09 October, 2014

ஒளி நுண்ணோக்கி ஆய்வு: 3 விஞ்ஞானிகளுக்கு வேதியியல் நோபல் பரிசு


2014ஆம் ஆண்டு வேதியியலுக்கான நோபல் பரிசை அமெரிக்க விஞ்ஞானிகள் இருவரும், ஜெர்மன் விஞ்ஞானி ஒருவரும் கூட்டாக வென்றுள்ளனர்.

அமெரிக்காவின் ஆஷ்பர்னில் உள்ள ஜேன்லியா ஃபார்ம் ரிசர்ச் கேம்பஸைச் சேர்ந்த விஞ்ஞானி எரிக் பெட்ஸிக், ஜெர்மனியின் ஹைடல்பர்க் புற்றுநோய் ஆய்வு மையம் மற்றும் மாக்ஸ் பிளாங்க் உயிர் பவுதீக வேதியியல் கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானி ஸ்டீஃபன் ஹெல், அமெரிக்காவின் ஸ்டான்போர்டு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த வில்லியம் மோர்னர் ஆகியோர் 2014ஆம் ஆண்டுக்கான வேதியியல் நோபல் பரிசை பகிர்ந்துள்ளனர்.

உயர் தொழில்நுட்ப புளூரசென்ஸ் மைக்ராஸ்கோப்-ஐ மேம்படுத்த மகத்தான பங்களிப்பு செய்ததற்காக ராயல் ஸ்வீடிஷ் அகாடமி ஆஃப் சயன்சஸ் இந்த நோபல் பரிசை வழங்கியுள்ளது.

நீண்ட காலமாக ஆப்டிகல் மைக்ராஸ்கோப் என்பது வரம்புகளுக்குட்பட்ட அளவிலேயே பயன்படுத்தப்பட முடிந்துள்ளது. ஆய்வு செய்யும் பொருள் குறித்து ஒளியின் பாதி அளவு அலைநீளத்திற்கு மேல் உயர்தெளிவை பெற முடியாத நிலை இருந்தது. 

தற்போது இந்த விஞ்ஞானிகள் புளூரசெண்ட் மூலக்கூறுகள் உதவியுடன் இந்த வரம்பைக் கடந்து ஒளி நுண்ணோக்கி தொழில்நுட்பத்தில் நேனோ பரிமாணத்தை எட்ட பங்களிப்பு செய்துள்ளனர். 

இந்த 3 விஞ்ஞானிகள் செய்த சாதனை என்ன? அதனால் ஏற்படும் பயன்கள் என்ன?

ஆப்டிகல் மைக்ராஸ்கோப் 0.2 மைக்ரோமீட்டர்களுக்கு அதிகமாக தெளிவை ஒருபோதும் அளிக்காமல் இருந்து வந்தது. தற்போது புளூரசென்ஸ் மூலக்கூறுகளை பயன்படுத்தி இந்த 3 விஞ்ஞானிகளும் இந்த வரம்பை உடைத்துள்ளனர்.

இதனால் செல்களின் உள்ளே தனிப்பட்ட மூலக்கூறுகளின் ஊடாட்டத்தை சிறப்பாக அறுதியிட முடியும். நோய்களுக்கு தொடர்பான புரோட்டீன்களை இப்போது நுண்ணோக்கி மூலம் பார்க்க முடியும், மேலும் செல் பிரிவதை மிகவும் நுண்ணிய நேனோ மட்டத்தில் தடம் காண முடியும்.

17ஆம் நூற்றாண்டில் விஞ்ஞானிகள் மைக்ராஸ்கோப் மூலம் வாழும் நுண்ணுயிர்கள் பற்றி ஆராய்ச்சி செய்த போது அவர்கள் கண்கள் முன் புதிய உலகமே திறந்தது. ரத்தத்தின் சிகப்பு செல்கள், பாக்டீரியா, யீஸ்ட் செல்கள், உயிரணுக்கள் ஆகியவை பற்றிய உலகம் அவர்கள் கண் முன்னே விரிந்தன.

இதுதான் ‘மைக்ரோ பயாலஜி’ என்ற ஒரு பெரிய விஞ்ஞானத் துறையாக வளர்ச்சி கண்டது. பிற நுண்ணோக்கிகளுக்கான கண்டுபிடிப்புகளும் தொடர்ந்து வந்த போதிலும் சில வேளைகளில் எலக்ட்ரான் மைக்ராஸ்கோப் செல்களையே அழிப்பதாக அமைந்தது.

இந்த நிலையில் மைக்ராஸ்கோப்பின் வரம்புகளும் தெரியவந்தது. அதாவது ஒளியின் அலைநீளத்திற்கு தோராயமாக பாதியளவு உள்ள நுண்ணுயிரிகளை, (அதாவது 0.2 மைக்ரோமீட்டர்கள்) மைக்ரோஸ்கோப்பினால் சரியாகப் பார்க்க முடிவதில்லை. 

செல்லின் உள்ளே, தனிப்பட்ட புரோட்டீன் மூலக்கூறுகளின் ஊடாட்டங்களை மரபான நுண்ணோக்கியினால் சரியாகக் கணிக்க முடியாமல் இருந்தது.

உதாரணத்திற்குக் கூற வேண்டுமென்றால், ஒரு நகரத்தின் கட்டிடங்களையே பார்க்க முடிந்தது என்று கூறலாம். கட்டிடங்களுக்குள் மனிதர்கள் எப்படி வாழ்கிறார்கள் அல்லது எப்படி தங்களுக்குள் உறவாடுகிறார்கள் என்பதை அறிய முடியவில்லை என்று கூறலாம். 

ஒரு செல் எப்படி செயல்படுகிறது என்பதை அறிய தனிப்பட்ட மூலக்கூறுகள் அதனுள் எப்படி ஊடாடுகின்றன என்பதை அறுதியிடுவது அவசியம்.

தற்போது எரிக் பெட்ஸிக், ஸ்டீபன் ஹெல் மற்றும் வில்லியம் மோர்னர் ஆகியோரது புளூரசண்ட் மூலக்கூறுகள் உதவியுடன் செய்யப்பட்ட ஆய்வில் மட்டுப்படுத்தப்பட்ட பயன்பாட்டில் இருந்த மைக்ராஸ்கோப், மேலும் நுண்ணிய மூலக்கூறுகளை ஆய்வு செய்யும் நேனோஸ்கோப்பாக வளர்ச்சியடைந்துள்ளது.

இதன் மூலம் மூளையில் உள்ள நரம்பு செல்களினிடையே நரம்புகளின் நியூட்ரான் முனைகளை மூலக்கூறுகள் உருவாக்குகின்றன என்பதை இப்போது அறிய முடியும். 

தலை முதல் உடல் முழுதும் நடுங்கும் நரம்புத் தளர்ச்சி நோயான பார்கின்சன் நோய் மற்றும் பெருமறதி நோயான அல்செய்மர் ஆகியவற்றிற்கு மூலக்காரணமான புரோட்டீன்களை இப்போது தெளிவாக தடம் காண முடியும்.

கருமுளைகளாகப் பிரியும் கருமுட்டைகளில் உள்ள தனிப்பட்ட புரோட்டீன்களை இப்போது பின்தொடர முடியும். சுருக்கமாக மருந்தில்லா நோய்களைத் தற்போது முற்றிலும் தடுப்பதற்கான மகத்தான பல ஆய்வுகளுக்கு நேனோஸ்கோப் வித்திட்டுள்ளது என்றால் அது மிகையாகாது.

நன்றி
தி இந்து 

07 October, 2014

2014ஆம் ஆண்டு இயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிப்பு


2014ஆம் ஆண்டு இயற்பியலுக்கான நோபல் பரிசை 3 விஞ்ஞானிகள் வென்றுள்ளனர். ஜப்பான் விஞ்ஞானிகள் இருவரும், அமெரிக்க வாழ் ஜப்பானிய விஞ்ஞானி ஒருவரும் இப்பரிசை பகிர்கின்றனர்.

இசமு அகாசாகி, ஹிரோஷி அமானோ, ஷுஜி நகமுரா ஆகியோர் இயற்பியலுக்கான நோபல் பரிசை வென்றுள்ளனர்.

ஆற்றல் திறன் படைத்த, சுற்றுச்சூழல் பாதிக்கப்படாத நீல ஒளி-உமிழ்வு டயோடு (LED) அதாவது, வெண்மை ஒளியை புதிய வழியில் உருவாக்கும் விளக்குகளை கண்டுபிடித்ததற்காக இவர்களுக்கு இந்த நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது.

கணினித் திரைகள் மற்றும் நவீன ஸ்மார்ட் போன்களுக்கு ஒளியூட்டும் LED தொழில்நுட்பத்தில் இவர்களது பங்களிப்பு மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

இசமு அகாசாகி (85) ஜப்பானின் மெய்ஜோ பல்கலைக் கழகம் மற்றும் நகோயா பல்கலைக்கழக விஞ்ஞானி ஆவார். ஹிரோஷி அமானோவும் (54) நகோயா பல்கலைக்கழக விஞ்ஞானி என்பது குறிப்பிடத்தக்கது. ஷூஜி நகமுரா (60) கலிபோர்னியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்தவர்.

இந்தக் கண்டுபிடிப்பு மனித குலத்திற்கு பெரிதும் நலம் விளைவிப்பது என்று ராயல் ஸ்வீடிஷ் அகாதமி தனது நோபல் பரிசு அறிவிப்பில் கூறியுள்ளது.

நீல ஒளி உமிழ்வு டயோடு (LED) விளக்குகள் நீண்ட காலத் திறன் படைத்தது. மேலும் பழைய விளக்குகளுக்கு இது ஒரு சிறந்த மாற்று என்று அந்த அறிவிப்பில் மேலும் கூறப்பட்டுள்ளது.

1990ஆம் ஆண்டுகளின் தொடக்க காலகட்டத்தில் விஞ்ஞானிகள் இசமு அகாசாகி, ஹிரோஷி அமானோ, ஷூஜி நகமோரா ஆகியோர் குறைமின் கடத்தி மூலம் நீல ஒளிக்கற்றைகளை உற்பத்தி செய்து காட்டிய போது ஒளித் தொழில்நுட்பத்தில் இவர்கள் ஆதாரமான ஒரு மாற்றத்தை நிகழ்த்தினர்.

இதற்கு முன்பாக சிகப்பு மற்றும் பச்சை டயோடுகள் இருந்தன. ஆனால் நீல ஒளி இல்லாமல் வெள்ளை பல்புகளை உருவாக்க முடியாது. 

இந்தக் கண்டு பிடிப்புக்கான பெரு முயற்சிகள் இருந்தும், விஞ்ஞான சமூகத்திலும், தொழில்துறையிலும் நீல ஒளி உமிழ்வு எல்.இ.டி. என்பது 30 ஆண்டுகளுக்கு பெரும் சவாலாகவே இருந்தது.

இந்த 3 விஞ்ஞானிகளும் மற்றவர்கள் சாதிக்க முடியாததைச் சாதித்தனர். அகாசாகி மற்றும் அமானோ நகோயா பல்கலைக் கழகத்தில் ஆய்வில் ஈடுபட ஷூஜி நகமுரா, டொகுஷிமாவில் உள்ள நிசியா ரசாயனம் என்ற சிறிய நிறுவனத்தில் பணியாற்றி வந்தார்.

20ஆம் நூற்றாண்டை பிற ஒளிவிளக்குகள் ஒளியூட்டின என்றால் 21ஆம் நூற்றாண்டில் இந்த விஞ்ஞானிகளின் அரிய கண்டுபிடிப்பான எல்.இ.டி. விளக்குகள் ஒளியூட்டும்.

ராட்சத மின் வினியோக கோபுரங்கள் இல்லாததால் போதிய மின்வசதி இல்லாமல் அவதிப்படும் உலகம் முழுதும் உள்ள 1.5 பில்லியன் மக்கள் எல்.இ.டி. விளக்குகளால் பயனடைவர்.

இதற்கு மின் ஆற்றல் குறைவாகவே தேவைப்படுவதால் சூரிய ஒளியினால் கூட இதற்கு மின்சக்தி அளித்துவிட முடியும். 

உலக மின்சக்தி நுகர்வில் நான்கில் ஒரு பங்கு மின்விளக்குகளுக்காகவே பயன்படுத்தப்படுகிறது. எல்.இ.டி. சுமார் 1 லட்சம் மணி நேரங்கள் தாங்கக்கூடியது. மாறாக மற்ற விளக்குகளில் புளூரோசெண்ட் விளக்குகள் 10,000 மணி நேரமே தாங்கக்கூடியது.

நீல எல்.இ.டி. கண்டுபிடிக்கப்பட்டு 20 ஆண்டுகளே ஆனாலும் வெண்மை ஒளியை புதிய வழியில் உருவாக்குவதில் இது ஏற்கனவே தனது பங்களிப்பைச் செய்யத் தொடங்கி விட்டது.

நன்றி 
தி இந்து 


06 October, 2014

இந்தியா - இயற்கையமைப்பு


* சுமார் 460 கோடி ஆண்டுகளுக்கு முன் புவி தோன்றியது. சுமார் 7 கோடி ஆண்டுகளுக்கு முன் புவியியல் மாறுபாடுகளின் விளைவாக டெர்ஷியரி கால டெத்திஸ் என்ற மிகப்பெரிய கடல் பகுதியிலிருந்து மேலெழுந்து இமயமலைகள் தோன்றின.

* புவியியல் கொள்கையின்படி, துவக்க காலத்தில் பூமியின் நிலப்பரப்பு அனைத்தும் ஒரே நிலப்பகுதியாக இருந்ததென்று கருதப்படுகிறது. ஒரே தொகுப்பான அப்பகுதி பேஞ்சியா என்று அழைக்கப்பட்டது. அதைச்சுற்றி பேன்தலாசா என்ற நீர்ப்பரப்பும் காணப்பட்டது.

* பேஞ்சியா நிலப்பகுதி டெத்திஸ் என்ற தாழ்வான இரு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டிருந்தது. அதன்பிறகு காலப் போக்கில், அந்த ஒன்றை நிலப்பகுதி சிறிது சிறிதாக இரண்டு பெரிய நிலப்பரப்புகளாக உடைந்தன.

* வடக்கில் உடைந்த பகுதி அங்காரா நிலப்பகுதி என்றும், தெற்கில் உடைந்த பகுதி கோண்ட்வானா நிலப்பகுதி என்றும் அழைக்கப்பட்டது.

* அவ்வாறு தெற்கில் உடைந்த கோண்ட்வானா நிலப்பகுதியில் இருந்து காலப்போக்கில் சிறிது சிறிதாகப் பிரிந்து வந்ததே இந்தியத் துணைக்கண்டமாகும்.

* நிலத்தோற்றம், நில உள்ளமைப்பு, வடிகாலமைப்பு, காலநிலை, இயற்கைத்தாவரம் மற்றும் மண் ஆகிய இயற்கைக் கூறுகளை அடிப்படையாகக் கொண்டு பிரிக்கப்படும் வட்டாரம் இயற்கை வட்டாரம் எனப்படும்.

* ஒருமித்த புவியியல் கூறுகளை உள்ளக்கிய ஓர் நிலப்பகுதி வட்டாரம் எனப்படுகிறது.

* இந்தியாவின் இயற்கையமைப்பை 3 பெரும்பிரிவுகளாகப் பிரிக்கலாம். அவையாவன 1. வடக்கிலுள்ள இமயமலைத் தொடர்கள் 2. வடக்கிலுள்ள சமவெளிப்பகுதிகள் 3.தீபகற்ப பீடபூமிப் பகுதி ஆகியன.


வடக்கிலுள்ள இமயமலைத் தொடர்கள்

* காஷ்மீர் முதல் அருணாச்சலப் பிரதேசம் வரை கிழக்கு மேற்காக சுமார் 2500 கிமீ நீளம் வரை இமயமலைகள் சங்கிலித் தொடர் போன்று பரவியுள்ளது.

* அத்துடன் இவை சுமார் 150 முதல் 400 கிமீ அகலம் வரை உள்ளது. மேற்கில் சுமார் 400 கிமீ அகலத்துடனும், கிழக்கில் சமார் 150 கிமீ அகலத்துடனும் காணப்படுகிறது.

* இமயமலைகள் இந்தியாவிற்கு வடக்கில் ஓர் இயற்கை அரணாக அமைந்துள்ளது. இளம் மடிப்பு மலைகளால் (Young Fold Mountains) ஆனதே இமயமலைகள் ஆகும்.

* இமயமலை மத்திய ஆசியாவின் பாமீர் முடிச்சில் இருந்து, (பாமீர் முடிச்சு உலகின் கூரை என்று குறிப்பிடப்படுகிறது) தொடங்குகிறது.

