21 September, 2014

சீவக சிந்தாமணி - 7 ஆம் வகுப்பு சமச்சீர்


வீழ்ந்து வெண்மழை  தவழும் விண்ணுறு பெருவரை பெரும்பாம்பு
ஊழ்ந்து தோலுரிப் பனபோல் ஒத்த மற்றவற் றருவி
தாழ்ந்து வீழ்ந்தவை முழவின் ததும்பின் மதுகரம் பாடச்
சூழ்ந்து மாமயி லாடி நாடகம் துளக்குறுத் தனவே .

பொருள் :  வெண்மழை வீழ்ந்து தவழும் விண் உறு பெருவரை - வெள்ளிய முகில் படிந்து தவழும் வானுயர் பெருமலை; பெரும் பாம்பு ஊழ்ந்து தோல் உரிப்பன போல் ஒத்த - பெரிய பாம்பு கழன்று தோலுரிப்பன போலேயாய், அம் முகில் போன பிறகு அப் பாம்பை ஒத்தன; அவற்று அருவி தாழ்ந்து வீழ்ந்தவை முழவின் ததும்பின - அம்மலையினின்றும் அருவிகள் தாழ்ந்து வீழ்கின்றவை முழவு போல முழங்கின; மதுகரம் பாடச் சூழ்ந்து மாமயில் ஆடி நாடகம் துளக்கு உறுத்தன - (அம் முழக்கம் கேட்டு) வண்டுகள்பாட, வளைந்து மயில்கள் ஆடிப், பிறர் ஆடும் நாடகங்களை வருத்தம் உறுத்தின.

சொற்பொருள்:

  விண் – வானம்
  வரை – மலை
  முழவு – மத்தளம்
  மதுகரம் – தேன் உண்ணும் வண்டு

தமிழில் முழுமையாகக் கிடைக்கும் காப்பியங்களுள் ஒப்பற்றதாய்த் திகழ்வது சீவக சிந்தாமணி ஆகும். சீவக சிந்தாமணி என்னும் காப்பியம் கதை அமைப்பு, கதை மாந்தர் படைப்பு, நூற்பயன் முதலான கூறுகளால் முழுமை பெற்றுத் திகழ்கின்றது. விருத்தம் என்னும் புதிய பாஇனம்-இந்நூலில் முதன் முறையாகக் கையாளப்பட்ட சிறப்புடையது. அதனால் இக்காப்பியம் பிற்காலத்தில் எழுந்த கம்பராமாயணம், பெரியபுராணம் முதலிய காப்பியங்களுக்கு அடிப்படையாகவும், முன்னோடியாகவும் அமைந்துள்ள பெருமையுடையது.

பெயர்க் காரணம்

சிந்தாமணி - ஒளி கெடாத ஒரு வகை மணி. இந்நூலிற்கு இப்பெயர் அமைந்ததற்குப் பல காரணங்கள் உண்டு. அவற்றுள் ஒளி கெடாத மணி போன்றது என்ற காரணமே இந்நூலுக்குப் பொருத்த மானதாகும். இந்நூல் தோன்றிய காலம் முதல் புகழ் குன்றாது நின்று நிலவுவதே தக்க சான்றாகும்.

இலக்கண நூலார், சிந்தாமணி என்பது நெஞ்சின் கண் பொதிந்து வைத்தற்குரிய ஒரு மணி போன்றது என்பர். அதுபோல் இந்நூலைப் படிப்போர் அறிவுப் பொருள் அனைத்தும் ஒருங்கே பெறுமாறு படைத்தலால் இந்நூல் இப்பெயர் பெற்றது எனலாம்.

காவியத் தலைவனான தன் மகனை விசய மாதேவியார் முதன் முதலாக இட்டு விளித்த பெயர் சிந்தாமணி என்பதாகும். பின்னர் வழிபடு தெய்வம் வானொலியாக ‘சீவ’ என்று வாழ்த்தியது. அதற்குப் பின் அக்குழந்தைக்குச் சீவகன் என்று பெயரிட்டனர். சீவகனின் வரலாற்றை முழுமையாகத் தெரிவிப்பதால் சீவக சிந்தாமணி என்று இந்நூல் பெயர் பெற்றது.

நூலாசிரியர்

சீவக சிந்தாமணி என்னும் காப்பியத்தைப் படைத்தவர் திருத்தக்க தேவர். சோழர் குலத்தில் அரச மரபைச் சார்ந்தவர். சமண சமயத்தைச் சார்ந்தவர். தீபங்குடியில் பிறந்தவர். இவருடைய காலம் கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டு ஆகும்.

சமணத் துறவிகள் அறக்கருத்துகளை மட்டும் அன்றி இல்லறச் சுவையையும் பாட முடியும் என்பதனை நிறுவும் பொருட்டு இந்நூலை இயற்றினார் திருத்தக்க தேவர்.குருவின் வேண்டுகோளுக்கு இணங்க நரி விருத்தம் பாடிய பிறகே சீவக சிந்தாமணியைப் பாடினார். இத்தகு சிறப்புக் கொண்ட திருத்தக்க தேவரைத் ‘தமிழ்க் கவிஞர்களுள் சிற்றரசர்’ என்று வீரமாமுனிவர் பாராட்டுகின்றார். தேவர், திருத்தகு முனிவர், திருத்தகு மகாமுனிவர், திருத்தகு மகாமுனிகள் என்னும் பெயர்களாலும் வழங்கப்படுவார்.

நூல் கூறும் செய்தி

சச்சந்தன் விசயை என்போர் சீவகனின் பெற்றோர் ஆவர். கட்டியங்காரன் என்னும் அமைச்சன் சூழ்ச்சியால் மன்னன் சச்சந்தனைக் கொன்று, ஏமாங்கத நாட்டினைக் கைப்பற்றினான். குழந்தைப் பருவம் முதற்கொண்டு சீவகனைக் கந்துக்கடன் என்னும் வாணிகன் வளர்த்து வந்தான். உரிய பருவம் எய்தியதும் தன் நாட்டைப் பெறுவதற்குத் தாயின் அறிவுரையோடு, மாமன் கோவிந்தனின் துணைக்கொண்டு போரிட்டு வென்றான், சீவகன். அச்செய்திகளை விரிவாக விளக்கிக் கூறும் நூலே சீவக சிந்தாமணி ஆகும்.

நூல் அமைப்பு

சீவக சிந்தாமணி என்னும் பேரிலக்கியம், நாமகள் இலம்பகம் முதலாக முத்தி இலம்பகம் ஈறாக, 13 இலம்பகங்களைக் கொண்டு திகழ்கின்றது. இலம்பகம் யாவும் மகளிர் பெயரினையே பெற்றுள்ளன. ஒவ்வோர் இலம்பகத்திலும் ஒரு மண நிகழ்ச்சி கூறப்பட்டுள்ளது. இலக்கியச் சிறப்பு மிக்க இந்நூலில் 3145 பாடல்கள் உள்ளன. விருத்தம் என்னும் பாவகையால் பாடப் பெற்றது.

நூலின் சிறப்பு

சீவகனின் வீர தீரச் செயல்கள், பேரழகு, பேராற்றல், போராற்றல், அரச குடும்பத்தின் செயல்கள், அரசியல் நெறிமுறைகள், மனித குல மேம்பாட்டிற்குத் தேவையான அறக்கருத்துகள் கூறுதல் முதலான பல செய்திகளைக் கொண்டதாக இந்நூல் விளங்குகின்றது. சீவகன் தன் ஆற்றலால் எட்டுப் பெண்களைத் திருமணம் செய்து கொள்கின்றான். இதனால் இந்நூலுக்கு மணநூல் என்ற பெயரும் உண்டு. திருத்தக்க தேவர் தம் நூலுக்குச் சிந்தாமணியின் சரிதம் என்றே பெயரிட்டனர்.

சிந்தாமணி ஒரு சமயக் காப்பியமாகும். வட மொழியிலுள்ள கத்திய சிந்தாமணி, சத்திர சூடாமணி, ஸ்ரீ புராணம் ஆகிய நூல்களில் சீவகன் கதை காணப்படுகிறது. அவற்றைத் தழுவித் தமிழில் சீவக சிந்தாமணி என்னும் பெரு நூலாகத் தந்துள்ளார் திருத்தக்க தேவர்.

20 September, 2014

இந்திய போக்குவரத்து



 இரயில் போக்குவரத்து

* இந்திய போக்குவரத்தின் அடிப்படை பரிமாணங்கள் இரயில் போக்குவரத்து, சாலைப் போக்குவரத்து, நீர்வழிப் போக்குவரத்து மற்றும் வான்வழிப்போக்குவரத்து எனலாம்.

* இந்திய இருப்புப் பாதையானது 16 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு பொது மேலாளரால் நிர்வகிக்கப்பட்டு வருகின்றன.

* உலகிலேயே இரண்டாவது மிகப்பெரிய இரயில்வே அமைப்பைக் கொண்ட நாடு இந்தியா.

* உலகிலேயே அதிக பணியாளர்களைக் கொண்டு ஒரே துறையாக செயல்பட்டு வரும் துறை - இந்திய ரயில்வே துறை.

* இந்தியாவின் முதல் இருப்புப் பாதை பம்பாயிலிருந்து தானா வரை(34 கி.மீட்டர்) 1853ல் துவங்கப்பட்டது.

* தற்போது இந்திய இருப்புப் பாதைகளின் நீளம் சுமார் 63,140 கி.மீ.

* இந்திய இரயில்வே தினமும் 14,444 தொடர்வண்டிகளை இயக்கி வருகின்றன.

* 1947-ல் இந்தியா சுதந்திரம் அடைந்தபோது மொத்தம் 47 தொடர்வண்டி அமைப்புகள் இருந்து வந்தன. அவைகள் 1951-ல் தேசியமயமாக்கப்பட்டது. அதாவது நாட்டுடமையாக்கப்பட்டது.

* இந்திய இரயில்வே Brod Guage - 50 சசவீதமும், Metre Gauge - 43 சதவீதமும், Narrow Gauge -  7 சதவீதம் என்று மூன்று வகையான இருப்புப் பாதைகளை அமைத்து செயல்பட்டு வருகின்றன.

* இந்திய ரயில்வே 16 மண்டலங்களாக செயல்பட்டு வருகிறது. இதில் வடக்கு இரயில்வே சுமார் 11000 கி.மீ நீள இருப்புப் பாதையுடன் மிக நீண்டதாக விளங்குகிறது.

* இந்திய இரயில்வே 2002 ஆம் ஆண்டு ஏப்ரல் 16-ம் தேதி தனது 150வது ஆண்டு விழாவைக் கொண்டாடியது.

* கொங்கன் இரயில்வே திட்டம் மார்ச் 1990ல் துவங்கப்பட்டது. இத்திட்டம் கோவா, மகாராஷ்டிரா, கர்நாடகா மற்றும் கேரளா மாநிலங்களை குறுகிய வழியில் இணைக்கும் ஒரு திட்டமாகும். இத்திட்டம் சுமார் 760 கி.மீ. தூரத்தை இணைக்கிறது.

* இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் சதாப்தி அதிவேக இரயில் இயங்கி வருகின்றன.

* புதுதில்லிக்கும் மும்பைக்கும் இடையே செல்லும் அதிவிரைவு இரயில்களிலும், ராஜஸ்தானில் இயங்கக்கூடிய அரண்மனை இராஜஸ்தானி இரயிலிலும் தொலைபேசி வசதிகள் செய்யப்பட்ட இரயில்கள் இயங்கி வருகின்றன.

* 1994 ஆம் ஆண்டு முதல் அதிவிரைவு இரயிலில் பயணம் செய்யும் பயணிகளுக்கு காப்பீட்டுத் திட்டம் அறிமுகப்படுத்தியுள்ளது இந்திய இரயில்வே.

* 1985-ல் நீராவி இரயில் இயந்திரங்கள் பயன்படுத்துவது நிறுத்தப்பட்டது.

* 1995-ல் இரயில் முன்பதிவு முழுவதும் கணினி மயமாக்கப்பட்டது.

இந்திய இரயில்வே மண்டலங்கள் மற்றும் தலைமையிடம், தொடங்கப்பட்ட ஆண்டு, பயணிக்கும் தூரங்கள்(கிமீ):

01. வடக்கு இரயில்வே (NR ) 1952 -ம் ஆண்டு முதல் 6968 கிமீ தூரம் தலைமையிடம் - தில்லி

02. வடகிழக்கு இரயில்வே (NER ) 14.4.1952-ம் ஆண்டு முதல் 3667 கி.மீ தூரம் தலைமையிடம் கோரக்பூர்.

03. வடகிழக்கு எல்லைப்புற இரயில்வே (NFR ) 15.01.1958 -ம் ஆண்டு முதல் 3907 கி.மீ தலைமையிடம் - குவஹாத்தி

04. கிழக்கு இரயில்வே (ER ) 1952-ம் ஆண்டு முதல் 2414 கி.மீ தலைமையிடம் கொல்கத்தா.

05. தென்கிழக்கு இரயில்வே (SER ) 1955-ம் ஆண்டு முதல் 2631 கி.மீ. தலைமையிடம் கொல்கத்தா.

06. தென்மத்திய இரயில்வே (SCR ) 02.10.1966 -ம் ஆண்டு முதல் 5803 கி.மீ தலைமையிடம் செகந்திராபாத்.

07. தென்னக இரயில்வே (SR ) 14.04.1951 -ம் ஆண்டு முதல் 5098 கி.மீ தலைமையிடம் சென்னை.

08. மத்திய இரயில்வே (CR)  05.11.1951 -ம் ஆண்டு முதல் 3905 கி.மீ தலைமையிடம் மும்பை

09. மேற்கு இரயில்வே (WR) 05.11.1951 -ம் ஆண்டு முதல்  6182 கி.மீ தலைமையிடம் மும்பை

10. தென்மேற்கு இரயில்வே (SWR) 01.04.2003-ம் ஆண்டு முதல் 3177 கி.மீ தலைமையிடம் ஹூப்ளி

11. வடமேற்கு இரயில்வே (NWR) 01.10.2002 -ம் ஆண்டு முதல் 5459 கி.மீ. தலைமையிடம் ஜெய்ப்பூர்

12. மேற்குமத்திய இரயில்வே (WCR)  01.04.2003 -ம் ஆண்டு 2965 கி.மீ. தலைமையிடம் ஜபல்பூர்

13. வடமத்திய இரயில்வே (NCR) 01.04.2003 -ம் ஆண்டு முதல் 3151 கி.மீ. தலைமையிடம் அலகாபாத்

14. தென்கிழக்குமத்திய இரயில்வே (SECR)  01.04.2003 -ம் ஆண்டு முதல் 2447 கி.மீ. தலைமையிடம் பிலாஸ்பூர்

15. கிழக்குக்கடற்கரை இரயில்வே (ECoR) 01.04.2003 -ம் ஆண்டு முதல் 2572 கி.மீ. தலைமையிடம் புவனேஸ்வர்

16. கிழக்குமத்திய இரயில்வே (ECR) 01.10.2002 -ம் தேதி ஆண்டு முதல் 3628 கி.மீ. தலைமையிடம் ஹாஜிபூர்

சாலைப் போக்குவரத்து

* இந்தியாவில் 1996 ஆம் ஆண்டு வரையிலான மதிப்பீட்டின்படி இந்தியாவில் 33 லட்சம் கி.மீ.க்கும் அதிகமான தொலைவி்ற்கு சாலை வசதிகள் உள்ளன.

* இந்திய மாநிலங்களில் கர்நாடகா மிக நீண்ட சாலைகளுடன் (64000 கி.மீ) முதலிடத்தை பெற்று வருகிறது.

* சாலைகளை பொருத்தவரை தேசிய நெடுஞ்சாலைகள், மாநில நெடுஞ்சாலைகள், கிராம வழிச் சாலைகள், சர்வதேச சாலைகள் என்று பல வகைகளில் செயல்பட்டு வருகின்றன.

* இந்தியாவின் எல்லா மாநிலங்களின் தலைநகரையும் இணைக்கும் விதமாக சுமார் 30 தேசிய நெடுஞ்சாலைகள் உள்ளன.

