14 November, 2014

Tnpsc Aptitude 015



48 மீ ஆரமாகக் கொண்ட வட்ட வடிவ பூங்காவில் வெளிப்புறத்தில் 4 மீ அகலத்தில் சமச்சீரான வட்டப்பாதை அமைக்கப்படுகிறது . அப்ப்பாதையின் பரப்பைக் காண்க

தூங்கா நகர் - 7 ஆம் வகுப்பு சமச்சீர்

  •  உலகமே உறங்கிக்கொண்டிருக்கும் வேளையிலும் விழித்திருக்கும் தூங்கா நகர் - மதுரை
  •  தென்னிந்தியாவின் ஏதென்ஸ் - மதுரை
  • மதுரை - இனிமை

மதுரை நகரின் சிறப்புப் பெயர்கள்:
  •  தூங்கா நகர், திருவிழா நகர், கோவில் நகர், பழம்பெரும் தமிழரின் நாகரீகத தொட்டில், தென்னிந்தியாவின் ஏதென்ஸ், கூடல் நகர், ஆலவாய்

மதுரை - பெயரக்காரணம்:
  •  "மதுரை" என்னும் சொல்லுக்கு "இனிமை" என்பது பொருள். தமிழும் மதுரையும் இனிமையின் இயல்பால் அமைந்தவை. மதுரை பற்றிய புலவர்கள் கூறும் போதெலாம் தமிழோடு சேர்த்தே கூறினார்.
  • புறநானூறு: தமிழ்கெழு கூடல் எனப் புறநானூறு போற்றியது.
  • சிறுபாணாற்றுப்படை: "தமிழ்நிலை பெற்ற தாங்கரு மரபின் மகிழ்நனை மறுகின் மதுரை"சிறுபாணாற்றுப்படை (நல்லூர் நத்தத்தனார்)

சிலப்பதிகாரம்:
இளங்கோவடிகள் சிலப்பதிகாரத்தில் 
  • "ஓங்குசீர் மதுரை"
  • மதுரை மூதூர் மாநகர்"
  • தென்தமிழ் நன்னாட்டுத் தீதுநீர் மதுரை"
  • "மாண்புடை மரபின் மதுரை"
  • "வானவர் உறையும் மதுரை"
  • "பதியெழுவறியாப் பண்பு மேம்பட்ட மதுரை மூதூர்" என்று புகழ் மாலை சூட்டி மகிழ்ந்தார் .

தமிழகத்தின் சிறப்பு:
  • சேரநாடு - வேழமுடைத்து
  • சோழநாடு - சோறுடைத்து
  • பாண்டியநாடு - முத்துடைத்து
  • தொண்டைநாடு - சான்றோர் உடைத்து

நான்மாடக்கூடல்:
  •  மதுரைக்கு கூடல் எனவும், ஆலவாய் எனவும் வேறு பெயர்கள் உள்ளன.
  •  நான்மாடக்கூடல் என்னும் பெயரே கூடல் என மருவி உள்ளது.
  •  "திருவாலவாய், திருநள்ளாறு, திருமுடங்கை, திருநடுவூர்" ஆகிய நான்கு திருக்கோவில்கள் சேர்ந்தமையால், நான்மாடக்கூடல்" என்னும் பெயர் வழங்கலாயிற்று என்பர்.
  •  கன்னிக்கோவில், கரியமால் கோவில், காளிகோவில், ஆலவாய்க் கோவில் ஆகிய நான்கு திருக்கோவில்களும்  மதுரைக்குக் காவலாக அமைந்தமையால், "நான்மாடக்கூடல்" என்னும் பெயர் வந்தது என்றும் கூறுவர்.

பரஞ்சோதியார் கூற்று:
  • வருணன், மதுரையை அழிக்க ஏழு மேகங்களை அனுப்பினான். அதைப் பற்றி இறைவனிடம் பாண்டியன் முறையிட, இறைவன் நான்கு மேகங்களை மதுரையைக் காக்க அனுப்பினார். அந்நான்கும் நான்கு மாடங்களாக கூடி மதுரையைக் காத்தமையால் "நான்மாடக்கூடல்" என்னும் பெயர் ஏற்பட்டதாக பரஞ்சோதியார் கூறியுள்ளார்.