* இந்த இமயமலைத் தொகுப்பை நாம் மூன்று உட்பிரிவுகளாகக் காண்போம். அவையான அ) பெரும் இமாலயத் தொடர் (Greater Himalayas) ஆ.மத்திய இமாலயத் தொடர் (Middle Himalayas) இ. புற இமாலயத் தொடர் (Outer Himalayas)


பெரும் இமயமலைத் தொடர்கள்

* உலகின் உயர்ந்த மலைத்தொடர்கள் இங்குதான் உள்ளன. இவற்றிற்கு ஹிமாத்ரி தொடர் என்றும் வேறு பெயர் உண்டு காரகோரம், லடாக், கைலாயம், ஜாஸ்கர் போன்ற மலைத்தொடர்கள் இதில் உள்ளன.

* காரகோரம் மலைத்தொடரில் தான் காட்வின் ஆஸ்டின் அல்லது K2 என்ற உலகின் இரண்டாவது மிக உயர்ந்த சிகரம் அமைந்துள்ளது. இதன் உயரம் 8611 மீட்டர் ஆகும்.

* K2 என்பது தற்போது பாகிஸ்தான் ஆக்கிரமிப்புப் பகுதியில் உள்ளது. கைபர் மற்றும் போலன் கணவாய்களும் தற்போது பாகிஸ்தானில் தான் உள்ளன.

* இவை தவிர பால்ட்ரோ பனியாறு, சியாச்சின் பனியாறு போன்றவைகளாலும் இத்தொடர் புகழ் பெறுகிறது.

* மக்காலு, தவளகிரி, நங்க பர்வதம், நந்தா தேவி போன்ற பிற சிகரங்களும் இத்தொடரில் தான் அமைந்துள்ளன. மேலும் இத்தொடரில் சில முக்கியக் கணவாய்கள் உள்ளன.

* காஷ்மீரிலுள்ள காரகோரம், கணவாய், இமாச்சலப் பிரதேசத்திலுள்ள ஷிப்கிலா கணவாய், சிக்கிம் மாநிலத்தில் உள்ள நாதுலா கணவாய், அருணாச்சலப் பிரதேசத்திலுள்ள பொம்டிலா கணவாய் ஆகிய குறிப்பிடத்தக்கவை.

* பெரும் இமாலயத் தொடர்கள் பெரும்பாலும் பனியால் மூடப்பட்டிருக்கும். ஹிமம் என்றால் பனி என்று பொருள், ஹிமாலயா என்றால் பனியின் இருப்பிடம் என்று பொருள்.

* வடக்குப் பகுதியில் இத்தொடர்களில்தான் உலகின் மிக உயர்ந்த சிகரமான மவுண்ட் எவரெஸ்ட் (8848 மீ) அமைந்தள்ளது. இது நேபாளத்தில் அமைந்துள்ளது. இதற்கு சாகர் மாதா என்றும் பெயர் வவங்கப்படும்.

* அத்துடன் கஞ்சன் ஜங்கா மலைத்தொடரில், 8598 மீ உயரமுடைய, இந்தியாவின் மிக உயர்ந்த சிகரமான கஞ்சன் ஜங்கா சிகரம் விளங்குகிறது. இது சிக்கிம் மாநிலத்தில் உள்ளது.


மத்திய இமயமலைத் தொடர்கள்

* ஹிமாச்சல் தொடர்கள் என்றும் இதற்கு வேறுபெயர் உண்டு. சுமார் 3000 முதல் 4500 மீட்டர் உயரமுடையவை.ஹிமாத்ரி தொடருக்குத் தெற்கே அமைந்துள்ளது.

* பீர் பாஞ்சால், குமாயுன், மகாபாரத், திம்பு ஆகிய மலைத்தொடர்கள் இதில் அமைந்துள்ளன. இவற்றில் பீர் பாஞ்சால் தொடர் காஷ்மீரிலும், தவுளதார்தொடர் ஜம்மு-காஷ்மீரிலும், மகாபாரத் தொடர் ஜம்மு-காஷ்மீரிலும், மகாபாரத்தொடர்கள் நேபாளத்திலும் அமைந்துள்ளன.

* புகழ்பெற்ற பீர்பாஞ்சால் மற்றும் காஷ்மீர் பள்ளதாக்கு இத்தொடரில் உள்ளன. இதில் அதிக  உயரத்தில் உள்ள கோடை வாசஸ்தலம் குல்மார்க் ஆகும்.

* மேலும் டல்ஹெளசி (இமாச்சலப் பிரதேசம்), தர்மசாலா, சிம்லா (இமாச்சலப் பிரதேசம்), முசெளரி (உத்திரப் பிரதேசம்), நைனிடால் (உத்திராஞ்சல்), டார்ஜிலிங் (மேற்கு வங்காளம்) ஆகிய கோடை வாசஸ்தலங்கள் அமைந்துள்ளன.


புற இமயமலைத் தொடர்கள்

* இமயமலைகளின் தெற்குமுனைப்பகுதி இது. சிவாலிக் கொடர்கள் என்றும் அழைக்கப்படுகிறது. சராசரியாக 1000 மீ உயரமுடையது. தராய் காடுகள் இங்கு காணப்படுகிறது.

* இத்தொடர் தொடர்சிசியற்றுக் காணப்படுகிறது. இத்தொடருக்கும், மத்திய இமாலயத் தொடருக்கும் இடையில் பல பள்ளத்தாக்குகள் உள்ளன. அவை டூன்கள் என்றழைக்கப்படுகின்றன.

* டேராடூன் அத்தகைய பள்ளத்தாக்கே ஆகும். இத்தொடரின் கிழக்குப் பகுதியில் பூர்வாஞ்சல் குன்றுகள் உள்ளன. மேலும் இத்தொடரில் தான் காசி குன்றுகள், காரோ குன்றுகள், ஜெயந்தியா குன்றுகள் ஆகியன மேகாலயாவில் அமைந்துள்ளன. இத்தொடரில் பெருமளவு மண்ணரிப்பு நடைபெறுகிறது.

* மேற்காணும் பிரிவுகள் போலவே இமயமலைகளை திசைகளை அடிப்படையாகக் கொண்டும் பிரிப்பர்.

* ஜம்மு-காஷ்மீர், இமாச்சலப்பிரதேசம் ஆகிய மாலங்களிலுள்ள இமயமலைகள் மேற்கு இமயமலைகள் என்றும், உத்திரப்பிரதேசம், நேபாளம் ஆகிய இடங்களிலுள்ளவை * மத்திய இமயமலைகள் என்றும், மேற்கு வங்காளம், சிக்கிம், பூடான், அருணாச்சலப் பிரதேசம் ஆகிய இடங்களில் உள்ள இமயமலைகள் கிழக்கு இமயமலைகள் என்றும் அழைக்கப்படுகின்றன.

* குமாயுன் பள்ளத்தாக்கு உத்திரப்பிரதேசத்திலும், காஷ்மீர் பள்ளத்தாக்கு (பூமியின் சொர்க்கம்) ஜம்மு-காஷ்மீரிலும் அமைந்துள்ளன.


தீபகற்ப இந்திய மலைத்தொடர்கள்

* தீபகற்ப இந்தியாவில் மூன்று மலைத்தொடர்கள் உள்ளன. 1.விந்திய-சாத்பூரா மலைகள் 2. மேற்குத்தொடர்ச்சி மலைகள் 3. கிழக்குக்குன்றுகள் ஆகியன. இவற்றில் விந்திய சாத்பூரா மலைகள் ந்ரமதை நதி பள்ளத்தாக்கிற்கு இணையாக மேற்கு-கிழக்கான செல்லுகின்றன. இவை உண்மையில் நர்மதா பள்ளத்தாக்கின் பக்கச்சுவர்களே உண்மையில் மலைகளே அல்ல. இம்மலைகள் வாரணாசிக்கு அருகில் முடிவடைகின்றன.

* சாத்பூரா மலைகள் நர்மதைக்கும் தபதிக்கும் இடையே காணப்படுகின்றன. இம்மலைகளின் பாறைகள் தக்காண, லாலா பீடமூபூமி பாறை வகைகளைச் சார்ந்தவை. இவை வரலாற்று காலத்தில் ஏற்பட்ட மடிப்பு மவைகள் ஆகும்.

* சாத்பூரா என்றால் ஏழு மடிப்புகள் என்று பொருள்படும் சாத்பூரா மலைகள் மிகப் பழமையான மடிப்பு மலைகள்.

* இவ்வாறே தீபகற்ப இந்தியாவின் மேற்கில் மேற்கு கடற்கரைக்கு இணையாக மேற்குத் தொடர்ச்சி மலைகள் அமைந்துள்ளன. தபதி நதியின் முகத்துவாரத்திலிருந்து கன்னியாகுமரி வரை வடக்கு தெற்காவும் அமைந்துள்ளன.

* இத்தொடரில் மூன்று கணவாய்களும் உள்ளன. வடக்கில் தால்காட் போர்காட் கணவாய்களும், தெற்கில் பாலக்காட்டுக் கணவாயும் உள்ளன. மேற்குத் தொடர்ச்சி மலைகளின் தென்பகுதியில் உயரமான சிகரங்கள் உள்ளன.

* குறிப்பாக, நீலகிரி மலைகள் தொட்டபெட்டாவும், ஆனைமலையில் ஆனைமுடியும் குறிப்பிடத்தக்கவை. பழனிமலை, கொடைக்கானல் மலை, குற்றால மலை ஆகியனவும் மேற்குத் தொடர்ச்சி மலைகளைச் சார்ந்தவை.

* கோடை வாழிடங்களான உதகமண்டலம், குன்னூர், கோத்தகிரி, ஆகியனவும் இம்மலைத் தொடரில் உள்ளன.

* கிழக்குக் குன்றுகள் கிழக்குக்  கடற்கரைச் சமவெளியை ஒட்டி அமைந்துள்ளன. தொடர்ச்சியற்ற பல குன்றுகளாகவும் உள்ளன. ஒரிசா மாநிலத்திலிருந்து ஆந்திர மாநிலம் வரை கிழக்குக் கடற்கரையை ஒட்டிச் செல்கின்றன.

* பின்னர் தென்மேற்காகச் சென்று நீலகரியில் மேற்குத் தொடர்ச்சி மலைகளுடன் இணைகின்றன. இதில் திருப்பதி மலை, ஜவ்வாது மலை, கொல்லி மலை, பச்சைமலை ஆகியவை முக்கியமானவை. ஏற்காடு, ஏலகிரி ஆகியவை இம்மலைகளில் முக்கிய சுற்றுலாத் தலங்கள்.


வடக்கில் உள்ள சமவெளிப் பகுதிகள்

* இமயமலைகளின் அடிப்பகுதியிலிருந்து தீபகற்ப இந்தியாவின் வடபகுதி வரை சுமார் 7.5 இலட்சம் சதுர கிலோ மீட்டர் வரை சமவெளிகள் பரந்துள்ளன.

* பஞ்சாப் சமவெளி முதல் அல்லாம் பள்ளத்தாக்கு வரையில் இச்சமவெளி பரவியுள்ளது. சுமார் 3200 கிமீ நீளமும், 150 முதல் 300 கிமீ வரை அகலும் உடையது. வண்டல் படிவுகளால் ஆனது.

* இமயமலையிலிருந்து தோன்றும் ஆறுகளால் இப்பகுதி வளப்படுத்தப்படுகிறது. இச்சமவெளியின் உயர்நிலப் பகுதி பாங்கர் மண்ணால் ஆன வளம் மிக்க பகுதியாகும்.

* மேலும் இச்சமவெளியின் தாழ்நிலப்பகுதி காதர் மண்ணால் ஆனது.

* ஆற்றுப் பள்ளத்தாக்குகளுக்கு இடைப்பட்ட, தோவாப் பகுதிகளில் உயரமான இடங்களில் பழமையான படிவு மண் காணப்படுகிறது. இதுவே பாங்கர் ஆகும்.

* எனினும் பாங்கர் நிலப்பகுதிகளில், சமச்சீரற்ற சுண்ணாம்புப்படிவுகள் உள்ளன. இவை கான்கர் எனப்படும்.

* பாங்கர் பகுதிகளைப் பொறுத்த வரை, உயரமான உடங்களில் அமைந்துள்ளதால், வெள்ளத்தினால் அரிக்கப்படாமல் உள்ளது.

* ஆற்றுப்பள்ளத்தாக்குளின் தாழ்நிலப்பகுதிகளில் உள்ள மண் காதர் ஆகும். உத்திரப்பிரதேசத்தில் இம்மண் காதர் என்றும் பஞ்சாப் பகுதியில் இம்மண் பெட் என்றும் வழங்கப்படுகிறது.

* இம்மண் உள்ள இடங்கள் தாழ்நிலங்களாக உள்ளமையால், வெள்ளத்தினால் அரிப்புக்கு உட்படுகிறது.
பஞ்சாப் சமவெளி

* ராவி, பியாஸ், சட்லெஸ் பேபான்ற ஆறுகளின் படிவுகளால் இச்சமவெளி வளப்படுத்தப்படுகிறது. சட்லெஜ் மற்றும் யமுனா நதிகளுக்கிடையில் காக்கர் ஆறு அல்லது சரஸ்வதி ஆறு பாய்கிறது.

இராஜஸ்தான் சமவெளி

* தார் பால்வனத்தின் மருஸ்தாலி மற்றும் ஆரவல்லி மலைத்தொடர்களின் மேற்குப் பகுதிகளில் இச்சமவெளி காணப்படுகிறது.

* கட்ச் வளைகுடாவை நோக்கிப் பாயும் லூனி ஆறு இச்சமவெளியை வளப்படுத்துகிறது. சாம்பார் எரியும் இச்சமவெளியில் தான் உள்ளது.

கங்கைச் சமவெளி

* சுமார் 3.5 லட்சம் சதுர கி.மீ பரப்பளவு கொண்ட இச்சமவெளி உத்திரப்பிரதேசம், பீகார், மேறு வங்காளம் ஆகிய பகுதிகளில் அமைகிறது.

* கங்கை மற்றும் அதன் துணை ஆறுகளால் இச்சமவெளி உருவாகிறது. இச்சமவெளியின் கீழ்ப்பகுதிகளில்தான்  கங்கையின் டெல்டா படிகிறது.

* கங்களையின் பழைய டெல்டா அடுக்கினை பரின்ட் என்பர். கங்கையின் விளைவாகவே சுந்தர்பன் டெல்டா படிகிறது.

பிரம்மபுத்திரா பள்ளத்தாக்கு

* இதனை அஸ்ஸாம் பள்ளத்தாக்கு என்றும் அழைப்பர். பிரம்மபுத்திராவின் படிவுகளால் இச்சமவெளிப்பகுதி உருவாகிறது. கிழக்கிலிருந்து மேற்காக தாழ்வாக உள்ளது.

* பிரம்மபுத்திரா தனது மிகப் பரந்த டெல்டாவை பங்களாதேசத்தில் உருவாக்குகிறது.

* அருணாச்சலப் பிரதேசத்தில் பிரம்மபுத்திரா பகுதி திஹாங் என்றும், திபெத்தில் ஸாங்போ என்றும் அழைக்கப்படுகிறது.

தீபகற்ப பீடபூமி

* இப்பீடபூமி வடசமவெளிக்குத் தெற்கில் காணப்படுகிறது. இது பழமையானதும், கடினமானதுமான படிகப் பாறைகளால் ஆனதாகும்.

* நர்மதை ஆறு அமைந்துள்ள பிளவுப்பள்ளத்தாக்கு இப்பீடபூமியை வட, தென் பகுதிகளாகப் பிரிக்கிறது. வடக்கில் அமைந்த சிறிய பீடபூமிப் பிரதேசத்தை மாளவப் பீடபூமி என்றும், பெரிய பீடபூமியை தக்காணப் பீடபூமி என்றும் வழங்குவர்.

மாளவப் பீடபூமி

* மாளவப் பீடபூமியின் மேற்குப் பகுதியில் ஆரவல்லி மலைத்தொடரும், தெற்கில் விந்திய மலைத்தொடரும், மாளவப்பீடபூமியின் வடமேற்கில் இராஜஸ்தான் பாலைவனமும் அமைந்துள்ளது.

* ஆரவல்லி மலைத்தொடரில் தான் மவுண்ட் அபு (கோடை வாசஸ்தலம்) மற்றும் குரு ஷிக்கார் ஆகிய முக்கிய சிகரங்கள் உள்ளன.

* இப்பீடபூமியில் தான் பண்டில்கண்ட் மற்றும் சம்பல் பள்ளத்தாக்கு அமைந்துள்லது. மாளவப் பீடபூமி இந்தியாவின் கனிமச் சுரங்கங்களின் இருப்பிடம் ஆகும்.

* மாளவப் பீடபூமியின் கிழக்கில்தான் தாமோதர் நதியினால் உருவாக்கப்பட்ட சோட்டா நாகபுரி பீடபூமிப்பகுதி அமைந்துள்ளது.

