27 August, 2014

லோக்பால் குழுவுக்கான புதிய விதிமுறைகள் விரைவில் அறிவிப்பு


லோக்பால் தேர்வுக் குழுவுக்கான புதிய விதிமுறைகளை மத்திய அரசு விரைவில் அறிவிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

இது குறித்து மத்திய சட்டத்துறை அமைச்சக வட்டாரங்கள் கூறியதாவது:

லோக்பால் தேர்வுக் குழுவில் மேற்கொள்ளப்பட உள்ள மாற்றங்கள் குறித்து இறுதி செய்வதற்கு சட்டத் துறை அமைச்சகத்துடன், மத்திய பணியாளர் மற்றும் பயிற்சித் துறை அமைச்சக அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர்.

லோக்பால் அமைப்புக்கான தலைவர் மற்றும் உறுப்பினர் பதவிகளுக்காக, மத்திய பணியாளர் மற்றும் பயிற்சித் துறையால் வழங்கப்படும் பட்டியலில் உள்ளவர்களைத் தவிர, வெளியிலுள்ள தகுதியான நபர்களை பரிந்துரைக்க லோக்பால் தேர்வுக் குழுவுக்கு விரைவில் அதிகாரம் வழங்கும் விதமாக, புதிய விதிமுறைகள் ஏற்படுத்தப்பட உள்ளன.

முன்னதாக அரசு தலைமை வழக்குரைஞர் முகுல் ரோத்தகி தலையிலான குழுவினர், லோக்பால் தேர்வுக் குழுவின் விதிமுறைகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய திருத்தங்கள் குறித்து மத்திய அரசிடம் அறிக்கை தாக்கல் செய்துள்ளனர்.

ரோத்தகி குழுவின் அறிக்கையானது மத்திய பணியாளர் மற்றும் பயிற்சித் துறையால் பரிசீலிக்கப்பட்டு, லோக்பால் தேர்வுக் குழுவுக்கான புதிய விதிமுறைகள் விரைவில் அறிவிக்கப்படும் என்று தெரிகிறது.

புதிய விதிமுறைகள் அறிவிக்கப்பட்ட பிறகே லோக்பால் அமைப்புக்கான தலைவர் மற்றும் உறுப்பினர்களை நியமனம் செய்ய முடியும்.

நன்றி-தினமணி 
26-08-2014

தமிழ் வளர்த்த சான்றோர் - 8 ஆம் வகுப்பு சமச்சீர்

வீரமாமுனிவர்(1680-1747)


  •  வீரமாமுனிவர் இத்தாலி  நாட்டில் பிறந்தார். 
  • வீரமாமுனிவரின்  இயற்பெயர் கான்ஸ்டாண்டின் ஜோசப் பெஸ்கி   தம்  முப்பதாம் வயதில் தமிழகம் வந்தார். 
  •  தமிழின் மீது  கொண்ட பற்றின் காரணமாக தன் பெயரை தைரியநாதன் என  மாற்றிகொண்டார்.   பின்னர்  தனித்தமிழுக்கு ஏற்ப வீரமாமுனிவர்  என மாற்றம் பெற்றது. 
  •  தமிழில்  முதன்முதலாக சதுரகராதி  என்னும் அகரமுதலியை படைத்தார். 
  •  கிறித்துவ  சமயத்தாரின் கலைக்களஞ்சியம் எனப் போற்றப்படும்  தேம்பாவணி என்னும் காப்பியத்தை படைத்தார். 
  •   தமிழ் எழுத்து  வரிவடிவத்தை திருத்தி, எழுத்துச் சீர்திருத்தம் செய்தார். 
  •  குட்டித்  தொல்காப்பியம் எனப் போற்றப்படும் தொன்னூல் விளக்கம்  படைத்தார். 
  •   கலம்பகம்,  அம்மானை போன்ற சிற்றிலக்கிய வகை நூல்களையும்,  பரமார்த்த குரு கதை என்னும்  நகைச்சுவை நூலையும் படைத்தார். 
  •  " தேம்பாவணி,  காவலூர் கலம்பகம் கதம்ப மாலையாக காட்சி அளிக்கிறது. தொன்னூல் பொன்நூலாக  இலங்குகின்றது. சதுரகராதி முத்தாரமாக மிளிர்கிறது. வீரமாமுனிவர் தமிழ்  முனிவர்களுள் ஒருவராக விளங்குகின்றார்"  என ரா.பி.சேதுபிள்ளை பாராட்டுகிறார்

