24 October, 2014
நான்மணிக்கடிகை - 6 ஆம் வகுப்பு சமச்சீர்
மனைக்கு விளக்கம் மடவார் ; மடவார்
தனக்குத் தகைசால் புதல்வர்; மனக்கினிய
காதல் புதல்வர்க்குக் கல்வியே; கல்விக்கும்
ஓதின் புகழ்சால் உணர்வு.
-விளம்பிநாகனார்
சொற்பொருள்:
- மடவாள் - பெண்
- தகைசால் - பண்பில் சிறந்த
- உணர்வு - நல்லெண்ணம்
- புகழ்சால் - புகழைத் தரும்
- காதல் புதல்வர் - அன்பு மக்கள்
- மனக்கினிய - மனத்துக்கு இனிய
- ஓதின் - எதுவென்று சொல்லும்போது
நூல்குறிப்பு:
* பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று - நான்மணிக்கடிகை.
* கடிகை என்றால் அணுகலன்(நகை)
* நான்கு மணிகள் கொண்ட அணிகலன் என்பது இதன் பொருள்.
* ஒவ்வொரு பாட்டும் நான்கு அறக்கருத்துக்களை கூறுகின்றன.
ஆசிரியர் குறிப்பு:
* பெயர்: விளம்பிநாகனார்.
* விளம்பி என்பது ஊர்பெயர், நாகனார் என்பது புலவரின் இயற்பெயர்.
23 October, 2014
பறவைகள் பலவிதம் - 6 ஆம் வகுப்பு சமச்சீர்
• உலகம் முழுவதும் இருந்து பல நாட்டுப் பறவைகள் வந்து தங்கி இருக்கும் இடத்திற்குப் பெயர் - பறவைகள் சரணாலயம்.
• அதிக பனி அல்லது அதிக வெயிலின் காரணமாக புறவைகள் ஒரு இடத்தை விட்டு மற்றொரு இடத்திற்கு பறந்து செல்வது - வலசை போதல்
• பறவைகள் நமக்கு பருவகால மாற்றத்தை உணர்த்துகின்றன.
• ஒரு நாட்டில் பழம் தின்றுவிட்டு, மற்றொரு நாட்டில் எச்சமிடுவதன் காரணமாக அங்கு மரம், செடி, கொடி போன்றவை உருவாக பறவைகள் காரணமாகின்றன.
• வயல்வெளிகளில் பயிர்களைத் தாக்கும் பூச்சிகள், வண்டுகளை தின்று விவசாயிகளுக்கு உதவுகின்றன.
பறவைகள் ஐந்து வகையாக பிரிப்பர்.
1. தென்னை குடித்து வாழும் பறவைகள்
2. பழத்தை உண்டு வாழும் பறவைகள்
3. பூச்சியை தின்று வாழும் பறவைகள்
4. வேட்டையாடி உண்ணும் பறவைகள்
5. இறந்த உடல்களை உண்டு வாழும் பறவைகள்.
• பூநாரையானது நிலத்திலும் அதிக உப்புத் தன்மையுள்ள நீரிலும் வாழக்கூடியது. கடும் வெப்பத்தையும் எதிர்கொள்ளும் தன்மை கொண்டது.
• சமவெளி மரங்களில் வாழும் சில பறவைகள்: மஞ்சள் சிட்டு, செங்காகம், கடலைக்குயில், பனங்காடை, தூக்கணாங்குருவி.
• நீர்நிலையில் வாழும் சில பறவைகள்: கொக்கு, தாழைக்கோழி, பவளக் காலி, ஆற்று உள்ளான், முக்குளிப்பான், நாரை, அரிவாள் மூக்கன், கரண்டி வாயன், ஊசிவால் வாத்து.
• மலைகளில் வாழும் சில பறவைகள்: இருவாச்சி, செந்தாலைப் பூங்குருவி, மின்சிட்டு, கருஞ்சின்னான், நீலகிரி நெட்டைகாலி, பொன்முதுகு, மரங்கொத்தி, சின்னக்குறுவான், கொண்டாய் உலவரான், இராசாளிப் பருந்து, பூமன் ஆந்தை.
1. தமிழகத்தில் உள்ள பறவைகள் சரணாலயம் = 13
2. பருவ காலத்தை மனிதர்களுக்கு உணர்த்துபவை - பறவைகள்
3. உலகம் முழுவதும் மரம், செடி, கொடிகளை பரப்புவது - பறவைகள்.
4. நம் நாட்டில் சுமார் 2400 வகைப்பறவைகள் உள்ளன.
