20 July, 2014
பொறையுடைமை - 9 ஆம் வகுப்பு சமச்சீர்
- அகழ்வாரை – தோண்டுபவரை
- இகழ்வார் - இழிவுபடுத்துவோர்
- தலை – சிறந்த பண்பு
- பொறுத்தல் – பொறுத்துக்கொள்ளுதல்
- இறப்பினை - பிறர் செய்த துன்பத்தை.
- இறப்பு – துன்பம்
- இன்மை – வறுமை
- ஒரால் – நீக்குதல்
- மடவார் – அறிவிலிகள்
- விருந்து – வீட்டிற்கு புதியவராய் வந்தவர்
- நிறை – சால்பு
- ஒறுத்தாரை – தண்டித்தவரை
- ஒன்றாக - ஒரு பொருட்டாக
- பொதிந்துவைப்பர் - (மனத்துள்) வைத்துக்கொள்வர்.
- போன்றும் – உலகம் அழியும்வரை
- பொன்றும் துணையும் - உலகம் உள்ளவரை
- நோநொந்து – துன்பத்திற்கு வருந்தி
- திறனல்ல - செய்யத்தகாத
- மிக்கவை – தீங்குகள்
- மிகுதியான் - மனச்செருக்கால்
- தகுதியான் – பொறுமையால்
- துறந்தார் – பற்றற்றவர்
- இன்னா – தீய
- நோற்கிற்பவர் - பொறுப்பவர்
- நோற்பார் - நோன்பு மேற்கொள்பவர்
- இன்னாச்சொல் - தீய சொல்
இலக்கணக் குறிப்பு:
- பொறுத்தல் – தொழிற்பெயர்
- அகல்வார், இகழ்வார் – வினையாலணையும் பெயர்
- மறத்தல், பொறுத்தல் – தொழிற்பெயர்
- நன்று – குறிப்பு வினைமுற்று
- விருந்து – பண்பாகு பெயர்
- ஒரால், நீக்குதல் – தொழிற்பெயர்
- நீங்காமை – எதிர்மறைத் தொழிற்பெயர்
- ஒருத்தார் – வினையாலணையும் பெயர்
- பொதிந்து – வினையெச்சம்
- வையார் – வினைமுற்று
- ஒருத்தார், பொறுத்தார் – வினையாலணையும் பெயர்
- தற்பிறர் – ஏழாம் வேற்றுமைத் தொகை
- செய்யினும் – இழிவு சிறப்பும்மை
- நொந்து – வினையெச்சம்
- அரண், திறன் – ஈற்றுப்போலிகள்
- விடல் – அல் ஈற்று வியங்கோள் வினைமுற்று
- இறந்தார், செய்தாரை,துறந்தார், நோற்கிற்பவர் – வினையாலணையும் பெயர்
- உண்ணாது – வினையெச்சம்
- விடல் - அல் ஈற்று வியங்கோள்வினைமுற்று
- இன்னாச்சொல் - ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
ஆசிரியர் குறிப்பு:
- இவர் நாயனார், தேவர், முதற்பாவலர், தெய்வப்புலவர், நான்முகனார், மாதானுபாங்கி, பெருநாவலர் என்னும் சிறப்பு பெயர்களால் அழைக்கப்படுவார்.
- இவரின் காலம் கி.மு.31ஆம் நூற்றாண்டு என்று கூறுவர்.
- திரு + குறள் = திருக்குறள்
- திரு = செல்வம், சிறப்பு, அழகு, மேன்மை, தெய்வத்தன்மை எனப் பல பொருள் உண்டு.
- குறள் = குறுகிய அடி உடையது.
- இந்நூல் அறத்துப்பால், பொருட்பால், இன்பத்துப்பால் என முப்பெரும் பிரிவுகளை கொண்டது.
- அறம் 38 அதிகாரங்களாகவும், பொருள் 70 அதிகாரங்களாகவும், இன்பம் 25 அதிகாரங்களாகவும் பிரிக்கப்பட்டுள்ளது.
- இது பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று.
- இந்நூலை போற்றிப் பாராட்டிய பாடல்களின் தொகுப்பே திருவள்ளுவ மாலை.