* தேசிய நெடுஞ்சாலைத் திட்டத்தின் கீழ் தங்கநாற்கரத் திட்டம் (Golden Quardrilateral Connecting four Metropolican Cities) செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் நான்கு முக்கிய நகரங்களான தில்லி, மும்பை, சென்னை மற்றும் கல்கத்தா ஆகியவை இணைக்கப்பட உள்ளன.(5952 கி.மீ)

* வடக்கு மற்றும் தெற்கை இணைக்கும் விதமாக சுமார் 7300 கி.மீ நீளத்தில் ஸ்ரீநகர் முதல் கன்னியாகுமரி வரை தேசிய நெடுஞ்சாலை அமைக்கவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

* தேசிய நெடுஞ்சாலைகளுக்கான திட்டங்கள் அனைத்தையும் மத்திய அரசு செயல்படுத்தி வருகின்றது.

* இந்திய சாலை கட்டுமான நிறுவனம் 562.88 கோடி இழப்பால், தொழில் தகராறுகள் சட்டம் 1947ன் கீழ் இந்நிறுவனம் 2000ம் ஆண்டு களைக்கப்பட்டது

வான்வழிப் போக்குவரத்து

* இந்தியாவில் மொத்தம் 5 சர்வதேச விமான நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. அவை: 01. இந்திரகாந்தி சர்வதேச விமான நிலையம், பாலம், தில்லி 02. டம் டம் விமான நிலையம். 03. கல்கத்தா, சாந்தா குரூஸ் விமான நிலையம், கல்கத்தா 04. சென்னையில் மீனம்பாக்கத்தில் உள்ள அறிஞர் அண்ணா சர்வதேச விமான நிலையம் 05. கேரளாவில் உள்ள திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையம்.

* ஏர் இந்தியா நிறுவனம் 1953-ல் தோற்றுவிக்கப்பட்டு 1998 ஆம் ஆண்டு வரை சுமார் 90 நாடுகளுடன் விமானத் தொடர்பு ஒப்பந்தத்தை மேற்கொண்டு செயல்பட்டு வருகிறது.

* ஏர் இந்தியா நிறுவனம் வெளிநாட்டு வான்வழிப் போக்குவரத்தையும் மேற்கொண்டு வருகிறது.

* 1953-ல் தோற்றுவிக்கப்பட்ட இந்தியன் ஏர்லைன்ஸ் நிறுவனம் இந்திய உள்நாட்டு விமானப் போக்குவரத்தை தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது.

* Pawan Hans Limited என்ற நிறுவனம் தேவைப்படும் நபர்களுக்கு ஹெலிகாப்டர் சரிவீஸ் வழங்கும் நிறுவனமாக செயல்பட்டு வருகிறது. பொதுவாக எண்ணெய் நிறுவனங்கள் இவற்றின் பயன்பாட்டைப் பெரிதும் பெற்று வருகின்றன.


நீர்வழிப் போக்குவரத்து

உள்நாட்டு நீர்வழிகளின் மேம்பாட்டிற்காக 1985-ல் இயற்றப்பட்ட சட்டத்தின்படி கப்பல் துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் 1986 அக்டோபர் 27-ல் இந்திய உள்நாட்டு நீர்வழிப் போக்குவரத்து ஆணையம் அமைக்கப்பட்டது.

உள்நாட்டு நீர்வழிப் போக்குவரத்து ஆணையத்தின் தலைமையகம் - உத்திரப்பிரதேச மாநிலம் நொய்டாவில் அமைந்துள்ளது.

* இந்தியாவின் பன்னாட்டு வர்த்தகத்தில் நீர்வழிப்பாதை போக்குவரத்து மிகவும் சாதகமாக அமைந்துள்ளது.

* வளரும் நாடுகளிடையே சரக்குக் கப்பல்களின் நிலையில் இந்தியா 15-வது இடத்தில் உள்ளது.

* இந்தியாவில் பெரிய துறைமுகங்களும், சிறிய துறைமுகங்களும் என இரு துறைமுகங்கள் செயல்பட்டு வருகின்றன. 12 பெரிய துறைமுகங்கள் அனைத்தும் மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வருகின்றன.

* மேற்குக் கடற்கரையில் கண்ட்லா, மும்பை, மர்மகோவா, மங்களூர் மற்றும் கொச்சி துறைமுகங்களும், கிழக்குக் கடற்கரையில் கொல்கத்தா, பாரதீப் விசாகப்பட்டினம்,

சென்னை மற்றும் தூத்துக்குடி துறைமுகங்களும் அமைந்துள்ளன.

* கண்ட்லா துறைமுகம் ஒரு Tidal Port ஆகும்.

* விசாகப் பட்டினம் துறைமுகம் ஆழமிகுந்த துறைமுகமாக செயல்பட்டு வருகிறது.

* சென்னை துறைமுகம் ஒரு செயற்கைத் துறைமுகமாகும்.

* சமீப காலமாக தமிழகத்தின் எண்ணூர் துறைமுகம் 12-வது பெரிய துறைமுகமாக செயல்பட்டு வருகிறது.

* மும்பை ஒரு சிறந்த இயற்கைத் துறைமுகமாகும். சூயஸ் கால்வாய் வழியாக வரும் கப்பல்கள் மும்பையில் தங்கிப் பின்னர் செல்கின்றன.

* மேற்கு ஐரோப்பிய ஆப்பிரிக்க நாடுகளை நோக்கியிருக்கும் மும்பை துறைமுகத்தை இந்தியாவின் மேற்கு வாயில் என்பர். இதுவே இந்தியாவின் மிகப்பெரிய துறைமுகம் மற்றும் முதல் துறைமுகமாகும்.

* மும்பை துறைமுகத்தின் நெரிசலைத் தவிர்ப்பதற்காக நவஹேவா என்னுமிடத்தில் கட்டப்பட்ட துறைமுகம் ஜவகர்லால் நேரு துறைமுகம் ஆகும். இது ஒரு நவீன துறைமுகம் ஆகும்.

* போர்ச்சுகீசிய துறைமுகமாக இருந்த மர்மகோவா துறைமுகமும் ஒரு முக்கிய இந்திய இயற்கைத் துறைமுகமாகும். இந்தியாவிலிருந்து ஏற்றுமதியாகும் இரும்புத் தாதுவில் சுமார் 60 சதவிதம் இத்துறைமுகத்தின் வழியாகவே ஏற்றுமதியாகிறது.

* கர்நாடக மாநிலத்தில் அமைந்துள்ள புதிய மங்களூர் துறைமுகம் குதிரேமுக் என்ற இடத்தில் உள்ள இரும்புத் தாதுக்களை ஏற்றுமதி செய்ய இத்துறைமுகம் பயன்படுகிறது.

* நீர்வழிப் போக்குவரத்தில் அலகாபாத் முதல் ஹால்தியா வரையிலான நீர்வழிப்பாதை NW-1 என்று குறிப்பிடப்படுகிறது.

நன்றி 
தினமணி 

இந்தியாவின் பல்நோக்குத் திட்டங்கள்


* ஒரு திட்டங்களின் மூலம் பல நோக்கங்களை சென்றடைவதே பல்நோக்குத் திட்டங்கள் ஆகும். இவை ஆற்றுப் பள்ளத்தாக்குத் திட்டங்களே ஆகும்.

* ஒரு ஆற்றுப்பகுதி முழுவதும் ஒரு திட்டத்திற்குரிய பரப்பாகவே கருதப்படுகின்றன. இத்திட்டங்கள் நீர்ப்பாசனம், நீர் வளம், வெள்ளத் தடுப்பு, தொழில் வளம், மண் அரிப்பு தடுப்பு, காடு வளர்ப்பு, மீன் பிடிப்பு, மின் சக்தி் போன்ற பல்வேறு நோக்கங்களுக்காக அமைக்கப்படுகின்றன.

* ஆற்றுப் பள்ளத்தாக்குத் திட்டங்கள் நவீன இந்தியாவின் புதிய கோயில்கள் என்று புகழப்பட்டு வருகின்றன. இத்தகைய திட்டங்களின் முதல் பல்நோக்குத் திட்டமாக

அமைக்கப்பட்ட திட்டம் தாமோதர் பள்ளத்தாக்குத் திட்டம் ஆகும். இவை வெள்ளப்பெருக்கைத் தடுக்கும் திட்டமாகும்.

தாமோதர் பள்ளத்தாக்குத் திட்டம்

* சோட்டா நாகபுரி பகுதியிலிருந்து மேற்கு வங்காளம் வரை பாய்ந்து வருகிறது தாமோதர் நதி.

* தாமோதர் நதி கோடைக்காலங்களில் வெள்ளப்பெருக்கை ஏற்படுத்தி, ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலப்பரப்பை வெள்ளத்தில் மூழ்கச் செய்து வருகின்றன.

* இதனால் தாமோதர் ஆறு இந்தியாவின் துயரம் என்று வர்ணிக்கப்படுகிறது.

* 1948ல் தாமோதர் பள்ளத்தாக்குக் கழகம் துவங்கப்பட்டது.

* இக்கழகம் சுமார் ரூ.150 கோடியில் திலாயா, கோனார்.பாஞ்சத், மைதான் ஆகிய நான்கு இடங்களில் அணைகளைக் கட்டியுள்ளது.

* மேலும் தாமோதர் பள்ளத்தாக்கில் காணப்படும் இரும்பு மற்றும் நிலக்கரி வளத்தையும் பயன்படுத்த ஆலோசித்து வருகின்றன.

* இத்திட்டத்தின் உதவியால் ஜாம்ஷெட்பூர், துர்க்காப்பூர், குல்டி ஆகிய இடங்களில் அமைந்துள்ள தொழிற்சாலைகளும் மிகுந்த  பயன் பெற்றி வருகின்றன.

* இத்திட்டத்தின் பயனை பீகார் (ஜார்க்கண்ட்) மற்றும் மேற்கு வங்காளம் இரு மாநிலங்களும் பெற்று வருகின்றன. மேலும் மத்தியப்பிரதேசமும் இதன் பயனை பங்கிட்டுக்கொள்கின்றன.

ஹிராகுட் திட்டம்

* இத்திட்டம் மகாநதியின் மீது 1948-ல் தொடங்கப்பட்டு 1957-ல் முடிவடைந்தது. இத்திட்டத்திற்காக ஒதுக்கப்பட்ட தொகை ரூ.83 கோடி.

* இத்திட்டத்தின் கீழ் மகாநதியின் மாது ஒரிசாவில் ஒரு நீண்ட அணை கட்டப்பட்டது. அதாவது 4.8 கிமீ நீளமும், 61 மீட்டர் உயரமும் உடைய இந்த அணைக்கட்டுதான்  உலகின் மிக நீண்ட அணைக்கட்டு ஆகும்.

* இந்த அணை சுமார் 810 கோடி கியூபிக் மீட்டர் நீரைத் தேக்கி வைக்கும் திறன் கொண்டது. இத்திட்டத்தின் கீழ் 9 மின்சக்தி நிலையங்கள் கட்டப்பட்டு 270 மெகாவாட் நீர் மின் சக்தி உற்பத்தி செய்யப்படுகிறது.

* திக்காரா மற்றும் நாராஜ் ஆகிய அணைகள் இத்திட்டத்தின் கீழ் அமைந்துள்ளன. வெள்ளத் தடுப்பு, ஒரிசாவின் இயற்கை வளப்பாதுகாப்பு மற்றும் நீர்ப்பாசனம் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டது இத்திட்டமாகும்.

துங்கபத்ரா திட்டம்

* துங்கபத்ரா நதி, துங்க் மற்றும் பத்ரா ஆகிய இரு ஆறுகளின் இமைப்பாகும்.

* ஆந்திரப்பிரதேசம் மற்றும் கர்நாடகா ஆகிய இரு மாநிலங்களின் கூட்டு முயற்சியே இத்திட்டமாகும்.

* கர்நாடகாவில், பெல்லாரி மாவட்டத்தில் உள்ள மல்லபுரம் பகுதியில் ஒரு அணை கட்டப்பட்டுள்ளது. சுமார் 2.5 கிமீ நீளமும், 50 மீ உயரமும் உடையது. இங்கிருந்து சுமார் 225 கிமீ நீளத்திற்கு ஒரு கால்வாயும், 350 மீட்டர் நீளத்திற்கு மற்றொரு கால்வாயும் நிர்மானிக்கப்பட்டுள்ளது.

* இத்திட்டத்தின் கீழ் 14 மின் சக்தி நிலையங்கள் அமைக்கப்பட்டு 126 மெகாவாட் நீர்மின்சக்தி உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.

பக்ரா நங்கல் திட்டம்

* இந்தியாவின் மிகப்பெரிய பல்நோக்குத் திட்டம் பக்ரா நங்கல் திட்டம் ஆகும். சிந்துவின் துணையாறாகிய சட்லஜ் ஆற்றின் குறுக்கே பக்ரா என்னும் இடத்தில் ஒரு அணை கட்டப்பட்டுள்ளது.

* இத்திட்டத்தினால் பஞ்சாப், ஹரியானா, இமாச்சலப் பிரதேசம், இராஜஸ்தான் ஆகிய மாநிலங்கள் பயன் பெறுகின்றன. இத்திட்டம் நான்கு முக்கிய அம்சங்களைக் கொண்டுள்ளது.

* சட்லஜ் ஆற்றின் குறுக்கே, பக்ரா என்னும் இடத்தில் 226 மீட்டர் உயரத்துடன், 518 மீட்டர் நீளத்துடனும் அணை கட்டப்பட்டுள்ளது. பக்ரா உலகின் உயரமான அணை ஆகும்.

* இந்த அணையால் உருவான மனிதனால் கட்டப்பட்ட, 8 மீட்டர் அகலமும், 80 கிமீ நீளமும் கொண்ட மிகப்பெரிய செயற்கை ஏரிக்கு, சீக்கியர்களின் 10-வது குருவான, குரு கோவிந்த் சிங் என்பவரின் நினைவாக கோவிந்த் சாகர் என்று பெயரிடப்பட்டுள்ளது. இது ஹிமாச்சலப் பிரதேசத்தில் அமைந்துள்ளது.

* பக்ரா அணைக்குக் கீழாக 13 கிமீ தொலைவில் நங்கல் என்னுமிடத்தில் 29 மீட்டர் உயரத்துடன் 305 மீட்டர் நீளத்துடன் கட்டப்பட்டுள்ளது. இதுவும் சட்லஜ் ஆற்றின் மீதே அமைந்துள்ளது. இங்கிருந்து நங்கல் நதிநீர்க்கால்வாய் தொடங்குகிறது.

* சட்லஜ் ஆற்றின் மீது பக்ரா நங்கல் அணைக்குக் கீழாக 13 கிமீ தொலைவில் நங்கல் என்னுமிடத்தில் 29 மீட்டர் உயரத்துடன் 305 மீட்டர் நீளத்துடன் கட்டப்பட்டுள்ளது. இங்கிருந்து நங்கல் நதிநீர்க்கால்வாய் தொடங்குகிறது.

* பக்ராவில் 2 மின்சக்தி நிலையங்கள் கட்டப்பட்டு, அவற்றின் மூலம் 210 மெகாவாட் நீர் மின்சக்தி பெறப்படுகிறது. மேலும் நங்கல் கால்வாய்த் திட்டத்திலும் 2 மின்சக்தி நிலையங்கள் உள்ளன.

* 64 கிமீ நீளமுடைய நங்கல் கால்வாய் நங்கல் பகுதியில் அமைந்துள்ளது. பொதுவாக இத்திட்டதினால் 1204 மெகாவாட் மின்சக்தி கிடைக்கிறது. அத்துடன் 1100 கிமீ நீளத்திற்கு கால்வாய்கள் அமைந்துள்ளன. இத்திட்டத்தினால் 15 இலட்சம் ஹெக்டேர் பரப்பளவு நிலம் நீர்ப்பாசன வசதி பெறுகிறது.

கோசி திட்டம்

* பீகாரில் உள்ள கோசி நதியின் மீது நேபாளத்தின் உதவியுடன் கோசி திட்டம் அமைக்கப்பட்டது. வெள்ளத் தடுப்பே இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.

* கோசி ஆறு பீகாரின் துயரம் என்று வர்ணிக்கப்படுகிறது. இதன் முக்கிய கால்வாய் ஹனுமான் நகர் தடுப்பு வரை செல்கிறது.