* ஆரவல்லி மலைத்தொடர் தான் உலகின் மிகப்பழமையான மலைத்தொடர் (எஞ்சிய மலைகள்) ஆகும். மாளவப்பீடபூமியின் பெரும்பகுதி மத்தியப் பிரதேசத்தில் அமைந்துள்ளது.

* மாளவப் பீடபூமி சிறிய முக்கோண வடிவத்தில் உள்ளது. மாளவப்பீடபூமியின் மிக உயர்ந்த சிகரம் மவுண்ட் அபு (குறு ஷிகார்) என்பதாகும்.

தக்காணப் பீடபூமி

* நர்மதைப் பிளவிற்குத் தெற்கில் தக்காணப்பீடபூமி உள்ளது. தக்காணப் பீடபூமி தலைகீழ் முக்கோண வடிவில் அமைந்துள்ளது.

* இதன் வடக்குப் பகுதியில் சாத்பூரா தொடர், மைக்கால் தொடர், ஹசாரிபாக் தொடர் ஆகியன அமைந்துள்ளன. நர்மதா மற்றும் தபதி நதிகளுக்கிடையில் சாத்பூரா தொடர் அமைந்துள்ளது.

* தக்காணப் பீடபூமியின் மேற்கு எல்லை மேற்குத் தொடர்ச்சி மலை என்னும் பெயருடன் வடக்கு தெற்காக உள்ளது. வடக்கில் சஹாயத்ரி என்றும், இடையில் நீலகிரி என்றும், முடிவில் ஆனைமலை, ஏலமலை என்றும் பெயர் பெறும் இம்மலைத் தொடர்ச்சி உண்மையில் மலையே அன்று.

* பீடபூமியின் உயர்ந்த மேற்கு விளிம்பே ஆகும். இவ்விளிம்பு மேற்கில் வன்சரிவுடன் குறுகிய அரபிக்கடற்கறையை அடைகிறது. மேற்குத் தொடர்ச்சி மலை தெற்கில் உயரம் மிகுந்துள்ளது.

* இதன் உயர்ந்த சிகரம் கேரளாவில் உள்ள ஆனைமுடி (2695 மீ) ஆகும். இச்சிகரம் ஆனைமலையில் உள்ளது.

* மேற்குத் தொடர்ச்சி மலையில் தால்காட், போர்காட், பால்காட், தார்வார், ஆரியங்காவு, ஆரல்வாய் மொழிக் கணவாய் போன்ற கணவாய்கள் உள்ளன.

* அத்துடன் மேற்குத் தொடர்ச்சியின் முகட்டில் இருந்து நிலம் கிழக்கு நோக்கி மென்சரிவுடன் சாய்கிறது. தக்காணப் பீடபூமியின் கிழக்கு எல்லையிலும் மலைகள் காணப்படுகின்றன. இவை கிழக்குத் தொடர்ச்சி மலைகள் ஆகும்.

* எனினும் இவை தொடர்ச்சியானவை அல்ல. அத்துடன் மேற்குத் தொடர்ச்சி மலை போன்று உயரமானவையும் அல்ல.

* ஆறுகளின் நர்மதை மற்றும் தபதி ஆகிய இரு ஆறுகள் மட்டும் மேற்கு நோக்கிப் பாய்கின்றன. பிற ாறுகள் அனைத்தும் கிழக்கு நோக்கிப் பாய்கின்றன.

* கிழக்கு நோக்கிப் பாயும் ஆறுகள் அனைத்தும் அகன்ற டெல்டாக்களை அமைக்கின்றன. ஆனால் நர்மதையும் தபதியும் அவ்விதமான டெல்டாக்களை அமைக்கவில்லை,

* தக்காணப் பீடபூமியின்  மூன்று பக்கங்கள் மலைகளால் சூழப்பட்டும், கிழக்கு நோக்கிச் சரிந்தும் காணப்படுகிறது.

* கிழக்குத் தொடர்ச்சி மலைகளும், மேற்குத்தொடர்ச்சி மலைகளும் நீலகிரி மலையில் உள்ள தொட்டபெட்டா(2637 மீ) (தமிழகத்தின் உயர்ந்த சிகரம்) சிகரத்தில் இணைகின்றன.

* கிழக்குத் தொடர்ச்சி மலையில் நல்லமலை (ஆந்திரப்பிரதேசம்), ஜவ்வாது மலை (தமிழ்நாடு), கொல்லி மலை (தமிழ்நாடு), பச்சமலை (தமிழ்நாடு) ஆகிய மலைகள் உள்ளன.

* மேற்குத் தொடர்ச்சி மலையில் அPந்தா குன்றுகள் (மகாராஷ்டிரா), நீலகிரி மலைகள், ஆனைமலை, ஏலக்காய் மலை, அகத்திய மலை போன்றவைகள் உள்ளன.

கடற்கரைச் சமவெளிகளும் தீவுகளும்

* தக்காணப் பீடபூமியின் கிழக்கில் கிழக்குக் கடற்கரைச் சமவெளியும், மேற்கில் மேற்குக் கடற்கரைச் சமவெளியும் அமைந்துள்ளன.

* கிழக்குக் கடற்கரைக் சமவெளி மகாநதி டெல்டா பகுதியிலிருந்து கன்னியாகுமரி வரை பரவியுள்ளது. 50 முதல் 250 கிமீ வரை அமைந்துள்ளது.

* மகாநதி டெல்டா, கிருஷ்ணா டெல்டா, கோதாவரி டெல்டா ஆகிய டெல்டாக்கள் இக்கடற்கரைச் சமவெளியில் அமைந்துள்ளன. சில்கா ஏரி மற்றும் புலிக்காட் ஏரி ஆகிய இரண்டும் இதில் தான் உள்ளன.

* கிழக்குக் கடற்கரைச் சமவெளியை சோழ மண்டலக் கடற்கரை என்றும் வழங்குவர்.

* சோழ மண்டலக் கடற்கரையின் வடபகுதி அதாவது ஒரிசா மாநிலத்தின் கடற்கரைப்பகுதி, உத்கல் கடற்கரைச் சமவெளி என்றும், அதன்கீழ் வடசார்க்கார் கடற்கரைச் சமவெளி (ஆந்திரப்பகுதி) என்றும் அழைக்கப்படுகின்றன. தமிழகத்தின் காவிரி டெல்டா இக்கடற்கரைச் சமவெளியின் சிறப்பம்சம் ஆகும்.

* மேற்குக் கடற்கரைச் சமவெளி வடக்கில் சூரத் (குஜராத்) முதல் தெற்கில் திருவனந்தபுரம் (கேரளா) வரை பரவியுள்ளது. இக்கடற்கரைச் சமவெளியின் வடபகுதி கொங்கணக் கடற்கரை என்றும், தென்பகுதி மலையாளக் கடற்கரை அல்லது மலபார் கடற்கரை என்றும் இவ்விரண்டிற்கும் இடைப்பட்ட நடுப்பகுதி கன்னடக் கடற்கரை என்றும் வழங்கப்படுகிறது.

* வெம்புநாடு என்னும் உப்பு ஏரி இக்கடற்கரைச் சமவெளியில் தான் அமைந்துள்ளது. இக்கடற்கரைச் சமவெளியில் தான் மும்பை மற்றும் மப்மகோவா துறைமுகங்கள் அமைந்துள்ளன.

* தீபகற்ப இந்தியாவின் பிளவுகள் ஏற்பட்டபோது மேற்குத் தொடர்ச்சி மலைகளுக்கு மேற்கில் வடக்கு தெற்காக ஏற்பட்ட பிளவின் வழியே நிலப்பகுதி கடலில் அமிழ்ந்தது.

அவ்வாறு நிலப்பகுதி அமிழ்ந்ததால்தான் மேற்குக்க கடற்கரை உருவானது. எனவேதான் மேற்குக் கடற்கரை நேராகவும், குறுகலாகவும் காணப்படுகிறது.

* இந்தியப் பெருங்கடலில் சுமார் 350 தீவுகள் உள்ளன. இவற்றில் பெரும்பாலான தீவுகள் மிகவும் சிறியவை. இவை இரு பிரிவுகளாக உள்ளன. அவை:1. அந்தமான் மற்றும் நிக்கோபார் 2. இலட்சத் தீவுகள்

அந்தமான் நிக்கோபார் தீவுகள்

* இவை வங்காள விரிகுடாவில் அந்தாமான் என்றும் நிக்கோபார் தீவுகள் என்றும் இரு பிரிவுகளாக அமைந்துள்ளன. இவை மொத்தம் 300 தீவுகள் உள்ளன.

* அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளைப் பிரிப்பது Ten Degree Channel என அழைக்கப்படுகிறது. இதன் தலைநகர் போர்ட்ப்லேயர் ஆகும். இந்தியாவின் தென்கோடி

முனையாகிய இந்திரா முனை இங்குதான் உள்ளது. இந்திரா முனை நிக்கோபார் தீவுகளில்தான் உள்ளது.

* வடக்கில் அந்தமான் தீவுகளும், தெற்கில் நிக்கோபார் தீவுகளும் அமைந்துள்ளன. இங்கு பாரன் மற்றும் நார்கெடாம் தீவுகளில் எரிமலைகள் உள்ளன.

* சில தீவுகளில் பவழப்பாறைகள் உள்ளன. அந்தமானில் உள்ள உயர்ந்த சிகரம் சாடில் சிகரம் ஆகும்.

இலட்சத் தீவுகள்

* அரபிக்கடலில், கேரளக் கடற்கரையிலிருந்து சுமார் 320 கிமீ தொலைவில் இலட்சத்தீவுகள் உள்ளன. இவற்றில் வளைம் போன்ற அமைப்போடு காணப்படுவை தீவுகள் எனப்படுகின்றன.

* மொத்தம் 27 தீவுகள் காணப்படுகின்றன. இவற்றில் 17 தீவுகளில் மனிதர்கள் வசிக்கவில்லை. இதன் நகரம் கவரட்டி. பாம்பன் மற்றும் இராமேஸ்வரம் தீவுகள்

இந்தியாவிற்கும், இலங்கைக்கும் இடையில் அமைந்துள்ளன.

* தெற்கே கடைசியாக உள்ள தீவு மினிகாய் தீவு ஆகும். இவை எட்டு டிகிரி கணவாய் இலட்சத்தீவில் அமைந்துள்ளன. மேலும் பவழப்பாறைகள் இலட்சத்தீவில் காணப்படுகின்றன.

இந்திய வடிகாலமைப்பு

* பொதுவாக இந்தியாவில் பாயும் ஆறுகளை இருவகைகளாகப் பிரிக்கலாம். அவை: 1. வடஇந்திய ஆறுகள் 2. தென்னிந்திய ஆறுகள் அல்லது தீபகற்ப ஆறுகள்.

வடஇந்திய ஆறுகள்

* வடஇந்திய ஆறுகளில் சிந்து, கங்கை, பிரம்மபுத்திரா ஆகிய ஆறுகள் அடங்கி உள்ளன.

* வட இந்திய ஆறுகள் தென்மேற்குப் பருவக்காற்று மழை மற்றும் பனி உருகி வரும் நீரால் ஆண்டு முழுவதும் வெள்ளம் கொண்டவை. இவ்வாறுகள் நீர் மின் உற்பத்திக்குப் பெரிதும் பயன்படுகின்றன. இவை உள்னாட்டு நீர் வழிப் போக்குவரத்துக்குப் பயன்படுகின்றன.

சிந்து

* உலகின் மிக நீண்ட ஆறுகளில் ஒன்றாகும். 2900 கிமீட்டர் நீளமுடையது. இதில் 709 கிமீ இந்தியாவில் உள்ளது.

* இவை இமயமலையில் உள்ள கயிலைக்குன்றுப் பகுதியில் அமைந்த மானசரோவர் ஏரியில் உற்பத்தியாகி, பஞ்சாப் வழியாகப் பாய்ந்து, பிறகு பாகிஸ்தான் பகுதியில்

நுழைந்து அரபிக்கடலில் கலக்கிறது. இதன் பெரும்பகுதி பாகிஸ்தானில் உள்ளது.

* ஜீலம் , சீனாப், ராவி, பியாஸ், சட்லெஜ் ஆகிய ஆறுகள் சிந்துவின் துணையாறுகள் ஆகும் .இவற்றில்ஜீலம், சீனாப் மற்றும் சிந்து ஆகிய பாகிஸ்தானில் பாய்கிறது.

* இந்தியாவிற்கும், பாகிஸ்தானிற்குமிடையில் 1960-ல் சிந்து நதி நீர் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. இதன்படி ராவி, பியாஸ், சட்லெஜ் ஆகிய ஆறுகளின் நீரை வரம்பின்றி இந்தியா பயன்படுத்தும் அதிகாரம் பெற்றது.

* பிற இரு துணையாறுகளின் நீர் பயனாக்கம் வரையறுக்கப்பட்டுள்ளது.

* சிந்து நதியால் நமக்குக் கிடைக்கும் நீர் பஞ்சாப், ஹரியானா மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களின் நீர்ப்பாசனத்திற்கும், மின்சக்திக்கும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

* சிந்து ஆற்றின் அமைவிடத்தை அடிப்படையாகக் கொண்டு இவ்வாற்றின் கிழக்குப் பகுதியின் பெருநிலத்தை இந்தியா என்றும், அப்பகுதி மக்களை இந்து என்றும்

பண்டைய ஐரோப்பியர் அழைத்ததே நம் பாரதம் இந்திய என்று பெயர் பெற்றது. (ஃஇந்துகுஷ் மலையில் இருந்து வந்ததாகவும் கூறுவர்)

கங்கை

* இந்தியாவின் புனித நதி கங்கை. இவை இமயமலையில் உள்ள கங்கோத்ரி என்ற பனியாற்றில் உற்பத்தி ஆகிறது. இந்த ஆற்றின் நீளம் சுமார் 2510 கிமீ ஆகும்.

* இவை உத்திரப்பிரதேசம், பீகார், மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்கள் வழியாக பாய்ந்து செல்கிறது. இந்தியப் பரப்பின் 25 சதவீதம் கங்கை நதியின் பரப்பே ஆகும்.

* இமயமலைகளில் அலக்நந்தா மற்றும் பாகீரதி என்னும் இரு தலைப்பிரிவுகளாக உருவாகிறது.

* கங்கையின் முக்கியத் துணையாறு யமுனை. இவை கங்கையுடன் கலக்குமிடம் அலகாபாத்தில் உள்ள பிரயாகை ஆகும்.

* ராம்கங்கா, காக்ரா, கண்டக், பாக்மதி, கோசி, சாரதா, சம்பல், கோமதி, ஹூக்ளி ஆகியவை கங்கையின் துணையாறுகள் ஆகும்.

* ஹரித்துவார், கான்பூர், அலகாபாத், வாரணாசி, பாட்னா, கொல்கத்தா ஆகியன கங்கையின் மீது அமைந்துள்ள முக்கிய நகரங்களாகும்.

* கங்கை தனது கழிமுகப்பகுதியில் பல பிரிவுகளாகப் பிரிந்து சுந்தர்பன் டெல்டாவை உருவாக்கிய பின் வங்காள விரிகுடாவில் கலக்கிறது.

* வங்கதேசத்தில் கங்கை பத்மா என அழைக்கப்படுகிறது.

* கங்கை நதியைப் பாதுகாக்கும் பொருட்டு இந்திய அரசால் 1995ல் தேசிய நதி பாதுகாப்புத் திட்டம் தொடங்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து 1995ல் மத்திய கங்கை நதி அமைப்பும் நிறுவப்பட்டது.

பிரம்மபுத்திரா

* இவை கயிலைக்குன்றுகளில் அமைந்த மானசரோவர் ஏரியில் உற்பத்தியாகி கிழக்காக திபெத்தில் ஸாங்போ என்ற பெயருடன் இந்தியா மற்றும் லங்காளதேசம் ஆகிய நாடுகளில் பாய்கிறது. இவை 2880 கிமீ நீளமுடையது.

* அருணாச்சலப் பிரதேசத்தில் திஹாங் என்ற பெயருடன் நுழைகிறது.

* அஸ்ஸாமில் பெரும்பாலான போக்குவரத்து பிரம்மபுத்திரா ஆற்றின் மூலமாகவே நடைபெறுகின்றன.

* பிரம்மபுத்திரா, பங்களாதேஷில் பத்மா ஆற்றுடன் இணைந்து உலகின் மிகப்பெரிய டெல்டாவை உருவாக்கிய பின் வங்காளா விரிகுடாவில் கலக்கிறது.

* வங்களாத்தில் ஜமூனா என்ற பெயரில் அழைக்கப்படுகிறது. இது கங்கையின் கிளையாகிய பத்மாவுடன் இணைந்து மிகப்பெரிய கழிமுகத்தை உருவாக்கி வங்காள விரிகுடாவில் கலக்கிறது.