1. தருமர்
2. மணக்குடவர்
3. தாமத்தர்
4. நச்சர்
5. பரிதி
6. பரிமேலழகர்
7. திருமலையர்
8. மல்லர்
9. பரிப்பெருமாள்
10. காளிங்கர்
வாழ்த்து - 9 ஆம் வகுப்பு
நிலைபெ றுத்தலும் நீக்கலும் நீங்கலா
அலகி லாவிளை யாட்டுடை யாரவர்
தலைவர் அன்னவர்க் கேசரண் நாங்களே.
-கம்பர்
- உளவாக்கல் – உண்டாக்குதல், படைத்தல்
- நிலைபெறுத்தல் - காத்தல்
- நீக்கல் – அழித்தல்
- நீங்கலா – இடைவிடாது
- அலகிலா – அளவற்ற
- அன்னவர் – அத்தகைய இறைவர்
- சரண் – அடைக்கலம்
இலக்கண குறிப்பு:
- யாவையும் – முற்றும்மை
- ஆக்கல், நீக்கல், விளையாட்டு – தொழிற் பெயர்
- அலகிலா – ஈறுகெட்ட எதிர்மறைப்பெயரெச்சம்
ஆசிரியர் குறிப்பு:
- நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறைக்கு அருகிலுள்ள தேரழுந்தூரில் கம்பர் பிறந்தார்.
- இவர் கம்பராமாயணம்,ஏர் எழுபது, சிலை எழுபது, சரஸ்வதி அந்தாதி, சடகோபர் அந்தாதி, திருக்கை வழக்கம் ஆகிய நூல்களை இயற்றியுள்ளார்.
- இவர் குலோதுங்கச்சோழனின் அவைப் புலவராக விளங்கினார்.
- திருவெண்ணெய் நல்லூர் சடையப்ப வள்ளலால் ஆதரிக்கப்பட்டவர்.
- கவிச்சக்ரவர்த்தி என்றும் கல்வியில் பெரியவர் கம்பர் என்றும் போற்றப்பட்டார்.
- இவரின் காலம் கி.பி.பனிரெண்டாம் நூற்றாண்டு.
- வடமொழியில் வால்மீகி முனிவர் எழுதிய இராமாயணத்தைத் தழுவித் தமிழில் கம்பர் எழுதியதே கம்பராமாயணம்.
- கம்பர் இந்நூலுக்கு இட்ட பெயர் = இராமாவதாரம்.
- இது பால காண்டம், அயோத்திய காண்டம், ஆரணிய காண்டம், கிட்கிந்தா காண்டம், சுந்தர காண்டம், யுத்த காண்டம் என ஆறு காண்டங்களை உடையது.
19 July, 2014
18 July, 2014
புறப்பொருள்
புறப்பொருள் என்பது வீரம், போர், தூது, வெற்றி, கொடை, நிலையாமை முதலியவற்றைக் கூறுவது ஆகும். ஒரு குறிப்பிட்ட அரசனையோ வள்ளலையோ குறுநில மன்னனையோ பெயரைச் சுட்டி அவனுடைய வீரம், வெற்றி, கொடை முதலியவற்றைப் பாடுவது புறப்பொருள் மரபு ஆகும்.
புறப்பொருள் திணைகள்
வெட்சித் திணை
கரந்தைத் திணை
வஞ்சித் திணை
காஞ்சித் திணை
நொச்சித் திணை
உழிஞைத் திணை
தும்பைத் திணை
வாகைத் திணை
பாடாண் திணை
பொதுவியல்
கைக்கிளை
பெருந்திணை
பழைய
காலத்தில் பகை அரசனிடம் போர் செய்ய நினைக்கும் ஒருவன் போரின் முதல் கட்டமாகப் பகை
அரசனது பசுக் கூட்டங்களைக் கவர்ந்து செல்வான். இது வெட்சித் திணை எனப்படும். வெட்சி வீரன் வெட்சிப்
பூச் சூடி, போருக்குச் செல்வான்.
பகை அரசன்
கவர்ந்து சென்ற பசுக்கூட்டங்களை அவற்றிற்கு உரியவன் மீட்டுவரச் செய்யும் போர், கரந்தைத் திணை எனப்படும். கரந்தை வீரன் கரந்தைப்
பூச் சூடி, போருக்குச் செல்வான்.
