03 August, 2014

இன்றையக் கேள்விகள் - 03/08/2014

1.மீதூண் விரும்பேல் என்றவர்
  1. திருவள்ளுவர்
  2. அகத்தியர்
  3. ஔவையார்
  4. காரியாசான்    

 2.பொருத்துக 
 1.இனிப்பு  - அ. மென்மை
  2.உவர்ப்பு – ஆ.உணர்வு
  3.கார்ப்பு –  இ.  வளம்
  4.கைப்பு –  ஈ. தெளிவு
  1. 1-இ, 2-ஈ, 3-ஆ , 4- அ
  2. 1-அ, 2-ஈ, 3-ஆ , 4- இ
  3. 1-இ, 2-ஆ, 3-ஈ , 4- அ
  4. 1-இ, 2-ஈ, 3-அ , 4- ஆ

3.பிருங்கராசம் என்பது எந்த மூலிகையின்
வேறு பெயர்
  1. பொன்னாங்கண்ணி
  2. கரிசலாங்கண்ணி
  3. வல்லாரை
  4. கறிவேப்பிலை

4.ஆபுத்திரன் நாடு அடைந்த காதை
எத்தனையாவது காதை ?
  1. இருபத்து ஐந்தாவது காதை
  2. இருபத்து நான்காவது காதை
  3. இருபத்து மூன்றாவது காதை
  4. இருபத்து ஒன்றாவது காதை
5.சிரமுகம் - இலக்கணக் குறிப்பு
  1. உம்மைத்தொகை
  2. உவமைத்தொகை
  3. உரிச்சொற்றொடர்
  4. உருவகம்

 6.குறளை – பொருள் கூறு
  1. புறங்கூறல்
  2. பொய்
  3. கோபம்
  4. அழுகை

7..பொருந்தாததை கூறுக
  1. தமிழ்ச்சோலை
  2. உள்ளொளி
  3. முருகன் அருள் வேட்டல்
  4. சைவத்தின் சமரசம்

8.மருணீக்கியார் என்பது யாருடைய இயற்பெயர்
  1. அப்பர்
  2. சம்பந்தர்
  3. சுந்தரர்
  4. மாணிக்கவாசகர்

9.செவிப்புக – இலக்கணக் குறிப்பு
  1. ஏழாம் வேற்றுமைத்தொகை
  2. வினைத்தொகை
  3. இரண்டாம் வேற்றுமைத்தொகை
  4. ஆறாம் வேற்றுமைத்தொகை

10.பூதரப்புயம் - இலக்கணக் குறிப்பு
  1. உம்மைத்தொகை
  2. உவமைத்தொகை
  3. உரிச்சொற்றொடர்
  4. உருவகம் 
விடைகள் 

  1. ஔவையார்
  2. 1-இ, 2-ஈ, 3-ஆ , 4- அ
  3. கரிசலாங்கண்ணி
  4. இருபத்து நான்காவது காதை
  5. உம்மைத்தொகை
  6. புறங்கூறல்
  7. முருகன் அருள் வேட்டல்
  8. அப்பர்
  9. ஏழாம் வேற்றுமைத்தொகை
  10. உவமைத்தொகை

உணவே மருந்து மற்றும் நோய் நீக்கும் மூலிகைகள் - 9 ஆம் வகுப்பு சமச்சீர்








02 August, 2014

Tnpsc Aptitude 009

மணிமேகலை - 9 ஆம் வகுப்பு சமச்சீர்









































இன்றைய கேள்விகள் - 02/08/14

1.திரு வி க வுக்கு  வாய்த்த மொழிநடை மலை
எனத் தமிழில் ஓங்கி உயர்ந்துள்ளது என்று கூறியவர்
  1. மு வரதராசனார்
  2. தெ பொ மீனாட்சி சுந்தரனார்
  3. புலவர் குழந்தை
  4. வாணிதாசன்

2.இராமலிங்க சுவாமிகள் திருவுள்ளம் என்ற நூலின் ஆசிரியர்
  1. தருமு சிவராமு
  2. சி இலக்குவனார்
  3. திரு வி க
  4. மறைமலையடிகள்

3.சாகித்ய அகாதமி பரிசு பெற்ற கண்ணதாசன்
அவர்களின் படைப்பு
  1. சேரமான் காதலி
  2. மாங்கனி
  3. இயேசு காவியம்
  4. ஆட்டனத்தி ஆதிமந்தி

