26 November, 2014

இன்றைய கேள்விகள் - 26/11/14

1.ஐந்தடி முதல் பன்னிரண்டு அடிகள் வரை பாடப்படும் வெண்பா எது ?
A.குறள்  வெண்பா
B.நேரிசை வெண்பா
C.இன்னிசை வெண்பா
D.பஃறொடை வெண்பா 
{பஃறொடை வெண்பா: 

நான்கு அடிகளுக்கு மேல் அமைந்த வெண்பா பஃறொடை வெண்பா எனப்படும். இவ் வெண்பா அதிகபட்சம் 12 அடிகள் மட்டுமே கொண்டிருக்கும்}

2.விளரியாழ்   எவ்வகைத்திணைக்குரியது ?

A.குறிஞ்சி
B.மருதம்
C.முல்லை
D.நெய்தல் 

3.இரீ இ   - என்பதன் இலக்கணக் குறிப்பு

A.சொல்லிசை அளபெடை
B.செய்யுளிசை அளபெடை
C.இன்னிசை அளபெடை
D.உரிச்சொற்றொடர்

4.பொருந்தாத இணையைக் கண்டறிக
A.குமரிக்கண்டம்  - கண்ணதாசன்
B.தொடுவானம் - வாணிதாசன்
C.தேன்மழை - முடியரசன் 
D.உழவும் தொழிலும்  - மருதகாசி

5.தில்லையாடி வள்ளியம்மை யார் தலைமையில் போராடினார் ?
A.நேரு
B.காந்தி 
C.கோகலே
D.திலகர்

6.தமிழகத்தின் அன்னிபெசன்ட் யார் ?
A.இராமாமிர்தம் அம்மையார்
B.டாக்டர் முத்து லெட்சுமி
C.தருமாம்பாள்
D.நீலாம்பிகை .

7.1963 ல் மேற்கொண்ட கடல் அகழ்வாய்வில் கண்டுபிடிக்கப்பட்ட நகரம்
A.துறையூர்
B.உறையூர்
C.காவிரிப்பூம்பட்டினம்
D.கொற்கை

8.யவனர்கள் என்பவர்கள்
A.கிரேக்கர்கள்
B.உரோமானியர்கள்
C.எகிப்தியர்கள்
D.A   மற்றும்   B

9.சென்னையில் முதல் ஆழ்வார்களால் பாடபெற்ற தலம்
A.மயிலாப்பூர்
B.திருவல்லிக்கேணி 
C.திருவொற்றியூர்
D.திருநின்றவூர்

10.கடற்கரையை ஒட்டியுள்ள பேரூர்கள் எவ்வாறு
அழைக்கப்பட்டன ?
A.பட்டினம் 
B.பாக்கம்
C.கரை
D.காடு


Tnpsc Aptitude Video - 020




Question:

A can complete 2/3 part of work in 10 days. A can complete 1/3 part of the same work in -----------------days
A என்பவர் ஒரு வேலையின் 22/3 பகுதியை 10 நாட்களில் செய்து முடிப்பார் . அதே வேலையின் 1/3 பகுதியை செய்து முடிக்க ஆகும் 
நாட்களின் எண்ணிக்கை -----------
A.3 நாட்கள் 
B4. நாட்கள் 
C.5 நாட்கள் 
D. 6 நாட்கள்