அறிஞர்கள் கூற்று:
  •  எந்நாட்டவரும் எவ்வூரினரும் வந்து கூடும் வளமான நகர் என்பதால், கூடல் எனப் பெயர் பெற்றதாக கூறுவர்.
  •  சங்கம் வைத்துச் செந்தமிழை வளர்க்க, புலவர் எல்லோரும் கூடியதால், கூடல் என்னும் பெயர் ஏற்பட்டதாக அறிஞர் கூறுவர்.

ஆலவாய் - திருவிளையாடற புராணம் கூற்று:
  •  மதுரையை விரிவுபடுத்த எண்ணி, இறைவனிடம் அதன் எல்லையை வரையறுத்துத் தருமாறு வேண்டினான் பாண்டியன். இறைவன், தன் கையணியாகிய பாம்பிடம் எல்லையை வரையறுக்க ஆணையிட்டார். பாம்பு வாழை நீட்டி வலமாகத் தன் உடலை வளைத்தது. அவ்வாலைத் தனது வாயில் சேர்த்து மதுரையின் எல்லையை வகுத்துக் காட்டியது. அன்று முதல் மதுரைக்கு ஆலவாய் என்னும் பெயர் அமைந்ததாகத் "திருவிளையாடற்புராணம்" கூறுகிறது. ஆலவாய் என்பது ஆலத்தை (விடத்தை) உடைய பாம்பினைக் குறிக்கும்.

வேறு காரணம்:
  • மதுரையில் எழுந்தருளிய ஈசன், ஆலமர நிழலில் விற்றிருந்ததால் "ஆலவாய் என்னும் பெயர் ஏற்பட்டதாக கூறுவர்.

மருதை மதிரை:
  •   மருத மரங்கள் அடர்ந்த பகுதியாக இருந்தமையால் "மருதை" என வழங்கிய இடம், காலப்போக்கில் மதுரை என்றாகியதாம். கல்வெட்டில் "மதிரை" என்ற பெயர் காணப்படுகிறது.

மதுரை நகரமைப்பு:
  •  மதுரை நகரின் நடுவில் அண்ணல் கோவிலும் அதனைச் சுற்றி முறையாக ஒழுங்குற அமைந்த தெருக்களும் காண்பதற்குத் தாமரைப் பொகுட்டையும் அடுக்கடுக்கான இதழ்களையும் போன்று காட்சியளித்தன. இது அன்றைய தமிழர் நகரமைப்புக் கலையின் நுணுக்கத்தை உலகிற்குப் பறைசாற்றும் அடையாளமாகத் திகழ்கின்றன.

மதுரை வீதிகளின் பெயர்கள்:
  • அறுவை வீதி - ஆடைகள் விற்கும் கடைப்பகுதி.
  •  கூலவீதி - தானியக்கடை
  •  பொன்வீதி - பொற்கடைகள்
  • மன்னவர் வீதி - மன்னர் வாழும் பகுதி
  •  மறையவர் வீதி - அந்தணர் வீதி

மதுரையின் மாண்பு:
  • சிவபெருமான் சுந்தரபாண்டியனாகவும் செவ்வேள் உக்கிரகுமாரப்பாண்டியனாகவும் உமையம்மை மலையத்துவசனக்கு மகளாகத் தோன்றித் தடாதகைப் பிராட்டியாகவும் மதுரையை ஆண்டனர்.
  • அரிமர்த்தன பாண்யிடனுக்கு அமைச்சராக மாணிக்கவாசகர் திகழ்ந்தார்.
  •  திருஞானசம்பந்தர் கூன்பாண்டியன் காலத்தில் மதுரையில் மங்கையர்க்கரசி, குலச் சிறையார் உதவியுடன் சைவத்தைக் காத்தார்.

திருமலை நாயக்கரின் திருப்பணிகள்:
  • திருமலை நாயக்கர் மதுரையைத் தலைநகராகக் கொண்டு ஆண்டார்.
  • கோடை விடுதியான தமுக்கமும், குளிர்பூந்தடாகமாகிய பெரிய தெப்பக் குளமும், கலை நயத்தில் தாஜ்மகாலை" ஒத்த "திருமலை நாயக்கர் மகாலையும் அமைத்து மதுரையை அழகுபடுத்தினார்.
  • மதுரையை "விழ மல்கு நகராக" மாற்றினார்.