* கோசி திட்டத்தால் பயன் பெறும் மாநிலம் பீகார் மற்றும் நேபாளம்.

* இதே போன்று இந்தியாவும், நேபாளமும் இணைந்து செயல்படுத்தி உள்ள மற்றொரு திட்டம் கண்டக் திட்டமாகும்.

நாகார்ஜூனா திட்டம்

* ஆந்திரா மாநிலத்தில் கிருஷ்ணா நதி மீது அமைந்துள்ள திட்டமாகும். புத்த துறவியாகிய நாகார்ஜூனரை நினைவுப்படுத்தும் பொருட்டு நாகார்ஜூன சாகர் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.

* இத்திட்டத்தின் கீழ், ஆந்திரப்பிரதேசத்தின் நாள்கொண்டா மாவட்டத்தில் ஒரு அணை கட்டப்பட்டுள்ளது. இதன் நீளம் 1.5 கீமி உயரம் 25 மீட்டர் ஆகும்.

* இத்திட்டத்தின் மூலம் 50 மெகாவாட் உற்பத்தி செய்யக்கூடிய வகையில் இரு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

சம்பல் பள்ளத்தாக்குத் திட்டம்

* மத்தியப்பிரதேசம் மற்றும் இராஜஸ்தான் ஆகிய இரு மாநிலங்களின் கூட்டு முயற்சியே இத்திட்டமாகும்.

* யமுனையின் தெற்கு கிளை நதியே சாம்பல்.

* இத்திட்டத்தின் முக்கிய நோக்கம் சம்பல் பகுதியின் மண் பாதுகாப்பே ஆகும்.

* இத்திட்டத்தின் கீழ் மத்தியப் பிரதேசத்தின் காந்தி சாகர் அணையும், இராஜஸ்தான் மாநிலத்தில் கோட்டா நீர்த் தடுப்பு மற்றும் ஜவகர் சாகர் அணை, இராணா பிரதாப் சாகர் ஆகிய மூன்று அணைகள் அமைந்துள்ளன.

* இத்திட்டத்தினால் 5 லட்சம் ஹெக்டேர் நிலப்பரப்பு நீர்ப்பாசனம் பெற்று வருகிறது.

ரீகண்ட் திட்டம்

* சோன் நதியின் கிளை நதியான ரீகண்ட் ஆற்றின் குறுக்கே இத்திட்டம் அமைந்துள்ளன. இந்த அணையின் நீர்த்தேக்கம் கோவிந்த் வல்லப பந்த் சாகர் என்று அழைக்கப்படுகிறது.

* இந்த அணை 90 மீ உயரமும், 1020 மீ நீளமும் கொண்டது.

* இத்திட்டம் நீர்மின்சக்தியை நோக்கமாகக் கொண்டு அமைக்கப்பட்டது.

* உத்திரப்பிரதேசத்தின் 7 லட்சம் ஹெக்டேர் நிலப்பரப்பு இத்திட்டத்தினால் நீர்ப்பாசனம் பெற்று வருகிறது. 6 அலகுகளின் மூலம் 500 மெகாவாட் மின் உற்பத்தி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

* இத்திட்டத்தின் மூலம் பிம்பிரி என்னும் இடத்தில் உள்ள இரசாயன தொழிற்சாலைகளும், ரேணுகுட் பகுதியில் உள்ள அலுமினிய தொழிற்சாலையும், ஊரசர பகுதியின் சிமெண்ட் தொழிற்சாலையும் மின் ஆற்றல் பெறுகின்றன.

இந்திராகாந்தி கால்வாய்த் திட்டம்

* இராஜஸ்தானின் மாநிலத்தின் முக்கிய திட்டமாகும் இந்த திட்டம்.

* பியாஸ் நதியின் மீது போங் அணை கட்டப்பட்டுள்ளது. பியாஸ் மற்றும் இராவி நதிகளில் உள்ள நீரை சட்லஜ் ஆற்றிற்கு திசை திருப்புவதே இத்திட்டத்தின் நோக்கமாகும்.

* கால்வாய்களி்ன் மூலம் நீரை திசை திருப்பப்படுகிறது. போங் அணையும் நீரை திசை திருப்புகிறது.

* இராஜஸ்தான் கால்வாய் அல்லது இந்திரகாந்தி கால்வாய் என்று அழைக்கப்படும் இக்கால்வாய்தான் உலகின் மிக நீளமான நீர்ப்பாசனக் கால்வாய் ஆகும்.

* இராஜஸ்தான் மாநிலத்தின் காந்தி நகர், பிக்கானீர், ஜெய்சல்மீர் போன்ற பகுதிகளை வளப்படுத்துகிறது.

* இக்கால்வாயின் உதவியால் பியாஸ், இராவி மற்றும் சட்லெஜ் ஆகிய ஆறுகளின் நீரை முழுமையாக இந்தியா பயன்படுத்த முடிகிறது.

* ரஷ்யா, கனடா, சைர், அமெரிக்க ஐக்கிய நாடுகளுக்கு அடுத்து இந்தியா ஐந்தாவது இடத்தில் உலகளவில் நீர்மின்சக்தித் துறையில் இடம் பெற்றுள்ளது.

* நமது நாட்டின் நீர்மின்சக்தி வளத்தில் 30 சதவீதம் பிரம்மபுத்திரா பகுதிகளில்தான் உற்பத்தி செய்யப்படுகிறது. மேலும் பல திட்டங்களும் செயல்பட்டு வருகின்றன.

ஷராவதி திட்டம்

* இவை ஜோக் நீர்வீழ்ச்சியில் கர்நாடாகா மாநிலம் ஷிமோகா மாவட்டம் ஷராவதி ஆற்றின் குறுக்கே அமைந்துள்ளது.

* இந்தியாவின் மிக உயர்ந்த நீர்வீழ்ச்சி ஜோக் நீர்வீழ்ச்சி ஆகும். 891 மெகாவாட் உற்பத்தியுடன், பெங்களூர் பகுதியை வளப்படுத்துகிறது.

* கலினாடி திட்டம் மூலம் 270 மெகாவாட் உற்பத்தி உயர்த்தப்பட்டுள்ளது.

* ஷராவதி திட்டம் மகாத்மா காந்தி நீர்மின்சக்தித் திட்டம் என்றும் அழைக்கப்படுகிறது.

குந்தா திட்டம்

* தமிழகத்தின் நீலகிரி மாவட்டத்தில் குந்தா திட்டத்தின் மூலம் 425 மெகாவாட் திறனிலிருந்து 535 மெகாவாட் உற்பத்திக்கு உயர்த்தப்பட்டுள்ளது.

* இந்தியாவில் முதன்முதலாக 1902-ம் ஆண்டு காவிரி ஆற்றின் மீது கர்நாடகாவில் உள்ள சிவசமுத்திரம் நீர்வீழ்ச்சிப் பகுதியில்தான் முதல் நீர்மின்சக்தித் திட்டம் துவங்கப்பட்டது.

* இதனைத் தொடர்ந்து மகாராஷ்டிரா மாநிலம் மும்பை நகருக்கு மின்சக்தி வழங்குவதற்காக துவங்கப்பட்டதுதான் டாடா நீர்மின்சக்தித் திட்டம்.

* தமிழகத்தில் பைக்காரா நீர்மின்சக்தித் திட்டமே முதல் திட்டமாகும்.

* இமயமலையின் வட பகுதியான மாண்டி என்னும் பகுதியில்தான் இந்தியாவின் முதல் திட்டம் துவங்கியது எனலாம்.

* மேட்டூர் திட்டம் - தமிழகத்தின் சேலம் மாவட்டத்தில் காவிரி ஆற்றின் குறுக்கே மேட்டூரில் கட்டப்பட்டுள்ள ஸ்டான்லி அணையிலிருந்து மின்சாரம் தயாரிக்கப்படுகிறது.

* கர்நாடகாவில் மலப்ரபா ஆற்றின் மீது மலப்ரபா திட்டம் அமைந்துள்ளது.

* கேரளாவில் பெரியாற்றின் மீது இடுக்கி திட்டம் அமைந்துள்ளது.

* கேரளாவில் சபரகிரி நதியில் 300 மெகாவாட் திறனுடன் சபரகிரி திட்டம் அமைந்துள்ளது.

* கோதாவரி மீது ஆந்திரப்பிரதேசத்தில் போச்சம்பேட் திட்டம் அமைந்துள்ளது.

* பலிமேளா திட்டம், உக்காயா திட்டம் - ஒரிசாவில் அமைந்துள்ளது.

* உத்திரப்பிரதேசம் ராம்கங்கா நதியின் மீது ராம்கங்கா திட்டம் அமைந்துள்ளது.

* ஒரிசாவில் மகாநதி மீது மகாநதி டெல்டா திட்டம் அமைந்துள்ளது.

* மேற்கு வங்காளத்தில் கங்கை மற்றும் பாகீரதி நதிகளின் மீது ஃபராக்கா திட்டம் அமைந்துள்ளது.

* குஜராத்தில் தபதி ஆற்றின் மீது காக்ரபாரா திட்டம் அமைந்துள்ளது.

* மத்தியப்பிரதேசத்தில் நர்மதையின் துணை ஆறு தவா ஆற்றின் மாது தவா திட்டம் அமைந்துள்ளது.

* போங் அணை பியாஸ் நதியின் மீது பியாஸ் திட்டம் அமைந்துள்லது. இத்திட்டத்தால் பஞ்சாப், அரியானா மற்றும் இராஜஸ்தான் மாநிலங்கள் பயன்பெற்று வருகின்றன.

* சலால் திட்டம் - ஒரிசா மாநிலத்தில் அமைந்துள்ளது.

* மேற்கு வங்காளத்தில் கங்கை மற்றும் பாகீரதி நதிகளின் மீது ஃபராக்கா திட்டம் அமைந்துள்ளது.

* மேற்கு வங்காளத்தில் முரளி ஆற்றின் மீது மயூராக்ஷி திட்டம் அமைந்துள்ளது.

* மத்தியப்பிரதேசம், குஜராத், இராஜஸ்தான், மகாராஷ்டிரா ஆகியவற்றால் நர்மதை மீது அமைக்கப்பட்டது - நர்மதா பள்ளத்தாக்குத் திட்டம்.

* நர்மதை நதி மீது சர்தார் சரோவர் அணை கட்டப்பட்டுள்ளது.

* இந்திய அரசு மற்றும் உத்திரப்பிரதேசத்தின் கூட்டு முயற்சியால் தொடங்கப்பட்ட திட்டம் - தேரி மின்சக்தி திட்டம். இத்திட்டத்தின் நோக்கம் 2400 மெகாவாட் மின் உற்பத்தியே.

* ஃபராக்கா திட்டம் - இந்தியாவும் பங்காளதேஷூம் பயன்பெற்று வரும் திட்டம் ஃபராக்கா திட்டம். மேற்கு வங்காளத்தில் கங்கை நதி மீது அமைக்கப்பட்டுள்ளது.

இத்திட்டமே கொல்கத்தாவிற்கு குடிநீர் வழங்கும் திட்டமாகும்.

* கெய்னா திட்டம் - இத்திட்டத்தால் மகாராஷ்டிரா மாநிலம் பயன்பெற்று வருகிறது. சமீபத்தில் நிலநடுக்கத்தால் இத்திட்டம் பாதிக்கப்பட்டுள்ளது.


நன்றி - தினமணி 

19 September, 2014

பாரதியார்


*   பாரதியார் வாழ்ந்த காலம்: 11.12.1882 - 11.09.1921(அகவை 38) 

*   பாரதியார் பிறந்த ஊர்: திருநெல்வேலி மாவட்டம், எட்டையபுரம்.

*   பாரதியாரின் பெற்றோர்: சின்னச்சாமி அய்யர் - லெட்சுமி அம்மாள்

*   பாரதியாரின் இயர் பெயர்: சுப்ரமணிய பாரதியார்.

*   பாரதியார் 1897ஆம் ஆண்டு செல்லம்மாளை மணந்தார்.

*   பாரதியாரின் சிறப்பு பெயர்கள்: மகாகவி, தேசியகவி, பாட்டுக்கொரு புலவன்.

*   பாரதிக்கு மகாகவி என பட்டம் கொடுத்தவர் - வ.ரா(ராமசாமி அய்யங்கார்)

*   பாரதி தன்னை ஷெல்லிதாசன் என அழைத்துக்கொண்டார்.

*   பாரதி என்பதன் பொருள் - கலைமகள்.

*   பாரதியின் முதல் பாடல் "தனிமை இரக்கம்" வெளியிட்ட பத்திரிக்கை - மதுரையிலிருந்து வெளிவந்த "விவேக பானு" என்ற பத்திரிக்கை.

*   பாரதியார் ஆசிரியராகப் பணியாற்றிய பள்ளி - மதுரை சேதுபதி உயர்நிலைப் பள்ளி(1904)

*   பாரதியார் எந்த பத்திரிக்கையின் மூலம் தனது அரசியல் கருத்துக்களை மக்களிடம் பரப்பினார் - இந்தியா என்ற வாரப்   பத்திரிக்கை(1906ல் சென்னையில் பாரதியாரே தொடங்கி நடத்தினார்)

*   பாரதியார் சுதேசமித்திரன் பத்திரிக்கையில் உதவி ஆசிரியராகவும், சக்கரவர்த்தினி பத்திரிக்கையில் ஆசிரியராகவும் பணி செய்தார்.

*   பாரதியாரின் குறிப்பிடத்தக்க படைப்புகள்: பாஞ்சாலி சபதம், பாப்பா பாட்டு, கண்ணன் பாட்டு முதலியன.

*   பாரதியாரின் நினைவுகளை போற்றும் வகையில் எட்டையபுரத்தில் அவர் வாழ்ந்த இல்லம், சென்னை திருவல்லிக்கேணி அவர் வாழ்ந்த இல்லம் நினைவு இல்லமாக தமிழக அரசால் பராமரிக்கப்பட்டு வருகிறது.

*   பாரதியாருக்கு எட்டையபுரத்தில் மணிமண்டபம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் மைய மண்டபத்தில் பாரதியின் ஏழு அடி உயர திருவுருவச்சிலை அமைக்கப்பட்டு பஞ்சாப் முதல்வர் தர்பாராசிங் அவர்களால் 11.12.1999 அன்று திறந்து வைக்கப்பட்டது.

படைப்புகள்:

01. குயில் பாட்டு

02. கண்ணன் பாட்டு - இந்துக் கடவுளான கண்ணன் மீது பாடிய பாடல்களின் தொகுப்பாகும்.

