20 November, 2014

Tnpsc Aptitude 018



Question: In the examination 30% of total students failed in English, 40% of students in Hindi and 20% in both. Find the percentage of students who passed in both the subjects.

ஒரு தேர்வில் 30%  மாணாவர்கள் ஆங்கிலப் பாடத்தில் தேர்ச்சி பெறவில்லை . 40%  மாணவர்கள் ஹிந்திப் பாடத்தில் தேர்ச்சி பெறவில்லை. இரண்டு பாடத்திலும் தேர்ச்சி பெறாதவர்கள் 20%  என்றால் இரண்டு பாடத்திலும் தேர்ச்சி பெற்ற மாணவர்களின் சதவிகிதம் என்ன ?

A. 50%  B. 20%  C.10%   D. 60%



இன்றைய கேள்விகள் - 20/11/14

1. வால்ட்  விட்மனின்  சாயலில் வசன  கவிதை  எழுதியவர் -----------------
A.மீரா
B.முடியரசன்
C.பாரதியார்
D.பாரதிதாசன்

2 . கவிமணி  என்ற  பட்டம் எந்த  ஆண்டு   தேசிக  விநாயகம் பிள்ளைக்கு  வழங்கப்பட்டது ?
A.1940
B.1920
C.1950
D.1965

3 . காந்தி  அஞ்சலி  என்ற  நூலின்  ஆசிரியர்
A.நாமக்கல்  கவிஞர்
B.அசலாம்பிகை  அம்மையார்
C.ரா. சொக்கலிங்கம்
D.பாரதிதாசன்

4 . கண்ணதாசன்  படைப்பில்  சாகித்ய  அகாதெமி  விருது  பெற்ற  நூல்
A.சேரமான்  காதலி
B.இயேசு  காவியம்
C.அர்த்தமுள்ள  இந்து  மதம்
D.குமரிக்கண்டம்

5. " மந்திரங்கள்  ஓதியது  அந்த  காலம்  எந்திரத்தால் மழை  வருவது  இந்த  காலம் " என்று  பாடியவர்
A.உடுமலை  நாராயண கவி
B.பட்டுக் கோட்டையார்
C.மருதகாசி
D.கண்ணதாசன்

6. ' அன்று  வேறு  கிழமை ' - என்ற  கவிதையின்  ஆசிரியர்
A.ஞானகூத்தன்
B.சுரதா
C.கி. மணி
D.சி. சு. செல்லப்பா

7 . 'வரும்  போகும் , ஒளிச்சேர்க்கை ' - ஆகியவை  யாருடைய  நூல்கள்
A.சிற்பி
B.கி. மணி
C.சாலை. இளந்திரையன்
D.ஞானக்கூத்தன்

8 . 'நல்ல  உலகம்  நாளை மலரும்  ' -யாருடைய  படைப்பு
A.அப்துல்  ரகுமான்
B.சாலை. இளந்திரையன்
C.ஆலந்தூர்.  கோ. மோகனரங்கன்
D.தமிழன்பன்

9. உலகின்  மிகச் சிறந்த  நாவல்களில்  ஒன்று  என நேரு குறிப்பிடுவது
A.சாகுந்தலம்
B.போரும் அமைதியும்
C.டான் குவிக்ஸோட்
D.காண்டர்பரி கதைகள்

10. உழவுத்  தொழிலை  அடிப்படையாகக்  கொண்டு நடத்தப்படும்  நாடகம்
A.சமூக  நாடகம்
B.பள்ளு குறவஞ்சி  நாடகம்
C.கட்டுக்கதை  நாடகம்
D.நையாண்டி  நாடகம் 

19 November, 2014

கரிம வேதியியல் பரிணாமம் குறித்த லாமார்க்கின் கருத்து


ஜீன் பாப்டைஸ் லாமார்க் (1744-1829) உடலுறுப்புப் பயன்பாடு பற்றிய விதி குறித்து விளக்கியிருந்தார் . இதன்படி , தொடர்ந்து அதிகப் பயன்பாட்டில் இருக்கும் உறுப்புகள் நன்கு வளர்ச்சியுறும் என்றும் , பயன்படா உறுப்புகள் நாளடைவில் பயன் இழந்து சிறுத்துப் போகும் என்றும் விளக்கியிருந்தார் .