5. பறவைகள் பருவ நிலை மாற்றத்தால் இடம் பெயருவதை - வலசை போதல் என அழைப்பர்.
6. வெயிலும், மழையும், பனியும் மாறி மாறி வருவதை - பருவநிலை மாற்றம் என அழைப்பர்.
7. அதிக பனிப்பொழியும் மாதம் - மார்கழி மாதம்.
8. அதிகம் வெயில் அடிக்கும் காலத்தை - கோடைக்காலம் என அழைப்பர்.
9. நிலத்திலும், அதிக உப்புத் தன்மையுள்ள நீரிலும்; கடும் வெப்பத்தை எதிர் கொள்ளும் தன்மையுடைய பறவை - பூ தாமரை.
* தமிழ்நாட்டில் உள்ள பறவைகள் சரணாலயங்கள்:
1. வேடந்தாங்கல்
2. கரிக்கிளி(காஞ்சிபுரம் மாவட்டம்),
3. கஞ்சிரால்குளம்
4. சித்திரஸ்குடி
5. மேலக் செல்வனூர் (இராமநாதபுரம் மாவட்டம்)
6. பழவேற்காடு (திருவள்ளுவர் மாவட்டம்)
7. உதயமார்த்தாண்டபுரம்(திருவாரூர் மாவட்டம்)
8. வடுவூர் (தஞ்சை மாவட்டம்)
9. கரைவெட்டி(பெரம்பலூர் மாவட்டம்)
10. வேட்டங்குடி(சிவகங்கை மாவட்டம்),
11. வெள்ளோடு (ஈரோடு மாவட்டம்)
12. கூந்தன்குளம் (திருவெல்வேலி மாவட்டம்)
13. கோடியக்கரை(நாகப்பட்டினம் மாவட்டம்)
* தமிழ்நாட்டில் பட்டாசு வெடிக்காத ஊர் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கூந்தன் குளம்.
21 October, 2014
நாலடியார் - 6 ஆம் வகுப்பு
நாய்க்கால் சிறுவிரல்போல் நன்கு அணியர் ஆயினும்
ஈக்கால் துணையும் உதவாதார் நட்பு என்னாம்!
சேய்த்தானும் சென்று கொளல்வேண்டும் செய் விளைக்கும்
வாய்க்கால் அனையார் தொடர்.
- சமண முனிவர்
பொருள் :
நாயின் கால்களில் உள்ள சிறியவிரல்கள் இடைவெளியின்றி
நெருங்கியிருக்கும். இதுபோல நன்றாக நெருங்கிப் பழகினாலும், ஈயின் சிறுகால் அளவுகூட உதவி செய்யாதவர்களின் நட்பினால் பயன் இல்லை. வயல்களிலே பாய்ந்து அவைகளிலே தானியங்களை விளையச் செய்கின்ற வாய்க்கால் போன்றவர்களின் நட்பையே தேடிக்கொள்ள வேண்டும். அவர்கள் தொலைத்தூரத்தில் இருந்தாலும் தேடிக்கொண்டுபோய் அவர்களுடைய நட்பைப் பெற வேண்டும்.
இச்செய்யுளிலே நெருங்கிப் பழகுவதற்கு, நாயின் கால் விரல்களும்,
சிறிய உதவிக்கு ஈயின்காலும் உவமானங்களாகக் காட்டப்பட்டன.
சொற்பொருள்:
அணியார் = நெருங்கி இருப்பவர்
என்னாம் = என்ன பயன்?
சேய் = தூரம்
செய் = வயல்
அனையர் = போன்றோர்
* பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று - நாலடியார்.
* நானூறு பாடல்களைக் கொண்டது - நாலடியார்.
* அறக்கருத்துக்களைக் கூறுவது - நாலடியார்.
* நாலடி நானூறு என்ற சிறப்பு பெயர் உடையது - நாலடியார்.
* சமண முனிவர்கள் பலர் பாடிய தொகுப்பு நூல் - நாலடியார்.
ஆலும் வேலும் பல்லுக்கு உறுதி; நாலும் இரண்டும் சொல்லுக்கு
உறுதி; இப்பழமொழி நாலடியாரின் பெருமையைக் காட்டும்; திருக்குறளின் சிறப்பையும் உணர்த்தும். ‘‘நாலு’’ என்பது நாலடியார்; ‘‘இரண்டு’’ என்பது திருக்குறள்.
‘‘பழகு தமிழ்ச்சொல் அருமை நாலிரண்டில்’’ என்பதும் நாலடியின்
சிறப்பையும், திருக்குறளின் பெருமையையும் காட்டும்.