03. சுயசரிதை

04. தேசிய கீதங்கள்

05. பகவத் கீதை

06. பாரதி அறுபத்தாறு

07. ஞானப் பாடல்கள்

08. தோத்திரப் பாடல்கள்

09. விடுதலைப் பாடல்கள்

10. விநாயகர் நான்மணிமாலை

11. பாரதியார் பகவத் கீதை (பேருரை)

12. பதஞ்சலியோக சூத்திரம்

13. நவதந்திரக்கதைகள்

14. உத்தம வாழ்க்கை சுதந்திரச்சங்கு

15. ஹிந்து தர்மம் (காந்தி உபதேசங்கள்)

16. சின்னஞ்சிறு கிளியே

17. ஞான ரதம்

18. பகவத் கீதை

19. சந்திரிகையின் கதை

20. பாஞ்சாலி சபதம்

21. புதிய ஆத்திசூடி

22. பொன் வால் நரி

23. ஆறில் ஒரு பங்கு

17 September, 2014

கோவூர் கிழார் - 7 ஆம் வகுப்பு சமச்சீர்



  • கோவூர் கிழார்  சங்ககாலப் புலவர்களில் ஒருவர்.உறையூருக்கு அருகில் உள்ள கோவூரில் வேளாளர் மரபில் பிறந்தார் .
  • மன்னர்கள் பகைமையின்றிக் கூடிவாழ இவர் பெரிதும் பாடுபட்டவர். 
  • போரை விரும்பாதவர். சங்கப்புலவர்களில் சகோதரச் சண்டை பற்றிய குறிப்புகளைத் தந்திருப்பது கோவூர் கிழாரின் பாடல்கள்
  • கோவூர் கிழார், சோழ மன்னர்களைப் பற்றியே அதிகம் பாடியுள்ளார். 
  • நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, திருவள்ளுவமாலை  ஆகியவற்றில் இவரின் 18 பாடல்கள் உள்ளன
போரைத் தவிர்த்த புலவர் 
  • நலங்கிள்ளி உறையூரை முற்றியிருந்தான். 
  • நெடுங்கிள்ளி கோட்டையை அடைத்துக்கொண்டு உள்ளே இருந்தான். 
  • கோவூர் நெடுங்கிள்ளிக்கு அறிவுரை கூறினார். போரிடுபவன் சேரனோ, பாண்டியனோ அல்லன். 
  • சோழன். யார் தோற்றாலும் சோழனுக்குத் தோல்வி. இதனைக் கண்டு பகைவர் நகைப்பர் என அறிவுரை கூறினார். 
  • இதனைக் கேட்ட நெடுங்கிள்ளி, நலங்கிள்ளிக்கு விட்டுக்கொடுத்தான் எனத் தெரியவருகிறது.
சிறை மீட்ட செம்மல் 
  • நலங்கிள்ளியிடம் இருந்த இளந்தத்தன் என்னும் புலவர் முற்றுகையின்போது உறையூருக்கு வந்தார. 
  • ஒற்று வந்தார் என்று நெடுங்கிள்ளி அவரைக் கொல்லப் புகுந்தார். புலவர் பிறருக்குத் தீங்கு செய்யத் தெரியாதவர் எனக் கோவூர் கிழார் விளக்கிப் புலவர் இளந்தத்தனைக் காப்பாற்றினார்.
மலையமான் பிள்ளைகளைக் காத்தல்
  • சோழன் குளமுற்றத்துத் தூஞ்சிய கிள்ளிவளவன் மலையமான் மக்களை யானைக் காலின் இட்டுக் கொல்லச் சென்றான். 
  • யானையைக் கண்டவுடன் அழுகையை மறந்து சிரிக்கும் குழந்தை உள்ளத்தை எடுத்துச் சொல்லி கோவூர் கிழார் குழந்தைகளைக் காப்பாற்றினார். 

16 September, 2014

மகாவித்துவான் மீனாட்சிசுந்தரனார் - 7 ஆம் வகுப்பு சமச்சீர்


மகாவித்துவான் மீனாட்சிசுந்தரனார்
   யார் காப்பார் என்று தமிழன்னை ஏங்கிய பொது  நான் காப்பேன் என்று    எழுந்தவர் உ.வே.சா. அவரே அனைவராலும் தமிழ்த்தாத்தா என்று   அழைக்கபடுபவர். உ.வே.சா.வின் ஆசிரியரே மகாவித்துவான்    மீனாட்சிசுந்தரனார்.

இளமையும் கல்வியும்:
  மீனாட்சிசுந்தரனார் 1815ஆம் ஆண்டு ஏப்ரல்  6ஆம் நாள் திருச்சி மாவட்டம்     எண்ணெய்க்கிராமத்தில் பிறந்தார்.  பெற்றோர்: சிதம்பரம் – அன்னத்தாச்சியார்.  தமது தந்தையிடமே தமிழ்  கற்றார்.

கல்வியே  வாழ்க்கை:
  மீனாட்சிசுந்தரனார் திருமணம் செய்துகொண்டு  குடும்பத்துடன் திரிசிரபுரத்தில்(    திருச்சிராப்பள்ளி )  வாழ்ந்தார்.  அவரை திரிசிரபுரம் மீனாட்சிசுந்தரனார் என்றே   அழைப்பர். அவரிடம் கல்வி கற்க வேண்டும் என்ற வேட்கை தணியாததாக   இருந்தது.  கல்வியே வாழ்கை என்று இருந்தவர்.

தமிழ்  கற்பித்தல்:
  மீனாட்சிசுந்தரனார் சாதி, சமயம் பாராது  அனைவருக்கும் கல்வி கற்பித்தார்.  குலாம்காதர் நாவலர், சவரிராயலு,  தியாகராசர், சாமிநாதர் ஆகியோர்,    அவர்களுள் குறிப்பிடத்தக்க மாணவர்கள் . இவர் சில காலம்    திருவாவடுதுறையில் ஆதின  வித்துவானாக பணியாற்றினார்.    திருவாவடுதுறையில் வாழ்ந்த காலத்தில் தான்  உ.வே.சாமிநாதருக்கு   ஆசிரியராக இருந்தார்.

தமிழ்த்  தொண்டு:
  இவர், எண்பதுக்கும் மேற்பட்ட நூல்களை  இயற்றியுள்ளார்.
  கோவில்களை  பற்றிய தலபுராணங்கள் பல இயற்றியுள்ளார்.

பண்பு  நலன்கள்:
  மீனாட்சிசுந்தரனார் அருங்குணமும் நிறைந்த  புலமையும் தளராத          நாவன்மையும் படைத்தவர்.  நகைச்சுவை உணர்வு மிக்கவர்
  ஒருமுறை அவரது நண்பர் ஆறுமுகம் என்பவர்,  தம்முடைய குடும்பத்     தொடர்பாக கும்பகோணத்தில் ஒருவருக்குப் பத்திரம் ஒன்று  எழுதிக்கொடுத்தார்.  அதில், சாட்சிக் கையொப்பமிட வந்த ஒருவருடைய  இருப்பிடம்     கும்பகோணத்தில் உள்ள சுண்ணாம்புக்காரன் தெரு என்பது. அதனை நீற்றுக்காரத்   தெருஎனவும் வழங்குவர். இந்த இரண்டில் எதனைப் பெயருக்கு முன்னால்     சேர்க்கலாம் என்று அவர் கேட்டபோது, மீனாட்சிசுந்தரனார்இரண்டும் வேண்டாம்,   மூன்றாவது தெரு என்று போட்டுவிடும் என்று சொன்னார். அதிலுள்ள     நகைச்சுவை உணர்வை  அனைவரும் அறிந்து மகிழ்ந்தனர். மூன்றாவது என்பது   சுண்ணாம்பைக் குறிக்கும் ஒரு  சொல்லாகும்.(வெற்றிலை + பாக்கு +     சுண்ணாம்பு)

நோய்க்கு  மருந்து இலக்கியம்:
  தனக்கு உடல்நிலை சரியில்லாத போது சற்று  ஓய்வெடுத்தல் நல்லதென்று   மற்றவர் கூற, நோய்க்கு மருந்து இலக்கியம் என்று கூறினார்.

மறைவு:
  01.02.0876 அன்று உலகவாழ்வை நீத்தார்.

முதுமொழிக்காஞ்சி - 7 ஆம் வகுப்பு சமச்சீர்

 சிறந்த பத்து

1.ஆர்கலி உலகத்து மக்கட்கு எல்லாம் -
 ஓதலின் சிறந்தன்று, ஒழுக்கம் உடைமை.
  • ஆர்கலி - கடல்
  • ஓதலின் - கற்றலைப் பார்க்கிலும்
     ஓசையினை உடைய கடல் சூழ்ந்த உலகத்தில் உள்ளவர்கள் எல்லாம் ஒழுக்கத்துடன் இருப்பது சிறந்ததாகும்.

2. காதலின் சிறந்தன்று, கண் அஞ்சப்படுதல்.
  • காதலின் - பிறரால் அன்பு செய்யப்படுவதைக் காட்டிலும்
  • சிறந்தன்று - சிறப்புடையது
     பிறர் அன்பு பாராட்டும்படி நடத்தலை விட அவர் மதிக்கும்படி நடத்தல் மேலானது.

3. மேதையின் சிறந்தன்று, கற்றது மறவாமை.
  • கற்றது - கற்ற பொருளை
  • மறவாமை - மறவாதிருத்தல்
     புதிதாக ஒன்றை அறிந்துகொள்வதை விட கற்றதை நினைவில் வைத்திருப்பது மேலானது.

4. வண்மையின் சிறந்தன்று, வாய்மை உடைமை.
  • வண்மையின் - வளமையோடிருத்தலை விட 
   செல்வத்தினும் சிறப்புடையது உண்மை வாழ்க்கையாகும்.
5. இளமையின் சிறந்தன்று, மெய் பிணி இன்மை.
  • மெய் - உடம்பு
  • பிணி இன்மை - நோயில்லாமலிருத்தல்
     நோயில்லாமல் இருத்தல் இளமையினும் சிறப்பானது.

6. நலன் உடைமையின் நாணுச் சிறந்தன்று.
  • நலன் உடமையின் - அழகுடைமையை விட
  • நாணு - நாணமுடைமை
     அழகைக் காட்டிலும் வெட்கம் சிறப்பானது.

7. குலன் உடைமையின் கற்புச் சிறந்தன்று.
  • குலன் உடைமையின் - நல்ல குணத்தையுடைமையினும்
  • கற்பு - கல்வியுடைமை
     உயர்ந்த குலத்தைக் காட்டிலும் கல்வி மேன்மையானது.

8. கற்றலின் கற்றாரை வழிபடுதல் சிறந்தன்று.
  • கற்றாரை - கற்ற பெரியாரை
  • வழிபடுதல் - போற்றியொழுகுதல்
     கற்றலை விடக் கற்றாரை வழிபட்டொழுகுதல் மேலானது.

9. செற்றாரைச் செறுத்தலின் தற் செய்கை சிறந்தன்று.
  • செற்றாரை - பகைவரை
  • செலுத்துதலின் - ஒறுத்தலினும்
பகைவரை வெல்லுவதைவிட தன்னை மேம்படுத்திக் கொள்வது சிறப்பானது.

10. முன் பெருகலின் பின் சிறுகாமை சிறந்தன்று.
  • முன் பெருகலின் - முன்பு பெருகிப் பின் அழிதலைக் காட்டிலும்
  • சிறுகாமை - நின்ற நிலையில் குறையாதிருத்தல்
     செல்வம் பெருகி அழிவதைவிட, பெருகாமல் நிலையாக இருத்தல் நன்று.

சொற்பொருள்:
  1.   ஆர்கலி – நிறைந்த ஓசையுடைய கடல்
  2.   காதல் – அன்பு, விருப்பம்
  3.   மேதை – அறிவு நுட்பம்
  4.   வண்மை – ஈகை, கொடை
  5.   பிணி – நோய்
  6.   மெய் – உடம்பு
ஆசிரியர் குறிப்பு:
  •   பெயர்: மதுரை கூடலூர் கிழார்
  •   பிறந்த ஊர்: கூடலூர்
  •   சிறப்பு: இவர் தம் பாடல்களை  நச்சினார்க்கினியர் முதலிய      நல்லுரையாசிரியர்கள் மேற்கோள்களாக கையாண்டுள்ளர்கள்.
  •   காலம்: சங்க காலத்திற்குப்பின் வாழ்ந்தவர்.
நூல் குறிப்பு:
  •   முதுமொழிக்காஞ்சி என்பது காஞ்சித்திணையின்  துறைகளுள் ஒன்று.
  •   இந்நூல் பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று.
  •   இந்நூலை அறவுரைக்கோவை எனவும் கூறுவர்
  •   இந்நூலில் பத்து அதிகாரங்களும்,  அதிகாரத்திற்கு பத்துச் செய்யுள் வீதம் நூறு   பாடல்களும் உள்ளன.



மாநில நிர்வாகம் - மாநில ஆளுநர்


* குடியரசுத் தலைவரைப் போன்று மாநிலத்தின் தலைவர் ஆளுநர் ஆவார்,

* மாநில ஆட்சி ஆளுநரின் பெயரிலேயே நடைபெறுகிறது.

* மாநில அமைச்சரவையின் ஆலோசனைப்படி எல்லா விதமான ஆட்சி அதிகாரங்களையும் ஆளுநர் செயல்படுத்துவார்.

* பொதுவாக ஒவ்வொரு மாநிலமும் ஒரு ஆளுநரைக் கொண்டிருக்க வேண்டுமென்றாலும், 7-வது அரசியலமைப்பு திருத்தச் சட்டம் 1956-ன்படி ஒரு ஆளுநர் ஒன்றுக்கு மேற்பட்ட மாநிலங்களுக்கும் ஆளுநராக நியமிக்கப்படலாம்.

* மாநில ஆளுநரை குடியரசுத் தலைவரே நியமிக்கிறார். இவரின் பதவிக்காலம் 5 ஆண்டுகள். எனினும் பதவிக்காலத்திற்கு முன்னரே பதவிலிருந்து குடியரசுத் தலைவரால் நீக்கப்படலாம்.

* குடியரசுத் தலைவர் விரும்புகிற வரையில் மட்டுமே ஆளுநர் பதவியில் இருப்பார்.

* குடியரசுத் தலைவரின் விருப்பத்தை நீதிமன்றங்களில் விசாரணைக்கு உட்படுத்த இயலாது.

* ஒன்றிய அரசின் பிரதிநிதியாகவே ஆளுநர் செயல்படுகிறார்.

* ஆளுநரின் 5 ஆண்டு பதவிக்காலம் முடிவுற்ற பின்னரும், அவரைத் தொடர்ந்து வேறு ஆளுநர் நியமிக்கப்படும் வரை, தொடர்ந்து பதவி வகிக்க கேட்டுக்கொள்ளப்படுவார்.

* ஆளுநரை ஒரு மாநிலத்தைவிட்டு மற்ற மாநிலத்திற்கு மாற்றுவதற்கும் குடியரசுத் தலைவருக்கு அதிகாரம் உள்ளது. ஆளுநர் மாத ஊதியமாக ரூ.1,10,000 பெறுகிறார்.

* ஆளுநரின் ஊதியம் அந்தந்த மாநிலத்தின் மாநில ஒருங்கிணைப்பு நிதியத்திலிருந்து வாக்கெடுப்பின்றியே வழங்கப்பட அரசியலமைப்பு வழி செய்துள்ளது.

* ஆளுநரின் அதிகாரப்பூர்வமான இருப்பிடம் இலவசமாக தரப்படுவதுடன், சட்டத்தின் மூலம் நிர்ணயிக்கப்படும் இதர படிகளும் அவருக்கு வழங்கப்படும்.

* ஒருவர் ஆளுநராக நியமிக்கப்பட வேண்டுமென்றால் அவர் இந்தியக் குடிமகனாகவும், 35 வயது நியம்பியவராகவும் இருக்க வேண்டுமென்று ஷரத்து 157 குறிப்பிடுகிறது.

* பாராளுமன்றம் அல்லது மாநில சட்டபேரவைகளில், ஆளுநர் உறுப்பினராக இருக்க இயலாது. அப்படி ஏதேனும் ஒர் உறுப்பினர் ஆளுநராக நியமிக்கப்பட்டால், அவர் ஆளுநராகப் பதவியேற்றுக் கொண்ட நாளிலிருந்து, அவரது சட்டபேரவை அல்லது பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கான இடம் காலியாகிவிட்டதாக கருதப்படும்.

* ஊதியம் பெறும் வேறு எந்தப் பதவியையும் ஆளுநர் வகிக்க இயலாது.

* அரசியலமைப்பு மாநில ஆளுநருக்கென்று சில சிறப்பு பாதுகாப்பு அம்சங்களை ஏற்படுத்தியுள்ளது.

* அதன்படி ஒரு மாநில ஆளுநர் தமது பதவிக்காலத்தில் பதவியின் காரணமாக மேற்கொண்ட எவ்வித செயல்பாடுகள் குறித்தும் நீதிமன்றத்தின் விசாரணைக்கு உட்படுத்தப்பட மாட்டார்.

* மேலும் அவரது பதவிக்காலத்தின்போது அவர் மீது எந்தவித குற்றவியல் நடவடிக்கைகளையும் மேற்கொள்ள இயலாது.

* அது போலவே அவரது பதவிக்காலத்தில் அவர் கைது நடவடிக்கைகளை மேற்கொள்வதிலிருந்தும் விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளார்.

* உரிமையியல் நடவடிக்கைகளை ஆளுநர் மீது மேற்கொள்வதாக இருப்பின் அது குறித்த விவரங்களை 2 மாதங்களுக்கு முன்பாக ஆளுநருக்கு அறிவித்தல் வேண்டும்.