லாமார்க் இவ்விதியை மெய்ப்பிக்க , ஒட்டகச்சிவிங்கியின் கழுதை எடுத்துகாட்டாகக் கொண்டு , உயரமான மரக்கிளைகளின் இலைகளைப் பறித்து உண்பதற்காக நீட்டிய கழுத்து நாளடைவில் நீளமாக மாறியதென்றும் , தேவையும் எண்ணமுமே இம்மாற்றத்திற்குக் காரணமென்றும் விளக்கியிருந்தார். 

இன்றைய கேள்விகள் - 19/11/2014

1. மாவட்ட  நீதிபதிகளை  ............... நியமிக்கிறார்
A.ஆளுநர் 
B.மாவட்ட  ஆட்சியர்
C.முதலமைச்சர்
D.இந்திய  குடியரசு தலைவர்

2. தமிழ் நாட்டில்  பின்வரும்  வகையிலான  ..................கட்ட கிராம  உள்ளாட்சி  அரசு  செயல்படுகிறது.
A.ஒன்று
B.இரண்டு
C.மூன்று .
D.நான்கு

3 இந்தியா  பின்பற்றும்  ஆட்சி  முறை
A.பாராளுமன்ற  மக்களாட்சி  முறை
B.குடியரசுத் தலைவர்  மக்களாட்சி  முறை
C.அரச முறை
D.சர்வாதிகார ஆட்சி  முறை

4 கீழே  கூறப்பட்டுள்ளவற்றில்  இந்திய  அரசமைப்பு சட்டத்தின்  எந்த பிரிவு  பாராளுமன்றம்  புதியதாக அகில  இந்திய  அரசுப்பணியை  உருவாக்க  வகை  செய்கிறது ?
A.பிரிவு  303
B.பிரிவு  307
C.பிரிவு   309
D.பிரிவு  312 

5. 42 வது  அரசமைப்பு   திருத்தச் சட்டம்  இயற்றப்பட்ட ஆண்டு  ----------------
A. 1947
B. 1950
C. 1963
D. 1976  

6. இந்திய  தேர்தல்  ஆணையம்  --------------
உறுப்பினர்களை  கொண்ட ஓர்  அமைப்பு
A. 1
B. 2
C. 3 
D. 4

7. இன  ஒதுக்கல்  கொள்கை முடிவுக்கு வந்த ஆண்டு  -------------
A.  1990
B.  1991
C.  1890
D.  1989

8. கோடக்ஸ் அலிமெண்டேஷன்  கமிஷனால்  நிறுவப்பட்ட  நிறுவனங்கள்
A. FAO  &  WHO 
B. UNESCO  & UNILEF
C. UNDP & UNESCO
D. மேற்கண்ட  அனைத்தும்

  9. பஞ்சாயத்து  ராஜ்  முறைக்கு  அரசமை  ப்பு  ரீதியான  அங்கீகாரம்  கொடுத்த திருத்தம்  எது ?
A.  73 _ வது  திருத்தம் 
B.  74 _ வது  திருத்தம்
C.  64 _ வது  திருத்தம்
D.  72 _ வது  திருத்தம்

10. இந்திய  அரசமைப்பு  சட்டத்தில் உள்ள  51(A) சரத்தில் அடிப்படை கடமைகள்  எந்தச்  சட்டத் திருத்தத்தின்  மூலம்  சேர்த்துக்  கொள்ளப்பட்டது ?
A.  41 _ வது  திருத்தம்
B.  42 _ வது  திருத்தம் 
C.  43 _ வது  திருத்தம்
D.  44 _ வது  திருத்தம் .


