12 August, 2014

இன்றையக் கேள்விகள் - 11/08/2014

1.கிறித்தவச் சமயத்தாரின் கலைக்களஞ்சியம்
  1. இரட்சணிய யாத்ரிகம்
  2. இயேசு காவியம்
  3. தேம்பாவணி
  4. ஞானோபதேசம்

2.தமிழ் நாடகத் தலைமையாசிரியர்
  1. பம்மல் சம்பந்தனார்
  2. சங்கரதாசு சுவாமிகள்
  3. பேராசிரியர் சுந்தரனார்
  4. தி க சண்முகனார்

3.“நாடக சாலையொத்த நற்கலாசாலையொன்று
நீடுலகில் உண்டோ நிகழ்த்து” – என்று பாடியவர்
  1. முடியரசன்
  2. கவிமணி
  3. நாமக்கல் கவிஞர்
  4. பாரதிதாசன்

4.பொருந்தாதவற்றை எழுதுக
  1. செயற்றியம்
  2. முறுவல்
  3. நன்னூல்
  4. சயந்தம்

5.பால காண்டத்து ஆற்று படலத்தில் எந்த நதியின்
வளம் கூறப்பட்டுள்ளது
  1. கங்கை
  2. கோதாவரி
  3. நர்மதை
  4. சரயு

6.வனவிலங்கு பாதுகாப்புச் சட்டம் எப்போது இயற்றப்பட்டது
  1. 1972
  2. 1975
  3. 1973
  4. 1978

7.உலக வனவிலங்கு நாள்
  1. அக்டோபர் 4 ஆம் நாள்
  2. செப்டம்பர் 6 ஆம் நாள்
  3. அக்டோபர் 14 ஆம் நாள்
  4. நவம்பர் 8 ஆம் நாள் 


8.துழாய் அலங்கல் – பொருள் தருக
  1. மலர் மாலை
  2. துளசி மாலை
  3. சாமந்திப்பூ மாலை
  4. சம்பங்கிப்பூ மாலை 

9.களபம் – பொருள் தருக
  1. குங்குமம்
  2. சந்தனம்
  3. தீர்த்தம்
  4. திருநீறு

10.வில்லிபுத்தூராரை ஆதரித்த வள்ளல்
  1. வரகுணபாண்டியன்
  2. சடையப்பவள்ளல்.
  3. வரபதி ஆட்கொண்டான்
  4. சந்திரன் சுவர்க்கி
விடைகள் 

  1. தேம்பாவணி
  2. சங்கரதாசு சுவாமிகள்
  3. கவிமணி
  4. நன்னூல்
  5. சரயு
  6. 1972
  7. அக்டோபர் 4 ஆம் நாள்
  8. துளசி மாலை
  9. சந்தனம்
  10. வரபதி ஆட்கொண்டான்

10 August, 2014

அம்புஜத்தம்மாள் - சமச்சீர் பாடம்

அம்புஜத்தம்மாள் 
  • 1899ஆம் வசதியான குடும்பத்தில் ஆண்டு பிறந்தார்.
  • அன்னை  கஸ்துரிபாயின் எளிமையான தோற்றத்தினால் கவரப்பட்டு எளிமையாக வாழ்ந்தார்.
  • பாரதியாரின் பாடல்களை பாடி விடுதலை உணர்வை ஊட்டினார்.
  • வை மு கோதைநாயகி அம்மாள் ,ருக்மணி முதலியவர்களோடு இணைந்து பெண்ணடிமைக்கு எதிராக குரல் கொடுத்தார்
  • காந்தியடிகளால் தத்தெடுக்கப்பட்ட மகள்  என்று செல்லமாக அழைக்கப்படுபவர்.
  • தன் தந்தையின்  பெயரோடு காந்தியடிகளின் பெயரையும் இணைத்து சீனிவாச காந்தி நிலையம் என்ற தொண்டு நிறுவனத்தை தொடங்கினார்.
  • அம்புஜத்தம்மாள் எழுபதாண்டு நினைவாக,நான் கண்ட பாரதம்என்ற நூலை எழுதினார்.  1964ஆம் ஆண்டு  இவருக்கு பத்மஸ்ரீவிருது வழங்கப்பட்டது