ஆளுநரின் அதிகாரங்கள் - பணிகள்:

ஆட்சித்துறை அதிகாரங்கள் - Executive Powers


* மாநிலத்தின் நிர்வாக அதிகாரம் ஆளுநரின் அதிகாரம் ஆளுநரின் கையிலேயே உள்ளது. அந்த அதிகாரங்களை அரசியலமைப்பில் சொல்லப்பட்டுள்ளது. அவரே நேரிடையாகவோ, தமக்குக் கீழுள்ள அதிகாரிகள் மூலமாகவோ செயல்படுத்த வேண்டும்.

* மாநிலத்தின் நிர்வாக அதிகாரம் என்பது அதன் சட்டமியற்றும் அதிகாரத்துடன் சேர்ந்தே காணப்படும்.

* பொதுப்பட்டியலில் உள்ள விசயங்களைப் பொறுத்தவரையில் அரசியல் சட்டத்தின்படி அல்லது வேறு ஏதேனும் சட்டத்தின்படி ஒன்றியத்திற்கு அளிக்கப்பட்டுள்ள அதிகாரத்திற்கு உட்பட்டதே மாநில நிர்வாகத்தின் அதிகாரம் எனப்படும்.

* மாநிலத்தின் அனைத்து நிர்வாகச் செயல்களும் ஆளுநரின் பெயராலேயே மேற்கொள்ளப்படும்.

* ஜார்க்கண்ட, மத்திய பிரதேசம் மற்றும் ஒரிசா ஆகிய மாநிலங்களில் பழங்குடி மக்களின் நலனுக்காக தனி அமைச்சகத்தை ஏற்படுத்துவதும் ஆளுநரின் கடமையாகும்.

* மாநிலத்தின் முதல்வரையும், அவரது ஆலோசனையின்படி பிற அமைச்சர்களையும், மாநில ஆளுநரே நியமனம் செய்கிறார்.

* அமைச்சர்கள் அனைவரும் ஆளுநர் விரும்பும் வரை பதவியில் நீடிப்பார்கள்.

* ஆனால் அமைச்சரவை மாநில சட்டப்பேரவைக்குக் கூட்டுப் பொறுப்புடையதாக உள்ளது.

* அதாவது சட்டப்பேரவையின் பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவைப்பெற்றவரே முதல்வராக நியமிக்கப்பட வேண்டும் என்றும், மாநில சட்டப்பேரவையின் நம்பிக்கையைப் பெற்றிருக்கும் வரை மட்டுமே அமைச்சரவை பதவியில் நீடிக்க இயலும் என்றும் இதற்குப் பொருள்படும்.

* மாநிலத்தின் நிர்வாகப் பணிகளை எளிதாக மேற்கொள்ளவும், அமைச்ர்களிடையே பொறுப்புக்களை ஒதுக்கீடு செய்யவும், தேவையான விதிகளை ஆளுநர் உருவாக்கலாம்.

* மாநில அட்வகேட் ஜெனரல், மாநில அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தலைவர் மற்றும் உறுப்பினர்கள், சார்நிலை நீதிமன்றங்களின் நீதிபதிகள், மாவட்ட நீதிபதிகள் ஆகி்யோரையும் ஆளுநரே நியமனம் செய்கிறார்.

* மாநிலத்தில் சட்டமன்ற மேலவை இருப்பின், அதன் உறுப்பினர்களில் ஆறில் ஒரு பங்கினரை, இல்க்கியம், கலை, அறிவியல், கூட்டுறவு இயக்கம், சமூக சேவை போன்ற துறைகளின் சிறப்பறிவும், பழுத்த அனுபவமும் வாய்ந்தவர்களில் இருந்து ஆளுநர் நியமிக்க வேண்டும்.

* ஆங்கிலோ-இந்திய சமூகத்தினருக்கு சட்டப்பேரவையில் போதிய பிரதிநிதித்துவம் இல்லையென்றும், அதற்குப் பிரதிநிதித்துவம் தேவையென்று ஆளுநர் கருதினால், அந்தச் சமூகத்தில் இருந்து ஒருவரை பேரவைக்கு ஆளுநர் நியமனம் செய்யலாம் என ஷரத்து 333 கூறுகிறது.



ஆளுநரின் சட்டத்துறை அதிகாரங்கள்:

* மாநிலச் சட்டப்பேரவையின் ஒரு ்ங்கமாகவே ஆளுநர் திகழ்கிறார். சட்டப்பேரவையின் இரு அவைகளையும்(பேரவை,மேலவை என இரு அவைகள் உள்ள மாநிலங்களில்) கூடுமாறு ஆணையிடுவதும், கூட்டத் தொடரை முடித்து வைப்பதும் ஆளுநரே ஆவார்.

* அவர் நினைத்தால் பேரவையைக் கலைத்து விட முடியும். மாநில சட்டப்பேரவை உறுப்பினர்களிடையே அவர் உரையாற்றுவதுடன், சட்டப்பபேரவைக்கு செய்திகளையும் அனுப்ப ஆளுநர் அதிகாரம் பெற்றுள்ளார்.

* பொதுத் தேர்தல் முடிந்தபின் நடைபெறும் முதல் கூடட்த்தில் ஆளுநர் உரையாற்றுகிறார்.

* அதே போன்று ஒவ்வொரு ஆண்டும் நடைபெறுகின்ற முதல் சட்டப்பேரவை கூட்டத்திலும் ஆளுநரே உரையாற்றுவார்.

* தேவைப்படும்போது இரு அவைகளையும் ஒன்றாகவோ, தனித்தனியாகவோ கூட்டி உரை நிகழ்த்தவும் ஆளுநர் அதிகாரம் பெற்றுள்ளார்.

* சட்டப்பேரவையின் இரு அவைகளிலும் ஒரு மசோதா நிறைவேற்றப்பட்டாலும், ஆளுநரின் ஒப்புதலின்றி அது சட்டமாகாது என ஷரத்து 200 கூறுகிறது.

* அவையில் ஒரு மசோதாவை நிறைவேற்றிய பின்னர், அதற்கு ஒப்புதல் அளிக்கலாம் என்ற அமைச்சரவையின் ஆலோசனையுடன், அம்மசோதா ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்படும்.

* அம்மசோதாவுக்கு ஆளுநர் தமது ஒப்புதலை அளிக்கலாம்.

* ஒப்புதல் அளிக்காமல் நிறுத்தி வைக்கலாம்.

* குடியரசுத் தலைவரின் பரிசீலனைக்காக அதனை அனுப்பி வைக்கலாம்.

* பண மசோதாவைத் தவிர வேறு மசோதாவாக இருப்பின், ஆளுநர் தம்து குருத்தையும் கூறி, அந்த மசோதாவைப் பரிசீலனை செய்யுமாறு அமைச்சரவைக்குத் திருப்பி அனுப்பலாம்.

* மசோதாவைப் பற்றிச் சில தகவல்கள், விவரங்கள் தேவையெனக் கேட்டு, மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கிற ஆலோசனையை மறுபரிசீலனை செய்யுமாறு அமைச்சரவைக்குத் திருப்பி அனுப்பலாம்.

* ஆளுநர் தமது கருத்தைக் கூறி ஒரு மசோதாவை சட்டப்பேரவைக்குத் திருப்பி அனுப்பினால், அவருடைய கருத்தின்படி அந்த மசோதா பரிசீலிக்கப்பட்டு திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டோ, அல்லது திருத்தங்கள் மேற்கொள்ளப்படாமலோ மீண்டும் நிறைவேற்றப்பட்டால், ஆளுநர் அதற்கு ஒப்புதல் அளித்தாக வேண்டும்.

* சட்டப்பேரவையின் சூட்டத்தொடர், அல்லது மேலைவை இருந்தால் இரு அவைகளின் கூட்டத்தொடர், நடைபெறாத காலத்தில், ஷரத்து 213-ன்படி ஆளுநர் அவசரச் சட்டங்களைப் பிறப்பிக்கலாம்.

* சட்டப்பேரவை இயற்றி, ஆளுநர் ஒப்புதல் அளித்த சட்டங்களைப் போலவே, அவசரச் சட்டங்களும் செயல் வீச்சுயுடையவை.

* எனினும், சட்டப்பேரவையில் இயற்றப்படும் சட்டங்களுக்கு உள்ள அதே கட்டுப்பாடுகள் அவசரச் சட்டங்களும் உள்ளன.

* எனவே ஒரு மசோதாவை அறிமுகப்படுத்துவதற்கு முன்பு குடியரசுத் தலைவரின் முன் ஒப்புதல் பெற வேண்டியிருப்பினும்

* ஒரு மசோதாவின் உள்ளடக்கத்தைப் பொறுத்து அதனைக் குடியரசுத் தலைவரின் பரிசீலினைக்காக ஆளுநர் அனுப்ப வேண்டியிருப்பினும்

குடியரசுத் தலைவரின் ஒப்புதல் இல்லாமல் செல்லுபடியாகாமல் போய்விடக்கூடியதாக அம்மசோதா இருந்தாலும் இம்மூன்று இனங்களிலும், குடியரசுத் தலைவரின் உத்தரவின்றி, ஆளுநர் அவசரச் சட்டத்தைப் பிறப்பிக்க இயலாது. ஆளுநர் பிறப்பிக்கும் அவசரச் சட்டங்கள் சட்டப்பேரவை முன் (மேலவை இருப்பின் இரு அவைகளின் முன் வைக்கப்பட வேண்டும்)

* சட்டப்பேரவை மாண்டும் கூடியதும் 6 வாரங்களுக்குப் பின்னர் அவசரச் சட்டம் செயலிழந்து விடும்.

* அதற்கு முன்னரே அதனை நிராகரிக்கும் தீர்மானத்தை சட்டப்பேரவை நிறைவேற்றினால் அப்போதே அவசரச் சட்டம் செயலற்றுப் போய்விடும். அவசரச் சட்டத்தை எந்த நேரத்தில் மேண்டுமானாலும் ஆளுநர் திரும்பப் பெற்றுக் கொள்ளலாம்.
** ஆளுநரின் நிதித்துறை அதிகாரங்கள்

* எந்த ஒரு பண மசோதாவும், நிதி மசோதாவும் ஆளுநரின் பரிந்துரையின்றி சட்டப்பேரவையில் அறிமுகப்படுத்தப்பட இயலாது. பட்டஜெட் அல்லது ஆண்டு நிதிநிலை

அறிக்கைகளை மாநில சட்டப்பேரவை அல்லது ்வைகளின் முன் ஆளுநர் தாக்கல் செய்ய வேண்டும்.

* இது அவரது தலையாய கடமையாகும். மானியக் கோரிக்கைகளையும் ஆளுநரின் பரிந்துரை இல்லாமல் தாக்கல் செய்ய இயலாது.

* மானியக் கோரிக்கைகள் சம்மந்தமான திருத்தங்களுக்குக் கூட ஆளுநரின் பரிந்துரை அவசியமாகிறது.

** ஆளுநரின் மன்னிப்பளிக்கும் அதிகாரங்கள்

* குடியரசுத் தலைவருக்கு இருப்பதுபோல தண்டனைகளை செயல்படுத்துவதை நிறுத்தி வைக்கவோ, தண்டனை அளவைக் குறைக்கவோ, குற்றவாளியை மன்னித்துத்

தண்டனையை முற்றிலுமாக நீக்கிவிடவோ ஆளுநருக்கு அதிகாரம் உள்ளது.

* மரண தண்டனையை இரத்து செய்யும் அதிகாரம் மாநில ஆளுநருக்கு இல்லை. மரண தண்டனையை இரத்து செய்யும் அதிகாரம் தவிர பிற அதிகாரங்கள் மாநில ஆளுநருக்கும் வழங்கப்பட்டுள்ளது.

ஆளுநரின் நிலை

* ஆளுநரின் நிலை பற்றிக் கருத்து வேறுபாடுகள் நிலவுகின்றன. இவரது அலுவலகம் மாநில அமைச்சரவைக்கும் குடியரசுத் தலைவருக்கும் இடையே உள்ள அஞ்சல்

நிலையம் என்றும் கூறுவார்கள்.

* இவர் மாநில ஆட்சித் துறையில் ஒரு சிறந்த அங்கமாக விளங்குகிறார். அமைச்சரவையின் ஆலோசனைப்படி இயங்க வேண்டும் என்றிருந்தாலும், சட்டப்பேரவையில் எந்த

ஒரு கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத போது தன்னுடைய சிறப்பு அதிகாரத்தை முதல் அமைச்சரைத் தேர்ந்தெடுக்கும்போது பயன்படுத்துவார்.

* நெருக்கடிக் காலங்களின்போது குடியரசுத் தலைவரின் பிரதிநிதியாகக் செயல்படுவார்.

மாநில அமைச்சரவை

* மாநில ஆட்சிக்குழு ஆளுநரின் தலைமையில் விடப்பட்டிருந்தாலும், அவர் அமைச்சரவையின் ஆலோசனையின் பேரில் தான் இயங்க வேண்டும்.

* பொதுத் தேர்தலுக்குப் பின்னர் ஆளுநர் சட்டப்பேரவையின் பெரும்பான்மை பெற்ற கட்சியின் தலைவரை அழைத்து முதல்வராக இருக்கக் கேட்டுக்கொள்வார்.

* பிற அமைச்சர்களை முதல்வர் மற்ற அமைச்சர்களின் பட்டியலைத் தயாரித்து ஆளுநரிடம் சமர்ப்பிப்பார். அதனை அப்படியே ஆளுநர் ஏற்றுக்கொள்வார்.

* சட்டப்பேரவையின் உறுப்பினர் அல்லாதவரையும் அமைச்சராக நியமிக்கலாம். ஆனால் ஆறு மாத காலத்திற்குள் அவர் ஏதேனும் ஒரு சபையில் உறுப்பினராக வேண்டும்.

* எத்தனை அமைச்சர்கள் இருக்க வேண்டும் என்பதற்கு வரையறை இல்லை.

* எனினும் தற்போது இந்த வரையறை சட்டப்பேரவையின் மொத்த உறுப்பினர்களில் 15 சதவீதம் வரை இருக்கலாம் என வரையறுக்கப்பட்டுள்ளது.

* அமைச்சர்களின் எண்ணிக்கையை தேவைப்படும்போது கூட்டவோ, குறைக்கவோ செயயலாம்.

* மாநில அளவிலும் மூன்று விதமான அமைச்சர்கள் உள்ளனர். அவை: 1. கேபினட் அமைச்சர்கள் 2. மாநிலத்துறை அமைச்சர்கள் 3. துணை அமைச்சர்கள் ஆகியோர்.

* அமைச்சர்களாக நியமனம் செய்யப்பட்ட பின்னர் அவர்கள் ஆளுநரிடம் உறுதிமொழி எடுத்துக்கொண்டு பதவி ஏற்பர்.



 அட்வகேட் ஜெனரல்

* மாநிலத்தின் தலைமை வழக்கறிஞரே அம்மாநிலத்தின், முதல் சட்ட அலுவலராவார்.

* இவர் ஒன்றியத்தில் அமைந்துள்ள அட்டர்னி-ஜெனரல் போலவே மாநில அளவில் செயல்படுகிறார்.

* அட்வகேட்-ஜெனரல், மாநில ஆளுநரால் நியமிக்கப்பட்டு, அவரது விருப்பம் உள்ளவரை பதவியில் நீடித்திருப்பார்.

* உயர்நீதிமன்ற நீதிபதியாவதற்கு தகுதி பெற்ற நபர்களையே அட்வகேட் ஜெனரலாக ஆளுநர் நியமிக்க வேண்டும்.

* இவர் Art.177-ன் படி சட்டமன்றத்தின் நடவடிக்கைகளில் பங்கேற்பதற்கும், உரை நிகழ்த்துவதற்கும் உரிமை பெற்றுள்ளார். ஆனால் வாக்களிப்பதற்கு உரிமை இல்லை.



மாநில சட்டப்பேரவை - The State Legislature

* ஆளுநரும் சட்டப்பேரவையும் சேர்ந்துதான் மாநில சட்டப்பேரவையாகும்.

* சில மாநிலங்களில் பேரவை (Legislative Assembly), மேலவை (Legislative Council) என இரண்டு அவைகள் இருக்கும்போது மேலவையும் சட்டப்பேரவையின் அங்கமாகும்.