நிகழ்வுகள்:
  •  பரஞ்சோதியாரின் திருவிளையாடற்புராணம் தருமிக்கு இறைவன் தண்டமிழ்ப் பாடல் தந்தமை பற்றிக் கூறுகிறது.
  •  மதுரையைச் சூற்றியுள்ள மலைகளில் வாழ்ந்த சமண முனிவர்களால் "நாலடியார்" இயற்றப் பெற்றது.
  •  குமரகுருபரருக்கு மீனாட்சியம்மையே சிறுமியாக வந்து முத்துமணி மாலையைப் பரிசளித்தார்.

நான்காம் தமிழ்ச்சங்கம்:
  •   வள்ளல் பாண்டித்துரை தேவர், மதுரையின் நான்காம் தமிழ்ச்சங்கம் நிறுவித் தமிழ் வளர்த்தனர்.
  • கோவலன் பொட்டல்: சிலப்பதிகாரக் காப்பியத் தலைவன் கோவலன் கொலைக்களப்பட்ட இடம் "கோவலன் பொட்டல்" என்னும் பெயருடன் இன்றும் அப்பகுதி மக்களிடம் வழங்கப்படுகிறது.

செல்லத்தம்மன் கோவில்:
  •  கையில் சிலம்புடன் உட்கார்ந்திருக்கும் உருவச்சிலை அமைந்த கோவில், செல்லத்தம்மன் கோவிலாக இன்றும் மக்களால் வழிபடப்படுகிறது.

பொதுவான குறிப்பு:
  • மீனாட்சியம்மன் கோவிலின் நான்கு கோபுரங்களுள் பழமையானது கிழக்குக் கோபுரம்; உயரமானது தெற்குக் கோபுரம். இது 1600.9 அடி உயரமும் 1511 கதை உருவங்களும் உடையது.
  •  மரம் பயன்படுத்தாமல் கட்டப்பட்டது நாயக்கர் மகால். இதன் ஒவ்வொரு தூணும் 82 அடி உயரமும் 19 அடி சுற்றளவும் கொண்டது.
  •  நல்லந்துவனார், மருதனிள நாகனார், இளந்திருமாறன், சாத்தலைச் சாத்தனார், பெருங்கொல்லனார், கண்ணகனார், கதங்கண்ணாகனார், சேந்தம்பூதனார் முதலியோர் அன்றைய மதுரையில் வாழ்ந்தோராவர்.

12 November, 2014

19 ஆம் நூற்றாண்டில் சமூக மற்றும் சமய சீர்திருத்த இயக்கங்கள் - 10 ஆம் வகுப்பு சமச்சீர்

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுது 










































ANSWERS
1----------A 
2----------C
3----------B
4----------B
5----------D
6----------A
7----------C
8----------A

திரைப்படக்கலை உருவான கதை - 10 ஆம் வகுப்பு சமச்சீர்

திரைப்படத்தின் சிறப்பு:
உலகில் பல்வேறு மொழிகள் இருப்பினும், மக்கள் அனைவரும் எளிதில் புரிந்துக்கொள்ளும் உலகமொழி திரைப்படம்.
அது உதடுகளால் பேசும் மொழியன்று; உள்ளத்தால் பேசி, உணர்ச்சிகளால் உருவாகும் மொழி.

திரைப்படத்தின் வரலாறு:
ஒளிப்படம் எடுக்கும் முறையை 1830ஆம் ஆண்டு கண்டுப்பிடித்த பின்னர், எட்வர்ட் மைபிரிட்சு என்ற ஆங்கிலேயர் முதலில் ஓடும் குதிரையை இயக்கப்படமாக எடுத்து வெற்றிபெற்றார்.

ஈஸ்ட்மன் என்பார் படச்சுருள் உருவாக்கும் முறையைக் கண்டுபிடித்தார்.
எடிசன், ஒருவர் மட்டும் பார்க்கும் படக்கருவியைக் கண்டுபிடித்தார்.
பிரான்சிஸ் சென்கின்சு என்ற அமெரிக்கர் 1894இல் ரிச்மண்ட் என்னுமிடத்தில் இயக்கப்படத்தைப் பலரும் பார்க்கும் வகையில் வடிவமைத்தார். புதிய படவீழ்த்திகள் உருவாக, இவருடைய கருத்துகளே அடிப்படையாக அமைந்தன.
திரைப்படம்:
நடிப்பாற்றலை எடுத்துக்கூறிச் சில நேரங்களில் தாமே நடித்தும், காட்சிகள் அமைத்தும் படம் முடியும்வரை உழைக்கும் நுண்மாண் நுழைபுலம் உடையாரை இயக்குனர் என்பர்.
கதைப்படங்கள் மட்டுமின்றிக் கருத்துப்படங்கள், செய்திப்படங்கள், விளக்கப்படங்கள், கல்விப்படங்கள் எனப் பல வளர்ச்சி நிலைகளைத் திரைப்படத்துறை அடைந்துள்ளது.
திரைப்படச்சுருள்:

திரைப்படம் எடுக்கப் பயன்படும் படச்சுருள் செல்லுலாய்டு என்னும் பொருளால் ஆனது.
படம் எடுக்கப் பயன்படும் சுருள், எதிர்ச்சுருள் எனப்படும்.
படம்பிடிக்கும் கருவி:

இது ஒளிப்பதிவு செய்யப் பயன்படுகிறது.
படப்பிடிப்புக்கருவியில் ஓரடி நீளமுள்ள படச்சுருள் 16 படங்கள் வீதம் ஒன்றன்பின்ஒன்றாகத் தொடர்ச்சியாக எடுக்கப்படும்.
ஒலிப்பதிவு:
நடிகர்களின் நடிப்பையும், பாடும் பாடல்களையும் உரையாடல்களையும் ஒலிப்பதிவு செய்வர்.
திரைப்படக்காட்சிப் பதிவு:

ஒளிஒலிப்படக்கருவி என்னும் கருவி திரையரங்குகளில் திரைப்படம் காட்டப்பயன்படுகிறது.
இக்கருவியில் மேற்பக்கம் ஒன்றும், அடிப்பக்கம் ஒன்றுமாக வட்டமான இரு பெட்டிகள் இருக்கும்.
கருத்துப்படம்:

கருத்துப்படம் அமைக்கத் தொடங்கியவர் “வால்ட் டிஸ்னி” என்பார் ஆவார்.
படங்களை எழுதுவதற்குப் பதிலாகப் பொம்மைகளைக் கொண்டும் படங்களைத் தயாரிக்கின்றனர்.
கலைச்சொற்களை அறிந்துகொள்வோம்
Persistence of vision -
பார்வை நிலைப்பு
Dubbing -
ஓலிச்சேர்க்கை
Director -
இயக்குநர்
Shooting -
படப்பிடிப்பு
artoon -
கருத்துப் படம்
Negative -
எதிர்ச்சுருள்
Camera -
படப்பிடிப்புக்கருவி
Trolly -
நகர்த்தும் வண்டி
Microphone -
நுண்ணொலிபெருக்கி
Projector -
படவீழ்த்தி
Lense -
உருப்பெருக்கி
Motion Pictures -
இயங்குருப் படங்கள்