தென்னிந்திய ஆறுகள்

* தென்னிந்திய ஆறுகளில் நர்மதை, தபதி, லூனி, சபர்மதி ஆகிய ஆறுகள் மட்டும் கிழக்கிலிருந்து மேற்கு நோக்கிப் பாய்ந்து அரபிக்கடலில் கலக்கின்றன. பிற ஆறுகள் மேற்கிலிருந்து கிழக்கு நோக்கிப் பாய்கின்றன.

* கிழக்கு நோக்கிப் பாயும் ஆறுகள் மட்டும் டெல்டாவை அமைக்கின்றன. தென்னிந்திய ஆறுகளின் சில முக்கிய ஆறுகள் நர்மதை, தபதி, தாமோதர் ஆறு, கோதாவரி, கிருஷ்ணா, காவிரி.

நர்மதை ஆறு

* மேற்கு நோக்கிப் பாயும் ஆறுகளில் மிக நீளமான ஆறு நர்மதையே ஆகும். விந்திய சாத்பூரா மலைத்தொடர்களுக்கு இடையில் இந்நதி பாய்கிறது.

* இது மத்தியப் பிரதேசத்தில் உள்ள அமர்கண்டக் என்னும் பகுதியில் உற்பத்தியாகிறது. இது பெரும்பாலும் மத்தியப் பிரதேசத்திலேயே பாய்கிறது. இதில் 10ல் ஒரு பகுதி மட்டுமே குஜராத்தில் பாய்கிறது.

தபதி

* மத்தியப்பிரதேசத்தில் உற்பத்தியாகிறது. 724 கிமீ நீளம் உடையது. அரபிக்கடலில் கலக்கிறது. மேற்கு நோக்கிப் பாயும் ஆறுகளில் இரண்டாவது மிக நீளமான ஆறு தபதி ஆகும்.

* மத்தியப்பிரதேசம் மகாராஷ்டிரா, குஜராத் மாநிலங்களில் அமைந்துள்ளது.

தாமோதர் ஆறு

* 530 கிமீ நீளமுடைய மகாநதி, மத்தியப்பிரதேசத்தின் அமர்கண்டக் பகுதியிலிருந்து உற்பத்தியாகி, ஒரிசாவை முழுமையாக வளப்படுத்தி, வங்காள விரிகுடாவில் கலக்கிறது.

* இது கடலில் சேருவதற்கு முன் ஒரு மாபெரும் டெல்டா சமவெளியை உருவாக்குகிறது. மகாநதியின் குறுக்கே தான் ஹிகுராட் ஆணை உள்ளது.

கோதாவரி

* தென்னிந்திய ஆறுகளின் மிகப்பெரிய ஆறு கோதாவரி ஆகும் இந்திய நிலப்பகுதியில் 10 சதவீதம் இதன் பரப்பாகும்.

* 1440 கிமீ நீளமுள்ள இந்த ஆறு மகாராஷ்டிராவில் உள்ள நாசிக் பகுதியில் இருந்து உற்பத்தியாகி வங்காள விரிகுடாவில் கலக்கிறது. மஞ்சிரா, பென்கங்கா, வெயின்கங்கா,

இந்திராவதி, வார்தா ஆகியன இதன் துணை ஆறுகள் ஆகும். தட்சிண கங்கை என்றும் அழைக்கப்படுகிறது.

கிருஷ்ணா

* மகாராஷ்டிராவில் மகாப்லேஸ்வர் குன்றுகளில் உற்பத்தியாகிறது. தென்னிந்திய ஆறுகளில் இரண்டாவது மிகப்பெரிய ஆறு கிருஷ்ணா.

* இவை மகாராஷ்டிரம், கர்நாடகம், ஆந்திரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் கிருஷ்ணா நதி பாய்கிறது.

* கொய்னா, பஞ்சகங்கா, கதப்ரபா, மலப்ரபா, பீமா, துங்கபத்ரா, வாணா ஆகியவை இதன் துணையாறுகள். இவைகள் வங்காள விரிகுடாவில் கலக்கிறது.

காவிரி
* தென் கங்கை என்றழைக்கப்படும் ஆறு. கர்நாடகாவில் உள்ள குடகு மலைக்கருகில் தலைக்காவிரி என்னுமிடத்தில் உற்பத்தியாகிறது இதன் நீளம் 760 கிமீ நீளமுடையது.

* கர்நாடகா மற்றும் தமிழ்நாடு வழியாகப் பாய்ந்து வங்காள வரிகுடாவில் கலக்கிறது. காவிரி அமைந்துள்ள டெல்டாவினையே தஞ்சை டெல்டா என்கிறோம். பவானி,

நொய்யல், அமராவதி போன்றவை இதன் துணையாறுகள்.

* காவிரி பாயும் மாநிலங்கள் கர்நாடகம், தமிழ்நாடு, புதுச்சேரி ஆகியன.

* காவிரியில் தென்மேற்குப் பருவகாலமான ஜூன் மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை வெள்ளப்பெருக்கு அதிகமாக காணப்படும்.

* காவிரி நதியின் குறுக்கே கர்நாடகத்தில் கண்ம்பாடி என்னும் இடத்தில் கிருஷ்ணராஜசாகர் என்ற அணையும், தமிழகத்தில் சேலம் மாவட்டத்தில் மேட்டூரில் ஸ்டானில் அணையும் கட்டப்பட்டுள்ளன.

* திருச்சிக்கு மேற்கில் காவிரி இரண்டாகப் பிரிந்து ஸ்ரீரங்கம் தீவைத் தோற்றுவிக்கின்றன.

02 October, 2014

தேவநேயப் பாவாணர்


தனித்தமிழ் இயக்கத்தின் வேர்களில் ஒருவராகவும், மொழிஞாயிறு என்னும் பட்டத்திற்குரியவராகவும், எவருக்கும் தலைவணங்காத தனித் தமிழ் அரிமா என்னும் பட்டத்திற்கு சொந்தகாரார்தான் தேவநோயப் பாவாணர்.

நெல்லை மாவட்டம் சங்கரநயினார் கோயிலை (சங்கரன்கோவில்) அடுத்து பெரும்புதூரில் 07.02.1902-ல் ஞானமுத்து, பரிபூரணம் தம்பதியினருக்கு பாவாணர் நான்காம் மகனாகவும் கடைசிப் பிள்ளையாகவும் பிறந்தார். பெற்றோர் இட்டபெயர் "தேவநேசன்". 1906-ம் ஆண்டிலே பாவணரின் தந்தையாரும் அன்னையாரும் அடுத்தடுத்து இயற்கை எய்தினர்.

இதையடுத்து தேவநேசன் சிறுபிள்ளையாதலால், தக்கார் ஒருவர் பொறுப்பில் வளர வேண்டிய நிலை ஏற்பட்டது. அச்சமயம் அவருடய இரண்டாவது அக்காள் திருவாட்டி பாக்கியத்தாய் அம்மையார் தேவநேசனை வளர்க்கும் பொறுப்பைக் கனிவுடன் ஏற்றுக் கொண்டார். 

படிப்பு:

திருவாட்டி பாக்கியத்தாய் அம்மையார் உதவியுடன் வட ஆற்காடு மாவட்டம் ஆம்பூரில் இருந்த கிருத்துவ நடுநிலைப்பள்ளியில் பயின்றார்.

பிறகு, மேற்கல்வி பயில விரும்பியதாலும், அதற்கு ஆம்பூரில் வாய்ப்பில்லாத காரணத்தால் பாவாணர் தாம் பிறந்த மண்ணாகிய நெல்லை மாவட்டத்திலுள்ள பாளையங்கோட்டைக்குச் சென்றார். அப்போது இராமநாதபுரம் மாவட்டம் சோழபுரத்தை அடுத்த சியோன் மலை என்னும் முறம்பில் வசித்து வந்த யங் துறை என்பவரின் உதவியோடு பாளையங்கோட்டையில் உள்ள கிறித்துவ ஊழியக் கழக (C.M.S.) உயர்நிலைப் பள்ளியிற் சேர்ந்தார். பள்ளியிறுதித் தேர்வு (S.S.L.C.) வரை அங்குப் பயின்று சிறப்பாகத் தேர்ச்சி பெற்றார்.

அக்காலத்தில் தேவநேசன் 5-ஆம் படிவத்திலேயே (V Form) தட்டச்சு, கணக்கு வைப்பு ஆகிய பாடங்களையும், 6-ஆம் படிவத்தில் (VI Form) தமிழ், வரலாறு ஆகிய பாடப் பகுதிகளையும் சிறப்புப் பாடங்களாக எடுத்துப் படித்தார்.

அந்நாட்களில் பாவாணர் ஆங்கிலப் பற்றாளராகவும், ஆங்கிலத்திற் சிறந்த பேச்சாளராகவும் விளங்கியிருக்கிறார். பள்ளியிற் பயிலுங்காலத்தில் அவரை எல்லோரும் ‘சான்சன்’ (Samuel Johnson) என்றே அழைப்பர்களாம்.

பாவாணர் தமிழில் எந்த அளவிற்குக் கரை கண்டாரோ, அந்த அளவிற்கு ஆங்கிலத்திலும் சிறந்து விளங்கினார்.

அவர் ஆங்கிலத்தில் பேசும்போதும், எழுதும்போதும் பொதுவான சொல்லைப் பயன்படுத்தாது அதற்குரிய சிறப்பான சொல்லையே (appropriate word) பயன்படுத்துவது அவருக்கே உரிய தனிச்சிறப்பாகும்.

மிகப் பெரிய மொழியாராய்ச்சியாளரான பாவணர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி, வடமொழி (சமற்கிருதம்) முதலிய இந்திய மொழிகளுடன் ஆங்கிலம், பிரெஞ்சு, இலத்தீனம், கிரேக்கம், ஆங்கிலோ சாக்சன் முதலிய அயல்நாட்டு மொழிகளும் சேர்த்து ஏறத்தாழ பதினேழு மொழிகளின் இலக்கணங்களை முறையாகக் கற்றறிந்து, ஆரியப் புல்லரும் வையாபுரிக் கூட்டமும் அஞ்சும் வகையில், உலக மொழிகளுக்கெல்லாம் தமிழே மூலம் என்ற உண்மையைத் தக்கச் சான்றுகளுடன் உலகிற்கு எடுத்துக்காட்டியவர். ஒவ்வொரு சொல்லின் ஆணிவேருக்கும் மூலம் தமிழே என்று காட்டிய மொழிப் பேரறிஞர்.

ஆசிரியர் பணி:

1921ம் ஆண்டு ஆசிரியப் பணிக்குச் செல்ல அவர் விரும்பியபோது, அவருக்கு, அவரது ஆசிரியர், பண்டிதர் மாசிலாமணி என்பவர் ஒரு சான்றிதழ் வழங்கினார். அதில் பாவாணரின் பெயரை, "தேவநேசக் கவிவாணன்" என்று குறிப்பிட்டார். பின் அப்பெயரையே தம் பெயராகக் கொண்டார் பாவாணர்.

தனது 17 ஆம் வயதில் உயர்நிலைக் கல்வி பயின்றவுடன் தான் பயின்ற சீயோன் மலை உயர்நிலைப்பள்ளியிலேயே ஆறாம் வகுப்பு ஆசிரியராகவும் பணியாற்றினார்.

1921-ஆம் ஆண்டு மீண்டும் வட ஆற்க்காடு மாவட்டம் ஆம்பூர் சென்றார். அங்கு அவர் முன்பு கல்வி பயின்ற பள்ளியிலேயே தமிழ் கற்பிக்கும் பணியில் அமர்த்தப்பட்டார். அப்பள்ளி 1922-ஆம் ஆண்டு உயர்நிலைப் பள்ளியாக உயர்த்தப்படவே, திரு. தேவநேசனும் அங்கு உதவித் தமிழாசிரியராகப் பதவி வுயர்வு பெற்றார்.

அவ்வாண்டிலேயே தாம் இளமையில் பயின்ற ஆம்பூர் நடுநிலைப்பள்ளியில் உதவித் தமிழாசிரியராகப் பணியில் சேர்ந்தார்.

ஆம்பூர், தஞ்சை மாவட்டத்திலுள்ள மன்னார்குடியில், சென்னை திருவல்லிக்கேணி, தாம்பரம் ஆகிய இடங்களில் வித்துவான் பட்டம் பெற்றபின் உயர்நிலைப்பள்ளி ஆசிரியராகவும் பணியாற்றினார்.

திருச்சி பிஷப் ஹீபர் உயர்நிலைப் பள்ளியில் பணியாற்றினார். அப்போது 1940 -இல் மொழியாராய்ச்சி நூலான ‘ஒப்பியன் மொழி நூல்’ என்னும் நூலை வெளியிட்டார்.

சேலம் நகராட்சிக் கல்லூரியில் தமிழ்துறைத் தலைவராகவும் பணியாற்றினார்.

பாவாணர் ஓரிடத்தில் நிலைத்து பணி செய்யவில்லை.

-1924ம் ஆண்டு மதுரைத் தமிழ்ச்சங்கப் பண்டிதத் தேர்வு எழுதி வென்றார். அத்தேர்வில் அம்முறை வேறு எவரும் வெற்றி பெற்றிலர் என்பது குறிப்பிடத்தக்கது. "நேசன்" என்பதும் "கவி" என்பதும் வடசொற்கள் என்பதை அறிந்துகொண்ட பின்னர், தம் பெயரைத் "தேவநேயப் பாவாணர்" என அமைத்துக்கொண்டார்.

- 1926ம் ஆண்டு திருநெல்வேலி தென்னிந்திய தமிழ்ச் சங்கம் நடத்திய தனித் தமிழ்ப் புலவர் தேர்வெழுதி அதில் வெற்றி பெற்றார். இதிலும் அவர் ஒருவரே வெற்றி பெற்றார். பின்னர் பி.ஓ.எல் தேர்வும் சென்னைப் பல்கலைக் கழகத்தில் எழுதி வென்றார். எம்.ஓ.எல். பட்டம் பெறுவதற்கு "திராவிட மரபு தோன்றிய இடம் குமரி நாடே" என்னும் பொருள் குறித்து இடுநூல் எழுதி, சென்னை பல்கலைக்கழகத்தில் அளித்தார். ஆனால் பாவாணரின் இந்நூலை பல்கலைக்கழகம் ஏற்கவில்லை. அதற்கு காரணம் ஆய்வுக் குழுவில் இடம்பெற்றிருந்தோரின் காழ்ப்புணர்ச்சியே ஆகும்.

பல்கலைக்கழகப் பணி:

பல்வேறு போராட்டங்களுக்கும், சிந்தனையின் எண்ண ஒட்டங்களின் முடிவாக 12.7.1956 அன்று அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் திராவிட ஆராய்ச்சித் துறையில் ஆய்வராளராகவும் பணியை தொடங்கினார்.

பாவாணர் அண்ணாமலை நகர் சென்று ஐந்தாண்டு காலம் முடிந்தது. ஆறாம் கல்வியாண்டுத் தொடக்கத்தில் துணைவேந்தர் மாறினார். புதிதாய் வந்தவர்க்குத் தமிழ்ப் பற்று சிறிதுமில்லை. பேராசிரியன்மார் பெருமையுணரும் திறமுமில்லை. அதை நன்கு பயன்படுத்திக் கொண்ட தமிழ்ப் பகைவரும் தந்நலக்காரரும் கூடித் தமிழுக்குக் கேடு செய்துவிட்டனர். திடுமென்று பாவாணர்க்கு வேலை நீங்கியதாக ஓலை வந்தது. இலக்கணப் புலமையில்லாத முனைவர் சேதுப்பிள்ளையின் திட்டமே இறுதியில் மேற்கொண்டது.

"செத்துங் கொடுத்தான் சீதக்காதி செத்துங் கெடுத்தார் சேதுப் புலவர்" என்று மனம் வெதும்பினார் பாவாணர்.

"ஆண்டி எப்போது சாவான்; மடம் எப்போது ஒழியும்" என்று பாவாணர் பதவிக்கும் உறையுட்கும் நீண்ட நாள் காத்திருந்தனர் பலர். முறைப்படி மும்மாத அறிவிப்பு கொடுத்தல் வேண்டும். அதையும் பல்கலைக் கழகத்தார் பாவாணர்க்குக் கொடுத்திலர். அப்போது, எனக்கு வறுமையும் உண்டு; மனைவி மக்களும் உண்டு; அவற்றோடு மானமும் உண்டு என்று கூறிய பாவாணர் 1961-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 23-ஆம் தேதி அண்ணாமலை நகரை விட்டு வெளியேறினார். அவரோடு தமிழும் வெளியேறியது.

அண்ணாமலைப் பல்கலைக் கழகத்திற் பாவாணர் பணி நலம் பாராட்டிய பாவேந்தர் பாவாணர்க்குப் பதிகம் பாடினார்.