4.வள்ளலார் இயற்றிய உரை நடை நூல்
  1. சின்மய தீபிகை
  2. தொண்டமண்டல சதகம்
  3. மனுமுறை கண்ட வாசகம்
  4. ஒழிவிலொடுக்கம்

5.தனி பாசுரத்தொகை என்ற நூலைப் பதிப்பித்தவர்
  1. பரிதிமாற்கலைஞர
  2. தேவநேயப்பாவணர்
  3. மறைமலையடிகள்
  4. கல்கி


6.குன்றேறி – இலக்கணக் குறிப்பு  
  1. ஆறாம் வேற்றுமைத்தொகை
  2. ஏழாம் வேற்றுமைத்தொகை
  3. வினைத்தொகை
  4. இரண்டாம் வேற்றுமைத்தொகை

7.ஊறா அமை
  1. சொல்லிசை அளபெடை
  2. செய்யுளிசை அளபெடை
  3. இன்னிசை அளபெடை
  4. வினையெச்சம்

8.தென் தமிழ்த் தெய்வப்பரணி என்று கலிங்கத்துப்பரணியை
புகழ்ந்தவர்
  1. ஒட்டக்கூத்தர்
  2. கம்பர்
  3. புகழேந்திப் புலவர்
  4. கபிலர்

9.விபுதர் – பொருள் கூறுக
  1. ஆசிரியர்
  2. அரசர்
  3. புலவர்
  4. அமைச்சர்

10.அடவிமலையாறு – இலக்கணக்குறிப்பு
  1. உம்மைத்தொகை
  2. உவமைத்தொகை
  3. உருவகம்
  4. வினைத்தொகை  

விடைகள் 
  1. தெ பொ மீனாட்சி சுந்தரனார்
  2. திரு வி க
  3. சேரமான் காதலி
  4. மனுமுறை கண்ட வாசகம்
  5. பரிதிமாற்கலைஞர்
  6. ஏழாம் வேற்றுமைத்தொகை
  7. செய்யுளிசை அளபெடை
  8. ஒட்டக்கூத்தர்
  9. புலவர்
  10. உம்மைத்தொகை
 


01 August, 2014

Tnpsc Aptitude 008

இன்றையக் கேள்விகள் -01/08/2014

1.மாறன் களிறு – இலக்கண குறிப்பு
  1. இரண்டாம் வேற்றுமைத்தொகை
  2. நான்காம் வேற்றுமைத்தொகை
  3. ஆறாம் வேற்றுமைத்தொகை
  4. மூன்றாம் வேற்றுமைத்தொகை

2.ஒற்கம் – பொருள் கூறுக
  1. சுறுசுறுப்பு
  2. உறக்கம்
  3. சோம்பல்
  4. தளர்ச்சி

3.அவியினும் வாழினும் - இலக்கண குறிப்பு
  1. இழிவுச்சிறப்பும்மை
  2. பண்புத்தொகை
  3. எண்ணும்மை
  4. இருபெயரொட்டு பண்புத்தொகை

4.மேலைகடல் முழுவதும் கப்பல் விடுவோம்- என்று கூறியவர்
  1. சுரதா
  2. வ.உ.சி
  3. பாரதி
  4. நாமக்கல் கவிஞர்


5.மதுரைபதிற்றுப்பதந்தாதி என்ற நூலை எழுதியவர்
  1. பரஞ்சோதி முனிவர்
  2. திருநாவுக்கரசர்
  3.  காளமேகப்புலவர்
  4. சொக்கநாதப்புலவர்


6.திருவிளையாடற்புராணத்திற்கு உரை எழுதியவர்
  1.  மு வரதராசனார்
  2. பரிமேலழகர்
  3. ந மு வேங்கடசாமி
  4. பரிதிமாற்க் கலைஞர் 

7.திருவிளையாடற்புராணத்தில் அமைந்துள்ள
 காண்டங்களின் எண்ணிக்கை
  1. நான்கு
  2. மூன்று
  3. இரண்டு
  4. ஐந்து


8.பாவியக்கொத்து என்ற நூலை இயற்றியவர்
  1.  பாவேந்தர் பாராதிதாசன்
  2. பாவலேறு பெருஞ்சித்திரனார்
  3. பாரதியார்
  4. சுரதா

 9.ரூபாயத் என்பது -----------
  1. இரண்டடிச் செய்யுள்
  2. மூன்றடிச் செய்யுள்
  3. நான்கடிச் செய்யுள்
  4. ஐந்தடிச் செய்யுள்