11 November, 2014

நாடும் நகரமும் - 6 ஆம் வகுப்பு சமச்சீர்


  • நாடு:  நாடு என்ற சொல் ஆதியில் மக்கள் வாழும் நிலத்தை குறிப்பதற்கு வழங்கப்பட்டது.
  •  மூவேந்தர்களின் ஆட்சிக்குட்பட்ட தமிழ்நாட்டின் பகுதிகள் அவரவர் பெயராலேயே சேரநாடு, சோழநாடு, பாண்டியநாடு என்று அழைக்கப்பட்டன.
  •  நாளடைவில் நாடுகளின் உட்பிரிவுகளும் "நாடு" என்று அழைக்கப்பட்டன. கொங்கு நாடு, தொண்டை நாடு முதலியன இதற்குச் சான்றாகும்.
  • முன்னாளில் முரப்புநாடு என்பது பாண்டி மண்டலத்தைச் சேர்ந்த நாடுகளுள் ஒன்று.
  •  இப்பொழுது அப்பெயர் பொருணை யாற்றின் கரையிலுள்ள ஒரு சிற்றூரின் பெயராக நிலவுகின்றது. அதற்கு எதிரே ஆற்றின் மறுகரையில்லுள்ள மற்றொரு சிற்றூர் வல்லநாடு என்னும் பெயருடையது.
  •  சோழநாட்டில் மாயவரத்திற்கு அடுத்துள்ள ஓரூர் கொரநாடு என்று அளிக்கப்படுகிறது.
  •  கூர்ரைநாடு என்பது கொரநாடு என்று மருவிற்று.
  •  பட்டுகோட்டை வட்டத்தில் கானாடும், மதுரங்க வட்டத்தில் தென்னாடும் உள்ளன.
  • நகரம்: சிறந்த ஊர்கள், நகரம் என்னும் பெயாரால் வழங்கும். ஆழ்வார்களின் சிறந்த நம்மாழ்வார் பிறந்த இடம் குருகூர் என்னும் பலம்பெரை துறந்து, ஆழ்வார்த் திருநகரியாகத் திகழ்கிறது.
  •  பாண்டியநாட்டிலுள்ள விருதுப்பட்டி, வர்த்தகத்தால் மேம்பட்டு இன்று விருதுநகராக விளங்குகிறது.
  • இக்காலத்தில் தோன்றும் புத்தூர்களும் நகரம் என்னும் பெயரையே பெரிதும் நாடுவனவாகத் தெரிகின்றன.
  • சென்னை: திருமயிலைக்கு அருகேயுள்ள திருவல்லிக்கேணி, முதல் ஆழ்வார்களால் பாடப்பெற்றது. அவ்வூரின் பெயர் அல்லிக்கேணி என்பதாகும். அல்லிக்கேணி என்பது அல்லிக்குளம்.
  •  அங்கே பெருமாள் கோவில் கொண்டமையால் திரு என்னும் அடைமொழி சேர்ந்து திருவல்லிக்கேணி ஆயிற்று.
  • புரம்: புரம் என்னும் சொல் சிறந்த ஊர்களை குறிப்பதாகும். ஆதியில் காஞ்சி என்று பெற்ற ஊர் பின்னர் "புரம்" என்பது சேர்ந்து காஞ்சிபுரம் ஆயிற்று. பல்லவபுரம்(பல்லாவரம்), சோழபுரம், தருமபுரம் போன்றவை மேலும் சில எடுத்துக்காட்டுகளாகும்.
  • பட்டிணம்: கடற்கரையில் உருவாகும் நகரங்கள் "பட்டிணம்" எனப் பெயர் பெரும். காவிரிப்பூம்பட்டிணம், நாகபட்டிணம், காயல்பட்டிணம், குலசேகரபட்டிணம், சதுரங்கபட்டிணம் ஆகியவை "பட்டிணம்" எனப் பெயர் பெற்ற ஊர்களாகும்.
  • பாக்கம்: கடற்கரைச் சிற்றூர்கள் "பாக்கம்" எனப் பெயர் பெரும். கோடம்பாக்கம், மீனம்பாக்கம், நுங்கம்பாக்கம், சேப்பாக்கம் இப்படிப் பாக்கம் எனப் பெயர் பெற்ற ஊர்களைக் குறிப்பிடலாம்..
  • புலம்: புலம் என்னும் சொல் நிலத்தைக் குறிக்கும். எடுத்துக்காட்டாக மாம்புலம், தமராபுலம், குரவைபுலம் போன்றவற்றைக் குறிப்பிடலாம்.
  • கும்பம்: நெய்தல் நிலத்தில் அமைந்த வாழ்விடங்கள் குப்பம் என்னும் பெயரால் அழைக்கப்படும். காட்டுக்குப்பம், நொச்சிக்குப்பம் ஆகியவற்றை குறிப்பிடலாம்.
  • ஆசிரியர்: சொல்லின் செல்வர் எனப்படும் ரா.பி.சேதுபிள்ளை அவர்களின் "ஊரும் பேரும்" என்ற நூலில் இருந்து எடுக்கப்பட்டது.

10 November, 2014

முதல் இந்திய சுதந்திரப்போர் - 10 ஆம் வகுப்பு சமச்சீர்



















































ANSWERS
1----------அ
2----------இ
3----------இ
4----------அ
5----------இ
6----------அ
7----------இ
8----------அ
9----------இ
10--------அ