கடலூர் அஞ்சலையம்மாள் - சமச்சீர் பாடம்


கடலூர் அஞ்சலையம்மாள்
  • 1890 – ல் கடலூரில் உள்ள முதுநகரில் பிறந்தார்
  • நீலன் சிலை அகற்றும் போராட்டம், உப்பு காய்ச்சும் போராட்டம் வெள்ளையனே வெளியேறு இயக்கம் முதலிய போராட்டங்களில் கலந்து கொண்டுள்ளார்
  • வேலூர்  சிறையில் இருந்த போது, கருவுற்ற நிலையில் இருந்த இவரை ஆங்கிலேய அரசு வெளியில்  அனுப்பிவிட்டு, மகப்பேற்றிற்குப் பின் மீண்டும் சிறையில் அடைத்தது.
  • நீலன் சிலையை  அகற்றும் போராட்டத்தில் தனது 9 வயது மகளையும் ஈடுபடுத்தினார். இவருடன் இவர் மகளும்  சிறைத்தண்டனை பெற்றார்.
  • காந்தியடிகள்  சிறையில் வந்து பார்த்து, இவரின் மகள் அம்மாக்கண்ணுவை தன்னுடன் அழைத்து சென்று  வார்தாவில் உள்ள ஆசிரமத்தில் படிக்க வைத்து அவருக்கு லீலாவதி எனப்பெயரும் இட்டார்.
  • காந்தியடிகள் அஞ்சலையம்மாலை தென்னாட்டின் ஜான்சிராணி என்று அழைத்தார்

இன்றையக் கேள்விகள் - 10/08/2014

1.நாடகமேத்தும் நாடகக் கணிகை என்று குறிப்பிடப்படுபவர்
  1. கண்ணகி
  2. மணிமேகலை
  3. மாதவி
  4. மாதரி

2.மகேந்திரவர்ம பல்லவன் எழுதிய நூல்
  1. மத்த விலாசம்
  2. சாகுந்தலம்
  3. குணநூல்
  4. முறுவல்

3.குறவஞ்சி நாடகங்கள் யாருடைய ஆட்சி காலத்தில் தோன்றின
  1. சோழர்
  2. பல்லவர்
  3. நாயக்கர்
  4. களபிரர்கள்

4.டம்பாச்சாரி விலாசம் என்னும் நூலை எழுதியவர்
  1. மறைமலையடிகள்
  2. காசி விசுவநாதர்
  3. சங்கரதாச சுவாமிகள்
  4. பம்மல் சம்பந்தனார்

5.தமிழ் நாடக உலகின் தந்தை
  1. தி க சண்முகனார்
  2. பம்மல் சம்பந்தனார்
  3. சங்கரதாச சுவாமிகள்
  4. பேராசிரியர் சுந்தரனார்

6.எழுபது ஆண்டுகளாக தமிழ் நாடக மேடைகளில் புகழ் பெற்று
விளங்கிய நாடகம்
  1. கதரின் வெற்றி
  2. தேசியக்கொடி
  3. தேசபக்தி
  4. மனோகரன்

7.சிலப்பதிகாரத்திற்கு உரை எழுதியவர்
  1. அடியார்க்கு நல்லார்
  2. நச்சினார்க்கினியர்
  3. இளம்பூரணர்
  4. அரும்பதவுரைகாரர்

8.தமிழ்நாட்டில் முதன்முதலாக நடத்தப்பட்ட தேசிய சமுதாய நாடகம்
  1. தேசியக்கொடி
  2. தேசபக்தி
  3. கதரின் வெற்றி
  4. அபிமன்யு

 9.சித்திரை வந்தாள்
  1. சினையாகு பெயர்
  2. காலவாகு பெயர்
  3. இடவாகுபெயர்
  4. தொழிலாகு பெயர் 
10.பூகம் - பொருள் கூறுக 
  1. மகரந்தம் 
  2. மலர் 
  3. குளம் 
  4. கமுகம் 
விடைகள் 