* தற்போது பீகார், உத்திரப்பிரதேசம், மகாராஷ்டிரம், கர்நாடகா, ஜம்மு மற்றும் காஷ்மீர் ஆகிய 5 மாநிலங்களில் மட்டுமே மேலவைகள் உள்ளன.

* மேலவை இருக்கின்ற இடங்களில் அதனை நீக்கிவிடலாம் என்றோ, மேலவை இல்லாத இடங்களில் அதனை உருவாக்க வேண்டுமென்றோ சட்டப்பேரவை தீர்மானம் இயற்றி, பாராளுமன்றத்திற்குப் பரிந்துரைக்கலாம்.

* ஒரு மாநில சட்டப்பேரவையில் 500-க்கு மிகாமலும், 60-க்குக் குறையாமலும் மாநிலத்தின் தொகுதிகளில் இருந்து நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் இருக்க வேண்டும்.

* பேரவை உறுப்பினர்களின் எண்ணிக்கையில் மூன்றில் ஒரு பங்கிற்குக் குறையாமலும், குறைந்தபட்சம் 40 உறுப்பினர்களைக் கொண்டதாகவும், அம்மாநிலத்தின் மேலவை அமைய வேண்டும்.

* மேலவை உறுப்பினர்களின் மொத்த எண்ணிக்கையில் நகராட்சிகள், மாவட்ட வாரியங்கள், ஏனைய உள்ளாட்சி அமைப்புகள் போன்றவற்றில் இருந்து மூன்றில் ஒரு

பங்கினரும், ஆசிரியர்கள் தொகுதியில் இருந்து 12-ல் ஒரு பகுதியினரும் சட்டப்பேரவை உறுப்பினர்களால் மூன்றில் ஒரு பங்கினரும் தேர்ந்தெடுக்கப்படுவர்.

* எஞ்சிய 6-ல் ஒரு பங்கினரை ஆளுநர் நியமிப்பார். மேலவைத் தேர்தல் விகிதாச்சார பிரதிநிதித்துவப்படி, ஒற்றை மாற்று வாக்கெடுப்பு மூலம் நடைபெற வேண்டும்.

* சட்டப்பேரவையின் பதவிக்காலம் ஐந்தாண்டுகளாகும். மேலவை கலைக்க முடியாத, தொடர்ந்து நீடிக்கும் அவையாக விளங்கும். எனினும் மேலவையின் மூன்றில் ஒரு

பங்கு உறுப்பினர்கள் ஒவ்வொரு இரண்டாண்டு முடிவிலும் பதவி விலகுவார்கள்.

* மாநில சட்டப்பேரவையின் உறுப்பினராவதற்கு 25 வயது நிரம்பிய இந்தியக் குடிமகனாக இருத்தல் வேண்டும்.

* மேலவையில் உறுப்பினராக வேண்டுமானால் 30 வயது நிரம்பிய இந்தியக் குடிமகனாக இருத்தல் வேண்டும்.

* மாநிலப் பட்டியலில் உள்ள விஷயங்கள் குறித்துச் சட்டமியற்றும் அதிகாரம் மாநில சட்டப்பேரவைக்கு உண்டு.

* பொதுப்பட்டியலில் உள்ள விஷயங்களில் பாராளுமன்றமும், மாநில சட்டப்பேரவையும் சட்டங்களை இயற்றலாம்.

* மாநில மேலவையின் நிலை, நாடாளுமன்ற மாநிலங்களவையின் நிலையைப் போன்றதே ஆகும்.

* அவையின் சிறப்புரிமைகள், உறுப்பினர்களின் தகுதியிழப்பு, இரண்டு அவைகளுக்கும் இடையேயான உறவு, அவை நடவடிக்கைகள், பண மசோதா அறிமுகம் போன்ற விஷயங்கள் அனைத்திற்கும் இது பொருந்தும்.

* ஆங்கிலோ-இந்திய சமூகத்தினரின் பிரதிநிதித்துவம் சட்டப்பேரவையில் இல்லாதிருக்கும்போது, ஆளுநர் ஒரு ஆங்கிலோ-இந்திய உறுப்பினரை நியமன உறுப்பினராக நியமிக்கலாம்.

* மாநில சட்டப்பேரவைக்கு சபாநாயகர் ஒருவரும், துணை சபாநாயகர் ஒருவரும் அவை உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்படுவர்.

* மக்களவை சபாநாயகர், துணை சபாநாயகர் போலவே இவர்களின் செயல்பாடுகள் இருக்கும்.

* மேலவைத் தலைவரும், மேலவை துணைத்தலைவரும் மேலவை உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்படுவர்.

* சட்டப்பேரவையின் பதவிக்காலம் இயல்பாக 5 ஆண்டுகள். எனினும் ஆளுநரால் பதவிக்காலம் முடிவதற்கு முன்பாகவே கலைக்கப்படலாம்.

* 1976-ம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட 420வது சட்டத்திருத்தம் சட்டப்பேரவையின் பதவிக்காலத்தை 5 ஆண்டுகளிலிருந்து 6 ஆண்டுகளாக உயர்த்தியது.

* எனினு ம் 44-வது திருத்த சட்டம் மீண்டும் 5 ஆண்டுகளாக மாற்றம் செய்தது.

* மேலும் தேசிய நெருக்கடிநிலை பிரகடனப்படுத்தப்பட்டிருக்கும்போது, மாநில சட்டப்பேரவையின் பதவிக்காலத்தை, பாராளுமன்றம் நீட்டிக்க இயலும்.

* எனினும் நெருக்கடி நிலை முடிவுக்குக் கொண்டுவரப்பட்ட பின்னர், 6 மாதங்களுக்குள் சட்டப்பேரவையின் பதவிக்கால நீட்டிப்பு முடிவுக்குக் கொண்டு வரப்பட வேண்டும்.

** மாநில சட்டப்பேரவையின் உறுப்பினராவதற்கான தகுதிகள்:

* . இந்திய குடிமகனாக இருத்தல் வேண்டும்.

* . மாநில சட்டப்பேரவைக்குத் தேர்ந்தெடுக்கப்படுபவராக இருப்பின் 25 வயதும், மாநில சட்ட மேலவைக்குத் தேர்ந்தெடுக்கப்படுவராக இருப்பின், 30 வயதும் நிரம்பியிருத்தல் வேண்டும்.

* . பாராளுமன்றம் அவ்வப்போது சட்டத்தின் மூலம் விதிக்கக்கூடிய பிற தகுதிகளையும் பெற்றிருத்தல் வேண்டும்.



உறுப்பினர் தகுதிக் குறைபாடுகள்

* மைய அரசிடம்  அல்லது மாநில அரசின் ஊதியம் தரும் பதவிகள் எதையும் வகித்தல் கூடாது.

* மனநிலை தவறியவராக இருத்தல் கூடாது. கடன் தீர்க்க இயலாதவராக அறிவிக்கப் பட்டிருக்கக்கூடாது.

* இந்தியக் குடிமகனாக இல்லாதிருத்தலோ, அல்லது பிற நாட்டுக் குடியுரிமையைப் பெற்றவராகவோ இருத்தல் கூடாது.

* பாராளுமன்றத்தின் ஏதேனும் பிற சட்டத்தினால் தகுதியற்றவராக அறிவிக்கப்பட்டிருக்கக் கூடாது.

* மாநில சட்டப்பேரவை உறுப்பினரின் தகுதி குறித்த விஷயங்களில் சபையின் தலைவர், மாநில ஆளுநருக்குத் தெரிவித்து அவரது முடிவைப் பெற்று அதன்படி நடக்க

வேண்டும்.

* இந்த விஷயத்தில் ஆளுநரின் முடிவே இறுதியானது. எனினும் ஆளுநர் இது குறித்த விஷயங்களில் தேர்தல் ஆணையத்தின் கருத்தைப் பெறுவது அவசியமாகும்.



மாநில சட்டமியற்றும் முறை

* ஒரு சபை முறை கொண்ட மாநிலங்களில் சட்டமியற்றும் முறையில் ஏதும் சிக்கல் இல்லை.

* ஏனெனில் அனைத்து மசோதாக்களும், சட்டப்பேரவையில் அறிமுகப்படுத்தப்பட்டு, விவாதத்திற்குப் பின், நிறைவேற்றப்பட்டால், ஆளுநருக்கு அனுப்ப்படும். ஆளுநரின் ஒப்புதலைப் பெற்ற பிறகு அது சட்டமாகும்.

* ஆனால் இரு டபை முறை உள்ள மாநிலங்களாக இருப்பின் அங்கு சட்டமியற்றும் முறை, சற்றே மாறுபடுகிறது.

* பாராளுமன்றத்தில் சட்டமியற்ரும் முறைக்கும், மாநில சட்டப்பேரவையில் சட்டமியற்றும் முறைக்கு சிறிதே வேறுபாடு காணப்படுகிறது.

* மாநில சட்ட மேலவையில் அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு மசோதா, மாநில சட்டப்பேரவையால் நிராகரிக்கப்பட்டால், அந்த மசோதா முற்றிலும் முடிவுக்குக் கொண்டு வரப்படும்.

* பண மசோதாவைப் பொறுத்தவரை பாராளுமன்றத்தில் பின்பற்றும் வழிமுறைகளைப் போலவே, மாநில சட்டப்பேரவையிலும் பின்பற்றப்படும்.

* நிதி மற்றும் சாதாரண மசோதாக்களைப் பொறுத்தவரை மாநில சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட பின்ற் சட்டவேலவைக்கு அனுப்பப்பட்டால், சட்ட மேலவை அந்த மசோதவை முற்றிலும் நிராகரிக்கலாம்

* மசோதாவில் திருத்தங்கள் புகுத்தலாம்

* மூன்று மாதங்கள் வரை எந்தவித பதிலும் தராமல் வைத்திருக்கலாம்.

* இவற்றில் எந்த வழியைப் பின்பற்றினாலும், சட்டப்பேரவை மீண்டும் அந்த மசோதாவை நிறைவேற்றி, இரண்டாவது முறையாக, சட்ட மேலவைக்கு அனுப்பினால், மீண்டும் 1 மாத காலம் வரை மேலைவை தாமதப் படுத்த இயலும்.

* அதற்கு மேலும் முடிவெடுக்காமல் வைத்திருந்தால், அந்த மசோதா நிறைவேறியதாகக் கருதப்படும்.

* அதன் பின்னர் ஆளுநருக்கு அனுப்பப்படும் சட்டமேலவையைப் பொறுத்தவரை சம அதிகாரத்தைப் பெற்றிருக்கவில்லை.

* பணமசோதா தவிர பிற மசோதாக்களை அதிகபட்சம் 4 மாதங்கள் வரை காலதாமதம் செய்வது மட்டுமே சட்டமேலவையால் செய்ய முடிந்த ஒன்றாகும்.

* மாநிலங்களில் மசோதா மீது கருத்து வேறுபாடு ஏற்பட்டால், அதைத் தீர்த்துக்கொள்வதற்கு கூட்டுக் கூட்டம் கூட்டும் முறை ஏதும் நடைமுறையில் இல்லை.


* மாநிலங்களில் இரு அவைகளும் ஆளுநர் உரையாற்றும்போதும், ஒவ்வொரு ஆண்டின் முதல் கூட்டத்தொடரில் ஆளுநரின் பேருரையின்போதும் மட்டுமே கூட்டுக் கூட்டமாக கூடுவர். இது தவிர பிற காரணங்களுக்காக கூட்டுக் கூட்டம் கூட்டப் படுவதில்லை.

நன்றி - தினமணி

15 September, 2014

இந்திய உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்றங்கள் - 2



உயர்நீதிமன்றங்கள் - High Courts

* Art.214ன் படி ஒவ்வொரு மாநிலத்திலும் ஒரு உயர்நீதிமன்றம் இருத்தல் வேண்டும்.

* எனினும் Art.231-ன் படி இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட மாநிலங்களுக்கு பொதுவான உயர்நீதிமன்றத்தைத் தோற்றுவிக்கவும் பாராளுமன்றம் அதிகாரம் பெற்றுள்ளது.

* மாநில நீதித்துறையின் தலைமை அமைப்பாக உயர்நீதிமன்றம் திகழ்கிறது. இந்தியாவின் 28 மாநிலங்கள் மற்றும் 7 யூனியன் பிரதேசங்களுக்கென்று, 21 உயர்நீதிமன்றங்கள் இந்தியாவில் செயல்படுகின்றன.

* கொல்கத்தா, பம்பாய் மற்றும் சென்னை உயர்நீதிமன்றங்கள் 1862-ம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்டன. 2004-ல் தமிழகத்தின் மதுரையில் உயர்நீதிமன்றத்தின் கிளை தோற்றுவிக்கப்பட்டது.

* 11வது நீதிக்குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் விரைவு நீதிமன்றங்கள் 01.04.2001 முதல் தொடங்கப்பட்டன.

* மாநில சட்ட உதவி ஆணையத்தின் உதவியுடன் ஒவ்வொரு மாவட்டத் தலைநகரிலும் லோக் அதாலத் தொடங்கப்பட்டுள்ளது.

* உயர்நீதிமன்ற நீதிபதிகள் நியமனம் - Appointment of Judges

* ஒவ்வொரு உயர்நீதிமன்றமும் ஒரு தலைமை நீதிபதிகளையும், குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படுகிற எண்ணிக்கையில் பிற நீதிபதிகளையும் கொண்டு செயல்படும்.

* உச்சநீதிமன்றத்தைப் போலன்றி, உயர்நீதிமன்றங்களின் நீதிபதிகளின் எண்ணிக்கையை அரசியலமைப்பு வரையறுக்கவில்லை, மாறாக அந்த அதிகாரத்தை குடியரசுத் தலைவருக்கு வழங்கியுள்ளது.

* உயர்நீதிமன்ற நீதிபதிகளை நியமிக்கும் அதிகாரம் மட்டுமின்றி குடியரசுத் தலைவருக்கு கீழ்காணும் பிற அதிகாரங்களும் வழங்கப்பட்டுள்ளன. அவை:

* நிலுவையில் உள்ள வழக்குகளை தீர்ப்பதற்கென்று, கூடுதல் நீதிபதிகளை நியமிக்கும் 2 ஆண்டுகளுக்கு மிகாமல், குடியரசுத் தலைவர் நியமிக்கலாம்.

* உயர்நீதிமன்ற நீதிபதி இல்லாத போதோ அல்லது பணியாற்ற இயலாத சூழ்நிலையிலோ (உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தவிர) அக்குறிப்பிட்ட காலத்திற்கு தற்காலிக நீதிபதிகளை நியமிக்கலாம்.

* அவ்வாறு நியமிக்கப்படும் நீதிபதி, நிரந்தரமாக நியமிக்கப்பட்ட நீதிபதி பணியேற்கும் வரை பதவில் இருப்பார்.

* எனினும் கூடுதல் நீதிபதியாக இருப்பினும், தற்காலிக நீதிபதியாக இருப்பினும் 62 வயது வரை மட்டுமே பணியாற்ற இயலும்.

* உயர்நீதிமன்ற பிற நீதிபதிகளை நியமிக்கும்போது, இந்திய தலைமை நீதிபதி, அந்த மாநில ஆளுநர் மற்றும் மாநில உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஆகியோரை ஆலோசித்த பின்னரே குடியரசுத் தலைவர் செயல்படுவார்.

* உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்ட பின்னர் அவர் தமது 62 வயது வரை பதவி வகிக்கலாம். உயர்நீதிமன்ற நீதிபதியின் வயது குறித்து எழும் பிரச்சனைகளில், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியுடன் ஆலோசித்து குடியரசுத் தலைவர் முடிவெடுப்பார்.

 உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்படுவதற்கான தகுதிகள்:

1. இந்தியக் குடிமகனாக இருத்தல் வேண்டும்.

2. இந்திய நீதித் துறையில் குறைந்தபட்சம் பத்தாண்டுகள் பணியாற்றியிருக்க வேண்டும்.

3. ஒரு உயர்நீதிமன்றத்திலோ அல்லது அதற்கு மேற்பட்ட உயர்நீதிமன்றங்களிலோ தொடர்ந்து பத்தாண்டுகள் வழக்கறிஞராக பணியாற்றி இருத்தல் வேண்டும்.

