஆவணம் 
C.ஆற்காட்டு நவாப்புகளின் ஆவணம் 
D.சேதுபதிகளின் ஆவணம் 

7. " தோற்பாவை " என்பது 
A.ஒரு வகை பொம்மை 
B.ஒரு வகை கூத்து 
C.ஒரு வகை இசை 
D.ஒரு வகை நாட்டியம் 

8. தமிழின் முதல் சிறுகதைத் தொகுதி 
A.அபிநவக் கதைகள் 
B.குளத்தங்கரை அரசமரம் 
C.மங்கையர்க்கரசியின் காதல் 
D.புலவர் வறுமை 
  •   சிறுகதை உலகின் தந்தை - செகாவ்
  •   சிறுகதை தோன்றிய  முதல் இந்திய மொழி - வங்காளி
  •   தமிழ்ச் சிறுகதையின்  முன்னோடி - வீரமாமுனிவர்
  •   தமிழின் முதல்  சிறுகதை - வ.வே.சு.ஐயரின் குளத்தங்கரை அரச    மரம்
  •   தமிழின் முதல்  சிறுகதை தொகுப்பு -மங்கையர்கரசியின் காதல்
  •   சிறுகதையின் தந்தை - வ.வே.சு.ஐயர் 

9. சேரமான் கணைக்கால் இரும்பொறையைப் பற்றிப் 
    பரிதிமாற் கலைஞர் எழுதிய  நாடக நூல் 
A.ரூபாவதி 
B.கலாவதி 
C.மான விஜயம் 
D.சித்திரக்கவி 

10. எல்லார்க்கும் நன்றாம் ---------------
A.பணிதல் 
B.பண்புடையன் ஆதல் 
C.நல்லொழுக்கம்
D.பொல்லாங்கை விடேல் 

11. தாயுமானவர் பாடலில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர் ?
A.இராமலிங்க அடிகளார் 
B.அருணகிரியார் 
C.திரு . வி . க .
D.குணங்குடி மஸ்தான் சாகிபு 

12. தமிழகத்தில் நடந்த அகழ்வாராய்ச்சியில்  பண்டையக் காலக்
 காசுகள் மிகுதியாகக் கிடைத்த பகுதி 
A.தருமபுரி , கரூர் பகுதி 
B.தென்காசி , திருநெல்வேலி பகுதி 
C.தேனி , கம்பம் பகுதி 
D.தஞ்சை , கும்பகோணம் பகுதி 

13. நடுநிசி நாய்கள் என்ற புதுக்கவிதைத் தொகுப்பின் ஆசிரியர் 
A.பசுவய்யா 
B.கலாப்ரியா 
C.தருமுசிவராமு 
D.இரா. மீனாட்சி 

14. உருவ வழிபாட்டை மறுத்த சித்தர் 
A.கடுவெளிசித்தர் 
B.அகத்தியர் 
C.பட்டினத்தார் 
D.கொங்கணச்சித்தர் 

15." பயில் " - என்னும் வேர்ச்சொல்லின் வினைமுற்றைக் காண்க 
A.பயின்ற 
B.பயின்று 
C.பயிலல் 
D.பயின்றான் 

இன்பத்தமிழ் - Class 6 Tamil New Syllabus Term 1

தமிழ் வணக்கம்   தற்கால இலக்கிய மரபாகிவிட்டது  பாரதிதாசனின் இயற்பெயர்   சுப்புரத்தினம்.  பாரதியாரின் கவிைதகள்  மீது கொண்ட  பற்றின் காரணமா...