பதினெண்கீழ்க்கணக்கு - விளக்கம்:
* சங்க நூல்கள் எனப்படுபவை பத்துப்பாட்டும் எட்டுத்தொகையும், பத்துப்பாட்டில் பத்து நூல்களும், எட்டுத்தொகையில் எட்டு நூல்களுமாக மொத்தம் பதினொட்டு நூல்கள்.
* இவற்றை மேல்கணக்கு நூல்கள் எனக் கூறுவர்.
* சங்கநூல்களுக்குப்பின் தோன்றிய நூல்களின் தொகுப்பு - பதினெண்கீழ்க்கணக்கு
* பதினெண் என்பது - பதினெட்டு என்று பொருள்.
* பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் பெரும்பாலானவை - அறநூல்களே.
* கீழ்க்கணக்கு நூல்கள் எனவும் கூறப்படும் நூல் - பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள்.
20 October, 2014
தமிழ்த்தாத்தா உ.வே.சா.

- ஊர் - திருவாரூர் மாவட்டம் உத்தமதானபுரம்
- இயற்பெயர் - வேங்கடரத்தினம்
- ஆசிரியர் - மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை.
- அவரின் ஆசிரியர் வைத்த பெயர் - சாமிநாதன்
- உத்தமதானபுரம் வேங்கடசுப்பையர் மகனான சாமிநாதன் என்பதன் சுருக்கமே உ.வே.சா
- இவரின் தந்தை - வேங்கடசுப்பையா
- காலம் - 19.02.1855 முதல் 28.04.1942
- 1942 இல் உ..வே.சா நூல்நிலையம் சென்னை பெசன்ட் நகரில் துவங்கப்பட்டது.
- உ.வே.சா நினைவு இல்லம் உத்தமதானபுரத்தில் உள்ளது.
- உ.வே.சா அவர்களின் தமிழ்ப் பணிகள் வெளிநாட்டு அறிஞர்களான ஜி.யு.போப், சூலியல் வின்சோன் ஆகியோர் பெரிதும் பாராட்டியுள்ளனர்.
- இந்திய அரசு 2006 ஆம் ஆண்டு அஞ்சல் தலை வெளியிடப்பட்டது.
- பனை ஓலையைப் பக்குவப்படுத்தி, அதில் எழுத்தானி கொண்டு எழுவர். அவ்வாறு எழுத்தப்பட்ட ஓலைக்கு ஓலைச்சுவடி என்று பெயர்.
- ஓலை கிழியாமல் எழுதுவதற்காக ஓலைச்சுவடி எழுத்துகளில் புள்ளி இருக்காது; ஒற்றைக்கொம்பு, இரட்டைகொம்பு வேறுபாடு இருக்காது.
- ஓலைச்சுவடிகள் பாதுகாக்கப்படும் சில இடங்கள்: 1. கீழ்த்திசைச் சுவடிகள் நூலகம், சென்னை. 2. அரசு ஆவணக் காப்பகம், சென்னை. 3. உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை 4. சரசுவதி நூலகம், தஞ்சாவூர்.
- குறிஞ்சிப்பாட்டு - பத்துப்பாட்டு நூல்களுள் ஒன்று; இதன் ஆசிரியர் கபிலர்.
- தம் வாழ்க்கை வரலாற்றை ஆனந்தவிகடன் இதழில் தொடராக எழுதினார். அஃது என் சரிதம் என்னும் பெயரில் நூலாக வெளிவந்தது.
- ஓலைச்சுவடிகளைத் தேடி வந்த பெரியவர் - உ.வே.சா
- உ.வே.சா. தம் வாழ்நாள் முழுவதும் ஓய்வில்லாமல் பதிப்பு பணியை மேற்கொண்டார்.
- உ.வே.சா. அவர்களை நாம் தமிழ்த்தாத்தா என அன்போடும் உரிமையோடும் அழைக்கின்றோம்.