 உயர்நீதிமன்ற நீதிபதிகளின் தனித்தியங்கு தன்மை:

* உயர்நீதிமன்ற நீதிபதிகள் தன்னிச்சையாக (Independency) செயல்படுவதற்கென கீழ்வரும் செயல்பாடுகளை அரசியலமைப்பு செயல்படுத்துகிறது.

* ஒருமுறை நீதிபதியாக நியமிக்கப்பட்டுவிட்டால், அவர் திறமையின்மை, தவறான நடத்தை ஆகிய காரணங்களுக்காக மட்டும் பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் தனித்தனியே மூன்றில் இரு பங்கு உறுப்பினர்களின் பெரும்பான்மை ஆதரவுடன் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் மூலமாக மட்டுமே, குடியரசுத் தலைவரால் பதவி நீக்கம் செய்யப்பட வேண்டும்.

* உயர்நீதிமன்ற நீதிபதியாக பதவி வகித்த பின்னர், தமது ஒய்வுக் காலத்திற்குப் பிறகு அதே உயரிநீதிமன்றம் தவிர பிற உயர்நீதிமன்றங்களிலும், உச்சநீதிமன்றத்திலும் மட்டுமே அவர் வழக்கறிஞராகப் பணியாற்ற இயலும்.

* எனினும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியால் கூடுதல் நீதிபதியாக நியமிக்கப்படுவதை இந்த விதி தடை செய்யாது.

* உயர்நீதிமன்ற நீதிபதிகளின் சம்பளம் மற்றும் இதர படிகள் அனைத்தும் அந்தந்த மாநில தொகுப்பு நிதியத்தின் (Consolidated Fund of State)  செலவினங்களிலிருந்து அளிக்கப்படுவதால், அம்மாநில சட்டப்பேரவையின் வாக்கெடுப்பு தேவையில்லை.

* மேலும் உயர்நீதிமன்ற நீதிபதிகளின் சம்பளம் மற்றும் இதர படிகள் அனைத்தும், நிதி நெருக்கடி நிலை (Financial Emergency) தவிர பிற சமயங்களில் குறைக்கப்பட் இயலாது.

* உயர்நீதிமன்ற நீதிபதியின் நடத்தை மற்றும் செயல்பாடுகளை பாராளுமன்றத்தின் , குற்ற விசாரணை தீர்மானம் கொண்டுவரும் நேரம் தவிர பிற சமயங்களில் விமர்சிக்க இயலாது.

* உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியின் ஆலோசனையைப் பெற்ற பின்னர், ஒரு உயர்நீதிமன்றங்களுக்கு மாற்றுவதற்கு குடியரசுத் தலைவர் Art.222 அதிகாரம் வழங்குகிறது.

* எனினும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியின் ஆலோசனை பின்பற்றப்பட வேண்டும்.

* அரசிலமைப்பின் பாதுகாவலன் - உச்சநீதிமன்றம்

* அடிப்படை உரிமைகளின் பாதுகாவலன் - உச்சநீதிமன்றம்

* உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஒய்வு பெறும் வயது - 65

* உச்சநீதிமன்ற கூடுதல் நீதிபதிகளின் பதவிக்காலம் - 2 ஆண்டுகள்

* உச்சநீதிமன்ற நீதிபதிகள் பதவி நீக்கப்படும் முறை - குற்ற விசாரணை முறை

* குற்ற விசாரணை முறை புகுத்தப்பட்ட ஒரே நபர் - ஆர்.ராமசாமி(1991-93ல்)

* உச்சநீதிமன்ற நீதிபதிகளின் சம்பளம் எதிலிருந்து வழங்கப்படுகிறது - இந்திய தொகுப்பு நிதியம் (இந்திய ஒருங்கிணைப்பு நிதியிலிருந்து)

* உச்சநீதிமன்றத்தின் இணையதளம் - supremecourtofindia.nic.in

* நீதிப்புனராய்வு செய்யும் உச்ச அதிகாரம் கொண்ட அமைப்பு - உச்சநீதிமன்றம்

* அடிப்படை உரிமைகளை நிறைவேற்ற உச்சநீதிமன்றம் எதைப் பிறப்பிக்கும் அதிகாரம் பெற்றுள்ளது - நீதிப்பேராணைகள்

* தற்போது உச்சநீதிமன்றத்தின் அதிகபட்ச நீதிபதிகளின் எண்ணிக்கை - 30 + 1

* உச்சநீதிமன்றத்தின் நீதிபதிகளின் எண்ணிக்கை - 1950ல் - 8, 1956ல் - 11, 1960ல் -14, 1978ல் - 18, 1986ல் - 26, 2008ல் - 31

* உண்மையான அரசியலமைப்பின்படி உச்சநீதிமன்றத்தில் ஒரு தலைமை நீதிபதியும், பிற 7 நீதிபதிகளும் இடம் பெற்றிருந்தனர்.

* பாராளுமன்றத்தில் சட்டம் இயற்றுவதன் மூலம் உச்சநீதிமன்ற நீதிபதிகளை மேலும் நியமிக்க அரசியயமைப்பு வழி செய்துள்ளது.

* இந்த அதிகாரத்தின் அடிப்படையில் பாராளுமன்றம், தற்போதைய உச்சநீதிமன்றத்தில் ஒரு தலைமை நீதிபதியும் மற்றும் பிற 30 நீதிபதிகளும் இடம்பெற சட்டமியற்றியுள்ளது. (Art.124)

* உச்சநீதிமன்ற நீதிபதிகள் அனைவரும் குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படுகின்றனர்.

* குடியரசுத் தலைவர் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியை நியமிக்கும்போது, உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியை கலந்தாலோசித்து செயல்பட வேண்டும்.

* இந்தியாவில் உள்ள உயர்நீதிமன்றங்களின் எண்ணிக்கை - 21

* மாநிலத்தின் உயர்ந்த நீதித்துறை அமைப்பாக விளங்குவது - உயர்நீதிமன்றம்

* சென்னை உயர்நீதிமன்றம் வேறு எந்த பகுதிக்கும் நீதிமன்றமாக செயல்படுகிறது - பாண்டிச்சேரி

* அடிப்படை உரிமைகளுக்காக நீதிப்பேராணைகளை வெளியிடும் அதிகாரம் பெற்றது - உயர் நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்றம்

* ஆளுநர் பதவி காலியாக உள்போது தற்காலிக ஆளுநராகச் செயல்படுபவர் - உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி

* தனிநபர் அவரது விருப்பத்திற்கு மாறாக கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டிருந்தால் பிறப்பிக்கப்படுவது - ஹேபியஸ் கார்பஸ்

* செயலுறுத்தும் நீதிப்பேராணை என்பது - மாண்டமஸ்

* கோ வாரண்டோ என்பது - தகுதி முறை வினவும் பேராணை

* அடிப்படை உரிமைகள் மற்றும் பிற உரிமைாகளுக்காக ஐந்து நீதிப்போராணைகளை பிறப்பிக்கும் அதிகாரம் பெற்ற அமைப்பு - உயர்நீதிமன்றம்

* உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியை நியமிப்பவர் - குடியரசுத் தலைவர்

* உயர்நீதிமன்ற நீதிபதிகளின் சம்பளம் எதிலிருந்து வழங்கப்படுகிறது - மாநில தொகுப்பு நிதியம்

* உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஒய்வு பெறும் வயது - 62

* மத்திய அரசு குழந்தைகள் நீதிச் சட்டத்தை இயற்றிய ஆண்டு - 1986

* இந்திய உயர்நீதிமன்றங்களில் மிகவும் பழமையானது கொல்கத்தா, மும்பை, சென்னை உயர்நீதிமன்றம். இது நிறுவப்பட்ட ஆண்டு ஜூன் 26,1862.

* சென்னை உயர்நீதிமன்றம் நிறுவப்பட்ட ஆண்டு - ஜூன் 26,1862

* சென்னை உயர்நீதிமன்றத்தின் அதிகார எல்லை - தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி உள்ளடக்கியது.

* தொடக்கத்தில் சென்னை உயர்நீதிமன்றம் சுப்ரீம் கோர்ட் ஆஃப் மெட்ராஸ் என்று அழைக்கப்பட்டது. பின்னர் உயர்நீதிமன்ற சட்ட வரைவுகள் ஏற்படுத்தப்பட்டு 1862 ஆகஸ்ட் 15 முதல் மெட்ராஸ் ஹை கோர்ட் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

* சென்னை உயர்நீதிமன்றத்தில் உள்ள சிலை - மனுநீதிச் சோழனின் சிலை.

* சென்னை உயர்நீதிமன்றத்தின் இணையதளம் http://www.hcmadras.tn.nic.in

* தற்போதைய சென்னை உயர்நீதிமன்றத்துக்கு தனிக் கட்டடம் வேண்டும் என்று கோரிக்கை எழுப்பியவர் - பிரிட்டிஷ் நீதிபதி ஹாலி ஹார்மன். இவரின் கோரிக்கையை ஏற்று, விக்டோரியா மகாராணி ஒப்புதல் அளித்த பின்னரே தற்போதைய உயர்நீதிமன்ற கட்டடம் கட்டப்பட்டது.

* சென்னை உயர்நீதிமன்றம் செயல்பட்ட பழைய இடத்தின் பெயர் கொய்யா தோப்பு (ஜார்ஜ் டவுன்)

* சென்னை உயர்நீதிமன்றம் ஹென்றி இர்வின் வழிகாட்டுதலின் பேரில் கட்டப்பட்டது.

* உலகின் முதலாவது பெரிய நீதிமன்றமாக இருப்பது லண்டன் பெய்லி நீதிமன்றம்.

* இந்தியாவில் முதல் பெரிய உயர்நீதிமன்றம் - சென்னை உயர்நீதிமன்றம்.

* உரிமையியல் நீதிமன்றத்தின் தலைவர் - மாவட்ட முன்சீப்

இந்திய உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்றங்கள் - 1

உச்சநீதிமன்றம்


* உச்சநீதிமன்றம் நிறுவப்பட்ட ஆண்டு- 26 ஜனவரி 1950

* உச்சநீதிமன்றத்தின் அதிகார எல்லை - இந்தியா

* உச்சநீதிமன்றத்தின் அமைவிடம் - புதுதில்லி

* உச்சநீதிமன்றத்துக்கான அதிகாரமளிப்பு - இந்திய அரசியலமைப்பு

* உச்சநீதிமன்ற தீர்ப்புகளுக்கான மேல்மூறையீடு - இந்தியக் குடியரசுத் தலைவர்(தூக்கு தண்டனை உள்பட தண்டனையை நீக்க மட்டும்.

* உச்சநீதிமன்ற நீதிபதிகள் நியமன முறை - நிர்வாக தேர்வு (கோட்பாடுகளுக்கு உட்பட்டது)

* உச்சநீதிமன்றத்தின் குறிக்கோளுரை - அறம் உள்ளவிடத்து வெற்றி உள்ளது.

உச்சநீதிமன்ற நீதிபதிகள் தேர்ந்தெடுக்கப்படுவதற்கான தகுதிகள்:

*  இந்திய குடிமகனாக இருத்தல் வேண்டும்.

*  தொடர்ந்து 5 ஆண்டுகள் ஒரு உயர்நீதிமன்றத்திலே அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட உயர்நீதிமன்றங்களிலோ நீதிபதியாகப் பணியாற்றி இருத்தல் வேண்டும்.

* தொடர்ந்து 10 ஆண்டுகள் ஒரு உயர்நீதிமன்றத்திலோ அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட உயர் நீதிமன்றங்களிலோ வழக்கறிஞராகப் பணியாற்றி இருத்தல் வேண்டும்.

* குடியரசுத் தலைவரின் கருத்தின்படி ஒரு சிறந்த நீதித்துறை அறிஞராக இருத்தல் வேண்டும்.

* உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்படுவதற்கு குறைந்தபட்ச வயது வரம்போ, குறிப்பிட்ட கால வரம்போ வரையறுக்கப்படவில்லை.

* உச்சநீதிமன்ற மீதிபதி தமது பதவியை தமது 65 வயது நிறைவுற்றாலோ, அல்லது குடியரசுத் தலைவருக்கு பதவி விலகல் கடிதம் அளிப்பதன் மூலமாகவோ, அல்லது பாராளுமன்றத்தின் இரு சபைகளிலும் உள்ள மொத்த உறுப்பினர்களில் வந்திருந்து வாக்களித்தவர்களின் மூன்றில் இரு பங்கு ஆதரவினால் நிறைவேற்றப்பட்ட தீர்மான்த்தின் அடிப்படையிலோ பதவி நீக்கம் பெறலாம் அல்லது இழக்கலாம்.

* உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி காலியானாலோ, அல்லது அவர் பணியாற்ற இயலாத சூழ்நிலை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக வேறு ஒருவரை பணியமர்த்த அதிகாரம் பெற்றுள்ளார்.

* குடியரசுத் தலைவரின் முன் அனுமதி பெற்று, தற்காலிகமாக ஒய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதியை, உச்சநீதிமன்ற நீதிபதியாக பணிபுரிய அழைக்கவும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அதிகாரம் பெற்றுள்ளார்.

* அது போன்று போதிய நீதிபதிகள் இல்லாத சூழ்நிலையில், உயர்நீதிமன்ற நீதிபதியாக பணியாற்ற ஒருவரை, உச்சநீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதியைக தற்காலிகமாகப் பணியாற்றவும் வழி செய்யப்பட்டுள்ளது.

* உச்சநீதிமன்ற மற்றும் உயர்நீதிமன்ற நீதிபதிகளை குற்ற விசாரணை நடைமுறைப்படுத்த குடியரசுத் தலைவருக்கு அளிக்கத்தக்க, லோக்சபையாக இருப்பின் 100 உறுப்பினர்களால் கையொப்பமிடப்பட்டு, சபாநாயகரால் ஒப்பளிக்கப்பட்ட தீர்மானமோ, அல்லது இராஜ்ய சபையாக இருப்பின் 50 உறுப்பினர்களால் கையொப்பமிடப்பட்டு, தலைவரால் ஒப்பளிக்கப்பட்ட தீர்மானமோ நிறைவேற்றப்பட வேண்டும்.

* அத்தீர்மானம் மீன்று நபர்கள் கொண்ட ஒரு குழுவினால் (உச்சநீதிமன்ற நீதிபதிகள் இருவர் மற்றும் ஒரு நீதித்துறை வல்லுநர்) விசாரிக்கப்படும்.

* அக்குழு, குற்றாவிசாரணைக்கு உட்படுத்தப்பட்ட நீதிபதியின் திறமையின்மை அல்லது தவறான நடத்தையை கண்டறிந்து உண்மையெனக் கண்டால் சபைக்குப் பரிந்துரைத்து அறிக்கை அளிப்பர்.

* அதன்பின்பு அத் தீர்மானம் குழுவின் அறிக்கையுடன், சபையில் புகுத்தப்படும்.

அத்தீர்மானம் பாராளுமன்றத்தின் இரு சபைகளிலும், மொத்த உறுப்பினர்களில் வந்திருந்து வாக்களிப்போரில் மூன்றில் இரு பங்கு உறுப்பினர்களின் ஆதரவு பெற்று நிறைவேற்றப்பட்டால், பின்னர் குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு வைக்கப்படும்.

* இதன் பிறகு குடியரசுத் தலைவரின் சம்மந்தப்பட்ட நீதிபதியின் பதவி நீக்கத்தை அறிவிப்பார்.

* 1991 - 93ல் ஆர்.இராமசாமி என்ற நீதிபதியின் மீது குற்றவிசாரணை கொண்டு வரப்பட்டு, குழு தனது அறிக்கையில் குற்றத்தை உறுத்ப்படுத்தியது.

* எனினும், அப்போதைய லோக்சபையில் காங்கிரஸ் கட்சி வாக்கெடுப்பில் கலந்து கொள்ளமால் புறக்கணித்ததால், போதிய பெரும்பான்மையின்றி, குற்றவிசாரணைத் தீர்மானம் தோல்வியைத் தழுவியது.