"நாவலந் தீவுக்கு நந்தமிழே தாயென்று

கூவும் அதுவுமோர் குற்றமா? - பாவிகளே

தேவநே யர்க்குச் செயுந்தீமை செந்தமிழர்

யாவர்க்கும் செய்வதே யாம்"

என்று ‘குயில்’ இதழில் எழுதினார்.

- வறுமை வாட்டியபோதும் வாழ்நாளெல்லாம் சொல்லாய்வுக்காக நூல்களை வாங்கிக் கொண்டிருந்தார்.

- 1974ம் ஆண்டு பாவாணர் செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலி இயக்குநராக இருந்தபோது, அவருக்கு மராட்டிய மொழி அகரமுதலி ஒன்று தேவையாய் இருந்தது. அப்போது மூர் அங்காடியில் இராசவேல் என்ற பழைய புத்தக வணிகரிடம் அந்நூல் இருந்தது. அந்த அகராதியைப் பாவாணர் அரசு பணத்தில் வாங்காது தமது பணத்திலேயே வாங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

- 1974 ஆம் ஆண்டு தமிழக அரசு தொடங்கிய செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகர முதலி இயக்கத்தின் இயக்குநராகவும் பொறுப்பேற்றார்.

புலமை:

01. சென்னைப் பல்கலைக்கழக வித்துவான்

02. மதுரைத் தமிழ்ச்சங்கப் பண்டிதர்

03. திருநெல்வேலித் தென்னிந்திய தமிழ்ச்சங்கப் புலவர் என்னும் மூன்று பட்டங்களைப் பெற்றார்.

பாவணர் மிகச்சிறந்த தமிழறிஞரும், சொல்லாராய்ச்சி வல்லுநருமாவார். இவர் 40-க்கும் மேற்பட்ட மொழிகளின் சொல்லியல்புகளைக் கற்று மிக அரிய சிறப்புடன் சொல்லாராய்ச்சிகள் செய்துள்ளார். மறைமலை அடிகளார் வழியில் நின்று தனித்தமிழ் இயக்கத்திற்கு ஆழ்வேராகவும் அடிமரமாகவும் இருந்து சிறப்பாக உழைத்தார். இவருடைய ஒப்பரிய தமிழறிவும் பன்மொழியியல் அறிவையும் கருதி, மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர் என்று அழைக்கப்பட்டார்.

தமிழ் உலக மொழிகளில் மூத்ததும் மிகத்தொன்மையான காலத்திலேயே செம்மையான மொழியாக வடிவம் பெற்றது எனவும்; திராவிடத்திற்குத் தாயாகவும் ஆரியத்திற்கு மூலமாகவும் விளங்கிய மொழியென வாதிட்டவர். கிரேக்கம், இலத்தீன், சமற்கிருதம் உள்ளிட்டவைகளுக்குத் தன் சொற்கள் பலவற்றை அளித்தது என்று நிறுவியவர் பாவாணர் ஆவார். தமிழின் வேர்ச்சொல் வளத்தையும் செழுமையையும் சுட்டிக்காட்டி, அதன் வளர்ச்சிக்கான வழியையும் அவரின் நூல்களின் வழி உலகிற்கு எடுத்து இயம்பினார்.

பாவணரின் கொள்கை:

திராவிடத்தின் தாய், ஆரியத்தின் (வடமொழி) அடிப்படை தமிழ் என சான்றுகளைல் நிறுவியவர் கிரேக்கம், இலத்தீன், சமஸ்கிருதம் ஆகிய மொழிகளில் சொற்கள் சிலவற்றை எடுத்துக்கைட்டி விளக்கியவர்.

- உலக முதன் மொழி தமிழ்

- உலக முதல் மாந்தன் தமிழன்

- அவன் பிறந்தகம் குமரிக்கண்டம்

தமிழ் திராவிட மொழிகளுக்குத் தாய் வடமொழிக்கு மூலம் என்பது அவர்தம் உண்மையான அடிப்படைக் கொள்கைகளில் சிலவாகும்.

விருதுகளும் சிறப்பு பெயர்களும்:

மதுரை தமிழ்க் காப்புக் கழகம் - 12.1.64 அன்று 'தமிழ்ப்பெருங்காவலர்' விருது வழங்கியது.

குன்றக்குடி அடிகளார் பாரிவிழாவில் செந்தமிழ் ஞாயிறு விருது வழங்கினார்.

தமிழக அரசு - செந்தமிழ்ச் செல்வர் விருது வழங்கியது.

எழுதிய நூல்கள்:

01. இசைக் கலம்பகம்

02. இயற்றமிழ் இலக்கணம்

03. இந்தியால் தமிழ் எவ்வாறு கெடும்

04. ஒப்பியன் மொழி நூல்

05. தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்

06. தமிழர் திருமணம்

07. திராவிடத் தாய்

08. பழந்தமிழாராய்ச்சி

09. இசைத்தமிம் சரித்திரம் ஆகிய நூல்கள் குறிப்பிடத்தக்கவை.

இறுதி நாட்கள்:

தன்னலம் சிறிதுமின்றி, குலமத வேறுபாடுகள் இவற்றையெல்லாம் கடந்து, தமிழுக்காகவும் தமிழினத்திற்காகவும் தம்மை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டு வாழ்ந்த  ‘மொழிஞாயிறு’ என்று அழைக்கப்படும் ஞா. தேவநேயப் பாவாணர்.

மதுரையில் நடைபெற்ற ஐந்தாம் உலகத்தமிழ் மாநாட்டில் பங்கேற்று மாந்தன் தோற்றமும் தமிழ் மரபும் என்னும் பொருளில் 75 நிமிடங்கள் உரையாற்றினார். அன்று (05.01.1981) இரவே உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர் நோயிலிருந்து மீளாமலேயே 16.01.1981 பின்னிரவு (அதிகாலை) ஒரு மணிக்கு இயற்கை எய்தினார்.

நன்றி 
தினமணி 

29 September, 2014

இந்திய நீர்வளம்



* இந்தியா ஒரு விவசாய நாடு என்பதால் இந்திய விவசாயம் பருவக்காற்றை அடிப்படையாகக் கொண்டு அமைந்துள்ளது. ஆனால் பருவாக்காற்று எதிர்பார்ப்பது போல் அதிக மழையை தருவதில்லை.

* தேவைக்கு அதிகமான மழைப்பொழிவு உண்டாக்கும் போது, வெள்ளம் ஏற்பட்டு, பெருத்த சேதம் ஏற்படுகிறது. மழை பொய்த்துவிடும்போது, வறட்சி உண்டாகி, உணவுப் பற்றாக்குறையும் நீர்ப் பற்றாக்குறையும் ஏற்படுகிறது. சில பகுதிகளில் அதிக மழைப்பொழிவும் ஏற்படுகிறது.

* வேறு சில பகுதிகள் மழையே இல்லாத நிலையில் வறண்டு காணப்படுகிறது. எனவே மழைப்பொழிவு ஏற்படும் இடங்களில் மழைநீரைச் சேமித்து, பிறகு வறண்ட பகுதியில் பயன்படுத்துவதையே நாம் நீர்ப்பாசனம் என்று அழைக்கிறோம்.

* சராசரியாக இந்தியா 118 செமீ மழையளவு பெறுகிறது. எனினும் இது மேகாலயாவின் மெளசின்ராம்(1270 செ.மீ), சிரபுஞ்சி (1110 செமீ) அதிக மழைப்பொழிவிலிருந்து, தார் பாலைவனத்தின் ஆண்டு மழையளவாகிய 10 செமீ வரை வேறுபடுகிறது.

இந்திய காலநிலை

* இந்தியாவின் காலநிலை பல வேறுபாடுகள் நிறைந்து காணப்படுகிறது. உலகிலேயே மழைமிகு சிரபுஞ்சியும் (1080 செ.மீ), 13 செ.மீ.க்கும் குறைவாக மழை பெறும் தார் பாலைவனமும் இந்தியாவில் தான் உள்ளது.

* இவ்வித வேறுபாடுகளைக் கொண்டிருந்தபோதிலும் காலநிலை அமைப்பு ஓரளவு ஒத்தமைந்துள்ளது. இவ்விதம் காலநிலையைச் சமன்படுத்தும் ஒரே அமைப்பு பருவ காற்று ஆகும்.

* இந்தியாவின் காலநிலையை வேறுபாடுகள் கொண்டதாக ஆக்கும் பண்புகள் மூன்றாகும். அவை: 01. இமயலைகள் 02. கடலிலிருந்து அமைந்த இடைவெளி 03. வேறுபட்ட நிலத்தோற்றம் ஆகியன.

* இமயமலை இந்தியாவின் வட எல்லை முழுவதும் நெடிதுயர்ந்து அமைந்து, இந்தியாவினை ஆசியாவின் பிற பகுதிகளிலிருந்து பிரிக்கிறது.

* இந்தியாவின் காற்றோட்டம் வெப்பநிலை ஆகியன வெளிப்பாதிப்பு இன்றி அமைகிறது. உதாரணமாக குளிர்காலத்தில் மத்திய ஆசியா, திபெத் ஆகிய பகுதிகளிலிருந்து வீசும் குளிர்காற்று இமயமலைகளால் தடுக்கப்படுவதால், இந்தியச் சமவெளி கடும் குளிரிலிருந்து தடுக்கப்பெறுகிறது.

* இது போன்ற மலை அரண் பெற்றிராமையால் தென் சீனா கடும் குளிரால் பாதிக்கப்படுகிறது. அவ்விதமே கோடையில் பருவக் காற்றினைத் தடுத்து பெரும் மழையைப் பொழிவிக்கிறது.

* இமயமலை இல்லையெனில் வளமிக்க கங்கைச் செவெளி தார் பாலைவனத்தின் தொடர்ச்சியாகவே அமைந்திருக்கும்.

* இந்தியக் கடற்கரை உடைபடாது ஒழுங்காகக அமைந்திருத்தல் ஒரு பெரும் குறைபாடு ஆகும். இதனால் இந்தியாவின் பெரும்பகுதி கடலிலிருந்து வெகுதூரத்தில் அமைந்து வெவ்வேறு பண்புகளைப் பெறுகிறது.

* மிகுந்த வெப்பநிலை, வறட்சி ஆகிய பண்புகளைக் கொண்டுள்ளது. குறுகி அமைந்துள்ள தென்னிந்தியாவிலும், மேற்குத் தொடர்ச்சி மலை, கடற்பண்புகள் உள்நாட்டில் ஊடுருவாது தடுத்துவிடுகின்றன.

* கோடையில் வட இந்தியச் சமவெளி அதிக வெப்பத்தால் பாதிக்கப்படும்போது மலைகளில் அமைந்த இமாசலப் பிரதேசம் காஷ்மீர் போன்றவை குளிர்ச்சியாக அமைகின்றன.

* மேற்குத் தொடர்ச்சி மலைகளின் மேற்குச் சரிவில் பெரும் மழை பொழிவிக்கும் தென்மேற்குப் பருவக்காற்று அமமலைகளுக்குக் கிழக்கிலமைந்த பகுதிகளுக்கு மிகக் குறைந்த மழையை அளிக்கிறது.

* இதனால் தக்காணப் பீடபூமி முழுவதும், மழை மறைவுப் பிரதேசமாக உள்ளது. இதற்கு மாறாக ஆரவல்லி மலைகள் காற்றிற்குக் குறுக்காக அமையாததால் மழையைப் பொழிவிப்பதில்லை. ராஜஸ்தான் பாலைவனமாக உள்ளது.

* இந்தியாவின் காலநிலை நான்கு பருவங்களாகப் பிரிக்கலாம். அவை: 01. குளிர்காலம் (டிசம்பர் - பிப்ரவரி) 02. கோடை காலம் (மார்ச் - மே) 03. தென்மேற்கு பருவக்காற்றுக் காலம் (ஜூன் - செப்டம்பர்) 04. பருவக் காற்று பின்வாங்கும் காலம் (அக்டோபர் - நவம்பர்)

குளிர்காலம்

* டிசம்பர் முற்பகுதியில் தொடங்கி பிப்ரவரி முடிய குளிர்காலமாகும். பொதுவாக இப்பருவத்தில் வானம் தெளிந்து அமையும், வறண்டும் அமையும்.

* இரவு வெப்பநிலைகள் வட இந்தியாவில் இரவு வெப்பநிலைகள் மிகத் தாழ்ந்தும், பகல் வெம்மையாகவும் அமையும். இக்காலத்தில் தான் இந்தியாவின் இரு சிறு பாகங்களில் மழை பொழிகிறது.

* வட இந்தியாவில் இமயத்தின் அடிவாரத்தை ஒட்டி மேற்கிலிருந்து வரும் மத்தியத் தரைக்கடல் புயல்களால் மழை ஏற்படுகிறது.

* அலகாபாத் வரை இம்மழைப் பொழிவு காணப்படுகிறது. பாகிஸ்தானில் உள்ள பெஷாவர் குளிர்காலத்தில் தான் உச்சமழையைப் பெறுகிறது. இம்மழை கோதுமை சாகுபடிக்கு மிக உதவியாய் இருப்பதால், இதனைக் கோதுமை மழை எனவும் கூறுவர்.

* மழை பெறும் மற்றொரு பகுதி தமிழ்நாட்டின் தென்கோடியாகும். வட இந்தியாவிலிருந்து வீசும் வறண்ட காற்று திசைமாற்றம் அடைகிறது. இது வங்கக் கடல் மீது வீசும்போது நீராவியை ஏற்று தென்கோடிக்கு மழை தரும் காற்றாக அமைகிறது.

கோடை காலம்

* மார்ச் மாதத்தின் பிற்பகுதியில் தொடங்கி சூரியன் வட அரைக்கோளத்தில் அமைகிறது. எனவே, சூரியனின் செங்குத்துக் கதிர்களால் இந்தியாவின் வெப்பநிலை உயருகிறது.

* இவ்வுயர்வு தெற்கில் தொடங்கி படிப்படியாக வடக்கு நோக்கி நகர்கிறது. மே மாதத்தில் வட சமவெளிகளில் வெப்பநிலை வெகுவாக அதிகரிக்கிறது. இதன் விளைவாக தார் பாலைவனப் பகுதி தொடங்கி, சோட்டா நாகபுரி பீடபூமி வரை ஒரு குறை அழுத்தப் பள்ளம் பரவி அமைகிறது.

* இக்குறை அழுத்தத்தைச் சார்ந்து ஆங்காங்கே தீவிர தல கதாற்றோட்டங்கள் ஏற்படுகின்றன. இப்பருவத்தில் ஏற்படும் இடி புயலால் பெரும் மழைப்பொழிவு ஏற்படுகிறது.

* லூ என்னும் வறட்சிமிக்க காற்றும் இப்பருவத்தில் வடமேற்கு இந்தியாவில் வீசுகிறது. தெற்கில் கேரள, கர்நாடக கடற்கரைப் பகுதிகளை ஒட்டி இட்ப்புயல் மழை ஏற்படுகிறது. காப்பிச் செடி துளிர் விட இது மிகப் பயன்படுவதால், இதனை துளிர் மழை என்பர்.

* வங்காளத்தில் இப்பருவத்தில் வடமேற்கிலிலருந்து வீசும் வறண்ட காற்றும், வங்கக் கடலிலிருந்து வீசும் ஈரக்காற்றும் சந்திப்பதால் பெருமழை ஏற்படுகிறது. இதனை நார்வெஸ்டர் மழை என்பர். இதைத் தவிர பிற பகுதிகள் வறண்டு காணப்படுகின்றன.

தென்மேற்குப் பருவக்காற்றுக் காலம்

* சூரியன் வடக்கில் நகர நகர வெப்பநிலை உயருகிறது. ஜூன் இருதியில் சூரியின் வட அயனக்கோட்டில் அமையும்போது உச்ச வெப்பநிலை ஏற்படுகிறது.

* சூரியனைத் தொடர்ந்து குறை அழுத்தப் பகுதியும் நகர்ந்து இந்தியாவின் வடமேற்கில் நிலை கொள்கிறது. பின்னர் தீவிரமைடகிறது. அப்போது ஆஸ்திரேலியாவிலிருந்து வீசும் தென்கிழக்கு வியாபாரக் காற்று புவி நடுக்கோட்டுப் பகுதியுடன் நின்று விடாது அதனைக் கடந்து வடக்கில் வீசுகிறது.

* அப்போது வலப்பக்கம் திசை மாற்றமடைந்து தென்மேற்குப் பருவக் காற்றாக இந்தியாவில் வீசுகிறது நீண்டதூரம் வெப்பமிகு கடற்பகுதியின் மீது வந்தமையால் இக்காற்று நீராவி மிகுந்த ஈரக் காற்றாக உள்ளது.