குணங்குடி  மஸ்தான்(1788-1835)
  •  "மாதவஞ்ச்சேர்  மேலோர் வழுத்தும் குணங்குடியான்  "என்று  அழைக்கப்படுபவர். 
  •  இயற்பெயர் -  குணங்குடி மஸ்தான் சாகிபு.  
  •  இளம்வயதிலே  முற்றும்  துறந்தவராய் வாழ்ந்தவர்.
  •  இவர்  தாயுமானவர் பாடல்களால் பெரிதும் ஈர்க்கப்பட்டார் .
  •  அவருடைய  பராப்பரக்கண்ணிப் போலவே ஓசை நயம் மிக்க பாடல்கள் பல  இயற்றியுள்ளார். 
  •   பராப்பரக்கண்ணி,  எக்காலக்கண்ணி, மனோன்மணிக்கண்ணி,  நந்தீஸ்வரக்கண்ணி முதலியன இவர் பாடிய சில  கண்ணிகள். 
  •  இவர்தம்  பாடல்கள், உலகின் உண்மை நிலையை உணர்த்தி அழியாப்  பேரின்பப் பெருவாழ்விற்கு நம்மை  அழைத்து செல்லும். 
  •   இவர் குருநிலை,  தவநிலை, துறவுநிலை, நியமநிலை, காட்சிநிலை,  தியானநிலை, சமாதிநிலை எனப் பொருள்தரும்  வகையில் பாடல்கள் பல  இயற்றியுள்ளார். 
  •  இவர் மீது  கொண்ட பற்றின் காரணமாக திருத்தணி சரவணப் பெருமாள்    நான்மணிமாலை ஒன்று  இயற்றியுள்ளார். 
  •  அந்நூலில் "மடல் சூல்புவியில உளத்திருளைக் கருணை ஒளியினாற்  களைந்து, விடல்சூழ்பவரின் குணங்குடியான், மிக்கோன் எனற்கு ஓர்  தடையுளதோ? எனக் கேட்கிறார்.
  •  "தடை உண்டு என உரைப்பார்  தமிழுலகில் இல்லை "என்கிறார். 
ஆறுமுக நாவலர்(1822-1879)

  •   ஆறுமுக நாவலர்  யாழ்ப்பாணம் நல்லூரில் பிறந்தவர். 
  •   இவருடைய  இயற் பெயர்   ஆறுமுகனார். 
  •   இளமையிலே சைவ  சிந்தாந்த சாத்திரங்கள் படித்தவர். 
  •   இவரின்  சொற்பொழிவு திறமையை கண்டு திருவாவடுதுறை ஆதினம்       இவருக்கு நாவலர் பட்டம் வழங்கினார். 
  •   இவர் சிறந்த  பதிப்பாசிரியர் மற்றும் உரையாசிரியர். 
  •   நாவலரே முதன்  முதலில் இலக்கண வலுவற்ற தூய்மையான எளிய        தமிழ்   உரைநடையை கையாண்டார். 
  •   தமிழ்  உரைநடைக்கு இவர் ஆற்றிய தொண்டிற்காக பரிதிமாற்கலைஞர்     இவரை வசன நடை கைவந்த  வல்லாளர் என பாராட்டினார். 
  •   சென்னையில்  அச்சுக்கூடம் நிறுவி, சிறந்த தமிழ் நூல்கள் பல    பதிப்பித்தார். 
  •   பாரதம்,  பெரியபுராணம், கந்தபுராணம், திருக்குறள் பரிமேலழகர் உரை  போன்ற    இலக்கிய நூல்களை  பதிப்பித்தார். 
  •   இலக்கண  வினாவிடை, இலக்கண சுருக்கம், நன்னூல் விருத்தியுரை,    நன்னூல்    காண்டிகையுரை, இலக்கண  கொத்து, இலக்கண சூறாவளி  முதலிய இலக்கண     நூல்களை பதிப்பித்து வெளியிட்டார். 
  •   முதல் வகுப்பு  முதல் நான்காம் வகுப்பு வரை பாலபாடங்களையும் எழுதி        அச்சிட்டு வெளியிட்டார். 

26 August, 2014

எத்தனாலில் இயங்கும் பேருந்து: இந்தியாவில் முதல்முறையாக தொடக்கம்


இந்தியாவிலேயே முதல்முறையாக எத்தனாலில் இயங்கும் பேருந்தை மகாராஷ்டிர மாநிலம், நாகபுரியில் மத்திய சாலைப்போக்குவரத்துத்துறை அமைச்சர் நிதின் கட்கரி வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தார்.

முதல் முயற்சியாக இயக்கப்பட்ட இந்தப் பேருந்தை தொடங்கி வைத்து அவர் பேசியதாவது:

இந்தியா ஒவ்வோர் ஆண்டும் ரூ.6 லட்சம் கோடி மதிப்புக்கு பெட்ரோல், டீசல், எரிவாயுவை இறக்குமதி செய்கிறது.