* உச்சநீதிமன்ற நீதிபதிகளின் தனித்தியங்கு தன்மை உச்சநீதிமன்ற நீதிபதிகள் தன்னிச்சையாக செயல்படுவதற்கென சில செயல்பாடுகளை அரசியலமைப்பு செயல்படுத்துகிறது. அவை:

* உச்சநீதிமன்றத்தின் பிற நீதிபதிகளை நியமிக்கும்போது, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியை ஆலோசித்தே குடியரசுத் தலைவர் செயல்பட வேண்டும்.

* ஒருமுறை நீதிபதியாக நியமிக்கப்பட்டுவிட்டால், அவர் திறமையின்மை, தவறான நடத்தை ஆகிய காரணங்களுக்காக மட்டும் பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் தனித்தனியே மூன்றில் இரு பங்கு உறுப்பினர்களின் பெரும்பான்மை ஆதரவுடன் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் மூலமாக மட்டுமே, குடியரசுத் தலைவரால் பதவி நீக்கம் செய்யப்பட வேண்டும்.

* உச்சநீதிமன்ற நீதிபதியாக பதவி வகித்த பின்னர், தமது ஒய்வுக் காலத்திற்குப் பிறகு இந்தியாவின் எந்த நீதிமன்றத்திலும் வழக்கறிஞராகப் பணியாற்ற அரசியலமைப்பு தடை விதிக்கிறது. எனினும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியால் கூடுதல் நீதிபதியாக நியமிக்கப்படுவதை இந்த விதி தடை செய்யாது.

* உச்சநீதிமன்ற நீதிபதிகளின் சம்பளம் மற்றும் இதர படிகள் அனைத்தும் இந்திய தொகுப்பு நிதியத்தின் செலவினங்களிலிருந்து அளிக்கப்படுவதால், பாராளுமன்றத்தின் வாக்கெடுப்பு தேவையில்லை.

* மேலும் உச்சநீதிமன்ற நீதிபதிகளின் சம்பளம் மற்றும் இதர படிகள் அனைத்தும், நிதி நெருக்கடி நிலை தவிர பிற சமயங்களில் குறைக்கப்பட இயலாது.

* உச்சநீதிமன்ற நீதிபதியின் நடத்தை மற்றும் செயல்பாடுகளை பாராளுமன்றத்தின், குற்ற விசாரணை தீர்மானம் கொண்வரும் நேரம் தவிர பிற சமயங்களில் விமர்சிக்க இயலாது.


உச்சநீதிமன்றத்தின் நீதிவரம்பு:

1.Original 2. Writ 3. Appellate 4. Advisory and 5. Revisory Jurisdictions.

உண்மையான நீதிவரம்பு அதிகாரம் - Original Jurisdiction

* உச்சநீதிமன்றத்தின் மூல வழக்கு விசாரணை வரம்பு என்பது பொதுவாக கூட்டாட்சி குறித்த விசயங்களைக் குறித்த வழக்குகளை விசாரித்துத் தீர்ப்பளிக்கும் அதிகாரமாகும்.

* இந்திய அரசாங்கத்திற்கும், ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட மாநிலங்களுக்கும் இடையேயான தகராறுகள்.

* ஒரு புறத்தில் இந்திய அரசும், ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட மாநிலங்களுக்கும் மறுபுறத்தில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட மாநிலங்களுக்கும் இடையேயான தகராறுகள்.

* இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட மாநிலங்களுக்கு இடையேயான தகராறுகள் ஆகிய மூன்று விதமான வழக்குகளிலும் மூலவிசாரணை வரம்பு உச்சநீதிமன்றத்திற்கே உண்டு.

* எனினும் 7வது திருத்தச் சட்டம் 1956-ன்படி, அமலில் இருக்கும் ஒர் உடன்படிக்கை அல்லது ஒப்பந்தம் இந்த விசாரணை வரம்பை விலக்கியிருந்தால், அவற்றின் காரணமாகத் தோன்றும் எந்தவிதமான தகராறுக்கும் இந்த நீதிவரம்பு பொருந்தாது.

* மாநிலங்களுக்கு இடையேயான நதி நீர்த்தகராறுகள், நிதிக்கமிஷனின் ஆய்வுக்கு விடப்பட்ட விஷயங்கள், ஒன்றியத்திற்கும் மாநிலங்கதளுக்கும் இடையே சிலவகையான செலவுகள், ஒய்வூதியங்கள் போன்றவற்றை சரி செய்து கொள்வது போன்ற சில விசயங்களிலும் உச்சநீதிமன்றத்தின் மூலவழக்கு விசாரணை வரம்பு பொருந்தாது.


ஆணை வழங்கும் நீதி அதிகார வரம்பு - Writ Jurisdiction

* Art.32ன் படி தனிநபர்களின் அடிப்படை உரிமைகள் மீறப்படுவது தொடர்பான வழக்குகளிலும் மூல விசாரணை வரம்பு உச்சநீதிமன்றத்திற்கு உண்டு.

* அந்த உரிமைகளை நிலை நாட்டுவதற்காக உச்சநீதிமன்றம் பல்வேறு நீதிப்பேராணைகளைப் பிறப்பிக்கலாம்.

* தன்னுடைய அடிப்படை உரிமைகள் பாதிக்கப்படும்போது நேரிடையாகவே ஒருவர் உச்சநீதிமன்றத்தினை அணுகலாம் என்பது நமது அரசியலமைப்பில் உள்ள தனிச் சிறப்பாகும்.

* உச்சநீதிமன்றத்தின் இந்த பேராணை வழங்கும் அதிகாரத்தைப் பொருத்தவரை, ஒரு தனிநபர் நேரடியாக உச்சநீதிமன்றத்தை அணுகி அடிப்படை உரிமைகளுக்கான தீர்வினைப் பெற இயல்கிறது என்ற நோக்கின் அடிப்படையில், இது மூல அதிகாரமாக கருதப்படுகிறது.

* ஆனால் மூல அதிகாரம் என்பது முற்றிலும் கூட்டாட்சி குறித்த விசயங்கள் குறித்தே ஆகும்.


 மேல்முறையீட்டு அதிகார நீதிவரம்பு - Appellate Jurisdiction

* உச்சநீதிமன்றத்தின் மேல்முறையீட்டு விசாரணை வரம்பைப் பொருத்தவரை மூன்று தலைப்புக்களில் காணப்படுகின்றன.

* அரசியலமைப்பு சம்மந்தப்பட்ட வழக்குகள், உரிமையியல் சம்மந்தப்பட்ட வழக்குகளில் ஒர் உயர்நீதிமன்றம் இறுதித் தீர்ப்பளிக்கும்போது, ஏதேனும் ஒர் வழக்கில் அரசியலமைப்புக்கு விளக்கமுரைப்பதில், அனைத்துத் தரப்பிற்கும் முக்கியத்துவம் வாய்ந்த சட்ட வினா சம்மந்தப்பட்டுள்ளது என்றும், அதனை உச்சநீதிமன்றமே தீர்த்து வைக்க முடியும் என்றும் உயர்நீதிமன்றம் ஒரு சான்றளித்தால், அவ்வழக்குப் பற்றி உச்சநீதின்றத்தில் மேல் முறையீடு செய்யலாம்.

* உரிமையியல் (சிவில்) - ரூ.20000-க்கு மேற்பட்ட மதிப்புடைய உரிமையியல் வழக்குகளில் உயர்நீதிமன்றம், அவ்வழக்கினை உச்சநீதிமன்றம் விசாரிக்கத்தக்கதென்று சான்றளித்தால், உச்சநீதிமன்றத்தில் அவ்வழக்குகள் மேல்முறையீட்டு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும்.

* இவை தவிர உச்சநீதின்றத்தின் மேல்முறையீட்டு விசாரணை வரம்பை பாராளுமன்றம் விரிவுபடுத்த இயலும்.

குற்றவியல் (Criminal) - குற்றவியல் வழக்குகளில்

* ஒர் உயர்நீதிமன்றம், குற்றம் சாட்டப்பட்ட ஒருவரின் விடுதலைத் தீர்ப்பை மாற்றி அவருக்கு மரண தண்டணை அளித்தாலும்,

* உயர்நீதிமன்றத்தின் அதிகார வரம்புக்குக் கீழ் நிலையில் உள்ள ஏதேனும் நீதிமன்றத்திலிருக்கும் வழக்கைத் தனக்கு மாற்றிக் கொண்டு, அந்த வழக்கின் விசாரணை முடிவில் குற்றம் சாட்டப்பட்டவருக்கு மரண தண்டனை அளித்தாலும், அந்தத்தீர்ப்புகளை எதிர்த்து உச்சநீதிமன்றத்தின் மேல் முறையீடு செய்யலாம்.

* ஒர் உயர்நீதிமன்றத்தில் தீர்ப்பளிக்கப்பட்ட வழக்கு, உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்வதற்கு உகந்த வழக்கு என்று அந்த உயர்நீதிமன்றம் சான்றளித்தால், உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து, உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யலாம்.

ஆலோசனை வழங்கும் அதிகார நீதிவரம்பு - Advisory Jurisdiction

* Art.143-ன்படி ஆலோசனை வழங்கும் நீதிவரம்பை உச்சநீதிமன்றம் பெற்றுள்ளது.

* பொது முக்கியத்துவம் வாய்ந்த சட்டம் தொடர்பான அல்லது பொருண்மை சம்மந்தமான வினாவுக்கு உச்சநீதிமன்றத்தின் உச்சநீதிமன்றத்தின் ஆலோசணையைப் பெறுவது உசிதமானது என்று குடியரசுத் தலைவர் கருதினால், அவர் உச்சநீதிமன்றத்தின் கருத்தைக் கேட்டறியலாம்.

* குடியரசுத் தலைவரிடமிருந்து அப்படிப்பட்ட செய்தி உச்சநீதிமன்றத்திற்கு அனுப்பப்பட்டால் நீதிமன்றமும் தேவையான விசாரணைகளை நடத்திய பின்னர் தனது கருத்துக்களைக் குடியரசுத் தலைவருக்கு அறிவிக்கும்.

 * அவ்வாறு உச்சநீதிமன்றம் அளிக்கின்ற கருத்து, ஆலோசனை வழங்குவது போன்றதால், குடியரசுத் தலைவர் விரும்பினால் அதனை ஏற்றுக்கொள்ளலாம், ஏற்றுக்கொள்ளமாமலும் போகலாம்.

* அரசியலமைப்பு நடைமுறைக்கு வருவதற்கு முன்னர் நிறைவேற்றப்பட்டு, அதற்குப் பின்னரும் தொடர்ந்து அமலில் இருக்கின்ற ஒப்பந்தம், உடன்படிக்கை, பட்டயம் அல்லது அது போன்ற சாசனங்கள் மற்றியும் உச்சநீதிமன்றத்தின் கருத்தைக் குடியரசுத் தலைவர் கேட்டறியலாம்.

* இது குறித்த வழக்குகளில் குடியரசுத் தலைவருக்கு ஆலோசனை அளிப்பது உச்சநீதிமன்றத்தின் தவரிக்க இயலாத கடமையாகும்.

* உச்சநீதிமன்றம் தன்னால் பிறப்பிக்கப்பட்ட உத்தரவு அல்லது தீர்ப்புரையை மறு ஆய்வு செய்வதற்குரிய அதிகாரத்தை Art.137 வழங்குகிறது.

* அதாவது உச்சநீதிமன்றம் பிறப்பிக்கும் தீர்ப்புரைகள் ஆணைகள் போன்றவை அதன்கீழ் உள்ள அனைத்து நீதிமன்றங்களையும் கட்டுப்படுத்தும் என்றாலும் அவை உச்சநீதிமன்றத்தினைக் கட்டுப்படுத்தாது என்பதே இதன் சிறப்பம்சமாகும்.


நீதிமன்ற அவமதிப்பு - Contempt pf Court

* உச்சநீதிமன்றம் ஒரு ஆவண நீதிமன்றமாக (court of record) திகழ்கிறது.

* ஆவண நீதிமன்றம் என்றால், தன்னை அவமதிப்பவர்களுக்கு அதுவே தண்டனை அளிக்கலாம்

* நீதிமன்றத்தைப் பற்றியும், அதன் செயல்பாடு பற்றியும், நலமலெண்ணத்துடன் செய்யப்படும் விமர்சனங்கள், பொதுநலன் கருதி, நீதித்துறையின் செயல்பாடு குறித்துச்

சொல்லப்படும் நியாயமான விமர்சனம் ஆகியவை தவிர பிறவகைகளில் அதுகுறித்த விமர்சனங்களுக்காக, உச்சநீதிமன்றம் தண்டனைகளை விதிக்கலாம்.

* நீதிமன்ற அவமதிப்பு என்பது சிவில் மற்றும் கிரிமினல் ஆகிய வழக்குகளுக்கும் பொருந்தும், சிவில் வழக்குகளில் நீதிமன்ற அவமதிப்பு என்பது, நீதிமன்றத்தின் தீர்ப்புகளுக்குக் கட்டுப்பட்டு நடக்காமை ஆகும்.

* கிரிமினல் வழக்குகளில் நீதிமன்ற அவமதிப்பு என்பது. நீதிமன்றத்தின் செயல்பாடுகளைக் குறித்து தவறான எண்ணங்களை மக்களிடையே பரப்புதல், இதனால் நீதிமன்றத்தின் செயல்பாடுளுக்கு இடையூறு தோற்றுவித்தல், நீதிமுறை நடவடிக்கைகளுக்கு பாதிப்பு ஏற்படுத்துதல் ஆகியவையாகும்.

உச்சநீதிமன்றத்தின் அதிகாரங்கள்:

* உச்சநீதிமன்றம் தமக்குத் தேவைப்படும் விதிமுறைகள், கட்டுப்பாடுகளை குடியரசுத் தைவரின் அனுமதியின்பேரில், தாமே உருவாக்கிக் கொள்ளவும் அதிகாரம் பெற்றுள்ளது.

* உச்சநீதிமன்றத்தின் அதிகாரிகளுக்கும், ஏனைய அலுவலர்களும் தலைமை நீதிபதியால் அல்லது அவர் சொற்படி பிற நீதிபதியால், அல்லது அதிகாரியால் நியமிக்கப்படுகிறார்கள்.

* மேலும் குடியரசுத் தலைவர் மற்றும் துணை குடியரசுத் தலைவர் தேர்தல் குறித்து ஏதேனும் வழக்குகள் தோன்றினால் அதனை தீர்க்கும் அதிகாரமும், உச்சநீதிமன்றம் வசமே உள்ளது.

* மத்திய அரசுத் தேர்வுப் பணியாளர் தேர்வாணைய உறுப்பினர்கள், அதன் தலைவர் ஆகியோரை நீக்க வேண்டுமென்று, குடியரசுத் தலைவரிடம் பரிந்துரை செய்யும் அதிகாரமும் உச்சநீதிமன்றம் பெற்றுள்ளது.

 அரசியலமைப்பின் பாதுகாவலன் - Guardian of the Constitution

* உச்சநீதிமன்றத்தின் மிக முக்கியப் பணியாகக் கருதப்படுவது, அது அரசியலமைப்பின் பாதுகாவலனாகச் செயல்படுவதே ஆகும்.

* மேலும் அடிப்படை உரிமைகளை நிலைநாட்டும் பணியிலும், அது இந்தியக் குடிமக்களின் பாதுகாவலனாகச் செயல்படுகிறது.

* மேலும் உச்சநீதிமன்றம் சரியானதென்று கருதும் விசயங்களையும், வழக்குகளையும் தாமே முன்வந்து பொதுநல வழக்கு(Public Interest Litigation) என்ற அடிப்படையில்,

எடுத்துக்கொண்டு உரிய தீர்வுகளை மக்களுக்கு வழங்கவும் அதிகாரம் பெற்றுள்ளது. இதனால் சமுதாய சமநீதி உறுதி செய்யப்பட்டுள்ளது.

நன்றி -தினமணி 

இன்பத்தமிழ் - Class 6 Tamil New Syllabus Term 1

தமிழ் வணக்கம்   தற்கால இலக்கிய மரபாகிவிட்டது  பாரதிதாசனின் இயற்பெயர்   சுப்புரத்தினம்.  பாரதியாரின் கவிைதகள்  மீது கொண்ட  பற்றின் காரணமா...