  1. மாதவி
  2. மத்த விலாசம்
  3. நாயக்கர்
  4. காசி விசுவநாதர்
  5. பம்மல் சம்பந்தனார்
  6. மனோகரன்
  7. அடியார்க்கு நல்லார்
  8. கதரின் வெற்றி
  9. காலவாகு பெயர்
  10. கமுகம் (பாக்கு மரம் )

09 August, 2014

வேலுநாச்சியார் - சமச்சீர் பாடம்

வேலுநாச்சியார்
  • ஆங்கிலேயரை எதிர்த்து ஆயுதம் ஏந்தி போராடிய முதல் பெண்மணி
  • சிவகங்கை மன்னர் முத்துவடுகநாதர் வேலுநாச்சியாரை மணந்து கொண்டார்
  • 1772 இல் ஆங்கிலேயருக்கும் முத்துவடுகனாதருக்கும் நடந்த போரில் முத்துவடுகநாதர்வீர மரணமடைந்தார்
  • வேலுநாச்சியார் மைசூர் மன்னர் ஐதர் அலியை சந்தித்து ஆங்கிலேயரை எதிர்ப்பது குறித்து பேசினார்
  • ஐதர் அலி அவருக்கு படைவீரர்களை அனுப்பி உதவினார்
  • 1780ஆம் ஆண்டு மருது சகோதரர்களுடன் இணைந்து ஆங்கிலேயரை எதிர்த்துப் போரிட்டு சிவகங்கையை கைப்பற்றினார் 


அசலாம்பிகை அம்மையார் - 8 ஆம் வகுப்பு சமச்சீர்

அசலாம்பிகை அம்மையார் 
  • அசலாம்பிகை அம்மையார் திண்டிவனத்திற்கு அருகில் உள்ள இரட்டனை என்ற ஊரில் பிறந்தார் .
  • அசலாம்பிகை அம்மையார் சிறந்த பேச்சாளர்
  • திரு வி க இவரை இக்கால ஔவையார் என்று பாராட்டுகிறார்

இயற்றிய நூல்கள்
  • ஆத்திசூடி வெண்பா
  • இராமலிங்க சுவாமிகள் வரலாற்றுப் பாடல்(409 பாடல்கள் )
  • குழந்தை சுவாமிகள் பதிகம்
  • திருவாமாத்தூர்ப் புராணம்
  • திருவுடையூர்  தலபுராணம்
  • காந்தி புராணம்(2034 பாடல்கள் )
  • திலகர் புராணம்

Tnpsc Aptitude 014

இன்றைய கேள்விகள் - 09/08/2014

1.சம்பு – பொருள் தருக
  1. கொய்யா
  2. வேம்பு
  3. நாவல்
  4. வாழை
2.திலகர் புராணம் என்ற நூலை இயற்றியவர்
  1. அசலாம்பிகை அம்மையார்
  2. நாமக்கல் கவிஞர்
  3. திரு வி க
  4. பாரதிதாசன்
( அசலாம்பிகை அம்மையார்   இயற்றிய வேறு நூல்கள் ஆத்திசூடி வெண்பா ,குழந்தை சுவாமிகள் பதிகம், இராமலிங்க சுவாமிகள் சரிதம் , காந்தி புராணம்  )
3.அசலாம்பிகை அம்மையாரை இக்கால ஒளவையார் எனப்
பாராட்டியவர்
  1. பாரதியார்
  2. திரு வி க
  3. கவிமணி
  4. பாரதிதாசன்
4.தென்னாட்டின் ஜான்சி ராணி என்று அழைக்கப்பட்டவர்
  1. வேலுநாச்சியார்
  2. அஞ்சலையம்மாள்
  3. அம்புஜத்தம்மாள்
  4. வை மு கோதைநாயகி