செய்தி உருவாகும் வரலாறு - 8 ஆம் வகுப்பு சமச்சீர்


  •  உலகில் எங்கே ஒரு மூலையில் நடைபெறும் சிறிய நிகழ்வு செய்தி ஆகிறது.
  •  அறிவியல் தொழில்நுடப் வளர்ச்சியின் பெரிய முன்னேற்றத்தின் விளைவாக உடனுக்குடன் செய்திகள் வெளியிடப்படுகின்றன.
  •  ஏன்? என்ன? எப்போது? எப்படி? எங்கே? யார்? எனும் அன்புத் தொண்டர் ஆறுபேர்கள் அறியச் செய்வார் செய்தியினை கூறியவர் - அறிஞர் கிப்ளிங்
  •  ஏன்? என்ன? எப்போது? எப்படி? எங்கே? யார்? எனும் வினாக்களுக்கு விடைகள் இடம்பெறும் பக்கம் - செய்தியின் முகப்புப் பக்கம்.
  •  ஏன்? என்ன? எப்போது? எப்படி? எங்கே? யார்? எனும் வினாக்களுக்கு விடைகள் காணும் பணி - கடலில் மூழ்கி முத்தெடுப்பது போன்ற அரிய பணி.
  •  செய்தியை இனங்கண்ட பின்னர் செய்தியாளர் செய்தியைத் திரட்டும் பணியில் ஈடுபடுகிறார்கள்.
  •  செய்தியைப் பெறுதல் என்பது துப்பறிதல் போன்றது.
  •  செய்தியாளர்கள் அரசின் அறிக்கை, வாணிகக் குழுக்களின் வெளியீடுகள், நிதியமைச்சரின் வரவு செலவுத் திட்டங்கள் போன்றவற்றை படித்து செய்தியைத் திரட்டுகின்றார்கள்.
  •  செய்தியாளர்கள் அறவியல் ஆய்வு முறைகளையும் அவற்றை எப்படி பயன்படுத்துவது என்பதையும் அறிய புள்ளியியல் உதவுகிறது.
  •   பொதுமக்களின் கருத்துக்களை கூறெடுப்பு ஆய்வு வாயிலாக நடத்துவார்கள்.
  •  செய்திகளை உள்ளூர்ச் செய்தியாளர், வெளியூர்ச் செய்தியாளர், சிறப்புச் செய்தியாளர், ஆர்வலர்கள் அரசு அறிக்கைகள், செய்தி நிறுவனங்கள் மூலம் பெறலாம்.
  •  உலகெங்கும் நடக்கும் செய்திகளை கம்பியில்லாத் தந்தி, தொலைபேசி, செல்பேசி, தொலை அச்சு தொலை நகல், வானொலி. தொலைக்காட்சி, கணினி மூலம் உடனுக்குடன் பெறலாம்.
  •  இலண்டன் டைம்ஸ் இதழின் செய்தியாளர் இந்திய சீனப்போரின் போது நேரடியாகப் போர் நடைபெறிகின்ற இடத்திற்குச் சென்று செய்திகளைத் திரட்டினார்கள்.
  •   "இந்தியன் எக்ஸ்பிரஸ்" செய்தியாளர் தில்லியிலுள்ள சிறைச்சாலையின் நிலை பற்றி அறிய தானே சிறைப்பட்டு செய்திகளைத் திரட்டித்தந்து புகழ் பெற்றார்.
  •  விளையாட்டுப் போட்டிகள், புகழ்பெற்ற விசாரணைகள், சட்டப்பேரவை நடவடிக்கைகள், மாநாடுகள், பொதுக்கூட்டங்கள் ஆகியவற்றை காண செய்தியாளர்களுக்குத் தனி இடம் ஒதுக்கியிருப்பர்.
  •  செய்தியின் பகுதிகள் தலைப்புச் செய்தி, முகப்புச்செய்தி, உடல்பகுதிச் செய்தி (மூன்று) எனப் பதிப்புகள் பிரிக்கப்பட்டு விடியற்காலையில் அனைவருக்கும் கிடைக்கும் வகையில் செய்தித்தாள்கள் அச்சடிக்கப்படுகின்றன.


இதழியல் கலைச்சொற்கள்:

 Bulletin - சிறப்புச்செய்தி இதழ்

 Deadline - குறித்த காலம்

 Editorial - தலையங்கம்

 Fake News - பொய்ச்செய்தி

 Flash News - சிறப்புச் செய்தி

 Folio No - இதழ் எண்

 Green Proff - திருத்தப்படாத அச்சுப்படி

 Layout - செய்தித்தாள் வடிவமைப்பு

25 November, 2014

இன்றைய கேள்விகள் - 25/11/14

1. ராஜீவ் ஆவாஸ் யோஜனாவின் பிரதான குறிகோளானது
நமது நாட்டினை இதன்படி கொண்டு வருவதாகும் .
A.விவசாயிகளுக்கு மானியம்
B.சேரிகள் இல்லாமை
C. எல்லாருக்கும் கல்வி
D.தீண்டாமை ஒழிப்பு