18 November, 2014

கணித மேதை இராமனுஜம் - 7 ஆம் வகுப்பு சமச்சீர்


பிறப்பு
  • பிறப்பு: 22.12.1887
  • ஊர்: ஈரோடு
  • பெற்றோர்: சீனுவாசன் - கோமளம்
  • இவர் பிறந்து மூன்று ஆண்டுகள் வரை பேசும் திறன் இல்லாமல் இருந்தார்.
  • தனது தாயாரின் தந்தை ஊரான காஞ்சிபுரத்தில் திண்ணை பள்ளியில் படித்தார்.
கும்பகோணம்:
  • இராமனுஜனின் தாத்தாவின் பணிநிமித்தம் "கும்பகோணம்" வந்தால், பின்பு அவரின் கல்வி கும்பகோணத்தில் தொடர்ந்தது.
பூஜ்யத்திற்கு மதிப்புண்டு:
  • ஒருமுறை வகுப்பில் அவரின் ஆசிரியர் "பூஜ்யத்திற்கு மதிப்பில்லை" என கூற, அதற்கு இராமானுஜன்  பூஜ்யத்திற்கு மதிப்புண்டு என்று விளக்கி எடுத்துரைத்தார்.
  • இராமானுஜர் தமது சிறுவயது முதலே கணிதப்பாடத்தில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார்.
கார்:
  • 1880இல் இலண்டன் நகரில் "கார்" என்பவர் பதினைந்தாவது வயதிலேயே கணிதத்தில் சிறந்து விளங்கியதுப்போல, இவரும் சிறு வயதிலேயே கணிதத்தில் சிறந்து விளங்கினார்.
எழுத்தர் பணி:
  • தந்தை சீனுவாசனின் முயற்சியால் இவருக்கு சென்னை துறைமுகத்தில் "எழுத்தர்" சிறந்து விளங்கினார்.
பெர்னெளலிஸ் எண்கள்:
  •  தான் கண்டுபிடித்த தேற்றங்களையும், எடுகோள்களையும் கேள்விகளாகத் தொகுத்து இந்தியக் கணிதக் கழகப் பத்திரிகைக்குச் சென்னை துறைமுகத்தின் தலைமை பொறியாளர் ஃபிரான்சிஸ் ஸ்ப்ரிங் என்பார் மூலம் அனுப்பினார். "பெர்னெளலிஸ் எண்கள்" எனும் தலைப்பில் வெளியான அவரது கட்டுரை, மிகந்த வரவேற்பை பெற்றது.
  • தனது கண்டுப்பிடிப்புகளை இந்தியக் கணிதக் கழகப் பத்திரிகைக்கு இராமானுஜம் ஃபிரான்சிஸ் ஸ்பிரிங் மூலம் அனுப்பினார்
  • பெர்னெளலிஸ் எனும் தலைப்பில் வெளியான இராமானுஜத்தின் கட்டுரை கணித வல்லுநர்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றது.
  • இராமானுஜம் சென்னை பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி மாணவராகச் சேர்ந்தார்.
  •  இராமானுஜம் தனது கண்டுபிடிப்புகள் ஆராய்ச்சிகள் ஆகியவற்றை விவரமாக எழுதி இங்கிலாந்திலுள்ள கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகப் பேராசிரியர் ஹார்டி என்பவருக்கு கடிதமாக அனுப்பினார்.
  • இலண்டன் கேம்பிரிட்ஸ் பல்கலைக்கழகத்துடன் இணைந்துள்ள கல்லூரியின் பெயர் - திரினிட்டி கல்லூரி.
  •  கணிதத் திறமையால் விஞ்ஞான உலகினைப் பிரமிக்கச் செய்து வரலாற்றில் குறிப்பிடத்தக்க ஓர் இடத்தைப் பெற்ற பிறவிக் கணித மேதை என்று கூறியவர் - இந்திரா காந்தி.
  • ஜாகோபி ஜெர்மனி நாட்டில் வாழ்ந்தார்
  • ஜாகோபி 19 ஆம் நூற்றாண்டின் கணிதமேதை
  • ஆய்லராக இல்லாவிட்டாலும் இராமானுஜன் குறைந்தபட்சம் ஒரு ஜாகோபி என்று கூறியவர் - லிட்டில் வுட்டு
  • ஆய்லர் சுவிட்சர்லாந்து நாட்டைச் சேர்ந்தவர்
  • ஆய்லர் 18 ஆம் நூற்றாண்டின் இணையற்ற கணிதமேதை ஆவார்.