5.பெற்ற தாயும் பிறந்த பொன்னாடும்
நற்றவ வானினும் நனி சிறந்தனவே – என்று பாடியவர்
  1. பாரதியார்  
  2. பாவேந்தர் பாரதிதாசன்
  3. முடியரசன்
  4. கவிக்கோ அப்துல் ரகுமான்
6.ஆங்கிலேயரை எதிர்த்து ஆயுதம் ஏந்தி போராடிய முதல் பெண்மணி
  1. அம்புஜத்தம்மாள்
  2.  வேலுநாச்சியார்
  3. வை மு கோதைநாயகி
  4. ருக்மணி லட்சுமிபதி

7.திருமந்திரத்தில் அமைந்துள்ள பாடல்களின் எண்ணிக்கை
  1. இரண்டாயிரம்
  2. ஆயிரம்
  3. மூன்றாயிரம்
  4. நான்காயிரம்
(இதற்கு தமிழ் மூவாயிரம் என்ற வேறு பெயரும் உண்டு )
8.முகை – பொருள் தருக
  1. முகம்
  2. செடி
  3. கண்
  4. மொட்டு
9.ஞானோபதேசம் என்ற நூலை இயற்றியவர்
  1. ஜி யு போப்
  2. வீரமாமுனிவர்
  3. ஆறுமுக நாவலர்
  4. உ வே சா
( இவர் இயற்றிய வேறு நூல்கள் – பரமார்த்த குரு கதைதிருக்காவலூர் கலம்பகம் தொன்னூல் விளக்கம் ,கித்தேரியம்மாள் அம்மானை)
10.மதங்க சூளாமணி என்னும் நூலை எழுதியவர்
  1. பம்மல் சம்மந்தனார்
  2. சுவாமி விபுலானந்தர்
  3. மறைமலையடிகள்
  4. பரிதிமாற்க்கலைஞர்

08 August, 2014

இன்றைய கேள்விகள் - 08/08/2014

1.யாருடைய பாடல்களில் கம்பனின் மிடுக்கையும் பாரதியின் சினப்போக்கையும் ஒருங்கே காணலாம்
  1. பாரதிதாசன்
  2. வண்ணதாசன்
  3. சச்சிதானந்தன்
  4. சுரதா

2.அமர் என்பதன் பொருள்
  1. யானை
  2. போர்
  3. வெற்றி
  4. தோல்வி

3.தொண்ணூற்றாறு – பிரித்து எழுதுக
  1. தொன் + ஆறு
  2. தொண் + ஆறு
  3. தொண்ணூறு + ஆறு
  4. தொள்ளாயிரம் + ஆறு

4.சலவர் – எதிர்ச்சொல் தருக
  1. நண்பர்
  2. பகைவர்
  3. நல்லவர்
  4. வஞ்சகர்

5.கழறும் – பொருள் கூறுக
  1. பேசும்
  2. குளறும்
  3. குழறும்
  4. எழுதும்

6.குவை என்பதன் பொருள்
  1. குவியல்
  2. குவளை
  3. மலை
  4. மாலை

7.திருவள்ளுவமாலையில் எத்தனை பாடல்கள் உள்ளன
  1. ஐம்பத்தைந்து
  2. அறுபது
  3. அறுபத்துமூன்று
  4. நாற்பத்து ஏழு

8.அன்றைய தமிழரின் அறிவியல் கருத்தை யாருடைய சிந்தனை வெளிப்படுத்தியது
  1. கம்பர்
  2. கபிலர்
  3. ஒட்டக்கூத்தர்
  4. புகழேந்தி

9.திருவள்ளுவமாலையில் உள்ள பாடல்களை பாடிய புலவர்களின் எண்ணிக்கை
  1. அறுபத்து மூன்று
  2. எழுபத்தைந்து
  3. தொண்ணூறு
  4. ஐம்பத்துமூன்று

10.புகழேந்திப் புலவரை ஆதரித்தவர்
  1. சடையப்பவள்ளல்
  2. சந்திரன் சுவர்க்கி
  3. வரகுணபாண்டியன்
  4. கோப்பெருஞ்சோழன்