2 குழந்தைகளுக்கு எந்த நோய் புரதங்களின் குறைபாட்டால்
ஏற்படுகிறது ?
A.மராஸ்மஸ் 
B.பெலாக்ரா
C.பெரி - பெரி
D.ரிக்கெட்ஸ்

3. 163 ஆண்டு கால பழமை வாய்ந்த தந்தி சேவை எப்போது
நிறுத்தப்பட்டது ?
A.ஜூன் 2013
B.ஜூலை 2013
C.ஜனவரி 2013
D.ஆகஸ்ட் 2013

4.மகளிர் தேசிய ஆணையம் ---------இல் அமைக்கப்பட்டது .
A.1992
B.1993
C.1993
D.1995

5.' PLAYING TO WIN ' என்ற நூலை எழுதியவர் ?
A.சாய்னா நேவால் 
B.ஆதித்யா ஜோஷி
C.ஸ்டான்சிலால் வாரிங்கா
D.மோனிகா செலஸ்

6. சர்வோதயா தினம் அனுசரிக்கப்படும் நாள்
A. 2 , அக்டோபர்
B. 30, ஜனவரி 
C.19, நவம்பர்
D.21,மே

7.  சார்க் அமைப்பு தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு
A.1995
B.1985 
C.1975
D.1965

8.  2014 ஆம் ஆண்டுக்கான தமிழக அரசின் ஒளவையார் விருதினைப்
பெற்றவர் யார் ?
A.டாக்டர் . பிரேமா நந்தகுமார்
B.டாக்டர் .மாதங்கி ராமகிருஷ்ணன்
C.டாக்டர் .வி . சாந்தா
D.டாக்டர் . விசாலாட்சி நெடுஞ்செழியன்

9. 16-வது மக்களவை சபாநாயகர் யார்?
A.மீரா குமார்
B.சுமித்ரா மகாஜன் 
C.பிரதீபா பாடீல்
D.ஷீலா தீட்சித்

10. 101 -  வது இந்திய அறிவியல் காங்கிரஸ் மாநாடு
     நடைபெற்ற மாநிலம்
A.தமிழ்நாடு
B.கேரளா
C.ஜம்மு காஷ்மீர்
D.ஆந்திரா

11.9-வது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு  2015 - ல்
எங்கு நடைபெற உள்ளது ?
A.சிங்கப்பூர்
B.மலேசியா
C.மொரிசியஸ்
D.சென்னை
(அதிகாரபூர்வமான 9-வது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு ஜனவரி 29 முதல் பிப்ரவரி 1 2015 வரையிலும் கோலாலம்பூரில் நடைப்பெறவுள்ளது. உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம், மலேசிய உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம், மலாயாப் பல்கலைக்கழக இந்திய ஆய்வியல் துறை ஆகியவற்றின் கூட்டு முயற்சியாக இந்நிகழ்வு நடைப்பெறவுள்ளது)

12. 2014  ஆம் ஆண்டு G -  20 மாநாடு நடைபெற்ற நாடு
A.டொரன்டொ
B.பிரிஸ்பேன்
C.லாஸ் கெபொஸ்
D.அன்டால்யா

13. 18- வது சார்க் மாநாடு நடைபெறும் இடம்
A.திம்பு
B.டாக்கா
C.காத்மண்டு
D.நியூ டெல்லி

14. உலகில் மிக அதிக அளவில் தோரியத்தை உற்பத்தி
செய்யும் நாடு 
A.கனடா 
B.ஆஸ்திரேலியா 
C.அமெரிக்கா 
D.இந்தியா 
( உலகின் மிகப்பெரிய தோரிய இருப்பு – 6,50,000 டன்கள் – இந்தியாவில் இருக்கலாம் என IAEA அறிக்கையில் வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது (IAEA என்பது ச‌ர்வதேச அணு சக்தி முகமை. அணுசக்தித் துறையில் உலகின் ஒத்துழைப்பு மையம். இது 1957ல் ‘அமைதிக்காக அணுக்கள்’ என்ற அமைப்பாக ஐ.நா. குடும்ப அங்கமாகத் தொடங்கப்பட்டது.) மொத்த தோரிய இருப்பில் இது நான்கில் ஒரு பங்கை விட அதிகம்.)