கல்லிலே கலைவண்ணம் - 6 ஆம் வகுப்பு சமச்சீர்


  •  காவிரி பாயும் சோழவள நாடு, அது கலைகளின் விளைநிலம், வியக்கவைக்கும் கட்டடக்கலையும் சிற்பக்கலையும் கொழிக்கும் ஊர் - கும்பகோணம்.
  •  கும்பகோணத்திற்கு தென்புறம் பாயும் அரிசிலாற்றின் தென்கரையில் அமைந்துள்ள ஊர் - தாராசுரம்
  •  இங்குள்ள ஐராவதிஸ்வரர் கோயில் 800 ஆண்டுகளுக்கு முன் இரண்டாம் ராஜராஜ சோழனால் கட்டப்பட்டது.
  •  நூறு கோவில்களுக்குச் சென்று கண்ட சிற்பங்களின் பேரழகைப் பார்த்து மகிழ்ந்த அனுபவத்தை தரும் ஒரே கோவில் - ஐராவதீசுவரர் கோவில்
  •  முப்புரம் எரித்தவன் (திரிபுராந்தகன்) கதை ஒரு சிற்பம்.
  •  யானையை வதம் செய்து, அதன் தோலைத் தன் மீது உடுதிகொள்ளும் ஈசனின் யானை உரிபோர்த்தவர்(கஜம்ஹாரமூர்த்தி) கதை ஒரு சிற்பம்.
  •  அடிமுடி தேடவைக்கும் அண்ணாமலையார்(லிங்கோத்பவர்) கதை மற்றொரு சிற்பம்.
  •  கோவிலின் நுழைவாயிலில் அமைந்த 7 கருங்கற் படிகள் சரிகமபதநி எனும் 7 நாதப்படிகளாக வடிக்கப்பட்டுள்ளன.
  •  தாராசுரம் கோவிலின் கூம்பிய விமானத் தோற்றமும், அதற்குக் கீழே இருபுறமும் யானைகளும் குதிரைகளும் பூட்டிய இரதம்போல் அமைந்த மண்டபமும் வான்வெளி இரகசியத்தை காட்டுவதாக வானவியல் அறிஞர் கார்ல் சாகன் கூறுகிறார்.
  •  தஞ்சை அரண்மனைக்கு சொந்தமான இக்கோவில் தற்போது மத்தியத் தொல்பொருள் துறையினர் பாதுகாத்து வருகின்றன. இதை மரபு அடையாளச்சினமாக யுனெஸ்கோ அறிவித்துள்ளது. இக்கோவிலை கலைகளின் சரணாலயம் என்றே கூறலாம்.

08 November, 2014

ஐ.நா.பொருளாதார, சமூக அமைப்பில் இந்தியா மீண்டும் தேர்வு


ஐ.நா.பொருளாதார, சமூக அமைப்பில் இந்தியா மீண்டும் தேர்வு(UN Economic and Social Council Chambers-ECOSOC)

ஐ.நா. பொருளாதார மற்றும் சமூக அமைப்பில் இந்தியா அதிக வாக்குகள் பெற்று மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுளளது.

ஐ.நா. மனித உரிமைகள் அமைப்பில் மறு தேர்வு பெற்ற ஒரு வாரத்துக்குள் இந்தியாவுக்கு கிடைத்த குறிப்பிடத்தக்க வெற்றி இதுவாகும்.

193 நாடுகள் உள்ள ஐ.நா. சபையில் பொருளாதார, சமூக அமைப்புக்காக புதன்கிழமை நடைபெற்ற தேர்தலில் 183 வாக்குகளை இந்தியா பெற்றது.

இந்த அமைப்புக்கான தேர்தலில், ஆசிய-பசிபிக் நாடுகளில் இதுவரை அதிகளவு வாக்குகள் பெற்ற நாடுகளில் இந்தியா முதன்மை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஐ.நா. பொருளாதார, சமூக அமைப்பில் மொத்தம் 54 உறுப்பு நாடுகள் உள்ளன. அவற்றில் 18 உறுப்பினர் இடங்களுக்கான தேர்தல் தற்போது நடைபெற்றது.

ஐரோப்பிய ஒன்றியம் - 10 ஆம் வகுப்பு சமச்சீர்


1951 ஆம் ஆண்டில் ஆறு நாடுகள் சேர்ந்து உருவாக்கிய ஐரோப்பிய நிலக்கரி மற்றும் உருக்கு சமூகம், 1957 ஆம் ஆண்டின் ரோம் ஒப்பந்தம் ஆகியவையே ஐரோப்பிய ஒன்றியத்தின் தோற்றத்தின் மூலமாகக் கருதப்படுகிறது

 பெல்ஜியம், பிரான்ஸ், இத்தாலி, லக்சம்பர்க், நெதர்லாந்து, மேற்கு செருமனி ஆகிய நாடுகள் இதன் தொடக்க உறுப்பினர்களாக இருந்தன

ஐரோப்பிய ஒன்றியம் தற்போது 28 சுதந்திரமான, இறைமையுள்ள நாடுகளை உறுப்புநாடுகளாகக் கொண்டுள்ளது.