* இந்தியாவை அடையும் இக்காற்று அரபிக்கடல் பிரிவு, வங்கக் கடல் பிரிவு என இரண்டாகப் பிரிகிறது. அரபிக் கடல் கடல் பிரிவு மேற்குத் தொடர்ச்சி மலைக்குச் செங்குத்தாக வீசுவதால் தடுக்கப்பட்டு மேலெழுகிறது. எனவே பெரும் மழையை மேற்குச் சரிவுகளில் பொழிவிக்கிறது. மழையளவு தெற்கில் திருவனந்தபுரத்திலிருந்து சிறிது தசிறிதாக அதிகரித்து மங்களூருக்கருகில் உச்ச அளவாக அமைகிறது.

* வங்க கடல் கிளை பர்மாவின் அரக்கன்யோமா மலைகளால் தடுக்கப்படுகிறது. இதனால் பர்மாவின் மேற்குக் கடற்கரை மிகுதியான மழையைப் பெருகிறது. பின்னர் இக்காற்று இந்தியா நோக்கித் திசை திருப்பப்பட்டு கங்கைச் சமவெளியை அடைகிறது.

* இங்கு இது இமயத்திற்கு இணையாக வடமேற்குத் திசையில் முன்னேறுகிறது. இதனால் கங்கைச் சமவெளி முழுவதும் பரவலாக மழை பெறுகிறது.

* இக்காற்று வடமேற்கிலுள்ள தாழ் அழுத்த மையத்தை அடைகிறது. ஜூன் துவக்கத்தில் இந்தியாவின் தென்கோடியை வந்தடையும் தென்மேற்குப் பருவக்காற்று ஜூலை மாத துவக்கத்தில் இந்தியா முழுவதையும் தன் ஆதிக்கத்தின் கீழ்க் கொண்டு வருகிறது.

* வங்க்க கடல் பிரிவினால் வட இந்தியாவின் பெரும்பகுதி மழை பெறுகிறது. தாழ் அழுத்த மையம் அமைந்துள்ள போதிலும் ராஜஸ்தான் மிக்க குறைந்த மழையையே பெறுகிறது.

* மேகாலாயாவில் அமைந்துள்ள சிரபுஞ்சி மற்றும் மெளசின் ராம் ஆகியவை உலகிலேயே மழை மிகுந்த பகுதிகளாகக் கருதப்படுகின்றன.

பருவக்காற்று பின்வாங்கும் காலம்

* இதையே வடகிழக்குப் பருவக்காற்று என்று அழைக்கிறோம். ஜூலை மாதம் தொடங்கி சூரியன் தெற்கு நோக்கி நகரத் தொடங்குவதால் வெப்பநிலை குறையகத் தொடங்குகிறது.

* வடமேற்கில் அமைந்த தாழ் அழுத்தம் சிறிது சிறிதாக வலுவிழுந்து செப்டம்பர் முடிவில் ஒரு சிறு உயரழுத்திற்கு இடம் கொடுக்கிறது. இதனால் தென்மேற்குப் பருவக்காற்று முதலில் பஞ்சாப்பிலிருந்தும் படிப்படியாகக் கங்கைச் சமவெளியிலிருந்து பின்வாங்குகிறது. அக்டோபர், நவம்பர் மாதங்களில் தென்னிந்தியாவில் பின்வாங்கி முடிவாக இந்தியாவை விட்டு வெளியேறுகிறது.

* அதனிடத்தில் குளிர்ந்த காற்று வடமேற்கில் அமைந்த உயரழுத்தத்திலிருந்து வடஇந்தியாவில் வீசுகிறது. வடமேற்கிலிருந்து சிறிது சிறிதாகப் பின் வாங்கும் தாழ் அழுத்தம் அக்டோபர், நவம்பர் மாதங்களில் வங்க்க கடலில் மையம் கொள்கிறது.

* இத்தாழ் அழுத்தத்தின் விளைவாக அடுத்தடுத்துப் பல புயல்கள் வங்கக் கடலில் தோன்றி தென்னிந்தியாவின் கீழ்க் கடற்கரையைப் பாதிக்கிறது.

* இதனால் வங்கம், ஒரிசா, ஆந்திரா, தமிழ்நாடு ஆகியவற்றின் கடற்கரை பெரும் மழை சுறாவளிக் காற்று ஆகியவர்றால் பாதிக்கப்பட்டு பெரும் சேதம் ஏற்படுகிறது.

ஆயினும் இப்புயல்களாலேயே இப்பகுதிகள் மழை பெறுகின்றன. தமிழ்நாட்டின் உண்மையான மழைக் காலம் இதுவே.

* பொதுவாக புயல்கள் ஆற்று முகத்துவாரங்களை விரும்புவதால் கங்கை, மகாநதி, கோதாவரி, கிருஷ்ணா காவிரி ஆகிய ஆறுகளின் முக்த்துவாரங்கள் புயலின் பாதைகளாக அமைகின்றன.

மழைப்பரவல்

* பருவக்காற்றுகளின் மூலமே இந்தியா மழையைப் பெறுகிறது. மழையின் பரவல் குறிப்பிட்ட பருவத்தில் குவிந்தும், மறு பருவத்தில் மழையற்றும் அமையும் தவிர, மழையளவிலும் வேறுபாடு உள்ளது.

* ஆண்டு சராசரி மழையின் அடிப்படையில் இந்தியாவை ஐந்து மண்டலங்களாகப் பிரிக்கலாம்.

* கனத்த மழை பெறும் பகுதி - ஆண்டிற்குச் சராசரியாக 200 செ.மீ மழையளவு பெரும் பகுதிகள். இவற்றில் மேற்குக் கடற்கரை, வங்காளம், அஸ்ஸாம், கிழக்கு இமயமலைப்பகுதிகளை அடக்கிக் கூறலாம்.

* அதிக மழை பெரும் பகுதி - ஆண்டுக்கு 100 முதல் 200 செ.மீ வரை மழை பெறும் வகுதி மதிதிய கங்கைச் சமவெளி, ஒரிசா, சோட்டா நாகபுரிப் பீடபூமி அகியன இதில் உள்ளன.

* மித மழைப்பகுதி - தக்காணத்தின் மழை மறைவுப் பிரதேசம். மத்திய இந்தியப்பகுதி, உத்திரப்பிரதேசம், பீகாரின் மேற்குப் பகுதிகள் ஆகியன. இதன் மழையளவு சுமார் 50 முதல் 100 செ.மீ.வரை.

* குறைந்த மழை பெரும் பகுதி - ஆண்டிற்கு 50 செ.மீ.க்கும் குறைவான மழை பெறும் பகுதி. பஞ்சாப், ராஸ்தான், குஜராத்தின் வடமேற்குப் பகுதி ஆகியன.

* குளிர்காலம் மழைப்பகுதி - இது அளவின் அடிப்படையில் அமையாது. மழை பெறும் காலத்தின் அடிப்படையில் உள்ளது. சோழ மண்டலக் கடற்கரை வடகிழக்குப் பருவக்காற்றுக் காலத்தில் 50 முதல் 100 செ.மீ வரை மழையைப் பெறுகிறது.

* இந்திய மழையின் வேறுபாடு சுமார் 30 சதவீதம் வரை வேறுபடுவதால் அதாவது நிச்சயமான நீரளிப்பற்ற பகுதிகளில் விவசாயம் பெரும் சூதாட்டமாகவே அமைகிறது.

* இந்தியாவில் வெள்ளத்தால் பாதிக்கப்படக் குடிய பகுதிகளில் 60 சதவீத பகுதி. கங்கை பிரம்மபுதிதிரா சமவெளிப் பகுதியில் அமைந்துள்ளது. பீகார், வங்காளம் மற்றும்  தாமோதர் பள்ளத்தாக்குப் பகுதிகள் குறிப்பிடதக்கவை.

* இராஸ்தான் மாநிலத்தில் விசைப் பொழிவு அல்லது டாரன்ஷியல் மழையின் காரணமாக திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்படுகிறது.

* கிழக்குக் கடற்கரைப் பகுதிகளில் வெள்ளப்பெருக்கானது பெரும்பாலும் சூறாவளிகளால் ஏற்படுகிறது. இப்பகுதிகளில் வெள்ளமானது குறைந்த காலத்திற்கே நீடிக்கிறது.

நன்றி 
தினமணி

26 September, 2014

மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் - 7 ஆம் வகுப்பு சமச்சீர்


தமிழகத்தின் அன்னிபெசன்ட் - மூவலூர் இராமாமிர்தம் அம்மையார்.

இன்று ஏழைப்பெண்களுக்கு திருமண உதவித்திட்டம் மூவலூர் இராமாமிர்தம் அம்மையாரின் பெயரால்தான் வழங்கப்பட்டு வருகின்றன.

அந்தக் காலத்திலே பெண் சீர்திருத்தக் கருத்துகளுடன் இப்படியொரு பெண் வாழ்ந்தாரா என்று ஆச்சரியப்படும் வகையில் போராட்டங்கள், சொற்பொழிவுகள், அரசியல் ஈடுபாடு, எழுத்து, புதிய சிந்தனைகள் எனத் தாம் வாழும் காலத்தைச் பெண்ணுரிமைக்காகவே தனது வாழ்க்கையை செலவிட்டவர் மூவலூர் இராமாமிர்தம் அம்மையார்.

பிறப்பு: திருவாரூரைச் சேர்ந்த கிருஷ்ணசாமி – சின்னம்மாள் தம்பதிக்கு நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறை அருகே உள்ள மூவலூர் கிராமத்தில் 1883 இல் பிறந்தவர்.தேவதாசி முறையை எதிர்த்து போராட்டம்  நடத்தினார்.

இளமை காலம்:

தனக்கு இசையும் நாட்டியமும் கற்றுத்தந்த பேரளம் சுயம்புப்பிள்ளை என்பரை எவ்விதச் சமய சடங்குகளுமற்று நெய்விளக்கில் சத்தியம் செய்து வாழத் தொடங்கினர். அம்மையாரின் அனைத்துப் போராட்டங்களுக்கும் இவருடைய கணவர் துணையாய் நின்றார்.

இசையைக் குலத் தொழிலாகக் கொண்டதனால் இவர்களுக்கு இசை வேளாளர்கள் என்ற பெயர் வந்தது. இவர்களுள் பெரும்பாலானவர்கள் தஞ்சை மாவட்டத்தை சேர்ந்தவர்கள். இசையின் வாய்ப்பாட்டு, நரம்புக்கருவி, தோல்கருவி, நடனம் என பல துறைகளில் பல இசை வேளாளர்கள் பெயர் பெற்றுள்ளனர்.

கணவரின் துணையுடன் 1917 இல் மயிலாடுதுறையில் தமது முதல் போராட்டத்தைத் தொடங்கினார். தேவதாசி ஒழிப்பு முறைக்கு அல்லும் பகலும் பாடுபட்டார். தேவசாசிகளை ஒருங்கிணைத்து மேடை முழக்கங்கள் மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்தினார். 

காந்தி மீது பற்று:

காந்தியத்தின் மீது மிகுந்த ஈடுபாடும் விடுதலை வேட்கையும் கொண்டிருந்தார் அம்மையார். பேச்சாளர்கள் எதையும் பேசக்கூடாது என்று ஆங்கிலேயர் கட்டளையிட்டிருந்தனர். அக்கட்டளையை மதிப்பதுபோலக் காட்டித் தமது கொள்கையை நிலை நிறுத்துவதில் அம்மையார் உறுதியோடு இருந்தார். 

எனவே, தாம் பேச நினைத்த கருத்துகளை எல்லாம் கரும்பலைகையில் எழுதி மக்கள் முன்னிலையில் வைத்தார். காந்தியடிகள், இரண்டாவது வட்டமேசை மாநாட்டில் கலந்துகொண்டு இந்தியா திரும்பினார். அவரை ஆங்கிலேயர் கைது செய்தனர். இதனால், சினம் கொண்ட அம்மையார், மூவர்ணக் கொடியை ஆடையாக அணிந்து கொண்டார்.



விடிவெள்ளி:

அம்மையார், பெண் உரிமைக்குப் பாடுபட்ட விடிவெள்ளியாகத் திகழ்ந்தார். தீண்டாமை, தேவதாசிமுறை, குழந்தைத் திருமணம், கைம்மை நோன்பு முதலிய சமூகக்கேடுகளை எதிர்ப்பதில் தீவிரமாக இருந்தார்.

இறுதியில், தேவதாசி முறையை ஒழிப்பது குறித்து சட்டப்பேரவையில் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. அப்போது காங்கிரசின் முதுபெரும் தலைவர், “தேவதாசி முறையை ஒழித்தால் இந்திய கலாச்சாரமே கெட்டுவிடும்” என்று கொதித்தார். அப்போது, அந்த அவையில் இருந்த டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி, “தேவதாசி முறையிலிருந்து நாங்கள் விலகிக் கொள்கிறோம். இந்திய கலாச்சாரத்தை காப்பாற்றுவதற்காக, இனி உங்கள் வீட்டுப் பெண்கள் தேவதாசிகளாக இருக்கட்டும்” என்றார். இதனால் சர்வமும் ஒடுங்கிப்போனார் அவர். டாக்டர் முத்துலெட்சுமியை இவ்வாறு அதிரடியாகப் பேசும்படி ஆலோசனை வழங்கியவர் மூவலூர் ராமாமிர்தம் அம்மையார்தான். இதன் பின்னர், நீதிக்கட்சி காலத்தில் 1929ல் தேவதாசி ஒழிப்பு முறை சட்டம் கொண்டுவரப்பட்டது.


பொதுவாழ்வில் வாழ்ந்த காலம்வரை உயர்ந்த நோக்கத்திற்காக தன் வாழ்வை அர்ப்பணித்த இராமாமிர்தம் அம்மையார் தமது எண்பதாம் வயதில் 27.06.1962 அன்று இவ்வுலக வாழ்வை நீத்தார். இருப்பினும், தம் தொண்டால் தமிழக வரலாற்றில் தமக்கென அழியாப் புகழை நிலைநிறுத்திக் கொண்டார் எனில் அது மிகையாகாது.

திருமண உதவித் திட்டம்:


இவரது சேவைகளையும், தியாகங்களையும் கவுரவிக்கும் விதமாகவும், அவரது நினைவாகவும் ஏழைப் பெண்கள் திருமண உதவித்திட்டத்துக்கு மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் ஏழைப் பெண்கள் திருமண உதவித்திட்டம் என பெயர் சூட்டி இன்று வரை தொடர்ந்து நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறது தமிழக அரசு.


25 September, 2014

மங்கள்யான்



மங்கள்யானில் உள்ள கருவிகள்

லிமான் ஆல்பா போட்டோமீட்டர்

செவ்வாய் கிரகத்தில் நீர் இருப்பதற்கான சாத்தியக்கூறு உள்ளதா என்பதைக் கண்டறிவதற்கான கருவி. செவ்வாய் கிரக வளிமண்டலத்தின் மேல் அடுக்கில் கதிர்வீச்சில் டுடீரியம் ஹைட்ரஜன் அளவை இந்தக் கருவி கணக்கிடும். இந்த அளவைக் கணக்கிடுவதன் மூலம் செவ்வாய் கிரகத்தில் தண்ணீர் எவ்வாறு இல்லாமல் போனது அல்லது எந்த வடிவத்தில் உள்ளது என்பதை அறியலாம்.

மீத்தேன் சென்சார் ஃபார் மார்ஸ்

செவ்வாய் கிரக வளிமண்டலத்தில் மீத்தேன் வாயு உள்ளதா, அது எதிலிருந்து உருவானது என்பதைக் கண்டறிவதற்கான கருவி. நூறு கோடி துகள்களில் ஒரு துகளை அளவிடும் துல்லியமான கருவிகள் இதில் உண்டு. செவ்வாய் கிரகத்திலிருந்து பிரதிபலிக்கும் சூரிய கதிர்வீச்சைக் கொண்டு இது தகவல்களைச் சேகரிக்கும்.

மார்ஸ் எக்சாஸ்பெரிக் நியூட்ரல் கம்போசிஷன் அனலைசர்

செவ்வாய் கிரக வளிமண்டல மேல் அடுக்கை சுமார் 400 கிலோமீட்டர் உயரத்திலிருந்து இந்தக் கருவி ஆராயும்.

மார்ஸ் கலர் கேமரா

செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பு எவ்வாறு உள்ளது, வானிலை எப்படி உள்ளது என்பதை இந்தக் கேமராவில் படம் பிடிக்கலாம். அதோடு, செவ்வாயின் துணைக்கோள்களான போபோஸ், டெய்மோஸ் ஆகியவற்றை ஆய்வு செய்யவும் இந்த கேமராவைப் பயன்படுத்தலாம்.