15. தற்போதைய இந்தியாவின்  சாலிசிடர் ஜெனெரல் யார் ?
A.கே . சி . பாலகிருஷ்ணன் 
B.ரஞ்சித்குமார்
C.ஃ பாலி நாரிமன் 
D.பி பி மல்ஹோத்ரா





Tnpsc Aptitude Video 019



அரசுக்கு வழிகாட்டும் நெறிமுறைகள்

• இது பகுதி IV-ல் அமைந்துள்ளது.
• Art, 36 முதல் 51 வரை காணப்படுகிறது.
• அயர்லாந்து அரசியலமைப்பிலிருந்து எடுத்தாளப்பட்டது.
• Art 39 (D) சம வேலைக்கு சம கூலி.
• Art 40 கிராமப் பஞ்சயத்து.
• Art 41 முதுமை நோயுற்ற நிலையில் அரசு உதவி.
• Art 42 பெண்களுக்கு பேறுகால விடுப்பு.
• Art 43 வாழ்க்கைக்கான கூலி.
• Art 44 நாடு முழுவதும் பொது சிவில் சட்டம்.
• Art 45-14 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு இலவசக் கட்டாயக் கல்வி.
• Art 46 எஸ்.சி., எஸ்.டி.க்கு கல்வி, பொருளாதார வசதி
• Art 47 வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துதல்
• Art 48 பசுவதை தடுத்தல்
• Art 49 தேசிய நினைவுச்சின்னங்களைப் பாதுகாத்தல்
• Art 50 நிர்வாகத்திலிருந்து நீதித்துறையை பிரித்தல்
• Art 51 உலக அமைதியில் நாட்டம் கொள்ளுதல்.

24 November, 2014

இன்றைய கேள்விகள் - 24/11/14

1. தமிழ்நாட்டின் காலநிலை --------------- வகையைச் சேர்ந்தது .
A.அயன மண்டல 
B.மிதவெப்பமண்டல
C.துருவப்பகுதி
D.ஆர்டிக் பகுதி

2. சதுப்பு நிலக்காடுகள் காணப்படுகின்ற  இடம்
A.வேதாரண்யம்
B.கோயம்புத்தூர்
C.புதுக்கோட்டை
D.நீலகிரி

3.தமிழ்நாட்டின் நெல் ஆராய்ச்சி மையம் ------------ இல்
உள்ளது.
A.ஆடுதுறை 
B.கடலூர்
C.நெய்வேலி
D.சென்னை

4. தமிழ்நாட்டின் நெசவுத் தலை நகரம் என்ற சிறப்புப்
   பெயரைப்பெற்ற நகரம் எது ?
A.சேலம்
B.கரூர் 
C.கோயம்புத்தூர்
D.திருநெல்வேலி

5. சிறிய துறைமுகம் என்பது --------- ஆகும்
A.பொருள் சேமித்து அனுப்பும் துறைமுகம்
B.வரிச்சலுகை பெற்ற துறைமுகம்
C.நங்கூரம் பாய்ச்சும் வசதி பெற்ற துறைமுகம் 
D.உயர் அலை துறைமுகம்

6. தமிழ்நாட்டில் கம்பம் பள்ளத்தாக்கில் --------------------
 வகை மண் அரிப்பு ஏற்ப்படுகிறது .
A.காற்று 
B.ஆறு
C.பனியாறு
D.அலை

7. தமிழ் நாட்டில் எத்தனை தேசிய பூங்காக்கள் உள்ளன ?
A.    5
B.    6
C.    7
D.    8

8. சாம்பல் நிற அணில்கள் சரணாலயம் உள்ள மாவட்டம்
A.நீலகிரி
B.சென்னை
C.திண்டுக்கல்
D.விருதுநகர் 

