தொன்மைத் தமிழகம் - 10 ஆம் வகுப்பு சமச்சீர் பாடம்

மனித நாகரிகத் தொட்டில்:

முதல் மாந்தன் தோன்றிய இலெமூரியாவை, “மனித நாகரிகத் தொட்டில்” என்பர்.
சிலப்பதிகாரப் பாடல்:
தமிழகம் இன்றுபோல் இல்லாமல், குமரிமுனைக்குத் தெற்கே இன்னும் விரிந்து, குமரிமலை, பஃறுளி ஆறு முதலியவற்றை உள்ளடக்கி இருந்தது.
இச்செய்தியைப் சிலப்பதிகாரப் பாடல் வரிகள் தெளிவாக உணர்த்தும்.
"பஃறுளி ஆற்றுடன் பன்மலை அடுக்கத்துக் 
குமரிக்கோடும் கொடுங்கடல் கொள்ள"

பாவேந்தர்:
புரட்சிக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன். தமிழின் பழமை சிறப்பினைப் பெருமிதம் பொங்கி கூறுவது
"திங்களோடும் செழும்பரிதி தன்னோடும் விண்ணோடும் உடுக்க ளோடும் 
மங்குல்கடல் இவற்றோடும் பிறந்த தமிழுடன் பிறந்தோம் நாங்கள்"

வாணிகம்:
தமிழர்கள் அறத்தின் வழியே வாணிகம் செய்தார்கள்.
உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் பொருள் ஈட்டினர்.
கடல் வாணிகம்:
கிறித்து பிறப்பதற்கு முன்பே கிரேக்கம், உரோமாபுரி, எகிப்து ஆகிய நாடுகளுக்கு அரிசியும், மயில்தோகையும்,சந்தனமும் தமிழகத்தில் இருந்து ஏற்றுமதி செய்தனர்.
கி.மு.பத்தாம் நூற்றாண்டில் அரசன் சாலமனுக்கு யானைத் தந்தமும், மயில்தோகையும், வாசனைப் பொருள்களும் அனுப்பப்பட்டன.
தமிழர்கள் சாவகநாட்டுடன் வணிகத் தொடர்பு கொண்டிருந்தனர்.
தனிநாயகம் அடிகளாரின் கூற்று:
தமிழ்சங்கம் இருந்தது என்ற மரபுச் செய்தி இடைவிடாது இருந்து வருகிறது. இந்தியாவில் இத்தகைய மரபுச் செய்தி வேறெங்குமில்லை என்றார் தனிநாயகம் அடிகளார்.
மொழித் தொன்மை:
“தமிழ்கெழு கூடல்” என புறநானூறு கூறுகிறது.
“தமிழ்வேலி” எனப் பரிபாடல் கூறுகிறது.
“கூடலில் ஆய்ந்த ஒன்தீந் தமிழின்” என மணிவாசகம் கூறுகிறது.
ஏற்றுமதியும் இறக்குமதியும்:
தமிழர்களின் ஏற்றுமதி இறக்குமதி பற்றி குறிப்பிடும் நூல்கள், பட்டினப்பாலையும், மதுரைக்காஞ்சியும்.
காவிரிப்பூம்பட்டினத் துறைமுகத்தில் பொருள்கள் மண்டியும் மயங்கியும் கிடந்ததனைப் பட்டினப்பாலை அடிகள் கூறுகிறது.
நீரின் வந்த நிமிர்பரிப் புரவியும்
காலின் வந்த கருங்கறி மூடையும்
வடமலைப் பிறந்த மணியும் பொன்னும்
குடமலைப் பிறந்த ஆரமும் அகிலும்
... ... ... .... ....
.......... மயங்கிய நனந்தலை மறுகு.
இசைக்கலை:
பண்டையக்காலத் தமிழர்களின் இசை சிறந்த இடத்தைப் பெற்றிருந்தது.
“நரம்பின் மறை” என்று தொல்காப்பியம் கூறுகிறது.
ஒப்பாரி என்பது, இவருக்கு ஒப்பார் ஒருவருமிலர் என்று இறந்தவரைப் பற்றிப் பாடுவது.
இன்றைய கர்நாடக இசைக்குத் தாய் நம் தமிழிசையே.
“பண்ணொடு தமிழொப்பாய்” என தேவாரம் கூறுகிறது.
குழலினிது யாழினிது என்று இசைபொழியும் கருவிகளை வள்ளுவம் குறிக்கின்றது.
உழவுத் தொழில்:
“உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்” என்கிறது திருக்குறள்.
“உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே” எகிறது புறநானூறு.
உழவுக்கு சிறப்பு பெற்ற நிலம் மருதநிலம்.
பழந்தமிழர் வாழ்வு:
அறத்தின் அடிப்படையில் தொடங்கியது தமிழர் வாழ்வு.
“களிறு எரிந்து பெயர்தல் காளைக்குக் கடனே” (பொன்முடியார் )என்னும் புறப்பாடல், வீரத்தினை முதல் கடமையாக்கின்றது.
ஒக்கூர் மாசாத்தியார் என்ற பெண்பாற் புலவர், பெண்களின் வீரத்தினை பாடியுள்ளார்.
தற்காலத் தொல்லியல் ஆய்வுகள்
தொல்லியல்:
தொல்பழங்காலம் பற்றிய ஆய்வையே தொல்லியல் அல்லது தொல்பொருளியல் என்பர்.
தொல்லியலை ஆங்கிலத்தில், “ஆர்க்கியாலாஜி” எனக் குறிப்பிடுவர்.
மனிதன் நாடோடியாக வாழ்ந்த காலத்தில் இருந்து, வரலாற்றுக்கு முந்தைய காலம் வரை உள்ள காலத்தையே தொன்மைக்காலம் என்பர்.
காவிரிப்பூம்பட்டினம்:
1963ஆம் ஆண்டு இந்தியத் தொல்லியல் துறையினர் பூம்புகார் அருகில் உள்ள “கீழார்வெளி” என்னும் இடத்தில மேற்கொண்ட கடல் அகழ்வாய்வின் போது கி.மு.மூன்றாம் நூற்றாண்டை சார்ந்த கட்டட இடிபாடுகள் கிடைத்தன.
இந்த ஆய்வில் செங்கற்களால் கட்டப்பட்ட படகுத் துறை, அரைவட்டவடிவ நீர்த்தேக்கம், புத்தவிகாரம்(புத்த பிக்குகள் தங்குமிடம்), வெண்கலத்தால் ஆன புத்தர் பாதம் முதலிய எச்சங்கள் கிடைத்தன.
இவ்வாய்வு காவிரிப்பூம்பட்டினம் என்னும் நகரம் இருந்ததை உறுதி செய்தது.
காசுகள்:

தருமபுரி, கரூர், மதுரை ஆகிய மாவட்டங்களில், கி.மு.மூன்றாம் நூற்றாண்டு முதல் பல்வேறு காலகட்டங்களைச் சார்ந்த தங்கம், வெள்ளி, செம்பு, இரும்பு உலோகங்களால் செய்யப்பட்ட காசுகள் கண்டறியப்பட்டுள்ளன.
இவற்றின் ஒரு பக்கத்திலோ இரு பக்கங்களிலோ முத்திரைகள் பொறிக்கப்பட்டுள்ளன.
இக்காசுகளில் சூரியன் மலைமுகடு, ஆறு, காளை, ஸ்வஸ்திகம், கும்பம் முதலிய சின்னங்கள் முத்திரைகளாகப் பொறிக்கப்பட்டுள்ளன.
முதுமக்கள் தாழிகள்:

பண்டைய காலத்தில் இறந்தோரை, அவர்கள் பயன்படுத்திய பொருள்களுடன் ஒரு தாழியிலிட்டுப் புதைக்கும் வழக்கம் இருந்தது.
இவ்வைகைத் தாழிகள், “முதுமக்கள் தாழிகள்” என்கிறோம்.
தூத்துக்குடி மாவட்டம் ஆதிச்சநல்லூரில் 1876, 2003 ஆகிய ஆண்டுகளில் நடத்தப்பட்ட அகழாய்வுகளில் ஏராளமான முதுமக்கள் தாழிகள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன.
கி.மு.300 முதல் கி.பி.300 வரையிலான காலகட்டங்களைச் சார்ந்த இத்தாழிகளில் இறந்தோரின் எலும்புகளுடன் தங்கத்தால் ஆன நெற்றிப்பட்டம், செம்பினால் ஆன ஆண், பெண் தெய்வ உருவங்கள், மற்றும் இரும்பினால் ஆன கத்திகள், விளக்குத் தாங்கிகள் முதலிய பொருள்களும் கிடைத்துள்ளன.

No comments:

Post a Comment

இன்பத்தமிழ் - Class 6 Tamil New Syllabus Term 1

தமிழ் வணக்கம்   தற்கால இலக்கிய மரபாகிவிட்டது  பாரதிதாசனின் இயற்பெயர்   சுப்புரத்தினம்.  பாரதியாரின் கவிைதகள்  மீது கொண்ட  பற்றின் காரணமா...