10.நான் நிரந்தரமானவன் அழிவதில்லை
எந்த நிலையிலும் எனக்கு மரணமில்லை
என்று கூறியவர்
  1.  கண்ணதாசன்
  2. அறிஞர் அண்ணா
  3. பாரதிதாசன்
  4. பாரதியார் 
விடைகள் 


  1. ஆறாம் வேற்றுமைத்தொகை
  2. தளர்ச்சி
  3. எண்ணும்மை
  4. பாரதி
  5. பரஞ்சோதி முனிவர்
  6. ந மு வேங்கடசாமி
  7. மூன்று
  8. பாவலேறு பெருஞ்சித்திரனார்
  9. நான்கடிச் செய்யுள்
  10.  கண்ணதாசன்





மக்சேசே விருது

ரமன் மக்சேசே விருது (Ramon Magsaysay Award) ராக்பெல்லர் சகோதரர்கள் நிதியம் (RBF) பொறுப்பாளர்களால் ஏப்ரல் 1957இல் நிறுவப்பட்டது. பிலிப்பைன்ஸ் அரசின் உடன்பாட்டுடன் அந்நாட்டு அதிபர் மறைந்த ரமன் மக்சேசே நினைவாகவும், அவரது அரசியல் நேர்மை, மக்கள் சேவை இவற்றை காட்டாக வளரும் நாடுகளில் பரப்பவும் இப்பரிசு ஏற்படுத்தப்பட்டது. இது ஆசியாவின் நோபல் பரிசு என அறியப்படுகிறது

ஒவ்வொரு ஆண்டும் ரமன் மக்சேசே விருது நிறுவனம் ஆசியாவில் தங்கள் துறையில் சிறந்து விளங்கும் தனிநபர்களுக்கும் நிறுவனங்களுக்கும் பரிசு வழங்கி வருகிறது. ஆறு வகைகளில் இப்பரிசு வழங்கப்படுகிறது:


1.அரசுப்பணி
2.பொது சேவை
3.சமூக தலைமை
4.தாளியல்,இலக்கியம் மற்றும் மக்கள் தொடர்பு கலை
5.அமைதி மற்றும் பன்னாட்டு புரிதல்
6.வளரும் தலைமை

"வளரும் தலைமை" என்ற வகை 2000ஆம் ஆண்டு ஆறாவது பகுப்பாக தொடங்கப்பட்டது. இப்பரிசு "தங்கள் சுற்றுப்புறத்தில் சமூக மாற்றங்களை ஏற்படுத்த சிறப்பாக பணியாற்றிய,ஆனால் வெளியே அதிகம் அறியப்படாத, நாற்பது வயதிற்கு குறைவான தனிநபர்களுக்கு" வழங்கப்படுகிறது.

2008 வரை வழங்கப்பட்டுள்ள 254 விருதுகளில், 47 இந்தியர்களுக்கும்,39 பிலிப்பைன் நாட்டவருக்கும்,23 ஜப்பானியருக்கும் மற்றவை ஆசியாவின் பிற நாட்டினருக்கும் அளிக்கப்பட்டுள்ளது.

2014 ஆம் ஆண்டுக்கான விருது 

சீனாவைச் சேர்ந்த பெண் பத்திரிகையாளர், சுற்றுச்சூழல் துறை சார்ந்த வழக்குரைஞர் உள்பட 6 பேருக்கு இந்த ஆண்டுக்கான மகசேசே விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

சீனாவைச் சேர்ந்த பெண் பத்திரிகை ஆசிரியர் ஹூ ஷூலி (61), அந்நாட்டின் சுற்றுச்சூழல் துறை சார்ந்த வழக்குகளில் வாதிடும் வழக்குரைஞர் வாங் கான்ஃபா (55), இந்தோனேசிய மானுடவியல் நிபுணர் சார் மார்லினா மானுருங், ஆஃப்கானிஸ்தான் தேசிய அருங்காட்சியக இயக்குநர் ஒமரா கான் மசூதி, பாகிஸ்தானைச் சேர்ந்த தன்னார்வ அமைப்பான தி சிட்டிசன்ஸ் ஃபவுண்டேஷன், ஃபிலிப்பின்ஸ் ஆசிரியர் ராண்டி ஹலாசன் ஆகியோர் மகசேசே விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

இன்பத்தமிழ் - Class 6 Tamil New Syllabus Term 1

தமிழ் வணக்கம்   தற்கால இலக்கிய மரபாகிவிட்டது  பாரதிதாசனின் இயற்பெயர்   சுப்புரத்தினம்.  பாரதியாரின் கவிைதகள்  மீது கொண்ட  பற்றின் காரணமா...