மாற்று எரிபொருளைப் பயன்படுத்துவதன் மூலம் அவற்றின் இறக்குமதியை ஆண்டொன்றுக்கு ரூ.2 லட்சம் கோடியாக நம்மால் குறைக்க இயலும். அதற்கான தொடக்க முயற்சியாக எத்தனால் மூலம் இயங்கும் பேருந்துத் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. பசுமைப் பேருந்துத் திட்டத்தின் கீழ், எத்தனால் மூலம் இயங்கும் 200 முதல் 500 பேருந்துகளை நாகபுரி மாநகராட்சிக்கு மத்திய அரசு வழங்கும்.

உயிரி எரிபொருள் மூலம் இயங்கும் வாகனம், மின்சாரம்-டீசல் இணைந்து செயல்படும் வாகனம் ஆகியவற்றை இயக்குவதற்கு வழிவகை செய்யக்கூடிய மசோதா நாடாளுமன்றத்தின் அடுத்த கூட்டத் தொடரில் முன்வைக்கப்படும்.

தமிழ்நாடு, உத்தரப் பிரதேசம், மகாராஷ்டிரம், கர்நாடகம் ஆகிய மாநிலங்கள் அதிக அளவில் எத்தனாலை உற்பத்தி செய்வதால், இந்த பசுமைப் பேருந்து திட்டத்தின் மூலம் அந்த மாநிலங்கள் பெரிதும் பயனடையும்.

மின்சாரம் மூலம் இயங்கும் வாகனங்களுக்கு வரிவிலக்கு அளிப்பதற்கான கொள்கையை மத்திய சாலைப்போக்குவரத்து அமைச்சகம் கொண்டுவருகிறது என்று நிதின் கட்கரி கூறினார்.


நன்றி-தினமணி 
25-08-2014

இந்திய வம்சாவளி பெண்மணிக்கு ஆராய்ச்சியாளர் விருது


தென்னாப்பிரிக்காவில் வாழும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த லீலா படேல் என்பவருக்கு சிறந்த பெண் ஆராய்ச்சியாளருக்கான விருது கிடைத்துள்ளது.

அந்நாட்டின் அறிவியல் தொழில்நுட்பத்துறை அமைச்சகத்தின் சார்பில் இந்த விருது, ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது.

விட்வாட்டர்ஸ்ராண்ட் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றுள்ள லீலா படேல், "சமூக மேம்பாட்டு மையம்' என்ற அமைப்பை 2002-ஆம் ஆண்டு முதல் நடத்தி வருகிறார்.

நன்றி-தினமணி 
21-08-2014

ஒத்துழைப்பை அதிகரிக்க இந்தியா-வியட்நாம் ஒப்புதல்


பாதுகாப்பு, எண்ணெய் உற்பத்தித் துறைகளில் ஒத்துழைப்பை அதிகரிக்க இந்தியாவும், வியட்நாமும் திங்கள்கிழமை ஒப்புக்கொண்டுள்ளன.

வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், தற்போது வியத்நாமில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.

அவர், அந்நாட்டு  பிரதமர் குயன் தான் டங், வெளியுறவுத் துறை அமைச்சர் பாம் பின் மின் ஆகியோரை சந்தித்துப் பேசினார்.

""இந்தச் சந்திப்பின்போது சுஷ்மா ஸ்வராஜ் இரு நாடுகளிடையேயான பல்வேறு வர்த்தகங்கள் குறித்து விரிவான ஆலோசனை நடத்தினார்.

பாதுகாப்பு, எண்ணெய் உற்பத்தித் துறைகளில் ஒத்துழைப்பை அதிகரிப்பது தொடர்பாக இந்தியா, வியத்நாம் இடையே ஒப்புதல் அளிக்கப்பட்டது.

வியட்நாமில் உள்ள எண்ணெய் உற்பத்தித் துறையில் இந்தியா முதலீடு செய்வது குறித்தும் சுஷ்மா ஸ்வராஜ் ஆலோசனை நடத்தினார்'' என்று வெளியுறவுத் துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் சையத் அக்பருதீன் தெரிவித்தார்.

நன்றி-தினமணி 
26-08-2014

TNPSC General Tamil Questions -006





















Answers

இன்பத்தமிழ் - Class 6 Tamil New Syllabus Term 1

தமிழ் வணக்கம்   தற்கால இலக்கிய மரபாகிவிட்டது  பாரதிதாசனின் இயற்பெயர்   சுப்புரத்தினம்.  பாரதியாரின் கவிைதகள்  மீது கொண்ட  பற்றின் காரணமா...