04 November, 2014
03 November, 2014
01 November, 2014
31 October, 2014
பழமொழி நானூறு - 6 ஆம் வகுப்பு
ஆற்றவும் கற்றார்அறிவுடையார் அஃதுடையார்
நாற்றிசையும் செல்லாத நாடில்லை - அந்நாடு
வேற்றுநா டாகா தமவேயாம் ஆயினால்
ஆற்றுணா வேண்டுவ தில்.
மிகுதியும் கற்கவேண்டிய நூல்களை அறிந்தவர்களே அறிவுடையார் எனப்படுவார் .அவ்வறிவு படைத்தவர்களது (புகழ்) நான்கு திசையின் கண்ணும் பரவாத நாடுகளில்லை,அந்த நாடுகள் அயல் நாடுகளாகா அவ்வறிவுடையோர் நாடுகளேயாம்.ஆகையால் வழியில் உண்பதற்கு உணவு கொண்டுசெல்ல வேண்டியதில்லை
நூல் குறிப்பு:
- பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று.
- நானூறு பாடல்களை கொண்டது.
- ஒவ்வொரு பாடலிலும் ஒரு பழமொழி உண்டு.
- ஆற்றுணா வேண்டுவது இல் என்பதற்கு கற்றவனுக்கு கட்டுச்சோறு வேண்டாம் என்பது பொருள்.
ஆசிரியர் குறிப்பு:
- இந்நூலின் ஆசிரியர் = முன்றுறை அரையனார்.
- முன்றுறை என்பது ஊர்பெயர்.
- அரையன் என்ற சொல் அரசனைக் குறிக்கும்.
- முன்றுறை என்ற ஊரை ஆண்ட அரசனாக இருக்கலாம் அல்லது அரையன் என்பது புலவரின் குடிபெயராக இருக்கலாம்.
30 October, 2014
அழ. வள்ளியப்பா
உயர்ந்த கருத்துக்களுக்கும் , எளிய வார்த்தைகளுக்கும், ஓசை நயத்துக்கும் சொந்தக்காரர் கவிஞர் அழ. வள்ளியப்பா. குழந்தை இலக்கியங்கள் படைத்த மிக முக்கியமான கவிஞர். இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கான பாடல்களை எழுதியவர்.
’அம்மா இங்கே வா... வா...
ஆசை முத்தம் தா... தா...’
‘மாம்பழமாம் மாம்பழம்...
மல்கோவா மாம்பழம்...’
‘கை வீசம்மா கை வீசு...
கடைக்குப் போகலாம் கை வீசு...’
- தலைமுறைகள் தாண்டினாலும் மாறாத குழந்தைகளின் மனநிலையைப் புரிந்து கொண்டு இது போன்ற எண்ணற்ற எளிய பாடல்களை எழுதியவர் குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா.
பிறப்பு: புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள இராயவரத்தின் நகரத்தார் சமூகத்தைச் சேர்ந்த அழகப்ப செட்டியார் - உமையாள் ஆச்சி தம்பதியருக்கு மகனாக 07.11.1922 பிறந்தார். பெற்றோர் இவருக்குச் சூட்டிய பெயர் வள்ளியப்பன்
இதழ் ஆசிரியர் பணி: 1951 முதல் 1954 வரை பூஞ்சோலை என்ற இதழுக்கும், ஒய்வு பெற்ற பின்பு 1983 முதல் 1987 வரை கல்கி வெளியீடான கோகுலம் இதழில் ஆசிரியராக பணியாற்றினார்.
குழந்தை எழுத்தாளர் சங்கம்: குழந்தை எழுத்தாளர்கள் பலரைத் திரட்டி 1950-ல் குழந்தை எழுத்தாளர்கள் சங்கம் என்ற அமைப்பை உருவாக்கினார்.
எழுதிய நூல்கள்:
மலரும் உள்ளம் - 1
பாப்பாவுக்குப் பாட்டு
சின்னஞ்சிறு பாடல்கள்
சுதந்திரம் பிறந்த கதை
ஈசாப் கதைப் பாடல்கள்
ரோஜாச் செடி
உமாவின் பூனைக் குட்டி
அம்மாவும் அத்தையும்
மணிக்குமணி
மலரும் உள்ளம் - 2
கதை சொன்னவர் கதை
மூன்று பரிசுகள்
எங்கள் கதையைக் கேளுங்கள்
நான்கு நண்பர்கள்
பர்மாரமணி
எங்கள் பாட்டி
மிருகங்களுடன் மூன்று மணி
நல்ல நண்பர்கள்
பாட்டிலே காந்தி கதை (பாடல் தொகுதி)
குதிரைச் சவாரி
நேரு தந்த பொம்மை
நீலாமாலா
பாடிப் பணிவோம் (பாடல் தொகுதி)
வாழ்க்கை விநோதம்
சின்னஞ்சிறு வயதில்
பெரியோர் வாழ்விலே சுவையான நிகழ்ச்சிகள்
28 October, 2014
பரிதிமாற் கலைஞர்
- பரிதிமாற் கலைஞர் (வி. கோ. சூரியநாராயண சாஸ்திரியார்), ஒரு தமிழறிஞரும், நூலாசிரியரும், தனித்தமிழ் இயக்கத்தில்முதன்மையான பங்கு வகித்தவர்களில் ஒருவரும் ஆவார்.
- இவர் உயரிய செந்தமிழ் நடையில் பேசுவதிலும் எழுதுவதிலும் வல்லவர். நாடகப் புலமை சான்றவர்.
- 'தமிழ் மொழி வரலாறு' போன்ற ஆய்வு நூல்களையும், கலாவதி, ரூபாவதி போன்ற நாடக நூல்களையும், நாடக இலக்கணமான நாடகவியலையும் இயற்றிவர்.