07 August, 2014

நளவெண்பா - 8 ஆம் வகுப்பு சமச்சீர்


பொருள் தருக :
  1.      ஆழி – கடல்
  2.      விசும்பு – வானம்
  3.      செற்றான் – வென்றான்
  4.      அரவு – பாம்பு
  5.      பிள்ளைக்குருகு – நாரைக்குஞ்சு 
  6.      வள்ளை – ஒருவகை நீர்க்கொடி
  7.      கடா – எருமை
  8.      வெளவி – கவ்வி
  9.      சங்கின் பிள்ளை – சங்கின்குஞ்சுகள்
  10.      கொடி – பவளக்கொடி
  11.      கோடு – கொம்பு
  12.      கழி – உப்பங்கழி
  13.      திரை – அலை
  14.      மேதி – எருமை
  15.      கள் – தேன்
  16.      புள் – அன்னம் 
  17.      சேடி – தோழி
  18.      ஈரிருவர் – நால்வர்
  19.      கடிமாலை – மணமாலை
  20.      தார் – மாலை
  21.      காசினி – நிலம்
  22.      வெள்கி – நாணி
  23.       ஒண்தாரை – ஒளிர்மிக்க மலர்மாலை
  24.      மல்லல் – வளம்
  25.      மடநாகு – இளைய பசு
  26.      மழவிடை – இளங்காளை
  27.      மறுகு – அரசவீதி 
நூல் குறிப்பு :
  •  மகாபாரதத்தின் துணைக் கதைகளுள் ஒன்றான, நிடத நாட்டை ஆண்ட நளன் என்னும் மன்னனின் கதையைத் தமிழில் கூற எழுந்ததே நளவெண்பா ஆகும்.
  •  சுயம்வர காண்டம், கலிதொடர் காண்டம், கலிநீங்கு காண்டம் என மூன்று காண்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன.
  •  இவற்றுள் 13 வெண்பாக்கள், பாயிரம், நூல்வரலாறு என்பனவாகும். இதில் 431  வெண்பாக்கள் உள்ளன
 ஆசிரியர் குறிப்பு :
  • நளவெண்பா  இயற்றிய புகழேந்திப் புலவர் தொண்டை நாட்டுப் பொன்விளைந்த களத்தூரிலே தோன்றியவர்.
  • பாண்டியனாகிய வரகுணனுக்குப் பெரிதும் அன்புடையவராக அவன் அவையில் வீற்றிருந்தார். பாண்டியனின் மகளுக்கு ஆசிரியராகவும் விளங்கினார்.
  • அவள் சோழ மன்னான குலோத்துங்கனை மணக்கவும், அவள் வேண்டுகோளின்படி இவரும் சோழனின் அவைக்குச் சென்றார்.
  • அங்கே இவருக்கும் சோழனின் ஆசிரியர் ஒட்டக்கூத்தருக்கும் பகைமையும் மனமாறுபாடும் உண்டாகி நாளுக்கு நாள் பெருகி வரலாயிற்று.
  • இவர்களுக்கிடையே நடைபெற்ற பலவாக்குவாதங்களுக்குச் சான்றாக பல பாடல்கள் உள்ளன.  
  • இதன் பொருட்டு இவர் பல கொடுமைகளுக்கும் உள்ளானார். முடிவில் புலவர்களிடையே சமாதானம் ஏற்பட்டதாகத் தெரிகிறது. 
  • ஒட்டக்கூத்தரிடம் மாறுபாடு நிலவிய காலத்தில், இவர் சில காலம் மள்ளுவநாட்டைச் சேர்ந்த சந்திரன் சுவர்க்கி என்னும் குறுநில மன்னனின் ஆதரவில் வாழ்ந்து வந்தார்.
  • அந்த நாளில் அவன் விருப்பப்படி இவர் இயற்றியதே இந்த நளவெண்பா என்னும் நூல் ஆகும். 








இன்பத்தமிழ் - Class 6 Tamil New Syllabus Term 1

தமிழ் வணக்கம்   தற்கால இலக்கிய மரபாகிவிட்டது  பாரதிதாசனின் இயற்பெயர்   சுப்புரத்தினம்.  பாரதியாரின் கவிைதகள்  மீது கொண்ட  பற்றின் காரணமா...