 பதினைந்து உறுப்பு நாடுகள் யூரோ எனப்படும் பொதுவான நாணய முறையையும் ஏற்றுக்கொண்டுள்ளன

நோக்கங்கள்

  • ஐரோப்பியக் குடியுரிமையை ஏற்படுத்துதல்
  • ஐரோப்பியக் குடிமக்களுக்கு குடிமை உரிமைகளை உறுதிசெய்தல்
  • சமுதாய முன்னேற்றத்தை உயற்த்துதல்
  • ஐரோப்பிய பாதுகாப்பைப் வலுப்படுத்துதல்
  • சமநீதியை உறுதிசெய்தல்

ஐரோப்பிய நிறுவனத்தில் ஐந்து அங்கங்கள் உள்ளன. அவை:

  • ஐரோப்பிய நாடாளுமன்றாம்
  • ஐரோப்பிய ஒன்றிய மன்றம்
  • ஐரோப்பிய ஆணையம்
  • ஐரோப்பிய நீதிமன்றாம்
  • ஐரோப்பிய கணக்கீட்டாளர் மன்றம்

ஐரோப்பிய நாடாளுமன்றம்
இது ஐரொப்பியக் கூட்டமைப்பின் சட்டம் இயற்றும் அமைப்பாகும். இதன் அங்கத்தினர்கள் உறுப்பு நாடுகளின் குடிமக்களால் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். 1979-ஆம் ஆண்டு முதல், ஐரோப்பிய நாடாளுமன்றாத்தின் தேர்தல் மக்களாட்சி முறைப்படி நடைபெற்றது. இதன் தலைமையகம் பிரான்சில் உள்ள ஸ்ட்ராஸ்பர்க் (Strasburg) என்னுமிடத்தில் உள்ளது. தற்போது இதில் 736 உறுப்பினர்கள் உள்ளனர். இவர்களின் பதவிக்காலம் ஐந்து ஆண்டுகள் ஆகும். இது ஐரோப்பிய சட்டமன்றத்தின் பாதி அளவு ஆகும்.

ஐரோப்பிய ஆணையத்தில் சமர்ப்பிக்கப்பட்ட வரவு செலவுத் திட்டத்தை ஏற்றுக் கொள்ளுதல் அல்லது மாற்றங்கள் செய்வது நாடாளுமன்றத்தின் முக்கிய அதிகாரமாகும்.

ஐரோப்பிய ஒன்றிய மன்றம்
ஐரோப்பிய ஒன்றிய மன்றம் சில நேரங்களில் 'அமைச்சர்களின் கூட்டமைப்பு மன்றம்' என்று அழைக்கப்படுகிறது. இது ஐரோப்பியச் சட்டமன்றத்தின் மறுபாதியாகும். ஒவ்வொரு உறுப்பு நாடுகளில் இருந்தும் ஒருவர் இந்த அவைக்கு உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். 2009 ஆம் ஆண்டு நவம்பர் 19 ஆம் தேதி ஹெர்மன் வான் ராம்பே (Herman Van Rampay) என்பவர் இந்த அவையின் முதல் நிரந்தரத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 2009 ஆம் ஆண்டு, டிசம்பர் ஒன்றாம் தேதி இவர் பதவியேற்றார்.

ஐரோப்பிய ஆணையம்
ஐரோப்பிய ஒன்றியத்தின் நிர்வாகத் துறையாகச் செயல்படுவது ஐரோப்பிய ஆணையமாகும். மேலும் சட்டம் இயற்றுவதற்குத் தூண்டுதலாக இருந்து ஐரோப்பியர் கூட்டமைப்பின் அன்றாடப் பணிகளைச் செய்கிறாது. ஐரோப்பியக் கூட்டமைப்பின் சட்டங்களை வடிவமைத்து, அதனை ஐரோப்பிய நாடாளுமன்றத்திலும் சமர்ப்பிப்பது இதன் முதன்மைப் பணியாகும்.