- குறிஞ்சிப்பாட்டில் இடம்பெற்றுள்ள பூக்களின் எண்ணிக்கை - தொண்ணூற்று ஒன்பது
உ.வே.சா பதிப்பித்த நூல்கள்:
- எட்டுத்தொகை - 8
- பத்துப்பாட்டு - 10
- சீவகசிந்தாமணி - 1
- சிலப்பதிகாரம் - 1
- மணிமேகலை - 1
- புராணங்கள் - 12
- உலா - 9
- கோவை - 6
- தூது - 6
- வெண்பா நூல்கள் - 13
- அந்தாதி - 3
- பரணி - 2
- மும்மணிக்கோவை - 2
- இரட்டைமணிமாலை - 2
- பிற பிரபந்தங்கள் - 4
17 October, 2014
"உழைப்பே வெல்லும்' புதிய திட்டம்-பிரதமர் மோடி தொடக்கி வைத்தார்
"உழைப்பே வெல்லும்' புதிய திட்டம்: பிரதமர் மோடி தொடக்கி வைத்தார்
தொழிலாளர்களின் நலன்களைக் காக்கும் வகையில் "உழைப்பே வெல்லும்' என்ற புதிய செயல்திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி, தில்லியில் தொடக்கி வைத்தார்.(16-10-2014)
தில்லியில் மத்திய தொழிலாளர் நலத் துறை சார்பில் வியாழக்கிழமை நடைபெற்ற விழாவில் "தீனதயாள் உபாத்யாய ஷிரமேவ ஜெயதே' (உழைப்பே வெல்லும்) என்ற செயல்திட்டத்தின் கீழ், பல்வேறு துணைத் திட்டங்களை பிரதமர் தொடக்கி வைத்தார். தொழிலாளர் வைப்பு நிதியை எளிதில் மாற்றிக் கொள்ள ஏதுவாக நிரந்தரக் கணக்கு எண், தொழிலாளர் நலத் துறை அமைச்சகத்துடன் தொடர்புகொள்ள ஒற்றைச் சாளர இணையதள வசதி, தொழிலக ஆய்வுத் திட்டம் உள்ளிட்டவை அவற்றில் அடங்கும்.
திறன் ஊக்குவிப்புத் திட்டம்: "புரோத்சாஹன் யோஜனா' என்ற பெயரிலான பயிற்சி மாணவர்களின் திறன் ஊக்குவிப்புத் திட்டத்தையும் பிரதமர் மோடி தொடக்கி வைத்தார். இதுகுறித்து அவர் பேசியதாவது: உலகிற்கு மனித ஆற்றலை வழங்குவதற்கான மிகப்பெரிய வளம் நம் நாட்டில் உள்ளது. தற்போது, நாட்டில் 2.82 லட்சம் பயிற்சி மாணவர்கள் உள்ளனர். இந்த மாணவர்களின் பயிற்சித் திட்டத்தை மறுசீரமைக்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
தொழிலாளர் வருங்கால வைப்புக் கணக்குகளில் ரூ.27,000 கோடி உரிமை கோரப்படாமல் கிடக்கிறது. அதன் உரிமையாளர்களுக்கு இத்தொகையைத் திருப்பி அளிக்க வேண்டும் என்பதில் நான் தீவிரமாக இருக்கிறேன். இந்தப் பணமானது ஏழைகளுக்குச் சொந்தமானது.
அரசானது நம்பிக்கையின் அடிப்படையிலேயே செயல்படுகிறதே தவிர, சந்தேகத்தின் அடிப்படையில் அல்ல. எனவே, மாணவர்கள் சுயச் சான்றளிப்பு ஆவணங்களை அளிக்க அனுமதிப்பது என்ற முடிவு எடுக்கப்பட்டது. முன்பு, அதிகாரிகளின் கையொப்பத்தைப் பெறுவதற்காக மாணவர்கள் மிகவும் அலைய வேண்டியிருந்தது. அந்த முறையைத் தற்போது நீக்கியுள்ளோம்.
வேலைவாய்ப்பற்ற, ஏதோ ஒரு பாடப்பிரிவில் தேர்ச்சி பெற்ற ஒரு பட்டதாரி, சமூகத்தால் மதிக்கப்படுவதும், ஐ.டி.ஐ. தொழில் பயிற்சி நிலையங்களில் பயின்றோர் மதிக்கப்படாததும் முரண்பாடாக இருக்கிறது. நாம் தொழிலாளர்களை மரியாதைக்குரியவர்களாகக் கருதுவதில்லை. இந்நிலை மாற வேண்டும். ஷிரம யோகியானவர் (உழைப்பாளர்), ராஷ்டிர யோகியாகவும் (நாட்டுக்கு உழைப்பவர்), ராஷ்டிர நிர்மாதாவாகவும் (தேசத்தைக் கட்டமைப்பவர்) மாறுவதை கருணையுடன் கூடிய அணுகுமுறை உறுதிப்படுத்தும்.
15 October, 2014
பிரெஞ்ச் பேராசிரியர் ஜீன் டிரோலுக்கு பொருளாதார அறிவியலுக்கான நோபல்

2014 ஆம் ஆண்டின் பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு, பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த பொருளாதார நிபுணர் ஜீன் டிரோலுக்கு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சந்தையின் ஆற்றல், அதனை முறைப்படுத்துவது குறித்த மிகச் சிறந்த ஆய்வுக்காக அவருக்கு இந்த விருது வழங்கப்படுகிறது.