- இவருக்குப் பெற்றோர் இட்ட பெயர் சூரியநாராயணன் என்பது. பின்னாளில் சூரியநாராயண சாஸ்திரியர் என்று அழைக்கப்பட்ட இவர், தமிழ் மேல் கொண்ட பற்றினால் தனது பெயரை வடமொழி கலக்காத தூய தமிழில் பரிதிமாற் கலைஞர் என்று மாற்றிக்கொண்டார்.
- இராவ் பகதூர் சி.வை. தாமோதரம் பிள்ளை அவர்களால் திராவிட சாஸ்திரி என சிறப்பிக்கப்பட்டார் .
பரிதிமாற் கலைஞர் பல நூல்களை எழுதியுள்ளார். அவற்றில் குறிப்பிடத்தக்க நூல்கள் பின்வருமாறு:
- ரூபவதி
- கலாவதி
- மான விஜயம்
- தனிப்பாசுரத் தொகை
- பாவலர் விருந்து
- மதிவாணன்
- நாடகவியல்
- தமிழ் விசயங்கள்
- தமிழ் மொழியின் வரலாறு.
- சித்திரக்கவி விளக்கம்
பதிப்பித்த நூல்கள் :
1.சயம்கொண்டாரின் கலிங்கத்துப்பரணி (1898)
2. மகாலிங்கையர் எழுதிய இலக்கணச்சுருக்கம் (1898)
3.புகழேந்திப்புலவரின் நளவெண்பா (1899)
4.உத்தரகோச மங்கை மங்களேசுவரி பிள்ளைத்தமிழ் (1901)
5.தனிப்பாசுரத்தொகை (1901)
ஞானபோதினி என்னும் இதழை பரிதிமாற் கலைஞர் நடத்தினார்
27 October, 2014
திருக்குற்றாலக் குறவஞ்சி - 6 ஆம் வகுப்பு சமச்சீர்
வானரங்கள் கனிகொடுத்து மந்தியொடு கொஞ்சும்
மந்தி சிந்து கனிகளுக்கு வான்கவிகள் கெஞ்சும்
கானவர்கள் விழியெறிந்து வானவரை அழைப்பர்
கவனசித்தர் வந்து வந்து காயசித்தி விளைப்பர்
தேனருவித்திரை எழும்பி வானின்வழி ஒழுகும்
செங்கதிரோன் பரிக்காலும் தேர்க்காலும் வழுகும்
கூனல் இளம்பிறைமுடித்த வேணியலங்காரர்
குற்றாலத் திரிகூடமலை எங்கள் மலையே!
ஓடக் காண்பது பூம்புனல் வெள்ளம்
ஒடுங்கக் காண்பது யோகியர் உள்ளம்
வாடக் காண்பது மின்னார் மருங்கு
வருந்தக் காண்பது சூலுளை சங்கு
போடக் காண்பது பூமியில் வித்து
புலம்பக் காண்பது கிண்கிணிக் கொத்து
தேடக் காண்பது நல்லறம் கீர்த்தி
திருக்குற் றாலர்தென் ஆரிய நாடே
நூல் குறிப்பு :
திருக்குற்றாலக் குறவஞ்சி தமிழ்ச் சிற்றிலக்கியங்களுள் ஒன்று. தமிழ்நாட்டின் தென்கோடியில் தென்காசிக்கு அருகில் அமைந்திருக்கும் குற்றாலம் எனும் ஊரின் சிறப்பைப் புகழ்ந்து அங்குள்ள ஈசரான குற்றாலநாதரைப் போற்றி, தெய்வக் காதல் பற்றிய கற்பனையை அமைத்துப் பாடப்பெற்ற நூல் ஆகும்.
குறவஞ்சி நாடகம் என்று போற்றப்படும் இந்நூல் வடகரை அரசனான சின்னணஞ்சாத் தேவரின் அவைப்புலவராக விளங்கிய திரிகூடராசப்பக் கவிராயர் என்பவரால் இயற்றப்பட்டது. இவர் திருநெல்வேலி மாவட்டம் தென்காசிக்கு அருகில் உள்ள மேலகரம் என்னும் ஊரைச் சார்ந்தவர் (இவர் திருவாவடுதுறை ஆதினத் தலைவராக விளங்கிய சுப்பிரமணிய தேசிகரின் சகோதரர் ஆவார்). திருக்குற்றாலநாதாரின் முன்னிலையில் அரங்கேற்றப்பட்ட இந்நூல் அன்றைய மதுரை மன்னனான முத்துவிஜரங்க சொக்கநாத நாயக்கரின் பாராட்டையும் பரிசையும் பெற்றது.
சொற்பொருள்:
வானரங்கள் – ஆண் குரங்குகள்
மந்தி – பெண் குரங்குகள்
வான்கவிகள் – தேவர்கள்
காயசித்தி – இறப்பை நீக்கும் மூலிகை
பரிக்கால் – குதிரை
வேணி – சடை
மின்னார் – பெண்கள்
மருங்கு – இடை
Subscribe to:
Posts (Atom)
இன்பத்தமிழ் - Class 6 Tamil New Syllabus Term 1
தமிழ் வணக்கம் தற்கால இலக்கிய மரபாகிவிட்டது பாரதிதாசனின் இயற்பெயர் சுப்புரத்தினம். பாரதியாரின் கவிைதகள் மீது கொண்ட பற்றின் காரணமா...
-
* தமிழை பக்தி மொழி (இரக்கத்தின் மொழி) என்று கூறியவர் மறைத்திரு தனிநாயக அடிகள். * சமய மறுமலர்ச்சிக் காலம் என்பதும், பக்தி இலக்கியக் க...






