  •  திரினிட்டி கல்லூரியின் பேராசிரியர் ஈ.எச். நெவில் சென்னைப் பல்கலைக்கழகத்திற்குச் சொற்பொழிவாற்ற வந்தார்.
  •  இராமானுஜம் எந்த ஆண்டு 1914 ஆம் ஆண்டு மார்ச் 17 ஆம் நாள் இங்கிலாந்துக்குப் புறப்பட்டார்.
  • திரினிட்டி கல்லூரியில் 18.04.1914 ஆம் ஆண்டு ஆராய்ச்சி மாணவராக சேர்ந்தார்.
  •  கிங்ஸ் கல்லூரியின் கணிதப் பேராசிரியர் - ஆர்தர் பெர்சி.
  •  இராமானுஜத்தின் வழிமுறைகளை நூலாக வெளியிட்டு அவருக்கு பெருமை சேர்ந்தவர் - ஹார்டி
  • ஹார்டி ரோசரஸ் இராமானுஜன் கண்டுபிடிப்புகள் என்னும் தலைப்பில் இராமானுஜத்தின் வழிமுறைகளை நூலாக வெளியிட்டார்.
  •  இங்கிலாந்துப் பல்கலைக்கழகத்தில் உறுப்பினராக இராமானுஜம் 1918 ஆண் ஆண்டு சேர்க்கப்பட்டார்.
  •  இங்கிலாந்து பல்கலைக்கழகம் இராமானுஜத்திற்கு எஃப்.ஆர்.எஸ் பட்டம் வழங்கியது.
  •  எஃப்.ஆர்.எஸ் பட்டம் பெற்ற இராமானுஜத்தை திரினிட்டி கல்லூரி பாராட்டிச் சிறப்பித்தது.
  •  ஹார்டியின் பரிந்துரையின் பேரில் சென்னைப் பல்கலைக் கழகமும் 250 பவுண்டுத் தொகையை ஐந்து ஆண்டுக்கும் கொடுக்க முன்வந்தது.
  • இராமானுஜம் 50 பவுண்டைத் தம் பெற்றோருக்கும் 200 பவுண்டை ஏழை எளிய மாணவர்களுக்கும் வழங்கி வருமாறு கடிதம் எழுதினார்.
  •  இராமானுஜத்தைப் பார்க்க வந்த ஹார்டி 1729 என்ற எண் கொண்ட வாடகை மகிழுந்தில் வந்தேன் எனக் கூறினார்.
  •  இராமானுஜம் இந்தியாவிற்கு திரும்பி வந்த ஆண்டு - 1919 ஆம் ஆண்டு மார்ச் 27ம் தேதி.
  • இராமானுஜம் மறைந்த ஆண்டு 1920 ஆம் ஆண்டு ஏப்ரல் 26ம் தேதி.
  • இராமானுஜம் சாதாரண மனிதரல்லர் அவர் இறைவன் தந்த பரிசு என்று கூறியவர் - பேராசிரியர் ஈ.டி. பெல்
  •  இராமானுஜன் முதல்தரமான கணித மேதை என்று கூறியவர் - பேராசிரியர் சூலியன் கக்சுலி
  • இராமானுஜத்தின் குறிப்பேடுகளில் 3000 முதல் 4000 தோற்றங்கள் இருந்தன.
  •  1957 ஆம் ஆண்டு டாடா அடிப்படை ஆராய்ச்சி நிலையம் இராமானுஜத்தின் தேற்றங்களை ஒளிப்படம் எடுத்து நூலாக வெளியிடப்பட்டுள்ளது.
  •  1962 டிசம்பர் 22 ஆம் தேதி இராமானுஜத்தின் 75வது பிறந்த நாள் ஆகும்.
  •  இராமானுஜத்தின் 75வது பிறந்த நாளை முன்னிட்டு நடுவணரசு பதினைந்து காசு அஞ்சல்தலை இருத்தைந்து இலட்சம் வெளியிட்டது.
  • சென்னையில் 03.10.1972 ஆம் ஆண்டு அன்றைய முதல்வர் மு.கருணாநிதி அவர்களால் இராமானுஜம் கணித அறிவியல் நிறுவனம் திறந்து வைக்கப்பட்டது.
  •  சென்னை துறைமுகம் சார்பில் புதிதாக வாங்கிய குடிநீர்க்கப்பலுக்கு, சீனுவாச இராமானுஜம் எனப் பெயர் சூட்டப்பட்டது.
  • ரிச்சர்ட்டும் ஆஸ்லேயும் இணைந்து 1984 ஆம் ஆண்டு இராமானுஜத்தின் மார்பளவு வெண்கலச் சிலையை இந்தியாவிற்குக் கொண்டு வந்து வழங்கினர்.
  • கணிதக் குறிப்புகள் அடங்கிய எத்தனை குறிப்பேடுகளையும் ஆராய்ச்சிக் கட்டுரைகளையும் இராமானுஜம் விட்டுச் சென்றுள்ளார்.
  • இராமானுஜன் எண்: 1729 என்பதை இராமானுஜன் எண் என்பர்.