9. தேவை விதி இதற்கு மட்டும் பொருந்தும்

A.அத்தியாவசியப்  பண்டங்கள் 
B.வசதிப்பண்டங்கள்
C.ஆடம்பரப்பண்டங்கள்
D.மிகவும் விலை குறைவான பண்டங்கள்

10. டாக்டர் . ஆத்மராம் பாண்டுரங் தோற்றுவித்த சபை
A.பிரம்ம சமாஜம்
B.ஆரிய சமாஜம்
C.பிரார்த்தனா சமாஜம் 
D.ஆத்மீய சபா

11. சுத்தி இயக்கத்தைத் தோற்றுவித்தவர் 
A.அன்னிபெசன்ட் 
B.தயானந்த சரஸ்வதி 
C.இராமலிங்க அடிகள் 
D.நாராயண குரு 

12."கடவுள் " என்ற பொருளைத் தரும் சொல் 
A.தியோங் 
B.சோபாஸ் 
C.தியோசோபி 
D.சுதேசி 

13."மகத் மார்ச் " என்ற பேரணியை நடத்தியவர் -------
A.  பி.ஆர்.அம்பேத்கர் 
B.தந்தை பெரியார் 
C.இராஜாராம் மோகன் ராய் 
D.ஸ்ரீ நாராயண குரு 

14. சூரத் மாநாடு நடந்த ஆண்டு 
A. 1906
B. 1907
C.1909
D.1911

15. மதராஸ் மகா ஜன சபையின் முதல் தலைவர் ----------
A.பி . இரங்கையா நாயுடு 
B.இராஜாஜி 
C.காமராஜர் 
D.பாரதியார் 

இந்திய அரசியலமைப்புச்சட்டத்தில் முக்கிய அம்சங்கள் பெறப்பட்ட நாடுகள்

1. அடிப்படை உரிமைகள் (Fundamental Rights) அமெரிக்கா.

2. முகப்புரை (Preamble) அமெரிக்கா.

3.நீதிபதிகள் பதவி நீக்கம் (Removal of judges of SC – HC) அமெரிக்கா.

4.தனித்தியங்கும் நீதித்துறை  அமெரிக்கா.

5.நீதிப்புனராய்வு (Judicial Review) அமெரிக்கா.

6. அடிப்படைக் கடமைகள் (Fundamental Duties) ரஷ்யா.

7.ஐந்தாண்டுத் திட்டம் (Five Year Plan) ரஷ்யா.

8.வழிகாட்டு நெறிமுறைகள் (DPSP) அயர்லாந்து.

9. ராஜ்யசபை உறுப்பினர் நியமனம் (Nomination of Rajyasabha Member) அயர்லாந்து.

10. குடியரசுத் தலைவர் தேர்தல் முறை (Method of election of the president) அயர்லாந்து.

11.பாராளுமன்ற முறை (Parlimentary Type) இங்கிலாந்து.

12. சட்டத்தின் ஆட்சி (Rule of Law) இங்கிலாந்து.

13.ஒற்றைக் குடியுரிமை (Single Citizenship) இங்கிலாந்து.

14. கீழ் சபைக்கு அதிக அதிகாரம் (Lower house more powerful) இங்கிலாந்து.

15. பாராளுமன்ற இரு அவை (Bicameral Parliament) இங்கிலாந்து.

16.மக்களவை தலைவர் (Speaker in the Lok Sabha) இங்கிலாந்து.

17.கூட்டாட்சி முறை (Federal System) கனடா

18. நெருக்கடி நிலையின் போது அடிப்படை உரிமைகள் ரத்து ஜெர்மன்.

19. பொதுப்பட்டியல் (Concurrent List) ஆஸ்திரேலியா.

20.முகப்புரையின் மொழி (Language of the Preamble) ஆஸ்திரேலியா.

21.மத்திய மாநில உறவுகள் (Centre State Relations) ஆஸ்திரேலியா

22.அரசியலமைப்பு சட்ட திருத்தம் (Amendment of Constitution) தென் ஆப்பிரிக்கா.