ஸ்வீடன் விஞ்ஞானியான ஆல்ஃபிரட் நோபலின் நினைவாக, பல்வேறு துறைகளில் சாதனை நிகழ்த்தியவர்களுக்கு ஆண்டு தோறும் நோபல் பரிசு வழங்கப்படுகிறது.
மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம், அமைதிப் பணி ஆகிய துறைகளில் இந்த ஆண்டுக்கான நோபல் பரிசுகள் கடந்த வாரம் அறிவிக்கப்பட்டன. இறுதியாக, பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு பிரெஞ்சு பொருளாதார நிபுணர் ஜீன் டிரோலுக்கு வழங்கப்படுவதாக திங்கள்கிழமை அறிவிக்கப்பட்டது.
ஸ்விட்சர்லாந்தின் ஸ்டாக்ஹோம் நகரிலுள்ள "ராயல் ஸ்வீடிஷ் அகாடமி'யில் இந்த அறிவிப்பை வெளியிட்ட தேர்வுக் குழு தெரிவித்ததாவது:
மிகச் சில நிறுவனங்களின் நடவடிக்கைகளை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு, தொழில்துறையை கட்டுப்படுத்துவதற்கான புரிந்துணர்வை அரசுகளுக்கு ஏற்படுத்தியமைக்காக ஜீன் டிரோலுக்கு நோபல் பரிசு வழங்கப்படுகிறது.
நிறுவனங்களின் வீழ்ச்சி தொடர்பாக ஜீன் டிரோல் 1980-களின் மத்தியிலிருந்தே ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறார்.
பிற நிறுவனங்களைக் கையகப்படுத்துவது, உற்பத்தி, விநியோகம் ஆகியவற்றைக் கட்டுப்படுத்துவது ஆகியவற்றின் வாயிலாக நிறுவனங்கள் ஏகபோக உரிமையை நிலைநாட்டுவதை அரசுகள் எவ்வாறு கையாளவேண்டும் என்பதை அவரது ஆய்வுக் கட்டுரைகள் தெளிவாக விளக்குகின்றன. தொலைத்தொடர்பு நிறுவனங்கள் முதல் வங்கிகள் வரையிலான பல்வேறு துறை நிறுவனங்கள் குறித்தும் தொழில் கொள்கை வகுக்க அவரது புத்தகங்கள் பேருதவி புரிகின்றன என்று தேர்வாளர்கள் குறிப்பிட்டனர்.
ஆல்ஃபிரட் நோபலால் பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு உருவாக்கப்படவில்லை என்றாலும், அத்துறையை ஊக்கப்படுத்துவதற்காக ஸ்வீடன் மத்திய வங்கி 1968-ஆம் ஆண்டு இந்த விருதை உருவாக்கியது.
ஜீன் டிரோல் உள்பட, இந்த ஆண்டு நோபல் பரிசுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட அனைவருக்கும் ஆல்ஃபிரட் நினைவு தினமான டிசம்பர் 10-ஆம் தேதி நோபல் பரிசு வழங்கப்படும்.
ஜீன் டிரோல் (61)
பிரான்ஸின் டிராயஸ் நகரில் 1953-ஆம் ஆண்டு பிறந்தவர் ஜீன் டிரோல். மாசாசூசெட்ஸ் தொழில்நுட்பக் கழகத்தில் 1981-ஆம் ஆண்டு முனைவர் பட்டம் பெற்ற இவர், டூலூஸ் பொருளாதாரக் கல்லூரியில் பணியாற்றி வருகிறார். ஹங்கேரியில் வழங்கப்படும் கெளரவம் மிக்க "ஜான் வான் நியூமன்' விருதினை 1998-ஆம் ஆண்டு இவர் வென்றுள்ளார்.
Subscribe to:
Posts (Atom)
இன்பத்தமிழ் - Class 6 Tamil New Syllabus Term 1
தமிழ் வணக்கம் தற்கால இலக்கிய மரபாகிவிட்டது பாரதிதாசனின் இயற்பெயர் சுப்புரத்தினம். பாரதியாரின் கவிைதகள் மீது கொண்ட பற்றின் காரணமா...
-
* தமிழை பக்தி மொழி (இரக்கத்தின் மொழி) என்று கூறியவர் மறைத்திரு தனிநாயக அடிகள். * சமய மறுமலர்ச்சிக் காலம் என்பதும், பக்தி இலக்கியக் க...