17 November, 2014

Tnpsc Aptitude 017



Question:

ஓவியக்கலை - 7 ஆம் வகுப்பு சமச்சீர்



ஓவியம்:
  • எல்லைகளையெல்லாம் கடந்து எங்கும் பரந்து வாழும் மக்கள் மனங்களைக் கொள்ளை கொண்டு வியக்க வைக்கும் விந்தை மொழி ஓவியம்.
  •  காண்பவரைக் கவர்ந்திழுக்கும் உள்ளங்களைத் தன்வயப்படுத்தும் உயர்ந்த கலை ஓவியக்கலை.

கோட்டோவியங்கள்:
  •  சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன்னர் இருந்த மக்கள் மலைக்குகைகளிலும் பாறைகளிலும் கோட்டோவியங்கள் வரைந்தனர்.
  •  தமிழகத்தில் 25க்கும் மேற்பட்ட இடங்களில் (மான், போர் செய்தல், விலங்கு வேட்டை ஆகியவற்றை குறிக்கும்) குகை ஓவியங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
கண்ணெழுத்து:
  • தமிழ் நாட்டில் சங்க காலத்திற்கு முன்னரே ஓவியங்கள் வரையப்பட்டன.
  •  தாம் வரைந்த ஓவியங்களை முதலில் "சுண்ணெழுத்து" என்றே வழங்கினர்.
எழுத்து:
  •  எழுத்து என்பதற்கு ஓவியம் என்றும் பொருள் உண்டு என பரிபாடலும், குறுந்தொகையும் கூறுகின்றன.

கோட்டோவியங்கள்:
  •  ஓவியம் வரைவதற்கு நேர்கோடு, கோணக்கோடு, வளைகோடு முதலியன அடிப்படை.
  •  இவ்வாறு வரையப்படுபவை "கோட்டோவியங்கள்" எனப்படும்.