உரைநடை: மகள் இந்திராவுக்கு நேரு எழுதிய கடிதம்



  •   நாட்டின் விடுதலைக்குப் பின் இந்தியாவின் முதல் பிரதமர் - ஜவர்கர்லால் நேரு
  •   நேருவின் துணைவியார் பெயர் - கமலா
  •   தாகூர் ஆரம்பித்த விஸ்வபாரதி கல்லூரி மேற்குவங்கத்தில் சாந்தி நிகேதன் என்னுமிடத்தில் உள்ளது.
  •   நேரு தன் மகள் இந்திரா காந்திக்கும் 42 ஆண்டுகள்(1922-1964) கடிதம் எழுதியுள்ளார்.
  •   பாடப்பகுதியில் உள்ள கடிதம் அல்மோரா மாவட்டச் சிறையில் இருக்கும் போது 1935 பிப்ரவரி 22 அன்று எழுதப்பட்டது.
  •   நேருவின் கடிதம் இங்கிலாந்தில் உள்ள கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் உள்ளது.
  •   நேரு விரும்பி படித்தது - ஆங்கில நூல்கள்.
  •   போரும் அமைதியும் யாருடைய நாவல் - டால் ஸ்டாய்
  •   அல்மோரா சிறை உள்ள இடம் - உத்திராஞ்சல்.
  •   கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகம் உள்ள இடம் - இங்கிலாந்து.
  •   இந்திரா காந்தி படித்த பல்கலைக்கழகம் - விஸ்வபாரதி.

 குறிப்பு:

  •   சேக்ஸ்பியர் - ஆங்கில நாடக ஆசிரியர்.
  •   மில்டன் - ஆங்கில கவிஞர்.
  •   பிளேட்டோ - கிரேக்கச் சிந்தனையாள்ர்.
  •   காளிதாசர் - வடமொழி நாடக ஆசிரியர் (சகுந்தலம் நாடகம்).
  •   டால்ஸ்டாய் - இரஷ்ய நாட்டு எழுத்தாளர் (போரும் அமைதியும் நாவல் - உலகில் மிகச்சிறந்த நாவல்களில் ஒன்று என இதனை நேரு குறிப்பிடுகிறார்.
  •   பெர்னாட்ஷா - ஆங்கில நாடக ஆசிரியர்.
  •   பேட்ரண்ட் ரஸ்ஸல் - சிந்தனையாள்ர், கல்வியாளர்(நேருவுக்கு மிகவும் பிடித்த கல்விச் சிந்தனையாளர்).
  •   கிருபாளினி - விசுவபாரதியில் பணிபுரிந்த பேராசிரியர்.
  •   நேரு மகளுக்கு எழுதிய கடிதத்தில்  அதிகம் கூறியது - நூல்கள் பற்றி.
  •   ஆயிரம் முகங்கள் கொண்டது வாழ்க்கை. அதனைப் புரிந்துகொள்ளவும், முறையாக வாழவும் புத்தகப் படிப்பு இன்றியமையாதது என்றவர் - நேரு
  • எவ்வளவு துன்பமான நேரத்திலும், புத்தகம் படிக்கும் பழக்கத்தைக் கைவிடக் கூடாது என்று கடிதத்தின் மூலம் வாழ்க்கைப் பண்பை தெரிவித்தவர் - நேரு

23 November, 2014

இன்றைய கேள்விகள் - 23/11/14

1.தூற்றும் -பிரித்தெழுதுக
A.தூற்று + உம்
B.தூற்றி +உம் 
C.தூ + ஊற்றும் 
D.தூற்+றி+உம்

2.பொருத்துக 
சொல்               -           பொருள் 
a.தொடை                 1.பெண்யானை 
b.நறை                       2 .மாலை 
c.பிடி                           3.தேனீ
d.மதுகரம்                 4.  தேன்
         a         b        c         d
A.    2          4       3         1
B.    2          1       3         4
C.    3          2       1         4
D.    2          4       1         3

3.'மேழி பிடிக்கும் கை '   மேழி என்பதன் பொருள் யாது ?
A.வேல் 
B.வில் 
C.ஏர்
D.செங்கோல் 