செவ்வாய் கிரகம்

வளிமண்டலம் (வாயுக்களின் அடக்கம்)

நைட்ரஜன் 2.7%

ஆக்சிஜன் 0.13%

ஆர்கான் 1.6%

கார்பன்-டை ஆக்ûஸடு 95.32%

நீராவி 0.03%

நைட்ரிக் அமிலம் 0.01%

வளிமண்டல அழுத்தம்

7.5 மில்லிபார் (சராசரி)

நாளின் அளவு

24 மணி நேரம் 37 நிமிஷம்

ஆண்டின் அளவு

687 நாள்கள்

துருவப் பகுதிகள்

கார்பன்-டை-ஆக்ûஸடு மற்றும்

நீர் பனிக்கட்டிகள்

மேற்பரப்பு வெப்பநிலை

- 63 டிகிரி செல்சியஸ்

துணைக்கோள்கள்

2 (போபோஸ், டெய்மோஸ்)

சாய்வு

25 டிகிரி

ஆழமான பள்ளம்

வாலஸ் மேரினரிஸ்

7 கிலோமீட்டர் ஆழம்

சூரியனிலிருந்து தொலைவு (சராசரி)

22 கோடியே 79 லட்சத்து

36 ஆயிரத்து 637 கிலோமீட்டர்

ஈர்ப்பு விசை

புவியீர்ப்பு விசையில் 0.375 பங்கு

மிகப்பெரிய எரிமலை

ஒலிம்பஸ் மன்ஸ்

26 கிலோமீட்டர் உயரம்

602 கிலோமீட்டர் விட்டம்

தண்ணீர் 

ஒரு காலத்தில் தண்ணீர் ஓடியதற்கான தடயங்கள் உள்ளன. இப்போது தண்ணீர் மேற்பரப்புக்கு உள்ளே இருக்கலாம் என நம்பப்படுகிறது. துருவப் பகுதிகளில் பனிக்கட்டியாக உறைந்தும் காணப்படுகிறது.


செவ்வாய்க்கு இதுவரை அனுப்பப்பட்ட விண்கலங்கள்


  1. 1எம் எண்.1 அக்டோபர் 10, 1960 சோவியத் ரஷியா தோல்வி
  2. 1எம் எண்.2 அக்டோபர் 14, 1960 சோவியத் ரஷியா தோல்வி
  3. 2எம்வி-4 எண்.1 அக்டோபர் 24, 1962 சோவியத் ரஷியா தோல்வி
  4. மார்ஸ் 1 நவம்பர் 1, 1962 சோவியத் ரஷியா தோல்வி
  5. 2எம்வி-3 எண்.1 நவம்பர் 4, 1962 சோவியத் ரஷியா தோல்வி
  6. மரைனர் 3 நவம்பர் 5, 1964 அமெரிக்கா தோல்வி
  7. மரைனர் 4 நவம்பர் 28, 1964 அமெரிக்கா வெற்றி
  8. úஸான்ட் 2 நவம்பர் 30, 1964 சோவியத் ரஷியா தோல்வி
  9. மரைனர் 6 பிப்ரவரி 25, 1969 அமெரிக்கா வெற்றி
  10. 2எம் எண்.521 மார்ச் 27, 1969 சோவியத் ரஷியா தோல்வி
  11. மரைனர் 7 மார்ச் 27, 1969 அமெரிக்கா வெற்றி
  12. 2எம் எண்.522 ஏப்ரல் 2, 1969 சோவியத் ரஷியா தோல்வி
  13. மரைனர் 8 மே 9, 1971 அமெரிக்கா தோல்வி
  14. காஸ்மோஸ் 419 மே 10, 1971 சோவியத் ரஷியா தோல்வி
  15. மரைனர் 9 மே 30, 1971 அமெரிக்கா வெற்றி
  16. மார்ஸ் 2 மே 19, 1971 சோவியத் ரஷியா வெற்றி
  17. மார்ஸ் 2 லேண்டர் மே 19, 1971 சோவியத் ரஷியா தோல்வி
  18. மார்ஸ் 3 மே 28, 1971 சோவியத் ரஷியா வெற்றி
  19. மார்ஸ் 3 லேண்டர் மே 28, 1971 சோவியத் ரஷியா தோல்வி
  20. மார்ஸ் 4 ஜூலை 21, 1973 சோவியத் ரஷியா தோல்வி
  21. மார்ஸ் 5 ஜூலை 25, 1973 சோவியத் ரஷியா தோல்வி
  22. மார்ஸ் 6 ஆகஸ்ட் 5, 1973 சோவியத் ரஷியா தோல்வி
  23. மார்ஸ் 7 ஆகஸ்ட் 9, 1973 சோவியத் ரஷியா தோல்வி
  24. வைகிங் 1 ஆகஸ்ட் 20, 1975 அமெரிக்கா வெற்றி
  25. வைகிங் 1 லேண்டர் ஆகஸ்ட் 20, 1975 அமெரிக்கா வெற்றி
  26. வைகிங் 2 செப்டம்பர் 9, 1975 அமெரிக்கா வெற்றி
  27. வைகிங் 2 லேண்டர் செப்டம்பர் 9, 1975 அமெரிக்கா வெற்றி
  28. ஃபோபாஸ் 1 ஜூலை 7, 1988 சோவியத் ரஷியா தோல்வி
  29. ஃபோபாஸ் 2 ஜூலை 7, 1988 சோவியத் ரஷியா பகுதியளவு தோல்வி
  30. மார்ஸ் அப்சர்வர் செப்டம்பர் 25, 1992 அமெரிக்கா தோல்வி
  31. மார்ஸ் குளோபல் சர்வேயர் நவம்பர் 7, 1996 அமெரிக்கா வெற்றி
  32. மார்ஸ் 96 நவம்பர் 16, 1996 ரஷியா தோல்வி
  33. மார்ஸ் பாத்ஃபைன்டர் டிசம்பர் 4, 1996 அமெரிக்கா வெற்றி
  34. நசோமி ஜூலை 3, 1998 ஜப்பான் தோல்வி
  35. மார்ஸ் கிளைமேட் ஆர்பிட்டர் டிசம்பர் 11, 1998 அமெரிக்கா தோல்வி
  36. மார்ஸ் போலார் லேண்டர் ஜனவரி 3, 1999 அமெரிக்கா தோல்வி
  37. டீப் ஸ்பேஸ் 2 ஜனவரி 3, 1999 அமெரிக்கா தோல்வி
  38. மார்ஸ் ஒடிசி ஏப்ரல் 7, 2001 அமெரிக்கா வெற்றி
  39. மார்ஸ் எக்ஸ்பிரஸ் ஜூன் 2, 2003 ஐரோப்பிய
  40. விண்வெளி அமைப்பு வெற்றி
  41. பீகிள் 2 ஜூன் 2, 2003 ஐரோப்பிய
  42. விண்வெளி அமைப்பு தோல்வி
  43. ஸ்பிரிட் ஜூன் 10, 2003 அமெரிக்கா வெற்றி
  44. ஆப்பர்ச்சூனிட்டி ஜூலை 8, 2003 அமெரிக்கா வெற்றி
  45. ரொசட்டா மார்ச் 2, 2004 ஐரோப்பிய
  46. விண்வெளி அமைப்பு வெற்றி
  47. எம்ஆர்ஓ ஆகஸ்ட் 12, 2005 அமெரிக்கா வெற்றி
  48. பீனிக்ஸ் ஆகஸ்ட் 4, 2007 அமெரிக்கா வெற்றி
  49. டான் செப்டம்பர் 27, 2007 அமெரிக்கா வெற்றி
  50. ஃபோபாஸ் கிரண்ட் நவம்பர் 8, 2011 ரஷியா தோல்வி
  51. யிங்கோ-1 நவம்பர் 8, 2011 சீனா தோல்வி
  52. கியூரியாசிட்டி நவம்பர் 26, 2011 அமெரிக்கா வெற்றி
  53. மங்கள்யான் நவம்பர் 5, 2013 இந்தியா வெற்றி
  54. மேவன் நவம்பர் 18, 2013 அமெரிக்கா வெற்றி



இதில் ரொசட்டா, டான் ஆகிய விண்கலங்கள் செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்வதற்காக அனுப்பப்படவில்லை. எனவே, அவற்றின் வெற்றி கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுவதில்லை. எனவே, செவ்வாய் கிரகத்துக்கு அனுப்பப்பட்ட 51 விண்கலங்களில் 21 மட்டுமே இதுவரை வெற்றி பெற்றுள்ளன.

 இந்தியாவின் மங்கள்யான்


  • ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து 2013, நவம்பர் 5-ஆம் தேதி  விண்ணில் செலுத்தப்பட்டது
  • திட்ட மதிப்பீடு ரூ.450 கோடி
  • செவ்வாய் கிரகத்தில் நீர் இருப்பதற்கான சாத்தியக் கூறு, கனிம வளம், வளிமண்டலத்தில் மீத்தேன் வாயு போன்றவற்றை ஆய்வு செய்வதற்காக அனுப்பப்பட்டுள்ளது
  • ஆய்வுக் காலம் குறைந்தபட்சம் 6 மாதங்கள்
  • 66 கோடி கிலோமீட்டர் பயணம்
  • 18 மாதங்களில் உருவாக்கப்பட்டது
  • விண்கலத்தின் எடை 1,337 கிலோ
  • விண்கலத்தில் உள்ள அறிவியல் கருவிகளின் எடை 15 கிலோ
  • செவ்வாய் கிரக சுற்றுப்பாதையை 2014, செப்டம்பர் 24-இல் அடைந்தது 


அமெரிக்காவின் மேவன்

  • ஃப்ளோரிடாவின் கேப் கேன்னிவரல்  விமானப்படை ஏவுதளத்தில் இருந்து  2013, நவம்பர் 18-ஆம் தேதி விண்ணில் செலுத்தப்பட்டது
  • ரூ.4,083 கோடி
  • செவ்வாய் கிரகத்தின் வளிமண்டல மேல் அடுக்கை ஆய்வு செய்வதற்காக அனுப்பப்பட்டுள்ளது
  • முதன்மையான ஆய்வுக் காலம் ஓர் ஆண்டு. பிறகு, 29 மாதங்களுக்கும், மிக அதிக உயரத்திலான சுற்றுப்பாதையில் 6 ஆண்டுகள்
  • 71 கோடி கிலோமீட்டர் பயணம்
  • 5 ஆண்டுகளில் உருவாக்கப்பட்டது
  • விண்கலத்தின் எடை 2,454 கிலோ
  • விண்கலத்தில் உள்ள அறிவியல் கருவிகளின் எடை 65 கிலோ
  • 2014, செப்டம்பர் 21-ஆம் தேதி சுற்றுப்பாதையை அடைந்ததுவரையும் இயங்கும்
நன்றி 
தினமணி

24 September, 2014

செவ்வாயின் சுற்றுவட்டப் பாதையில் இணைந்தது மங்கள்யான்


மங்கள்யான் விண்கலம் செவ்வாய் கிரகத்தின் சுற்றுவட்டப்பாதையில் வெற்றிகரமாக இணைந்ததாக இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். முதல் முயற்சியிலேயே செவ்வாய் கிரகத்தின் சுற்றுவட்ட‌ப் பாதைக்குள் விண்கலத்தை செலுத்திய பெருமை இந்தியாவுக்கு கிடைத்துள்ளது.

சரியாக காலை 7.59 மணிக்கு மங்கள்யான் விண்கலம் செவ்வாய் சுற்றுவட்டப் பாதையில் நிலைநிறுத்தப்பட்டதை இஸ்ரோ தலைவர் ராதாகிருஷ்ணன் உறுதிப்படுத்தினார்.

உலகமே ஆவலோடு எதிர்பார்த்திருந்த இந்த அரிய நிகழ்வை பிரதமர் நரேந்திர மோடி பெங்களூரில் உள்ள இஸ்ரோ தரைக்கட்டுப்பாட்டு மையத்தில் இருந்து பார்வையிடுட்டார்.

இஸ்ரோ தலைவர், மங்கள்யான் வெற்றி அதிகாரப்பூர்வமாக அறிவித்ததை அடுத்து, பிரதமர் நரேந்திர மோடி இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பாராட்டு தெரிவித்தார். வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வெற்றி என பாராட்டினார்.

மங்கள்யான் கடந்து வந்த பாதை:

கடந்த ஆண்டு(2013) நவம்பர் 5-ம் தேதி ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து பிஎஸ்எல்வி-சி25 ராக்கெட் மூலம் பிற்பகல் 2.38 மணிக்கு மங்கள்யான் விண்கலம் விண்ணில் செலுத்தப்பட்டது. பூமியின் சுற்றுவட்டப்பாதையில் சுற்றி வந்த மங்கள்யான், நியூட்டன் 440 திரவ நிலை இயந்திரம் இயக்கப்பட்டதன் மூலம் 23,550 கி.மீட்டருக்கு மேலே உயர்த்தப்பட்டது. அதைத் தொடர்ந்து பல்வேறு இயந்திரங்கள் படிப்படியாக இயக்கப்பட்டதால் சுற்றுவட்டபாதையில் மங்கள்யான் மெல்ல மெல்ல மேல் எழுந்தது.

இந்நிலையில் கடந்த ஆண்டு டிசம்பர் 1-ம் தேதி புவி ஈர்ப்பு விசையில் இருந்து விலகி 66.6 கோடி கிலோ மீட்டர் தொலைவில் உள்ள செவ்வாய் கிரகத்தை நோக்கி மங்கள்யான் தனது பயணத்தை தொடங்கியது. சந்திரனின் சுற்று வட்டப்பாதை உள்ளிட்ட முக்கிய பாதைகள் அடுத்தடுத்த நாட்களில் வெற்றிகரமாக மாற்றப்பட்டன. மங்கள் யானின் ஒவ்வொரு அசைவுக்கும் தேவை யான ஆணைகளை இஸ்ரோ விஞ் ஞானிகள் பெங்களூரில் உள்ள தரைக் கட்டுப்பாட்டு மையத்தில் இருந்து அவ்வப்போது கொடுத்துக்கொண்டே இருந்தனர்.

மங்கள்யான் விண்கலம் கடந்த ஜூன் 12-ம் தேதி 2-வது வழித்தடத்துக்கு மாற்றப்பட்டது. 300 நாட்களை நெருங்கிக் கொண்டிருந்த வேளையில் கடந்த 16-ம் தேதி ம‌ங்கள்யானில் மேற்கொள்ள வேண்டிய தகவல் பரிமாற்ற ஆணைகள் பதிவேற்றம் செய்யப்பட்டன. அதனைத் தொடர்ந்து 3-வது வழித்தடத்துக்கு மாற்றம் செய்யப்பட்டது.

செவ்வாய் கிரகத்தை நெருங்கிக் கொண்டிருந்த வேளையில் மங்கள் யானில் கடந்த 10 மாதங்களாக செயல்படாமல் இருந்த இயந்திரங்களை இயக்கி சோதிக்க இஸ்ரோ விஞ்ஞானி கள் திட்டமிட்டனர். அதன்படி கடந்த திங்கள்கிழமை மங்கள்யான் விண் கலத்தில் உள்ள‌ முக்கிய திரவநிலை நியூட்டன் 440 இயந்திரத்தை சுமார் 4 வினாடிகள் இயக்கினர்.

இதற்கு 0.567 கிலோ எரிபொருள் செலவானது. இந்த சோதனை முயற்சி வெற்றிகரமாக அமைந்தது. இதனையடுத்து ஏற்கெனவே திட்டமிட்டது போல், மங்கள்யான் செவ்வாய் சுற்றுவட்டப்பாதையை அடைந்தது. இஸ்ரோ விஞ்ஞானிகள் ஒருவொருக்கொருவர் வாழ்த்து தெரிவித்து மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர்.

இந்தியா புதிய சாதனை:

மங்கள்யான் விண்கலம் செவ்வாய் கிரகத்தின் சுற்றுவட்ட‌ப் பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டதால் இந்த சாதனையைச் செய்த நான்காவது நாடு என்ற பெருமை இந்தியாவுக்கு கிடைத்துள்ளது. அமெரிக்கா, ஐரோப்பா, ரஷ்யா ஆகிய நாடுகள் ஏற்கெனவே இதனை சாதனையை படைத்துள்ளன.

முதல் முயற்சியிலேயே செவ்வாய் கிரகத்தின் சுற்றுவட்ட‌ப் பாதைக்குள் விண்கலத்தை செலுத்திய பெருமையும் இந்தியாவுக்கு கிடைத்துள்ளது.

இதுவரை செவ்வாய் கிரக ஆய்வுக்காக அனுப்பப்பட்ட 51 விண்கலங்களில் 21 மட்டுமே வெற்றியடைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

நன்றி 
தி இந்து 

இந்திய இயற்கைத் தாவரம்


* ஒரு பகுதியில் எவ்வித முயற்சியும் இன்றி வளர்கிற தாவர வகையை இயற்கைத் தாவரம் என்பர். இந்தியாவின் காணப்படும் தாவரங்களை பரவல் அடிப்படையில் 6 வகைகளாகப் பிரிக்கலாம்.