நடுகல் வணக்கம்:
  • தொல்காப்பியம் நடு கல் வணக்கம் பற்றிக் கூறுகிறது.
  •  நடுகல்லி போரில் வீரமரணம் எய்திய வீரனது உருவம், பெயர், பெருமைக்குரிய செயல் முதலியவற்றைப் பொரிக்கும் பழக்கம் இருந்தது.
ஓவியக்கலையின் வேறுபெயர்கள்:
  • ஓவ, ஓவம், ஓவியம், சித்திரம், படம், படாம், வட்டிகைச் செய்தி
ஒவியக் கலைஞனின் வேறு பெயர்கள்:
  • ஓவியர், ஓவியப்புலவன், கண்ணுள் விளைஞன், சித்திரகாரர், வித்தக விளைஞன், வித்தகர், கிளவி வல்லோன்
நச்சினார்கினியர் இலக்கணம்:
  •  நச்சினார்க்கினியர் தம் உரையில் ஓவியருக்கு, நோக்கினார் கண்ணிடத்தே தம் தொழில் நிறுத்துவோர்" என இலக்கணம் வகுத்துள்ளார்.
ஓவியக் குழுக்கள்:
  •  ஓவிய கலைஞர் குழுவை "ஓவிய மாக்கள்" என்று அழைத்தனர்.
  • ஆண் ஓவியர் = சித்திராங்கதன்
  •  பெண் ஓவியர் = சித்திரசேனா

சிலப்பதிகாரம்:
  • ஆடல் மகள் மாதவி, "ஓவியச் செந்நூல் உரை நூற்கிடக்கையும் கற்றுத்துறை போகப் பொற்கொடி மடந்தையாக இருந்தனள்" எனச் சிலம்பு பகிர்கிறது.
வரைகருவிகள்:
  •  வண்ணம் தீட்டும் கோல் தூரிகை, துகிலிகை, வட்டிகை எனப்பட்டது.
  •  வண்ணங்கள் குழப்பும் பலகைக்கு "வட்டிகைப் பலகை" எனப் பெயர்.
புறநானூறு:
  • "ஓவத்தனைய இடனுடை வனப்பு
    • - புறநானூறு
 இவ்வாறு வீட்டின் அழகை ஓவியத்திற்கு ஒப்ப வைத்துக் கவிஞர் போற்றுகிறார்.

ஓவிய எழினி:
  •  நாடகமேடைகளில் பல வண்ணங்களில் கவின்மிகு காட்சிகள் தீட்டப்பட்ட திரைச்சீலைகள் தொங்குகினவற்றை "ஓவிய எழினி" கொண்டு அறிகிறோம்.
புனையா ஓவியம்:
  •  வண்ணம் கலக்காமல் கரித்துண்டுகளால் வடிவம் மட்டும் வரைவதைப் புனையா ஓவியம் என்பர்.
  •  இன்றும், இது மென்கோட்டு ஓவியமாக நடைமுறையில் உள்ளது.
நெடுநல்வாடை:
  •  ஆடு முதலான 12 இராசிகளையும், விண்மீன்களையும் வரைந்த செய்தி, நெடுநல்வாடை கூறுகிறது.
தமிழரின் ஓவிய மரபு:
  •  ஓவியங்களில் "நிற்றல், இருத்தல், கிடத்தல்" ஆகிய மனித இயல்புகளையும்
  •  "வீரம், சாந்தம், சினம், வியப்பு, உவகை" ஆகிய மெய்ப்பாடுகளையும்
  •  "உத்தமம், மத்திமம், அதமம், தசதாளம், நவதாளம், பஞ்சதாளம் முதலிய அளவுகளையும் வலியுறுத்துவது தமிழருக்கே உரிய ஓவிய மரபுகளாக விளங்குகின்றன.
மகேந்திரவர்மப் பல்லவன்:
  •  சங்க காலத்தில் செழிந்திருந்த ஓவியக்கலை இடைக்காலத்தில் சிதைந்து மறைந்துபோகத் தொடங்கியது.
  •  மறைந்து கொண்டிருந்த ஓவியக்கலைக்கு மீண்டும் புத்துயிர் ஊட்டியவர்கள் பல்லவர்கள்.
  •  7 ஆம் நூற்றாண்டில் தமிழகத்தை ஆண்ட முதலாம் மகேந்திரவர்மப் பல்லவன் சிறந்த ஓவியன்.
  •  கல்வெட்டுகள் இவனைச் "சித்திரகாரப்புலி" எனப் புகழ்கின்றன.
  •  "தட்சிணசித்திரம்" என்னும் ஓவிய நூலூக்கு இம்மன்னன் உரை எழுதியுள்ளான்.
சித்தன்னவாசல் - ஓவியக் கருவூலம்:
  •  திருநந்திக்கரையில் சேரர் கால ஓவியங்கள் கிடைத்துள்ளன.
  •  புதுக்கோட்கோட்டைக்கு அருகே சித்தன்வாசல் என்னும் குகைக்கோவில் ஓவியங்கள் ஓவியக் கருவூலமாக வைத்து போற்ற தக்கது.
  • கி.பி.9ஆம் நூற்றாண்டில் "அவனிய சேகர ஸ்ரீவல்லபன்" என்ற பாண்டிய மன்னன் காலத்தில், மதுரை ஆசிரயர் "இளம்கெளதமன்" இவ்வோவியங்களை வரைந்தார் என கல்வெட்டுகள் கூறுகிறது.
சோழர் கால ஓவியங்கள்: 
  • சோழர்கால வனப்புமிக்க ஓவியங்களைத் தஞ்சைப் பெரியகோவிலில் காணலாம்.
  •  அதில் கவின்மிகு கயிலைகாட்சி உள்ளது.