ஐரோப்பிய நீதிமன்றம்
இது லக்சம்பர்க் நகரில் அமைந்துள்ளது. இதில் 15 நீதிபதிகள் இடம்பெற்றுள்ளனர். ஐரோப்பிய ஒன்றியம் மேற்கொள்ளும் அனைத்து உடன்படிக்கைகளும், மன்றத்தின் சட்டங்களுக்கு உட்பட்டதா என்பதைத் தீர்மானிப்பது இந்நீதிமன்றமாகும். இம்மன்றத்தின் தீர்ப்புகளும், ஒன்றியத்தின் சட்டங்களும் உறுப்பு நாடுகள் அனைத்தையும் கட்டுப்படுத்தும்.

ஐரோப்பிய கணக்கீட்டாளர் மன்றம்
ஐரோப்பிய ஒன்றியத்தின் வரவு செலவுக் கணக்குளை நிர்வகிப்பது ஐரோப்பியக் கணக்கீட்டாளர் மன்றமாகும். ஐரோப்பிய நாடாளுமன்றத்துடன் இணைந்து வளங்கள் மற்றும் நிதியைச் சிறந்த முறையில் பங்கீடு செய்கிறது.






































ANSWERS
1----------C
2----------C
3----------D
4----------B
5----------A
6----------C
7----------C




07 November, 2014

சித்தர் பாடல் - 6 ஆம் வகுப்பு


வைதோரைக் கூடவை யாதே -இந்த
வையக முழுதும் பொய்த்தாலும் பொய்யாதே
வெய்ய வினைகள்செய் யாதே -கல்லை
வீணில் பறவைகள் மீதிலெய் யாதே.

பாம்பினைப் பற்றியாட் டாதே -உனறன
பத்தினி மார்களைப் பழித்துக் காட்டாதே
வேம்பினை யுலகிலூட் டாதே -உன்றன்
வீறாப்பு தன்னை விளங்க  நாட்டாதே.

போற்றும் சடங்கை நண்ணாதே-உன்னைப் 
புகழ்ந்து பலரில் புகலல் ஒண்ணாதே 
சாற்றும் முன் வாழ்வை எண்ணாதே - பிறர் 
தாழும் படிக்குநீ தாழ்வைப் பண்ணாதே 

கள்ளவே டம்புனை யாதே -பல
கங்கையி லேயுன் கடம்நனை யாதே 
கொள்ளைகொள் ளநினை யாதே
கொண்டு பிரிந்துநீ கோள்முனை   யாதே

*  சித்தர்கள் - நானூறு ஆண்டுகளுக்கு முன் தமிழகத்தின் காடு மலைகளில் வாழ்ந்தவர்கள், இவர்கள் உருவ வழிபாடு செய்யாமல் வெட்ட வெளியையே கடவுளாக வழிப்பட்டவர்கள்.
*  "வைதோரைக் கூட வையாதே" என்ற சித்தர் பாடலை பாடியவர் - கடுவெளிச் சித்தர்.
*  உருவ வழிபாடு செய்யாமல் இயற்கையை கடவுளாக வழிபட்டவர் - கடுவெளிச் சித்தர்.
*  சித்து - அறிவு
*  கடுவெளிச் சித்தர் பாடிய பாடல்கள் - 54.
*  நந்தவனத்தில் ஓர் ஆண்டின் அவன் நாடாறு மாதமாய் என்ப் பாடியவர் - கடுவெளிச் சித்தர்.
*  பாம்பாட்டிச் சித்தர், குதம்பைச் சித்தர், அழுகினிச் சித்தர் - இவை காரணப்பெயர்கள்.

சொற்பொருள்:
*  வேம்பு - கசப்பான சொற்கள்.
*  வீறாப்பு - இறுமாப்பு
*  கடம் - உடம்பு.
*  சாற்றும் - புகழ்ச்சியாக்ப் பேசுவவது.
*  கடம் - உடம்பு
*  வெய்யவினை - துன்பம் தரும் செயல்
*  சாற்றும் - புகழ்ச்சியாகப் பேசுவது
*  பலரில் - பலர் + இல்(வீடுகள்)

இன்பத்தமிழ் - Class 6 Tamil New Syllabus Term 1

தமிழ் வணக்கம்   தற்கால இலக்கிய மரபாகிவிட்டது  பாரதிதாசனின் இயற்பெயர்   சுப்புரத்தினம்.  பாரதியாரின் கவிைதகள்  மீது கொண்ட  பற்றின் காரணமா...