பசுமை மாறாக்காடுகள்

* இந்தியாவில் 200 செ.மீ.க்கும் அதிகமான மழை பெய்யும் பகுதிகளில் இக்காடுகள் அமைந்துள்ளன. இக்காடுகளில் ஆண்டு முழுவதும் பசும் இலைகளோடு கூடிய மரங்கள் காணப்படுகின்றன.

* மேலும் இவை உயரமாக வளரக்கூடியவை. மழையளவு குறையும் பகுதிகளில், பசுமை மாறாக் காடுகளுக்குப் பதிலாக ஈரமுள்ள இலையுதிர்க்காடுகள் காணப்படுகின்றன.

* பசுமை மாறாக் காடுகள் அஸ்ஸாம், இமயமலையின் கிழக்குப் பகுதி, மேற்குத் தொடர்ச்சி மலையின் மேற்குச் சரிவுகள், அந்தமான் தீவுகள் ஆகியவற்றில் அமைந்துள்ளன.

* மதிப்பு மிக்க எபோனி, தேக்கு, மூங்கில் போன்ற மரவகைகள் இக்காடுகளில் காணப்படுகின்றன.

இலையுதிர் காடுகள்

* இந்தியாவில் 10 முதல் 200 செ.மீ. வரை மழையளவுள்ள பகுதிகளில் இலையுதிர்க்காடுகள் அமைந்துள்ளன.

* இங்குள்ள மரங்கள், வறண்ட பருவ காலங்களில் ஆவியாதலைத் தடுப்பதற்காக இலைகளை உதிர்த்து விடுகின்றன.

* பருவ மழையாக உள்ள காரணத்தால், பருவக் காற்றுக் காடுகள் இலையுதிர் வகையைச் சார்ந்தவை.

* இவ்விலையுதிர்க் காடுகள், மேற்குத் தொடர்ச்சி மலையின் கிழக்குச் சரிவுகளிலும், வடசமவெளியை ஒட்டியமைந்த இமயமலையின் அடிவாரப் பகுதிகளிலும், தக்காணப் பீடபூமியின் வடக்கு மறஅறஉம் கிழக்குப் பகுதிகளிலும் அமைந்துள்ளன. தேக்கு, சால், சந்தனம், ரோஸ்வுட் மற்றும் மூங்கில் ஆகிய மரங்கள் இக்காடுகளில் உள்ளன.

* தேக்கு விலையுயர்ந்த மர வகையாகும். இது கப்பல் கட்டுவதற்குப் பயன்படுத்தப்படுகிறது. அடுத்து சாலமரம், இந்தியாவில் உள்ள மிக முக்கிய மரவகையாகும்.

இது அதிகமாக இருப்புப் பாதையின் குறுக்குக் கட்டையாகப் பயன்படுத்தப்படுகிறது. விலை மதிப்புடைய சந்தன மரக்காடுகள் மைசூரில் காணப்படுகின்றன.

முட்புதர்க் காடுகள்

* 50 முதல் 100 செ.மீ. வரை மழையளவுள்ள பகுதிகளில் முட்புதர்க் காடுகள் உள்ளன.

* இங்குள்ள மரங்கள், புற்களைத் தின்னும் விலங்குகளிடமிருந்து பாதுகாத்துக் கொள்வதற்காக, கிளைகளிலும், தண்டுகளிலும் முள் அமைப்புகளைக் கொண்டுள்ளன. மாபல், கைர் ஆகியவை முக்கிய மரங்களாகும்.

* இத்தகைய காடுகள் அதிக அளவில் இராஜஸ்தான், கர்நாடகம், செளராஷ்டிரா ஆகிய பகுதிகளில் காணப்படுகின்றன.

பாலைவனத் தாவரங்கள்

* 25 செ.மீ.க்கும் குறைவாக மழையளவு உள்ள பகுதிகளில் தாவரங்கள் காணப்படுகின்றன.

* தார் பாலைவனத்தின் எல்லைப்பகுதி மற்றும் தக்காணப் பீடபூமியின் சில பகுதிகளிலும், இவ்வகைத் தாவரங்கள் காணப்படுகின்றன.

* சப்பாத்திக் கள்ளி, சிரோபடிக் ஆகிய மர வகைகள் நன்கு வளர்கின்றன. இத்தாவரங்கள் உறிஞ்சும் நீரை அதிக நாட்கள் வரை தக்க வைத்துக் கொண்டு, குறிப்பிட்ட அளவு பயன்படுத்தக்கூடியவை. இவை பொருளாதார முக்கியத்துவம் உடையவை அல்ல.

மலைக்காடுகள்

* இக்காடுகள் மலைச்சரிவுகளில் காணப்படுகின்றன. இக்காடுகள் மலைகளின் உயரத்திற்கு ஏற்றவாறு வேறுபட்டுக் காணப்படுகின்றன.

* 900 மீ உயரம் வரையுள்ள சரிவுகளில் அயன மண்டலக் காடுகளும், அதனை அடுத்து 2700 மீ. உயரம் வரை அகன்ற இலைக்காடுகளும், 2700 முதல் 3600 மீ உயரத்திற்கு இடைப்பட்ட சரிவில் ஊசியிலைக் காடுகளும் அமைந்துள்ளன.

* 4800 உயரம் வரை ஆல்பைன் காடுகளும், 4800 மீட்டருக்கு மேல் பனி வயல்களும் அமைந்துள்ளன. பனி வயல்களில் தாவரங்களே காணப்படுவதில்லை.

மாங்குரோவ் காடுகள்

* கங்கை மற்றும் பிரமபுத்திரா ஆகிய ஆற்றுச் சதுப்பு நில டெல்டாக்களில் சதுப்பு நிலக் காடுகள் காணப்படுகின்றன.

* இக்காடுகள் சுந்தரவனக் காடுகள் என்றும் அழைக்கப்படுகின்றன. ிங்கு மரங்கள் குட்டையாகவும், அவற்றின் வேர்கள் நீருக்கு மேல் தோன்றும்படியாகவும் அமைந்துள்ளன.

* இத்தகைய காடுகளில் சுந்தரி வகை மரங்கள் சிறப்பாகக் காணப்படுவதால் இக்காடுகள் சுந்தரவனக் காடுகள் என்று அழைக்கப்படுகின்றன.

* இமய மலையின் அடிவாரத்தில் தராய் காடுகளும் இவ்வகையைச் சார்ந்தவையே.

காடுகளின் பயன்கள்

* காடுகளின் முக்கியப் பயன் நீராவி அளிப்பை அதிகரித்து மழை பொழிய உதவுவதே ஆகும்.

* தெற்கில் தேக்கும், மத்திய இந்தியாவில் சால மரமும், வட இந்தியாவில் தேவதருவும் முக்கிய மரங்களாகும். அவை கட்டடம் கட்டவும், ரயில்வேயில் குறுக்குக் கட்டையாகப் போடவும், படகுகள் கட்டவும் பயன்படுகின்றன.

* மென் மரங்களான ஊசியிலைக் காட்டு மரங்கள் பெட்டிகள், தீக்குச்சிகள் மற்றும் மரக்கூழ் தயாரிக்கப் பயன்படுகின்றன.

* லைம் என்னும் புல்லிலிருந்து பெறப்படும் எண்ணெய், கொசுவர்த்திகள் செய்யப்பயன்படுகிறது. கோரை வகைப் புற்கள் பாய் பின்னப் பயன்படுகின்றன.

* திருநெல்வேலியில் தயாரிக்கப்படும் பத்தமடை பாய் மிகவும் புகழ்பெற்றது. கடுக்காய், ஆவாரம் பட்டை போன்றவை தோல் பதனிடப் பயன்படுகின்றன.

* காடுகளின் பயன்பாடுகளின் காரணமாகவே காட்டுப் பயிற்சியாளர் பயிற்சிக்காக கோவை, டேராடூன் ஆகிய இடங்களில் கல்லூரிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

* மத்திய அரசு டேராடூனில் காட்டு ஆராய்ச்சிக் கழகம் ஒன்றை ஏற்படுத்தியுள்ளது. காடுகளைப் பாதுகாப்பதில் ஈடுபட்டு வரும் ஒரு முக்கிய இயக்கம் உத்திரப் பிரதேசத்தில் தோன்றி செயல்பட்டு வரும் சிப்கோ இயக்கமாகும்.

* இந்தியாவில் 1894 முதலாகவே காடுகள் கொள்லை பின்பற்றப்பட்டு வருகிறது. இது 1952-ல் திருத்தப்பட்டது. 1988-ல் இந்திய அரசு புதிய காடுகள் கொள்கையை அறிவித்து காடுகளை மேம்படுத்தி வருகிறது.

* 1950-ம் ஆண்டு முதல் நாடெங்கிலும் மரம் நடுவிழா ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் நடைபெற்று வருகிறது.

* அதிக வளர்ச்சியும், செழிப்பும் இல்லாத காடுகளைத் திருத்தம் செய்து நல்ல இனத்தைச் சேர்ந்த நாட்டுச் செடிகளை உற்பத்தி செய்யும் திட்டத்தை, காட்டு இலாகாவினர் பல மாவட்டங்களில் செயல்படுத்தி வருகின்றனர். இந்த முறையே குமரி பயிர் முறை என்று அழைக்கப்படுகிறது.

* காட்டிலாகா நிலங்களை குத்தகைக்கு எடுக்கும் நிலமில்லா ஏழைகளை குமரிதாரர்கள் என்பர்.

* அந்தச் செடிகளுக்கிடையே குமரிதாரர்களுக்குத் தேவையான உணவுப் பயிர்களையும் விளைவிக்கலாம்.

* தமிழ்நாட்டில் 1984-ம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி காடுகளின் மொத்த பரப்பளவு 2.2 மில்லியன் ஹெக்டேர். மொத்த நிலப்பரப்பில் 17 சதவீத பகுதிகள் காடுகளாகும்.

இந்திய மண் வகைகள்

* இயற்கை வளங்களில் மிக முக்கியமான வளம் மண். புவியின் மேற்பரப்பில் காணப்படும் மிகச்சிறிய பாறைத் துகள்களால் ஆன படலமே மண் எனப்படும்.

* இந்திய வேளாண்மை ஆய்வுக் குழு (இந்திய கவுன்சில் ஆஃப் அக்ரிகல்ச்சுரல் ரிசர்ச்) மண் வகைகளை 8 பிரிவுகளாகப் பிரிக்கப்படுகின்றன.

* மண்ணின் மேல் அடுக்கு அரிக்கப்படுவதை மண் அரிப்பு என்பர். மழை பெய்தவுடன் மேற்பரப்பில்லுள்ள மண் கரைந்து செல்கிறது. இதற்கு தகடரிப்பு என்று பெயர்.

* நீர் தேங்குவதாலும், உரங்கள் அதிக அளவில் பயன்படுத்துவதாலும் மண் வளம் பாதிக்கப்படுகிறது.

* ராஜஸ்தான் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் காற்றின் மூலம் மண் அரிப்பு ஏற்படுகிறது.

* விவசாய முறையில் களைகளை நீக்கி அடர்த்தியான மண்ணை உருவாக்குவது மல்ச்சிங் எனப்படும்.

* சில முக்கிய மண் வகைகளான வண்டல் மண், கரிசல் மண், செம்மண், லாட்டரைட் ஆகியவற்றைக் காண்போம்.

* இந்தியாவில் உள்ள மண் வகைகளில் மிக அதிகப் பரப்பில் காணப்படுவதும், முக்கியமானதும் வண்டல் மண் ஆகும்.

* இந்தியாவின் பரப்பில் சுமார் 43 சதவீதம் வண்டல் மண்ணாக உள்ளது.

நன்றி  
தினமணி 

23 September, 2014

திரிகடுகம் - 7 ஆம் வகுப்பு சமச்சீர்

     

         உண்பொழுது நீராடி யுண்டலும் என்பெறினும்
         பால்பற்றிச் சொல்லா விடுதலுந் - தோல்வற்றிச்
         சாயினுஞ் சான்றாண்மை குன்றாமை இம்மூன்றுந்
         தூஉய மென்பார் தொழில்.

நீராடி யுண்பதும், பொய்க்கரி புகலாமலிருப்பதும், உயிர் நீங்கினும் சான்றாண்மை நீங்காதிருப்பதும் தூயவர் செயல்கள்

        இல்லார்க்கொன் றீயும் உடைமையும் இவ்வுலகில்
        நில்லாமை யுள்ளும் நெறிப்பாடும் - எவ்வுயிர்க்கும்
        துன்புறுவ செய்யாத தூய்மையும் இம்மூன்றும்
        நன்றறியும் மாந்தர்க்கு உள.


வறியவர்க்கு பொருளை அளித்தல், இவ்வுலகத்துப் பொருள்களின் நிலையாமையை அறிந்து நல்வழி நிற்றல் , எவ்வுயிரையும் துன்புறுத்தாத நிலையில் வாழ்தல் என்னும் இம்மூன்றும்  அறவழியில் நடக்கும் மக்களுக்கே என்றும் உண்டு  


       முறைசெய்யான் பெற்ற தலைமையும் நெஞ்சில்

       நிறையிலான் கொண்ட தவமும் - நிறைஒழுக்கம்
       தேற்றாதான் பெற்றவனப்பும் இவைமூன்றும்
       தூற்றின்கண் தூவிய வித்து.

முறை புரியமாட்டாதவன் தலைவனா யிருப்பதும், மனவலி யில்லாதவன் தவஞ் செய்வதும், நன்னடக்கை யில்லாதவன் அழகும் வீண் என்பது.
  

திரிகடுகம்

காரம், கார்ப்பு (உறைப்பு) என்று பொருள்படும். கடுக்கும் பொருளாகிய சுக்கு, மிளகு, திப்பிலிகளுள் ஒன்றையோ அல்லது இம்மூன்றையுமோ கடுகம் என்பது உணர்த்தும். சுக்கு, மிளகு, திப்பிலி ஆகிய மூன்றையும் குறிக்கும்போது இது திரிகடுகம் என்று சொல்லப்பெறும். (பிங்கல நிகண்டு, 352) 

ஆசிரியர் 

திரிகடுகம் என்ற உயிர் மருந்து நூலை ஆக்கியவர் நல்லாதனார். ஆதனார் என்பது இயற்பெயர். ‘நல்’ என்பது அடைமொழி. காப்புச் செய்யுளில், பூவை வண்ணன் ஆகிய திருமால் உலகம் அளந்தது, குருந்தமரம் சாய்த்தது, மாயச் சகடம் உதைத்தது ஆகியவை பற்றிக் கூறியிருப்பதால் இவர் வைணவ சமயத்தவர் என்பது பெறப்படும். இவர் காலம் கி.பி. இரண்டாம் நூற்றாண்டு. 

 நூல் அமைப்பும் சிறப்பும் 

திரிகடுகம் காப்புச் செய்யுள் உட்பட 101 வெண்பாக்களைக் கொண்டது. முதற் பாடலிலேயே நூலின் பெயர்க்காரணத்தை, ‘திரிகடுகம் போலும் மருந்து’ என்று ஆசிரியரே குறிப்பிடுகின்றார். திருக்குறள், நாலடியார் போன்ற நூல்களின் கருத்துகளை இந்நூல் பெரிதும் பின்பற்றுகிறது. கொல்லாமை, ஊன் உண்ணாமை, அருளுடைமை, இன்சொல் போன்ற இவ்வுலகிற்குரிய நல்வழிகளையும் அவாவறுத்தல், மெய்யுணர்தல் போன்ற மறுமைக்குரிய நல்வழிகளையும் இந்த நூல் எடுத்துக்காட்டுகின்றது. இது மனித சமுதாயத்திற்கு இம்மைக்கும் மறுமைக்கும் நல்ல வழியினைக் காட்டும் நூலாகும். ஒவ்வொரு வெண்பாவிலும் மூன்று அறக்கருத்துகள் சொல்லப்படுகின்றன.

இந்நூலில் அறத்தின் உயர்வும் சிறப்பும் எடுத்துரைக்கப்படுகிறது. இல்லறம் நல்லறமாக ஆவதற்குக் கணவனும் மனைவியும் எப்படி வாழ்தல் வேண்டும் என்பது 100 பாடல்களில் 35 இடங்களில் கூறப்படுகிறது. 

இன்பத்தமிழ் - Class 6 Tamil New Syllabus Term 1

தமிழ் வணக்கம்   தற்கால இலக்கிய மரபாகிவிட்டது  பாரதிதாசனின் இயற்பெயர்   சுப்புரத்தினம்.  பாரதியாரின் கவிைதகள்  மீது கொண்ட  பற்றின் காரணமா...