16 November, 2014

ஜனவரி 29-ல் மலேசியாவில் 9 வது உலகத் தமிழ் மாநாடு


9-வது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு ஜனவரி 29-ம் தேதி மலேசியாவில் தொடங்குகிறது.

இதுகுறித்து இந்திய மற்றும் தென்கிழக்காசிய நாடுகளுக்கான மலேசிய சிறப்புத் தூதரும், மாநாட்டின் தலைவருமான டத்தோ  சாமிவேலு சென்னையில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:

9-வது உலகத் தமிழ் மாநாடு ஜனவரி 29-ம் தேதி தொடங்கி பிப்ரவரி 1-ம் தேதி வரை 3 நாள்கள் நடைபெறுகிறது.

27 நாடுகளில் இருந்து 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தமிழறிஞர்கள் இந்த மாநாட்டில் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கிறேன். இரு தினங்களுக்கு முன்பு தமிழக முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தை நேரில் சந்தித்து மாநாட்டுக்கு அழைத்திருக்கிறேன்.

இந்த மாநாட்டுக்கான ஆய்வுக் கட்டுரைகள் தமிழறிஞர்களிடமிருந்து வரவேற்கப்படுகிறது. ஆய்வுக் கட்டுரைகளை imtcindia@yahoo.com என்ற இ-மெயில் முகவரிக்கு டிசம்பர் 30-ம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும். மொத்தம் 29 வகையான தலைப்புகளில் ஆய்வுக் கட்டுரைகளை சமர்ப்பிக்கலாம். இதில் சிறந்த 4 கட்டுரைகளுக்கு பரிசுகளும் வழங்கப்படும். ஆய்வுக் கட்டுரை தலைப்புகள் மற்றும் மாநாடு குறித்த விவரங்களை www.91csts2014.um.edu.my என்ற இணையதளத்தில் பார்த்து தெரிந்துகொள்ளலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.