4. கீழ்க்கண்டவற்றில் பொருந்தா இணையைத் தேர்க 
A.கனகம்            -  பொன் 
B.கடுகி                -  தாமதமாக 
C.நிவேதனம்    -  படையலமுது 
D.திரு                  -  செல்வம் 

5.பொருத்துக 
           நூல்                       -             ஆசிரியர்              
a.திரிகடுகம்                         1.பெருவாயின் முள்ளியார் 
b.பழமொழி                         2 .காரியாசான் 
c.ஆசாரக்கோவை            3.நல்லாதனார் 
d.சிறுபஞ்சமூலம்             4.  மூன்றுறையறையனார்
         a         b        c         d
A.    2          3       1         4
B.    3          4       1         2
C.    4          2       3         1
D.    4          3       2         1

6.சங்கரதாஸ் சுவாமிகள் ஒரே இரவில் எழுதிய நாடக நூல் 
A.வள்ளிதிருமணம் 
B.சதிஅனுசுயா 
C.வீர அபிமன்யு 
D.பவளக்கொடி
(http://www.tamilvu.org/courses/diploma/d041/d0413/html/d0413557.htm
சங்கரதாஸ் சுவாமிகள்
இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் நாடகப்பணி புரிந்து, தமிழ் நாடகத்தைச் சிறக்கச் செய்த துறவி இவர். தெருக்கூத்து வகை புகழ்பெற்றுத் திகழ்வதைப் பார்த்து அதே பாணியில் நாடகங்களை எழுதி மேடையேற்றிப் புகழ் பெற்றார். இவருடைய நாடகங்களில் பாடல்கள் மிகுதியாக இருக்கும். பாடல், பேச்சு ஆகிய இரண்டும் செந்தமிழ் நடையில், இலக்கணப் பிழையின்றிக் காணப்படும். அவை புராணக் கதைகளை ஒட்டியவை; நீதி போதனை மிக்கவை. பிரகலாதன், சிறுத்தொண்டர், பவளக்கொடி, லவகுசா போன்ற நாற்பது நாடகங்களை எழுதி இவர் மேடையேற்றியுள்ளார்.
நூற்றுக்கு மேற்பட்ட பாடல்களடங்கிய ‘அபிமன்யு’ நாடகத்தை ஒரே இரவில் எழுதினார் . இவர் காலத்திற்குப் பிறகு சதி சுலோசனா, சதி அனுசூயா, அபிமன்யு சுந்தரி போன்ற சில நூல்கள் மட்டுமே அச்சிடப்பட்டுள்ளன. இவரை இன்றைய ‘தமிழ் நாடகத் தந்தை’ என்று போற்றுகிறார்கள்.
)

7. 'புலவரேறு ' என்று போற்றப்பட்டவர் 
A.நாமக்கல் கவிஞர் 
B.கவிமணி 
C.அ . வரதநஞ்சையப் பிள்ளை 
D.வேதநாயக சாஸ்திரியார் 

8.' பகட்டு ' என்பதன் எதிர்ச்சொல் என்ன ?
A.எளிமை 
B.ஆடம்பரம் 
C.இனிமை 
D.உரிமை 

9. ' புகலு தற்கரி தடவியுண் டவ்வழி பொருந்தி ' 
     ' அடவி '- எதிர்ச்சொல் காண்க 
A.அடவி    X காடு 
B.அடவி   X   நாடு 
C.அடவி   X  மண் 
D.அடவி  X  விண் 

10.வழூஉச் சொல்லைக் கண்டெழுதுக 
A.அருகில் 
B.ஆற்றங்கரை 
C.சுவற்றில் 
D.எண்ணெய்

இன்பத்தமிழ் - Class 6 Tamil New Syllabus Term 1

தமிழ் வணக்கம்   தற்கால இலக்கிய மரபாகிவிட்டது  பாரதிதாசனின் இயற்பெயர்   சுப்புரத்தினம்.  பாரதியாரின் கவிைதகள்  மீது கொண்ட  பற்றின் காரணமா...