வஞ்சித் திணை:
பகை அரசன்
நாட்டைப் பிடிப்பதற்காக அந்த நாட்டின் மேல் படை எடுத்துச் செல்லுதல் வஞ்சித் திணை எனப்படும். வஞ்சி வீரன், வஞ்சிப் பூச் சூடி, போருக்குச் செல்வான்.
காஞ்சித் திணை:
படை
எடுத்து வரும் பகை அரசனைத் தடுத்துத் தன் நாட்டைக் காக்க நினைக்கும் அரசன்
போருக்குச் செல்லுதல் காஞ்சித்
திணைஎனப்படும். காஞ்சி வீரன் காஞ்சிப் பூச் சூடி, போருக்குச் செல்வான்.
பகை அரசன்
படை எடுத்து வந்து கோட்டை மதிலைச் சூழ்ந்து கொண்டபோது, தன்னுடைய கோட்டையைக் காத்துக் கொள்ள அரசன் போர் செய்தல் நொச்சித் திணை எனப்படும். நொச்சி வீரன் நொச்சிப்
பூச் சூடி, போருக்குச் செல்வான்.
பகை
அரசனுடைய கோட்டையை வெல்லக் கருதிய அரசன் தன் படைகளோடு மதிலைச் சுற்றி முற்றுகை இடுதல் உழிஞைத் திணைஎனப்படும்.
உழிஞை வீரன் உழிஞைப்பூச் சூடி, போருக்குச் செல்வான்.
பகை
அரசர்கள் இருவரும் போர்க் களத்தில் எதிர்
எதிர் நின்று போரிடுதல் தும்பைத் திணை எனப்படும். தும்பை வீரன் தும்பைப் பூச் சூடி, போருக்குச் செல்வான்.
போரில் வெற்றி பெற்ற அரசனைப் புகழ்ந்து பாடுதல் வாகைத்திணை எனப்படும். வெற்றி பெற்றவர்கள் வாகைப் பூவைச் சூடி வெற்றியைக் கொண்டாடுவார்கள்.
பாடாண் திணை:
இதுவரை
சொன்ன புறத்திணைகள் போர் நிகழ்ச்சியை
அடிப்படையாகக் கொண்டவை. பாடாண் திணையில் கொடை, கடவுள் வாழ்த்து, அரசனை வாழ்த்துதல் முதலியவை இடம்பெறும்.
பொதுவியல் திணை:
போரில்
இறந்த வீரர்களுக்கு நடுகல் எடுத்து வழிபடுதல், போரில் இறந்த வீரர்களின் மனைவியர் இரங்கல், நிலையாமை முதலியவை பொதுவியல்
திணையில் இடம்பெறும்.
கைக்கிளைத் திணை:
தன்னை விரும்பாத ஒரு பெண்ணிடம் ஒருவன் காதல் கொள்வதுகைக்கிளைத் திணை எனப்படும். இதை ஒருதலைக்காதல் என்று கூறுவர்.
தன்னை விரும்பாத ஒரு பெண்ணிடம் ஒருவன் காதல் கொள்வதுகைக்கிளைத் திணை எனப்படும். இதை ஒருதலைக்காதல் என்று கூறுவர்.
பெருந்திணை:
தன்னை விட
வயதில் மிகவும் மூத்த பெண் ஒருத்தியிடம்
ஒருவன் காதல் கொள்வது பெருந்திணை எனப்படும். இதைப் பொருந்தாக் காதல் என்று
கூறுவர். கைக்கிளை, பெருந்திணை என்னும் இவ்விரண்டுதிணைகளையும்
அகப்பொருள் திணையாகவும் கூறுவர்.
Subscribe to:
Posts (Atom)
இன்பத்தமிழ் - Class 6 Tamil New Syllabus Term 1
தமிழ் வணக்கம் தற்கால இலக்கிய மரபாகிவிட்டது பாரதிதாசனின் இயற்பெயர் சுப்புரத்தினம். பாரதியாரின் கவிைதகள் மீது கொண்ட பற்றின் காரணமா...
-
* தமிழை பக்தி மொழி (இரக்கத்தின் மொழி) என்று கூறியவர் மறைத்திரு தனிநாயக அடிகள். * சமய மறுமலர்ச்சிக் காலம் என்பதும், பக்தி இலக்கியக் க...






