நன்றி 
தி இந்து 

இன்றைய கேள்விகள்- 15/11/2014

1.பின்வரும் சமுதாயம் உருவாதல் பற்றிய விவரங்களில் எது
 சரியானது ?
A. சமுதாயம் – குடும்பம்-தனிநபர் – சமூகம் 
B. தனிநபர் –குடும்பம் – சமூகம் – சமுதாயம் 
C. குடும்பம் – சமுதாயம் – தனிநபர் – சமூகம் 
D. சமூகம் – தனிநபர் – குடும்பம் – சமுதாயம்

விடை : தனிநபர் –குடும்பம் – சமூகம் – சமுதாயம் 

2.புவி மேலோட்டில் மிகப்பெரிய அளவிற்கு செங்குத்து நகர்வு 
ஏற்ப்படுவது ------------------ நகர்வு என்று அழைக்கப்படுகிறது 
A. என்டோஜெனிக் 
B. எபிரோஜெனிக் 
C. மையம் 
D. தேய்வுறுதல் 

விடை : எபிரோஜெனிக்

3.சட்டங்கள் இயற்றும்போதும் அவற்றை நடைமுறைப் படுதும்போதும் பின்பற்ற வேண்டிய செயல் முறைகள் 
A. வழிகாட்டு கோட்பாடுகள்
B. அடிப்படை உரிமைகள்
C. அடிப்படைக் கடமைகள்
D. அரசு நெறிமுறை கோட்பாடுகள்

விடை : அரசு நெறிமுறை கோட்பாடுகள்

4.இருப்புபாதையின் தந்தை எனப்பட்டவர் --------------------
A. டல்ஹௌசி பிரபு 
B. ரிப்பன் பிரபு 
C. பெண்டிங் பிரபு 
D. கானிங் பிரபு 

விடை : டல்ஹௌசி பிரபு 

5.23 - வது தீர்த்தங்கரர் ------------------------
A. ரிஷபர் 
B. பார்சவநாதர் 
C. மகாவீரர் 
D. புத்தர் 

விடை :  பார்சவநாதர்

6.சமூக ஒப்பந்தங்கள் என்ற நூலை எழுதியவர் ---------------
A. வால்டேர் 
B. ரூசோ 
C. மான்டெஸ்கியூ
D. டான்டன்

விடை :  ரூசோ

 7.விழுப்புரம் மாவட்டத்திலுள்ள மலை -----------------------
A. செஞ்சி மலை 
B. சித்தேரிமலை 
C. கல்ராயன் மலை 
D. ஜவ்வாது மலை 

விடை :  கல்ராயன் மலை 

8.தேக்கு மரமும் சந்தன மரமும் ---------------வகை காடுகளைச் 
சார்ந்தது.
A. அயன மண்டல பசுமை மாறாக் காடுகள் 
B. அயன மண்டல அகன்ற இலைக்காடுகள் 
C. சதுப்பு நிலக்காடுகள் 
D. மலைக்காடுகள் 

விடை :  அயன மண்டல அகன்ற இலைக்காடுகள் 

9.தென்மேற்குப் பருவக்காற்றால் அதிக அளவில் மழைப்பெறும் 
மாவட்டம் எது ?
A. கன்னியாகுமரி 
B. திருநெல்வேலி 
C. மதுரை 
D. விருதுநகர் 

விடை :  கன்னியாகுமரி

10. கல்வியில் செய்யப்படும் முதலீடு -----------------
மூலதனம் எனப்படும் .
A. பருமப்பொருள் 
B. மனித 
C. பண
D. செல்வ 

விடை :  மனித 

15 November, 2014

Tnpsc Aptitude 016




Question: In the products 2a x 1a =41a; 2bx1b=37b, a and b are represent positive integers.Then a+b=

2a x 1a =41a மற்றும் 2bx1b=37b ஆகிய பெருக்கல்களில் a மற்றும் b என்பன மிகை முழு எண்களைக் குறித்தால் a+b=

A.15  B.11 C.7   D.13



இன்பத்தமிழ் - Class 6 Tamil New Syllabus Term 1

தமிழ் வணக்கம்   தற்கால இலக்கிய மரபாகிவிட்டது  பாரதிதாசனின் இயற்பெயர்   சுப்புரத்தினம்.  பாரதியாரின் கவிைதகள்  மீது கொண்ட  பற்றின் காரணமா...